ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அநுராதப்புரத்தில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து 280 குண்டு துளைக்காத கவசங்கள் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். நேற்றைய தினம் மதவாச்சியில் வைத்து லொறியொன்றை சோதனையிட்ட் பொலிஸார் அதிலிருந்து 68 குண்டு துளைக்காத கவசங்களை கைப்பற்றினர். அத்துடன் இது தொடர்பில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று அநுராதபுரத்தில் கைவிட்ட வீடொன்றிலிருந்து மேலும் 280 குண்டு துளைக்காத கவசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். செய்தி அவையடங்கி http://www.kalakam.com/forum/viewtopic.php?t=177
-
- 2 replies
- 2.3k views
-
-
கடலுக்குள் கண்ணி வெடி! - ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்த…
-
- 2 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினதும் மற்றும் ஆழ ஊடுவும் படையினதும் தாக்குதல்களில் இருந்து பாடசாலை மாணவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளிநொச்சி பாடசாலை முதல்வர்களின் சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
"இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" - கண்ணி வெடி விவகாரத்தில் வெடிக்கும் திருமா தமிழக அரசியலில் ஜனநாயகமும், மனிதநேயமும் இன்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பாசிச கொடுநெறிப் போக்கு கையாளப்படுகிறது’ என்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அதன் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல், புலிகளுக்கு ஆயுதம் கடத்திய புலி ஆதரவாளர்கள் கைது என அண்மையில் வந்து கொண்டிருக¢கும் செய்திகளுக்கு மத்தியில் இவருடைய துணிச்சல் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தைகள் அமைப்பினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள தூத்துக¢குடியில் இருந்தவரை தொடர்…
-
- 3 replies
- 2.3k views
-
-
கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா -உதயன் இருபது வருடத்துக்கு முந்திய அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தை மஹிந்தரின் அரசு இப்போது தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதன் பின்ன ணியில், நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடி யான பங்களிப்பும், தலையீடும், செல்வாக்கும் காரணமாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ஸ அமரசிங்க, இது குறித்து புதுடில்லி தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். "இந்தோ ஆசிய செய்திச் சேவை' என்ற இந்திய ஊடகம் ஒன் றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பி, பதிலைக் கோரியிருக்கின்றார். 1987 இல் தனது அழுத்தம் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொழும்…
-
- 6 replies
- 2.4k views
-
-
மன்னார் மடுப் பிரதேசத்தில் 17 அப்பாவிப் பொதுமக்களைப் பலியெடுத்த பஸ் மீதான கிளைமோர் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசு நேற்று அறிவித்துள்ளது. புனிதப் பிரதேசமான மடுப்பிதேசத்தை மிகவும் மதித்து அங்கு அரசு சண்டையில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை என்றும், அங்கு புலிகளே அடிக்கடி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கெஹெலிய ரம்புக்வெலவே இதைத் தெரிவித்துள்ளார். மேலும் மன்னார் மடுப்பிரதேசத்தில் சிவிலியன்கள் பயணம் செய்த பஸ் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் குறித்து நாம் மிகவும் கவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தளபாட வியாபாரிகளான சிங்களவர்கள் இருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 907 views
-
-
நீண்டகாலம் இனவெறி சிங்களவர்களினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர தேசத்தைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. அமெரிக்கா, தனது சுதந்திர பிரகடனத்தில் தெரிவித்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுதந்திர தேதசத்திற்குள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இப்படி அந்த நாட்டின் முன்னனாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதளில் இது குறித்து அவர் எழுதுயுள்ளாh. 1776 இல் வரையப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக வைத்து பெய்ன் தனது வாதங்களை முன்வைத்தள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்த நான்கு தமிழ் நாடா…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள கனடாவில் அதனை ஆதரித்துப் பேசவும் எழுதவும் சுதந்திரம் இருக்கிறது - நக்கீரன் - ரொறன்ரோ கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் உடபட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை இராணுவ பயங்கரவாதத்துக்குப் பலியான…
-
- 0 replies
- 1.4k views
-
-
நம்பகத் தன்மையான அதிகாரப் பகிர்வையே இலங்கையிடமிருந்து சர்வதேசம் எதிர்பார்க்கிறது 13ஆவது திருத்த அமுலாக்கத்தை அல்ல என்கின்றனர் இராஜதந்திரிகள் நம்பகத்தன்மை மிக்க அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றையே (Credible Power Sharing Proposal) சர்வதேச சமூகம் இன்றைய நிலையில் இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின்றது. அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத் தும் திட்டம் பற்றிய அறிவிப்பை அல்ல. கொழும்பில் சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரிகள் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றனர். இலங்கையில் சிவில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு இடையில் சமர சம் செய்யும் முயற்சியில் சர்வதேச சமூகம் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகாளாக சம்பந் தப்பட்டிருக்கின்றது. …
-
- 0 replies
- 890 views
-
-
4ம் கட்ட ஈழ யுத்தத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் மற்றொரு களமுனையாக மணலாற்றுக் களமுனையும் மாற்றம் பெற்று வருகின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமை அதிக சிரத்தை எடுத்து போர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுவருகின்ற ஒரு களமுனையாகவும் மணலாற்றுக் களமுனை தற்பொழுது தோற்றமெடுக்க ஆரம்பித்து வருகின்றது. ேமலதிக விபரம் அறிய. http://swissmurasam.info/content/view/3991/1/
-
- 1 reply
- 2.6k views
-
-
