ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அவுஸ்திரேலியாவின் மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட், அந்த இரு அரசுகளும் கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
வடமராட்சி, தென்மராட்சி படையினரால் சுற்றிவளைப்பு: முழுநாளும் தொடர்ந்த தேடுதல் வேட்டை Monday, 19 May 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளை இன்று திங்கட்கிழமை சுற்றி வளைத்த பெருந் தொகையான படையினர் முழு நாளும் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் இப்பகுதிகளின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன், பொது மக்களும் பெருமளவுக்கு வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. இன்று அதிகாலை ஆரம்பமான படையினரின் இந்த நடவடிக்கை மாலை 5.00 மணிவரையில் தொடர்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் ஈடுபடுத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வீடுகளைச் சோதனையிட்ட படையினர் அங்கிர…
-
- 2 replies
- 1.4k views
-
-
பல்வேறு தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 300 உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியிருப்பதாக தொம்கொட இராணுவ பயற்சி முகாமின் உயர் அதிகாரி லெப் கேர்ணல் ஹிமால் லசந்த குருகே தெரவித்துள்ளார். ஹொரணை பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காலை வேளையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தகவல்களை சேகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக…
-
- 2 replies
- 2.5k views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொர்ந்து படிக்க...
-
- 5 replies
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா, இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய், தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியேற்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையான், கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதன் பின்னர், பௌத்தர்களின் புனித தலமான தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ். வட போர்முனையான முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
நீதவான்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அரசியல் சாசனத்தின் 68ம் சரத்தின் அடிப்படையில் நீதவான்களதும், அமைச்சர்களதும் சம்பளங்கள் ஒரே தரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் சம்பளம் பிரதம நீதியரசரின் சம்பளத்திற்கும், சபாநாயகரின் சம்பளம் சட்ட மா அதிபரின் சம்பளத்திற்கும் சமப்படுத்தப்பட்டது. அமைச்சரவை சாரா மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளம் உயர் நீதிமன்ற நீதவான்களின் சம்பளத்திற்கு சமப்படுத்தப்பட்டது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 694 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.9k views
-
-
கொழும்பு குண்டு வெடிப்புக்கு வந்தவர் வியாபாரி வேடத்தில் ! Monday, 19 May 2008 கொழும்பில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்கு தற்கொலைதாரியாக வந்தவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் போல் வந்துள்ளதான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட உந்துருளி கடந்த ஏப்பரல் மாதம் 23ம் திகதி திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டாதாகவும் தெரியவந்துள்ளது. பிள்ளையான் குழுவினரின் அடையாள அட்டை ஒன்று சுனாமி காலத்தில் தொலைந்து போனதாகவும் அதை பாவித்து உந்துருளியை தாக்குதல் நடத்தியவர் பதிவு செய்திருக்கிறார் எனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அது குறித்த மேலதிக விசாரணைகளில் போலீசார் இறங்கியுள்ளனர். …
-
- 6 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹின் தலைமையில் வெற்றிப்பெற்ற மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் இந்த நிலையில் தமது ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை பெறமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளனா. அதனால் முதலமைச்சர் தெரிவுக்குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அந்தக்கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஜவாஹிர் மொஹமட் அலி மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் போட்டி…
-
- 12 replies
- 2.6k views
-
-
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் 18. மே 2008 19:32 இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இரண்டு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று நவீன இலங்கையின் மிகப்பெரிய தந்திரசாலியாகச் சொல்லப்படுகிற ஜே. ஆர் ஜெயவர்த்தன காலத்தில் ஏற்பட்டது. அடுத்தது இப்போது திரு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் உருவாகியிருப்பது. இந்த இரண்டு நெருக்கடிகளும் முழுச் சிங்களச் சமூகத்தின் அங்கீகாரத்துடன் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், இதனால் பாதிக்கப்படுவதோ எந்தவிதமான சம்பந்தமுமில்லாத தமிழ் முஸ்லிம் மக்கள். ஜே.ஆரின் காலகட்டம் பனிப்போர்; நிலவிய சூழல். அன்றைய சர்வதேச பிராந்திய சக்திகளின் இயல்புக்குள்ளும் போக்குகளுக்கிடையேயும் அவற்றின் அணுகுமுறைகளுக்குள்ளும் புகுந்து விளையாடினார் ஜே.ஆர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மெளனகுருசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார். இவர் பதவியில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருந்து உயிர் மீண்டவர். இந்த நிலையில் முதலமைச்சர் பதவி, அமைச்சர் பதவி என எல்லாம் பேசப்பட்டு இறுதியில் மாகாணசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்க அவர் மறுத்துள்ளார். இதனால் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு திருகோணமலையைச் சேர்ந்த வேட்பாளனர் ரகு அல்லது மட்டக்களப்பு வேட்பாளர் பிரசாந்தன் அந்த இடத்திற்கு நியமிக்கப்படாலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்குடா பிரதேசத்தில் (கிழக்கில்) ஐ.தே.க.வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு கடந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 17. மே 2008 வட போர்முனையிலும் வன்னிக் களமுனையிலும் இராணுவத்தினர் படுதோல்வியைச் சந்தித்து வருகின்ற போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஇ இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தமது போர் நிகழ்ச்சி நிரலில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். 'கிழக்கை விடுவித்ததைப் போன்று வடக்கையும் இராணுவத்தினர் மிக விரைவில் விடுவிப்பர்" என்று மே தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சூளுரைத்துள்ளார். அதேநேரம் 'புலிகளை தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒடுக்கியே தீருவேன்" என்று கடந்த 04 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாகாண சபைத் தேர்தல் மூலம் இந்தியாவின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சொற்படி கேட்டு நடக்கும் முதலமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வளங்களை கொள்ளையடிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று ஜே.வி. பி தெரிவித்துள்ளது. தொடர்ந்து படிக்க...
