ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
சிங்கள மயப்படுத்தல் திட்டத்துக்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது: கஜேந்திரகுமார்! மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ் தேசிய மக்கள்…
-
- 0 replies
- 460 views
-
-
ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை Published By: Rajeeban 06 Mar, 2023 | 11:26 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்ட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும…
-
- 5 replies
- 586 views
-
-
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்? Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 04:32 PM எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிவாயுவிலைகளும் …
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்தமை மகிழ்ச்சி – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையி…
-
- 1 reply
- 597 views
-
-
மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் - பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை 06 Mar, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பல…
-
- 0 replies
- 674 views
-
-
யாழ்.தெல்லிப்பழையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு Published By: T. SARANYA 06 MAR, 2023 | 09:46 AM யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் கொப்பு தொடுகையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/149773
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தலை தாமதப்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன் திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது உள்ளூராட்சித் தேர்தல் குறித்த தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் வாக்கெடுப்புக்கான புதிய திகதியை அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுவது உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தும் செயற்பாடு என கருதுவதாக அக்கட்சியின் ஊடக பேச்சளார் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். திறைசேரியின் செயலாளர், அரசாங்க அச்சகமும் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என…
-
- 0 replies
- 346 views
-
-
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1326464
-
- 0 replies
- 174 views
-
-
வடக்கு மீனவர்கள் ஒன்றாகுவீர்களா? – சுமந்திரன் கேள்வி “வடக்கு மீனவர்களுடைய பிரச்சினைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆதரவு வழங்கத் தயார். ஆனால் மீனவர்கள் எல்லோரும் ஒன்றாகப் போராடத் தயாரா?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். நகரிலுள்ள விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இழுவைமடி தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கடந்த காலத்தில் …
-
- 0 replies
- 538 views
-
-
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானம் Published By: Nanthini 05 Mar, 2023 | 08:00 PM யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (5) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாகவும் மா…
-
- 0 replies
- 550 views
-
-
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…
-
- 24 replies
- 1.8k views
-
-
அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 05:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரைஸர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்த…
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்று தீர்ப்பு SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும் ஒத்திவைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இனிமேலும் தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் மௌனம் காத்த வந்த வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின்…
-
- 0 replies
- 778 views
-
-
கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு மத்தியில் தீவிரமடையும் நோய் கிளிநொச்சி – பூனகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளில் பெரியம்மை (இலம்பி) நோய் அதிகளவில் கால்நடைகளிடையே தாக்கம் செலுத்தி வந்துள்ளது என கால் நடைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இள வயதுடைய கால்நடை உயிரினங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை பெரும் புண்ணாக மாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிப்புக்கள் இதனால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்ற நிலமை காணப்படுவதாகவும், பால் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural…
-
- 0 replies
- 621 views
- 1 follower
-
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ஆம் திகதி இடம்பெறலாம்? உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடு…
-
- 0 replies
- 449 views
-
-
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை – பஷில்! நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் தொடர்ந்து பிற்போட முடியாது எனவும், மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வர…
-
- 0 replies
- 175 views
-
-
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது! உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த போது, எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானத்திற்கு 62 ஆயிரத்து 800 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த எரிபொரு…
-
- 0 replies
- 843 views
-
-
தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 05:31 PM (நா.தனுஜா) இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்க…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
பொதுஜன முன்னணி பதவியை இழக்கிறார் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நீக்க கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொருத்தமான பெயர்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவத…
-
- 6 replies
- 860 views
-
-
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை: வளர்ச்சிக்கு உதவுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்த ஆண்டின் முதல் மாதம் தொடக்கம், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 102,545 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், கடந்த பிப்ரவர…
-
- 1 reply
- 295 views
- 1 follower
-
-
இந்திய மீனவரைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம் பிடித்து கடற்படையினரிடம் ஒப்படையுங்கள் -டக்ளஸ் வடபகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால், அவர்களை எமது மீனவர்கள் பிடித்து கடற்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வைத்துக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். அத்துடன், “நான் ஏற்கெனவே எமது மீனவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. கடலில் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோ…
-
- 6 replies
- 790 views
-
-
குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம் விஜயரத்தினம் சரவணன்,சண்முகம் தவசீலன் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமான…
-
- 52 replies
- 3.7k views
- 2 followers
-
-
ஆளுமையுள்ளவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு - யாழ் பல்கலையின் சிரேஷ்ட பேராசிரியர் ரவிராஜன் Published By: NANTHINI 04 MAR, 2023 | 03:53 PM (எம்.நியூட்டன்) ஆளுமையுள்ள எம்மவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு என்பதை நான் உணர்கின்றேன் என யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். யாழ். ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் சமூக சேவையாளரும் கனேடிய அரசியல் செயற்பாட்டாளருமான கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் 'அணுவைத் துளைத்து' நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கல்லூரியின் குமார…
-
- 1 reply
- 615 views
- 1 follower
-
-
கணபதி கனகராஜ், துரை மதியுகராஜா ஆகியோருக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய பதவிகள்! ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்விப் பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் துரை மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 479 views
-
-
அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அக்மீமன பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக…
-
- 0 replies
- 580 views
-