ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சிறிலங்காவில் 5,000 ரூபா சம்பள உயர்வுகோரி தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 854 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை இரவு இந்தியாவுக்கு அவசர பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 915 views
-
-
ஹக்கீம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இன்று (ஜூலை 10) பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஹக்கீம் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.கிழக்கு மாகாணசபைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹக்கீம் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றினார். கடந்த 8ம் திகதி மாலை தமது மாகாணசபை உறுப்பினர் பதவியை ஹக்கீம் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/hakeem-2008-07-10.html
-
- 2 replies
- 974 views
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை? சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்…
-
- 1 reply
- 850 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 694 views
-
-
தென்மராட்சி கரையோரத்தில் நேற்றிரவு "மர்ம உலங்குவானூர்தி" [வியாழக்கிழமை, 10 யூலை 2008, 03:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். குடாநாட்டில் தென்மராட்சி கரையோரங்களில் நேற்று நள்ளிரவு மர்ம உலங்குவானூர்தி ஒன்று சில நிமிடங்கள் ஆகாயத்தில் மிகவும் தாழ்வாக வட்டமடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமை இரவு 10:30 மணிமுதல் 11:00 மணிவரை இந்த உலங்குவானூர்தி வட்டமிட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக பாரிய இரைச்சலுடன் மிகவும் தாழ்வாகப் பறந்த இந்த உலங்குவானூர்தி கரையோரப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை வட்டமிட்டுக்கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உலங்குவானூர்தி வட்டமிட்டதைத் தொடர்ந்து முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்க நிலைகளை நோக்கி படையினர் எற…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 565 views
-
-
பார ஊர்தி ஒன்றில் போய்க்கொண்டிருக்கும்போதே இவர்கள் இனம்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 Sinhalese businessmen shot dead in Kalmunai [TamilNet, Thursday, 10 July 2008, 06:04 GMT] Unidentified gunmen opened fire on Sinhalese businessmen who were traveling in a lorry in Kalmunai, 36 km southeast of Batticaloa, killing them dead on Quarry Road, Thursday around 9:00 a.m., Police said. The victims were from Wattegama in Kandy. The businessmen were identified as Indika Jayasekara, 22, Wasantha Premakumara, 24, and Asnka Namal, 22.
-
- 3 replies
- 1.2k views
-
-
யேர்மன் - சிறிலங்கா இரகசிய பேரம்: அம்பலப்படுத்துகிறது ஜேர்மன் சஞ்சிகை [வியாழக்கிழமை, 10 யூலை 2008, 02:03 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஜேர்மனியிலிருந்து வெளிவரும் Der Spiegel எனும் சஞ்சிகை தனது 23.06.2008 நாளிட்ட இதழில் ஜேர்மனிக்கும் சிறிலங்காவுக்கும் இடையே நடைபெற்ற இரகசிய பேரமொன்றை அம்பலப்படுத்தியுள்ளது. "நேர்த்தியற்ற பேரம்" என்ற தலைப்பில் யேர்மனியில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக்கொண்ட இப்பிரபலமான சஞ்சிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் மீண்டும் நுழைவதற்கு தேவையான எந்த விலையைக் கொடுக்கவும் ஜேர்மன் அரசு தயாராகவிருக்கின்றது. எதிர்வரும் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புச் சபையில் ஒரு பிர…
-
- 1 reply
- 905 views
-
-
சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த 600 பேர், 1990 ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேவைப்பட்டால் கருணாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 715 views
-
-
மன்னார், வவுனியா களமுனைகளில் நேற்று இடம்பெற்றமோதல்களில் 12 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 32 இற்கும் அதிகமான படையினர் படுகாயங்களுக் குள்ளாகியுள்ளனர். சிறிலங்காப் படையினர் நேற்று நான்கு முனைகளில் மேற்கொண்ட நகர்வு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. வவுனியா களமுனையில் பாலமோட்டை - குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரின்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதோடு ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நண்பகல் 12.40 மணிக்கு சிறிலங்காப்படையினர் பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். மாலை 3.00 மணிவரை நடைபெற்ற இந்த முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுத…
