ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
அரசுக்கு எதிராக பாரிய கூட்டணி: ரணில் தலைமையில் அமைக்கப்படுகின்றது Sunday, 01 June 2008 அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இத்திட்டத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., சுதந்திரக் கட்சியின் மங்கள பிரிவு என்பவற்றுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பாரிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் ருக்மன் சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலைமை தாங்குவார். இதுவரைகாலமும்…
-
- 0 replies
- 697 views
-
-
வெள்ளப் பெருக்கினால் ஐவர் பலி: 40000 பேர் இடப்பெயர்வு ஞாயிறு, 01 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] சிறீலங்காவில் பெய்துவரும் கடும்மழையினையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 000 ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இவ்வெள்ளப்பெருக்கினால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா வான்படையின் உலங்கு வானூர்திகளும் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=797
-
- 0 replies
- 966 views
-
-
மட்டக்களப்பு கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் 38 வயதான அப்துல் ரசாக் பாரூக் என்ற மரக்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து விபுலாநந்தா இசை நடனக்கல்லூரிக்கு அருகில் இருந்து தமிழ் மக்கள் பயம் காரணமாக மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தநிலையில் மட்டக்களப்பிலும் காத்தான்குடியிலும் தமிழ் முஸ்லிம் மத்தியில் பதட்ட நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 971 views
-
-
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மருதானை - பாணந்துறை தொடருந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, வில்பத்து சரணாலயப்பகுதியில் உள்ள இராஜாங்கன பகுதியில் உள்ள ஜாயா 18 பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ஊர்காவல் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில…
-
- 4 replies
- 1.6k views
-
-
போர்அரங்குகளில் படைத் தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங் கியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பிரதேசங் களைப் பாதுகாப்பது பெரும் சிரமமான காரியமாகி வருகிறது. இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில் அவசர அவசரமாக புதிய டிவிசன் (படைப்பிரிவு) ஒன்றை உரு வாக்கும் நடவடிக்கைகளை இராணுவத் தலைமை மேற் கொண்டிருக்கிறது. 61ஆவது டிவிசன் என்ற குறியீட்டுப் பெய?ல் அமைக்கப்படவுள்ள இந்த டிவிசன் இலங்கை இராணுவத்தின் 13ஆவது டிவினாகும். பனாகொடவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் 11ஆவது டிவிசன் தென் னிலங்கையின் பாதுகாப்பைக் கவனிக்கிறது. அனுராதபுரம், மன்னார், வவுனியா மாவட் டங்களின் பின்னிலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 21 ஆவது டிவிசன் இயங் குகிறது. திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்கே மணலாற…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுங்கள்: கெல உறுமய கோரிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:59 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கொண்டாட்டங்களை நிறுத்தி நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுமாறு சிறிலங்காவின் சிங்களப் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய அந்நாட்டு அரசாங்கத்தினைக் கோரியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளதாவது: இந்த வருடத்தின் எஞ்சிய பகுதிகள் முழுவதையும் நாட்டையும் முழுமையான போருக்குள் அரசு ஈடுபடுத்த வேண்டும். எல்லா விழாக்களும் நிறுத்தப்பட வேண்டும். வன்னி மீதான படை நடவடிக்கையின் போது படையினருக்கான ஊக்கங்களை அதிகம் வழங்க வேண்டும். உள்ளூர் மற்றும் அனைத்துலக எதிரிகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும், அதனை …
-
- 2 replies
- 1.1k views
-
-
'நான் அரசியலுக்கென வளர்க்கப்பட்டவனோ அல்லது அதற்கு பழக்கபட்வனோ அல்ல கரடுமுரடான 15 வருட ஆயுத போராட்டத்தில் என்னை அர்ப்பணித்து அப்போராட்டத் தலைமையின் தவறான வழி நடத்தலை உணர்ந்து, காலகாலமாக அல்லல்பட்ட அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியலில் பிவேசம் செய்ததவன். முதலமைச்ர் பதவியானது நான் விரும்பிய ஒன்றல்ல. ஆனாலும் மாகாணத்தின் சகோதரத்துவம். இன ஐக்கியம், அபிவிருத்தி போன்றவற்றிற்காக மக்கள் தந்த ஆணை' பதுளை ஊவா முகாமைத்துவ வள நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற முதலலைச்சர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு பிள்ளையான் தெரிவித்துள்ளான். அவன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கௌரவம் மிக்க முதலமைச்சர்களின் இந்தச் சந்திப்பை எம் மக்களின் அரசியல…
-
- 7 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும். 24 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பௌதீக ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கிழக்கு வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்தை இனங்கண்டு அதற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டுவதாகத் தென்மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். http://isoorya.blogspot.com/
