ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலை;லையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள்…
-
- 4 replies
- 1.8k views
-
-
கொழும்பு உட்பட மற்றும் பல இடங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உடமைகள் என்பவற்றை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்த 50ற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக சிறி லங்கா புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய அரசாங்கம் கருணாவை இலங்கைக்கு நாடு கடத்திய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.கருணாவின் உதவியுடன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டமை................. தொடர்ந்து வாசிக்க................
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜே.வி.பி.யின் அனுராதபுர காரியாலயம் மீது தாக்குதல் செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஜே.வி.பியின் அனுராதபுரம் காரியாலயத்தின் மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜே.வி.பி. அனுராதபுர சிறி லங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு வேளையில் ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்த ஏழுக்கும் அதிகமான குழுவினரால் நுளைவாயில் கதவு உடைக்கப்பட்டு அலுவலகம் தாக்கப்பட்டதாகவும், அதன்போது அலுவலகத்தில் இருந்த ஜே.வி.பி.யின் அனுராதபுர மாவட்ட உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டு, இனி இப்பகுதிகளில் ஜே.வி.பி. எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என மிரட்டப்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 694 views
-
-
'அரசியல் பொருளாதார படைத்துறை நெருக்குவாரங்களில் சிக்கித்திணறும் மகிந்த அரசு" -எரிமலை- அண்மைக்காலங்களாக தென்னிலங்கையிலே வாழுகின்ற மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு பாரியளவு அதிகரித்திருப்பது தொடர்பாக மகிந்த அரசின் மீது கடுமையான சீற்றமும் வெறுப்பும் அடைந்திருப்பதுடன் பல்வேறு தொழிற்சங்கங்களும் இவ்விலைவாசி உயர்வினை எதிர்த்தும், வாழ்க்கைச்செலவிற்கு ஏற்ப சம்பள உயர்வு கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நிலவும் லஞ்ச ஊழல் மோசடிகள், பெருமளவிலான பணமானது பாதுகாப்பு நிதிக்கென ஒதுக்கப்படுவது, தவறான நிதிக் கையாளுகைகள், வெளிநாட்டு நன்கொடையாளர்கள் சிறிலங்காவிற்கு நிதி வழங்குவதற்கு பின்னடிப்பது …
-
- 0 replies
- 955 views
-
-
Posted on : 2008-07-07 இந்திய, அமெரிக்கத் தேர்தல்களால் இங்கு தமிழர்களுக்கு நீதி கிட்டுமா? இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய ஒரு முக்கிய விடயத்தை தமிழர் தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு மீண்டும் மீண்டும் பாரத தேசத்துக்குச் சுட்டிக்காட்டி வருகின்றது. "இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இப்பிராந்தியத்தில் தங்களின் நேச சக்திகள் எவை, நண்பனாக வேடம் போட்டுக்கொண்டு குழிபறிக்கும் சக்திகள் எவை என்பதைச் சரியாக அடையாளம் காண வேண்டும்' என்று புலிகள் உரிமையோடு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார்கள். அண்மையில் தமிழகத்தின் "குமுதம்' இதழுக்குப் பேட்டியளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் பா.நடேசன், இந்திய விவகாரத்தில் இலங்கைத் தரப்பு நடந்துகொண்ட போக்கை வரலாற்றுப் பின…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த இந்தியா தீர்மானம் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு உச்சிப்புள்ளியில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இ…
-
- 0 replies
- 561 views
-
-
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரத்ன தெரிவு! பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பா
-
- 0 replies
- 560 views
-
-
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் புதிய தலைவராக குமாரசாமி. நந்தகோபன் என்ற் ரகு அல்லது கோகுலன் பிள்ளாயானால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கருனா நீக்கப்பட்டதாக பிள்ளாயான் கூறியதாக.............. தொடர்ந்து வாசிக்க................
-
- 7 replies
- 3k views
-
-
முதற்பயணம் அது 1984 ஆம் ஆண்டு. செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது. அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர். விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர். லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும். செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர். நம்பிக்கையோடு தொடங்கிய பய…
-
- 2 replies
- 938 views
-
-
அரசாங்க அதிகாரிகள் கருணாகுழுவை பிளவுபடுத்த முயற்சித்தபோதும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டிருப்பதாக கருணா ஒட்டுக்குழுவின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். தமது கட்சியின் பலம்கண்டு அவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியாமலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் கருணா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும், கருணாகுழுவுக்கும் இடையில் சில அசம்பாவிதச் சம்பவங்கள் இடம்பெற்றி…
-
- 0 replies
- 1.3k views
-
-
படைநடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வேண்டும்: ரணில் Tuesday, 08 July 2008 புதிய பாதுகாப்பு முறைமை ஒன்றும், இராணுவத் தந்திரோபாயம் ஒன்றும் வகுக்கப்பட வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப் படைகளைக் கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்குகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாக பாராளுமன்றம் இருக்க வேண்டும் எனவும் எனவும் தெரிவித்தார். முழுநேர பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டியதன் அவ…
-
- 0 replies
- 522 views
-
-
-
- 0 replies
- 892 views
-
-
பேச்சுவார்த்தைக்கான அரசாங்கத்தின் நிபந்தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர் [ செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 01:39.27 AM GMT +05:30 ] இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எதிர்காலப் பேச்சுவார்த்தை; தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்தே நடத்தப்படும் என அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். நோர்வே நாட்டின் பிரசன்னமில்லாமல் அரசாங்கத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அனைத்துத் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சு என்ற அரசாங்கத்தின் தகவலானது, பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்…