-
- 0 replies
- 795 views
-
-
காவற்துறையினர் படுகொலையுடன் கருணா தொடர்பு என்றால் அவர் விசாரிக்கப்படுவார் - ஹெகலிய வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார்கள் எனக்கருதப்படும் 400 சிறி லங்கா காவற்துறையினர் கொலைகளுடன் அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு தளபதியாக இருந்த கருணா அம்மானுக்கும் தொடர்பு இருக்கும் என அறிந்துகொண்டால் அவரிடமும் விசாரணைகளை மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம், கிழக்கு மாகாண 1990 ஆ…
-
- 0 replies
- 678 views
-
-
இராணுவத் தளபதி மீதான குற்றச்சாட்டுக்கு சான்றுகளைச் சமர்ப்பியூங்கள்! இராணுவப் பேச்சாளர்! ஐ.தே.கட்சியினர் இராணுத் தளபதி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயங்கார, இதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றைப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களின் மீது இடம்பெறும் தாக்குதல்களுக்கும் படையினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனவும், இராணுவத் தளபதியுடன் தொடர்புபடுத்திக் ஐ.தே.கட்சி கூறியுள்ள இந்தக் குற்றச் சாட்டுப் பொய்யானதெனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கேல் பெரேரா…
-
- 0 replies
- 657 views
-
-
நாட்டில் இடம்பெற்று வரும் வெள்ளை வான்களில் ஆள்களைக் கடத்தும் நடவடிக்கை களுக்கு அரசும் இராணுவத்தினருமே பின்னணி என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டியிருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. இத்தகைய வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பான முழு விவரங்களையும் உரிய ஆதா ரங்களுடன் தமது கட்சி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் ஐ.தே.க. அறி வித்திருக்கிறது. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பிர தம கொறடா ஜோஸப் மைக்கல் பெரேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் தெரி வித்ததாவது: இன்று நாட்டில் ஊடகவியலாளர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் தொடர்பாகவும், அரசி…
-
- 2 replies
- 879 views
-
-
பிரபாகரனை காப்பாற்றவே தொழிற்சங்க போராட்டம் - ஹெல உறுமய தெரிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றுவதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இணைந்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை வெளிப்படையான உண்மை எனக் குறிப்பிட்டுள்ளது.உழைக்கும் மக்களை பாதுகாப்பதற்காக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தை ரீதியான தீர்வு பெற்றுக் கொடுப்பதே மிகவும் உசிதமானதென ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசிய
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி, சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 2.2k views
- 1 follower
-
-
வெளிமாவட்டங்களைச் சோந்த தமிழர்கள் கண்டியிலிருந்து வெளியேறவேண்டும். 09.07.2008 / நிருபர் எல்லாளன் எதிர்வரும் 17ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரகர பௌத்த வழிபாட்டுக்கு முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து சென்று கணடியில் தங்கியுள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு சிறிலங்கா பொலிசார் அறிவித்தல் விடுத்துவருகின்றனர். http://www.sankathi.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
படைப் புலனாய்வாளர்களால் பொதுமக்கள் கடத்தல் வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியை சேர்ந்த இரண்டு பொதுமக்கள், சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் நாளன்று, வரணியில் இருந்து சாவகச்சேரி நகருக்குப் புறப்பட்டுச் சென்ற, முப்பத்தொன்பது அகவையுடைய மயில்வாகனம் மாசிலாமணி என்ற குடும்பத்தவரும், இருபத்தொரு அகவையுடைய அருள்குமார் பிரபு என்ற இளைஞரும் காணாமல் போயுள்ளனர். இவர்களை, கொடிகாமம் பகுதியில் வைத்து சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் கடத்தியதாக, குடிசார் வட்டாரங்கள் கூறுகின்றன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 699 views
-
-