-
- 8 replies
- 1.5k views
-
-
குடாநாடு மீது புலிகள் கடல்வழி முற்றுகையா? [01 - June - 2008] விதுரன் யாழ்.குடாநாட்டை கடல் வழியால் பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு தொடர்ந்தும் அடிவிழுகிறது. வன்னியில் பலமுனைகளிலும் பாரிய படை நடவடிக்கைகள் தொடர்கையில் விடுதலைப்புலிகளின் பார்வை யாழ்.குடாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குடாநாட்டின் மீதான நெருக்குதலை புலிகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. யாழ்.குடாநாட்டின் மீது தரைவழியால் மேற்கொள்ளப்படும் நெருக்குதலில் புலிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்கையில் கடல் வழியால் நெருக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடாநாட்டுக்கு இரு வழிக் கடல் பாதைகளுள்ளன. இந்தக் கடல்வழிப் பாதைகளூடான நெருக்குதல்களையே புலிகள் தற்போது தீவிரப…
-
- 0 replies
- 1.9k views
-
-
மூன்று தமிழ் நீதியாளர்கள் மேல்நீதி மன்ற நீதிபதியாக பதவிஉயர்வு ஞாயிறு, 01 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மாவட்ட நீதியாளர்களாக கடமையாற்றிய மூன்று தமிழ் நீதியாளர்கள், சிறீலங்கா மேல்நீதிமன்ற நீதியாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட நீதியாளர் இ.த.விக்னராஜா, வவுனியா மாவட்ட நீதியாளர் மா.இளஞ்செழியன், திருமலை மாவட்ட நீதியாளர் சந்திரமணி சிவபாலன் ஆகியோரே, இவ்வாறு சிறீலங்கா மேல்நீதிமன்ற நீதியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களை விட, கல்முனையை சேர்ந்த மூத்த சட்டவாளர் ஜமீல் அவர்களும், சிறீலங்கா மேல்நீதிமன்ற நீதியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/?p=795
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் சீருடை ஆயுததாரிகள் விசாரணை வீரகேசரி வாரவெளியீடு 6/1/2008 9:23:50 AM - இராணுவ உடையுடன் ஆயுதம் தாங்கிய சிலர் தமது தலைமை அலவலகத்துள் அத்துமீறிப் பிரவேசித்து விசாரணை நடத்தியதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் விசனமுற்றுள்ளதுடன் கடும் ஆட்சேபத்தை தெரிவிப்பதாகவும் அந்த ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இராணுவ உடையில் ஆயுதம் தரித்த சிலர் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயத்துக்குள் வந்துள்ளனர். ஸ்தாப…
-
- 0 replies
- 729 views
-
-
குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி -இலட்சுமணன்- மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் மத்திய பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளர் சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து உருவான சூழல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுவதற்கும் மேலும் 6 பேர் படுகாயம் அடைவதற்கும் 4 பேர் கடத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. மட்டக்களப்பு - கல்லடியில் வைத்துப் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் விடுவிக்கக்கோரி ஏறாவூரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 முஸ்லிம் இளைஞர்கள் கைதாகித் தடுத்தும் வ…
-
- 0 replies
- 853 views
-
-
அரசுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி திட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:38 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பலமான பெரிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அரசுக்கு எதிராக அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் ஐ.தே.க., ஜே.வி.பி., சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்க உட்பட அரசுக்கு எதிரான பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட உள்ளன. இந்த கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் எனவும், ருக்மன் சேனாநா…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கை அரசாங்கத்தால் ஒவ்வொன்றும் தலா 267 மில்லியன் ரூபா பெறுமதியான 8 ஆடம்பர பென்ஸ் கார்கள் இறக்குமதி எரிபொருளுக்கான விலைகள் மலை போல் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மகிந்த அரசு தனது பாவனைக்கென ஒவ்வொன்றும் தலா 267 மில்லியன் ரூபா ( 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ) பெறுமதியான 8 அதி பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆடம்பர பென்ஸ் கார்களை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. எரிபொருள் பாவனையைக் குறைக்கவென மகிந்த அறிவித்திருக்கும் நடவடிக்கைகளான 4 நாள் பாடசாலைகள், வாகன இறக்குமதிக்கான தடை, புகையிரதக் கட்டணம் 90 வீதத்தால் அதிகரிப்பு, பஸ் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு....போன்ற இன்னோரென்ன சிந்தனைகளுக்கும் பிறகு மகிந்த இந்த ஆடம்பரக் கார்களை இறக்குமதி செய்திருப்பது தெற்கில…
-
- 2 replies
- 1.3k views
-
-
வா.கி.குமார் 31. மே 2008 20:01 நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். இதுகால வரையுள்ள நிலமையை மாற்றியமைக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகமே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவையே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்குமெனத் தெரிவித்துள்ளனர். கொழும்பின் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பி.நடேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை "தமிழ்…