-
- 0 replies
- 843 views
-
-
முல்லைத்தீவு காட்டிற்குள் ஜானகபுரவிற்கு வடக்கு பக்கமாக உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய இடமொன்றை நேற்று ராணுவத்தினர் அடித்துப்பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. இதன் உண்மை விபரம் தெரியவில்லை. Troops capture LTTE strong point - North of Janakapura Infantrymen of Sri Lanka Army operating under 59 division yesterday (July 7) captured an LTTE strong point located in the Mulaithiuvu jungle. According to the defence sources, troops advancing towards the area North of Janakapura came cross this strong defensive position of the LTTE located about 10 km inside the jungle around 9.30 am. Troops launched an attack and captured the enemy position afte…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர். இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது. இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வடமராட்சியின் கரையோரமாக கால்நடையாக நகர்ந்து கொம்படி, சுண்டிக்குளம் வழியாக ந…
-
- 1 reply
- 972 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும் என முன்னாள் ஐஆர்ஏ போராளியும், மூத்த தளபதியும், தற்போது அதிகாரப்பகிர்வு பெற்றுள்ள அரசின் பிரதி முதலமைச்சருமான மார்ட்டின் மைக்கைனீஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 777 views
-
-
விடுதலைப்புலிகளின் கொழும்பு தாக்குதல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு போலீஸாரின் விசாரணையில் இருக்கும் திரைப்பட கூட்டுஸ்தாபன முன்னாள் இயக்குனர்களில் ஒருவரான தேவதாஸனை அப்பதிவிக்கு நியமித்தது தொடர்பாக ஜேவீபியின் பிரச்சார செயலாளரான விஜித ஹேரத், ஒரு மணி நேரத்துக்கு மேல் இரகசியப் போலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு இரகசிய போலீஸாரினால் தான் அழைக்கப்பட்டதாகவும், அங்கு சென்ற போது தேவதாஸனை திரைப்பட கூட்டுஸ்தாபனத்தில் இயக்குனர் பணிக்கு அமர்த்துவதற்கு முன் அவரை எப்படித் தெரியும் என்றும் , அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்புகள் இருந்தனவா? அவரை அப்பதவிக்கு அமர்த்துவதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகள் இரகசிய போலீஸாரால் கேட்கப்பட்டதாகவும…
-
- 0 replies
- 996 views
-
-
சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் நிலம், வீடு முதலிய சொத்துகளை அயல் நாட்டினர் வாங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறிலங்கா அகதிகள் தமிழகத்தில் சொத்து வாங்குவதை அனுமதிக்க இயலாது என்பது போல் தவறான பொருள் தரும் வகையில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியர் அல்லாதவர் இந்தியாவில் சொத்து வாங்குவது குறித்த விதிமுறை இந் தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசின் அசை யாச் சொத்து மேலாண்மை, கைய கப்படுத்துதல், மாற்றம் பற்றிய ஒழுங்குமுறை ஆகியன நடைமுறை யில் உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் அல்லது பூடான் ஆகிய எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரும…
-
- 3 replies
- 2k views
-
-
சக்திவாய்ந்த குண்டு தங்காலையில் மீட்பு காலி, தங்காலை பிரதான வீதியில் அமைந்துள்ள மாலை சந்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குப் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் மாலை கண்டுபிடித்து மீட்டிருக்கின்றனர். தங்காலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை யடுத்து, அங்கு வந்த பொலிஸார் இந்தக் குண்டைக் கண்டுபிடித்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை வரவழைத்துச் செயலிழக்கச் செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அந்தப் பகுதியில் பொலிஸார் மேலதிக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும் கூறப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்களா ஒன்று தங்காலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். http:…
-
- 0 replies
- 963 views
-
-
1905லே யாழ்ப்பாண வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் எமது முன்னோர் தமிழருக்குத் தனியான சுதந்திரம் வேண்டும் என பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அன்று அந்தப் பொங்கலை கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் சார்பாகப் பேசி முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையாக போராடச் செய்தார். அதனால் அன்றையப் பொங்கலைச் சிங்களம் பறித்துப் போனது. ஈழத் தமிழினத்தை முடிவில்லாத அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாக்கியது கொழும்புத் தமிழரின் தலைமை. விபரம் http://www.swissmurasam.info/
-
- 1 reply
- 1.4k views
-
-
மிகின் லங்கா விமானசேவையின் பணியாளர்கள் தமது வேதனத்தை பெறமுடியாமல் பல மாதங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமது வேதனங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரி மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே உயர் மட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவுடன், அரசாங்க வேலைத்திட்டமாக இந்த விமான சேவை நடத்தப்பட்டுவந்தது, இந்த நிறுவனத்திற்காக அரசாங்கத்தின் பல வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமையும், மிகின் லங்காவின் அதிகாரியும், ஜனாதிபதி மகிந்தவின் இணைப்பாளருமான ஷஜின் டி வாஸ் குணவர்த்தனவின் முகாமைத்துவ துஸ்பிரயோகங்களால் வங்குரோத்து நிலையை இந்த நிறுவனம் அடைந்துள்ளமையும் குறிப்படத்தக்கது. http://isoorya.b…
-
- 0 replies
- 816 views
-
-
மன்னார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினரின் சிறப்பு அணியினர் மேற்கொண்ட சிறப்புப் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தது எவ்வாறு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து "லக்பிம" வின் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னாரில் சிறீலங்கா படையினர் குடியிருப்புக்கள் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்! மன்னாரில் சிறீலங்கா படையினர் குடியிருப்புக்கள் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக, இலுப்பைக்கடவை மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை முதல் இடம்பெறும் இந்த ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களால், தமது அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத அச்சநிலை காணப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/mannar-2008-07-07.html
-
- 0 replies
- 785 views
-