29.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7dbda4cbcbee168
-
- 0 replies
- 1.9k views
-
-
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 12 பேரை கடத்திய சிறிலங்கா கடற்படை! கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 599 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில், 596 படகுகள் நேற்று காலையில் கரை திரும்பிவிட்டன. ஆனால் 3 படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் 12 மீனவர்களை சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிர…
-
- 1 reply
- 7k views
-
-
பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு 1/29/2008 8:56:03 PM வீரகேசரி இணையம் - பலாலி விமானப் படைத்தளத்திற்கு பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்வது தொடர்பான தகவல்களை புலிகள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனரா? என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து விமான மூலமாக சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் புலிகள் பலாலி விமான நிலையத்தை நோல ஆட்லறிஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் முன்தின…
-
- 14 replies
- 4.2k views
-
-
மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் காவலரண் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 16 பேரின் இறுதி நிகழ்வு மடுக்கோவிலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மனோ கணேசனின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பு சிறீங்கா அரசினால் காரணமின்றி குறைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மனோ சணேசனால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்;டதுடன், 8 ஆயுதம் தரித்த காவல்துறையினரும், வாகனங்களும் அவரது பாதுகாப்பிற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டமா அதிபருக்கு நீதியாளர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டது. நீதியாளர்கள் கே. சிறீபவன், றோஹினி பெரேரா ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 10 ஆயுதம் தரித்த காவல்துறையினரையும், இரண்டு பாதுகாப்ப…
-
- 0 replies
- 953 views
-
-
தனியரசின் வாசலில் நிற்கும் கொசோவோ -ரூபன் சிவராஜா- பன்னாட்டு அரசியலின் சமகால நிகழ்வுகளில் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் தொடர்பான விவகாரம், அதீத முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் நேரடித் தலையீட்டுடன் சேர்பியா-கொசோவோ தரப்புகளுக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டன. ஆனபோதும் தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. இன்றைய நிலையில் பெப்ரவரி மாத இறுதிக்குள் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிகழும் என்ற செய்தி உறுதியாகியிருக்கின்றது. கொசோவோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கொசோவோவிற்கான தொடர்புக் குழுவில் (ஊழவெயஉவ பசழரி கழச முழளழஎழ) அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மற்றும் ரஸ்யா…
-
- 0 replies
- 902 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசங்களை தனிநாடாகக் கருதி அங்கீகரிக்கும் படி புலிகள் ஐநாவிடமும் சர்வதேசத்திடமும் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ---------- LTTE calls for recognition of separate state. The LTTE Political Wing head B. Nadesan has called on the international community, particularly the UN, to recognise areas under rebel control as a separate state, the LTTE Peace Secretariat said in a statement. dailymirror.lk ----------- We, therefore, urge you to consider recognizing Tamil sovereignty as a constructive approach to end the unending five decades long, large scale, and serious rights vi…
-
- 3 replies
- 3k views
-
-
மன்னார் தட்சணாமருதமடுவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலைக் கண்டித்து வன்னியில் கண்டன நிகழ்வுகளும், படுகாயமடைந்தவர்களுக்கான குருதிக்கொடை நிகழ்வும் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 709 views
-
-
கிழக்கில் நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியாது' [30 - January - 2008] எம்.ஏ.எம்.நிலாம் கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் கைகள் மேலோங்கிக் காணப்படுவதால் அங்கு உள்ளூராட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமென எதிர்பார்க்க முடியாதிருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்திருக்கும் அதேசமயம், அமைதியான தேர்தலொன்று நடைபெறுவதற்குரிய விதத்தில் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றார். எமது நாட்டில் இனவாதமில்லாத அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத…
-
- 1 reply
- 895 views
-
-
கனடிய யோர்க் பல்கலைக்கழத்தில் தமிழர் சமூகத்தை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உலக நாடுகளின் தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசியக்கொடி வரிசையாகப் பட்டொளி வீசிப் பறக்க விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.5k views
-
-
முகமாலை நாகர்கோவில் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றி புலிகளின் 35 பதுங்கு குழிகளை அழித்துள்ளதாக மத்திய ஊடகம் நிலையம் சிங்கள ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. ஜானா இதுவும் நேற்றறைய வியத்தங்குளம் கைப்பற்றியதைப் போன்ற செய்தியாக இருக்கலாம்.
-
- 5 replies
- 3.1k views
-
-
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகவே சிறுவர்களுக்கான போஷணை செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டது - யுனிசெப் [Wednesday January 30 2008 06:23:01 AM GMT] [யாழினி] அரசாங்கத்திடமிருந்து கிடைத்த வேண்டுகோளுக்கு அமையவே கிளிநொச்சிக்கு சிறுவர்களுக்கான போஷணை செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. கிளிநொச்சிக்கு போஷணை செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வகையான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட கொள்கலன் சனிக்கிழமை மதவாச்சி சோதனை சாவடியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் விடுதலைப் புலிகளுக்கு இந்த உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டத…
-
- 0 replies
- 1.1k views
-