-
- 0 replies
- 614 views
-
-
தமிழ் பேசும் மக்களின் பிரச்சிiயைத் தீர்ப்பதற்கு ஈ.பி.டி.பி 3 கட்டங்களைக் கொண்ட நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டத்தை பல வருடங்களுக்கு முன்னரே முன்வைத்துள்ளது. அதன் முதற்கட்டம் நடைமுறைப்படத்தப்படுகிறது. நிரந்தர சமாதானம் ஏற்படும் வரை எமது மக்களை பட்டினியில் போட முடியாது. என நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளா.. யாதார்த்தத்தின் நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை மாத்திரமே தான் அன்று முதல் இன்று வரை முன்னெடுத்த வருவதாகவும் நடைமுறைச்சாத்திமற்ற வெறும் கனவுகளால் எமது மக்களுக்கு வாழ்க்கையை அமைத்தக் கொடுக்க இயலாது. இனைந்த வடகிழக்கு ஓர் அலகு என்பதை தனது கட்சியின் அரசியல் இலக்கு என குறிப்பட்ட அமைச்சன் இன்று இவ்விரு மாகாணங்களும் சட்ட ரீதியாக பிரிக்கபட்டி…
-
- 1 reply
- 770 views
-
-
மூதூரில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: வன்முறைச் சம்பவங்களில் பொதுமகன் சுட்டுக்கொலை- 4 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:43 மு.ப ஈழம்] [க.நித்தியா] திருகோணமலை மாவட்டம் மூதூர் நிலாப்பொலவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து அங்குள்ள தமிழ்க் கிராமமான கங்குவேலிக்குள் நடைபெற்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் வன்முறையிலும் 4 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நேற்று பிற்பகல் கிளிவெட்டிப் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டும் உள்ளார். இந்த இரு சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. …
-
- 1 reply
- 579 views
-
-
அம்பாறை தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் மக்களுடைய வீடுகளை உடைத்து நிலைகள், கதவுகள், ஓடுகள் என்பவற்றை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் எடுத்துச்சென்றுள்ளனர். இந்த மக்களினுடைய உடைமைகள் உடைத்து எடுக்கப்பட்டு தாண்டியடி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் உழவு இயந்திரங்களை பலவந்தமாகப் பறித்து அவ் உழவு இயந்திரங்களிலே ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலைமை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் இப்படியான அடாவடித்தனத்தினால் தங்கவேலாயுதபுரம் கிராமத்திலிருந்து வெளியேறி விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பகுதிகளில் வசித்துவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க…
-
- 1 reply
- 582 views
-
-
அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஆதரவாளர்கள் பலருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அமரர் ஜெயராஜினால் 60 இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏனையோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அதிகாரசபையின் தலைவர் எம்.பீ.எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களை கண்காணித்தல், உரிய பரிந்துரைகளை அமைச்சுக்கு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இணைப்பதிகாரிகள் எவ்வித பணிகளையும் மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 40,000 - 10,0000 வரையில் இந்த அதிகாரிகள் சம்பளமாகப் பெற்றுக் …
-
- 0 replies
- 626 views
-
-
சக்தி தொலைக்காட்சியின் களுவாஞ்சிகுடி செய்தியாளர் எஸ் .ரவிந்திரன் புலனாய்வுதுறையினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல மணித்தியால விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களின் போது சேகரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் புலனாய்வுதுறையினர் இவரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 601 views
-
-
மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக 75 வோட்ஸ் மின் அழுத்தத்திற்கு கூடுதலான மின் குமிழ்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது. 75 வோட்ஸுக்கு அதிகமான மின் அழுத்தத்தை கொண்ட மின் குழிழ்களை தடை செய்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேசத் திட்டம் சட்ட வரைவுகளுக்காக மின் சக்தி, எரி சக்தி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை' முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது. இலங்கை தம்பதி இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை…
-
- 4 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் தேர்தல்களை நடத்த தடை விதிக்கக்கோரி ஐ.தே.க. வழக்குத் தொடர முடிவு [சனிக்கிழமை, 31 மே 2008, 09:06 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தி அரசியலமைப்பு சபையை நிறுவிடவும் சுயாதீன ஆணைக்குழு செயற்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்த தடைவிதித்தும் தேர்தல் ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அடுத்த வாரம் தலைமை நீதிமன்றத்தினை நாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுவை செயற்படுத்தும் வரை இந்நாட்டில் சுதந்திரமான, நேர்மையான, பக்கச்சார்பற்ற தேர்தல…
-
- 2 replies
- 711 views
-
-
30.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-