-
- 2 replies
- 961 views
-
-
கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப்போவதில்லையென மிரட்டிவந்த ஹிஸ்புல்லா, அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவியைப் பெறுப்பேற்கத் தற்பொழுது இணங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லாவை அலரிமாளிகையில் சந்தித்து, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த ஹிஸ்புல்லா, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்கவு…
-
- 2 replies
- 2.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 18.05.08 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு ஆய்வுப் பொருள்: கிழக்குத் தேர்தலில் குடியேற்றங்களின் ஆதிக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சிவகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பொறுப்பாளர் திரு எழிலன் மற்றும் திரு வீரா
-
- 0 replies
- 893 views
-
-
2552ம் ஆண்டு புத்தஜயந்தியை முன்னிட்டு நேற்றிலிருந்து எதிர்வரும் 24ம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. தொடர்ந்து படிக்க...
-
- 0 replies
- 644 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சட்டவிரோதமாக பணம் கொடுத்து பயண ஆவணங்களைப் பெறும் தமிழர்களை மிரட்டியும் கடத்தியும் கப்பம் பெற்று வந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் சிறப்பு காவல்துறைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
பசி எனக்கூறி வீடொன்றுக்கு சென்ற முதியவர் ஒருவர் அங்கிருந்த தம்பதியருக்கு கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி கொடுத்து விட்டு பணம் மற்றும் சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவமொன்று புத்தளம் பகுதியில் இட்மபெற்றுள்ளது. புத்தளம் மேற்கு உப்பளம் வீதி இரண்டாம் ஒழுங்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது இப்பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சென்ற சுமார் 75 வயது மதிக்கதக்க முதியவரொருவர் தமக்கு மிகவும் பசியென கூறி உணவு கேட்டார் என்றும் பரிதாபப்பட்ட வீட்டாரும் அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது உணவு உண்டு முடிந்த முதியவர் சற்று உடல்நலக் குறைவான மேசன் தொழிலாளியிடம் நான் உங்களுக்கு மருந்து செய்து…
-
- 3 replies
- 2.5k views
-
-
மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணையையும் மூடிமறைக்க முயற்சி வீரகேசரி நாளேடு 5/19/2008 9:41:22 AM - மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை விசாரணையினை மூடிமறைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை போன்று கோட்டை குண்டு வெடிப்பு விசாரணைகளையும் மூடிமறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களினதும் அதேவேளை பொலிஸாரினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசியல் கட்சியென்ற ரீதியில் எமது கடப்பாடாகும். இதற்காக மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து தொடர் போராட்டங்களை நடத்த கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரள்வோம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒத்து…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மகாண சபைக்கான தில்லு முல்லு தேர்தலும்! வடக்கில் நடாத்தபடும் கொலைக்கான அரசின் அங்கிகாரமும்! May 18,2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ, எல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, புலனாய்வு துறையினர் ஆகியோர் இணைந்து தீட்டிய சதித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளனர் பிள்ளையான், ஐயா கொசுரு ஞானம், கோவணம் இழந்த குமாரதுரை தாத்தா. அதன்படி கள்ள வாக்குகளும் வன்முறைகளும் நிறைந்த தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண சபை தேர்தலில் அதிக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதை கட்டுப்படுத்தி அதன் ஊடாக தமிழர்களின் பெரும்பான்மையை குறைப்பதும் தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடி…
-
- 0 replies
- 929 views
-
-
தலதா மாளிகையில் பிள்ளையான் தரிசனம்! May 18,2008 பிள்ளையானை கிழக்கின் முதலமைச்சராக்கி, தமிழினத்தைக் கேவலப்படுத்திய ராஜபக்சே தலதாமாளிகைக்கு அனுப்பி தலைமைக் குருவின் காலில் விழச் செய்து பிள்ளையான் தமிழனல்ல, வார்த்தெடுக்கப்பட்ட சிங்களவன் என்று தமிழுலகக்கு அறியப்படுத்தியுள்ளார் அம்பாந்தோட்ட காடையர் ராஜபக்சே! கொலை, கொள்ளை, ஆள்க் கடத்தல், பழி தீர்த்தல் போன்றவற்றினை கடந்த 3 ஆண்டுகளாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து திறம்பட செயற்பட்டு, கொள்ளைப் பணங்களை புலனாய்வு, மற்றும் ராணுவ சி;ப்பாய்களுடன் பங்கு போட்டது பிள்ளையான்தான் என்பது இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். இப்படியான ஒரு நபர்தான் தமிழர்களின் முதலமைச்சராகத் தகுதியுட…
-
- 0 replies
- 1.3k views
-