வவுனியா நிருபர் - வவுனியா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சரக்குப் பெட்டிகள், எண்ணெய் ஏற்றப்படும் டாங்கி வண்டிகள் மற்றும் மண் கல் என்பன ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டி என்பவற்றை ரயில்வே பகுதியினர் அனுராதபுரத்திற்கு இன்று கொண்டு சென்றுள்ளனர். இதற்காக பெட்டி ஒன்றுடன் வந்த ரயிலுக்கு வவுனியா புகையிரத நிலைய பகுதியில் இராணுவத்;தினர் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். ரயில் நிலையத்தைச் சுற்றி இன்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அந்த வழிகளில் சென்றவர்களை பலத்த சோதனைக்கு உட்படுத்தினர் அடையாள அட்டைகளும், அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களும் படையினரால் பரிசீலனைக்கு உட்படுத்தினர். வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : 2008-07-10 வெள்ளைவான் கடத்தல் கொடூரம்: தேசத்தின் மாற்ற முடியாத தலைவிதி! கொழும்பில் தாராளமாக நடைபெறும் வெள்ளைவான் கடத்தல்களைத் தடுக்கத் துப்பில்லாத இந்த அரசு, விடுதலைப் புலிகளைத் துடைத்தழிக்கப் போவதாக மார்தட்டுவது அபத்தத்திலும் அபத்தம் என்று இப்பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். ஆளும் தரப்பின் ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த அராஜகத்துக்கு அடிப்படை மனித உரிமை மீறலுக்கு முடிவு எப்போது என்று எண்ணிப் பொதுமக்கள், குறிப்பாகத் தமிழர்கள், பெரும் விசனப்படுகின்றார்கள். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது, அதனை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பற்றுறுதி திடசங்கற்பம் கருத்து நிலைப்பாடு அரசியல் தீர்க்கம் அரசுத் தலைமைக்கு…
-
- 1 reply
- 837 views
-
-
வெற்றியும் இன்றி, தோல்வியும் இன்றி, முடக்கநிலையை யுத்தம் அடைந்திருப்பதாக, இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும், தென்னிலங்கையின் முன்னணி படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், யுத்தத்தை சிறீலங்கா அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரும் வரை, அதனால் ஏற்படும் சுமைகள் தம்மையே பாதிக்கும் என்ற எண்ணம், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை ஆகிய கிழக்கு மாவட்டங்களிலும், யாழ் குடாநாட்டிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தக்க வைக்கப்பட்டிருப்பதாகவும், இக்பால் அத்தாஸ் சுட்டிக் காட்டியுள…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
மன்மோகன் கொண்டாடும் மகிந்த சகவாசம்: தன்மானம் இழப்பதா? தமிழ்மானம் காப்பதா? -குலோத்துங்கன்- ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களின் முன்வைத்து கபடி விளையாடும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆட்டத்தின் பிந்தைய நிலவரம் தான் அண்மையில் கொழும்பு வந்து சென்ற அந்நாட்டு உயர்மட்டக்குழுவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்பது போலவும் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்பது போலவும் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பது போலவும் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்பது போலவும் இந்தியாவும் இந்தியா சார்ந்த இடமும் பிரச்சினை என்ற வரைவிலக்கணத்துக்குள் வந்துவிட்ட அளவுக்கு அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் கா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் ஈழத் தமிழர் மீதான கரிசனை மாயையும் உண்மையும் -தாரகா- சமீபத்தில் இந்தியாவின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா குறித்த ஊடக அக்கறை அதிகரித்தது. இந்தியா அவ்வப்போது இலங்கை குறித்து தெரிவிக்கும் அபிப்பிராயங்கள் எல்லாமே மிகுந்த அரசியல் முக்கியத்துவமுடையவை போன்ற தோற்றமொன்று நம் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது. பின்னர் சில நாட்கள் போக எல்லாமே புஸ்வாணமாகி விடுகின்றன. அப்படியான ஒன்றுதான், சமீபத்தில் இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வந்து சென்ற போதும் எற்பட்டது. அந்த வருகை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அதில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் இடம்பெற்றிருந்…
-
- 0 replies
- 763 views
-
-
யுத்தம் நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் சகஜம் * அமைச்சர் ராஜித சேனாரட்ன யுத்தம் தீவிரமாக நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் இடம்பெறுவது வழமையானதெனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததைவிட பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இன்று ஐ.தே.க.விற்குள் அதன் தலைமைத்துவத்திற்கெதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமென நான் ஆசீர்வதிக்கின்றேன். அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யுத்தத்தை நாடுவத…
-
- 0 replies
- 806 views
-