ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படா இராணுவத் தளபதி சொல்கிறார் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வன்னி மீதான படை நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என்று தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வன்னியை விரைவில் மீட்டே தீருவோம் என்றும் சூளுரைத்துள்ளார். தென்பகுதியில் நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற
-
- 7 replies
- 2.6k views
-
-
அமெரிக்காவிடமிருந்து சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான நவீன ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ரொபேட் எவ்.வில்லாட்டுடன் நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.5k views
-
-
மன்னார் பண்டிவிரிச்சானில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் 2-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 758 views
-
-
கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலத்திற்கு அருகில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் கடந்த 17 ஆம் நாள் நடத்திய தாக்குதலை கிளிநொச்சி நகரப் பாடசாலைகளின் முதல்வர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 857 views
-
-
சிறிலங்கா முழுவதும் 40நிமிடம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இப்போ சில பகுதிகளில் மீண்டும் வந்துள்ளது (7:15am). மேலதிக விபரங்கள் தெரியவில்லை
-
- 6 replies
- 2.2k views
-
-
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்திய பிர்லா கம்பனி பொறுப்பேற்பு 19.01.2008 / நிருபர் எல்லாளன் உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி இலங்கையின் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையைப் பொறுப்பெடுக்கவுள்ளதாக கட்டுமான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை…
-
- 20 replies
- 3.4k views
-
-
இலங்கையில் அமைதி நிலவ அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படைக்கு நன்றி செலுத்து முகமாக அதில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அடுத்த மாதம் நிறுவப்படவுள்ளது என்று மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தி அமைதிப்படை அனுப்பட்டது. அதன் மக்தான சேவைக்கு நாங்கள் இன்னும் நன்றி செலுத்த வில்லை. அமைதிப் படையில் உயிர்நீத்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவுச் சின்னம் இலங்கை பாராளுமன்ற கட்டிடம் அருகே தயாரகி வருகிறது. அடுத்த மாதம் திறக்கப்படும். எனக்கு முன் பதவியில் இருந்த அரச தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க மறந்து விட்டனர். நான் பதவிக்கு வந்ததும் இத குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அடுத்த மாதம் 4ம் திகதி நினைவுச் சின்ன…
-
- 2 replies
- 1.7k views
-
-
மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 07:27 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள்: கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (15.01.08) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் …
-
- 9 replies
- 2.5k views
-
-
கிழக்கே போகும் ரயில் http://www.virakesari.lk/VIRA/cartoon/index.asp?index=-1
-
- 1 reply
- 2k views
-
-
நாகர் கோவில் முன்னரங்க நிலைகளில் கடுமையான சண்டை தற்போது நடைபெறுவதாக சொல்லப்படுகின்றது. சேத விபரங்கள் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் தெரியவில்லை
-
- 2 replies
- 3k views
-
-
அப்பாவித் தமிழர்களை கண்டவுடன் இரகசிய பொலிஸ் அவதாரமெடுக்கும் கும்பல்கள் [21 - January - 2008] தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்திருக்கும் குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகப் பலப்படுத்தியிருக்கிறது. கொழும்பில் 24 மணிநேரமும் பொலிஸார் மற்றும் படையினரின் ரோந்துப் பணிகளும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. சந்தேகத்துக்கிடமான வீடுகள் அல்லது நபர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸாரும் படையினரும் துரிதமாகச் செயற்படக்கூடியதாக அவர்களுக்கு மக்கள் விரைந்து தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜே.வி.பியின் ஒரே வழி....... -வேலவன்- மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தினால் தான் தேசப்பற்றாளர்களைப் போருக்கு ஆதரவாக அணிதிரட்ட முடியும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியிருக்கின்றார். முழு அளவிலான யுத்தம் ஒன்று மகிந்த ராஜபக்ச அரசாங் கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து இண்டு வார காலக்கெடுவும் முடிந்துவிட்ட நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச சனாதிபதியாகப் பதவியேற்றது முதல் அதனை இவ்வாறான ஒரு நிலைக்கு விரைந்து தள்ளுவதில் ஜே.வி.பி ஒரு பாரிய பங்கை வகித்திருக்கின்றது. முதலில் சிங்களப் படைகளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் வளைகுடாவுக்கு அதி நவீன ரோந்துக்கப்பலை அனுப்பியது இந்தியா [20 - January - 2008] [Font Size - A - A - A] இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக வெளியார் ஊடுருவுவதைத் தடுக்க அதி விரைவு ரோந்து போர்க்கப்பல் இராமேஸ்வரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் தீவிர சண்டை நடந்து வருவதால் இந்தியாவின் மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக போராளிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வழியாக ஆயுதக் கடத்தலும் நடப்பதாக தகவல் வெளியானதால் கடற்படையினருடன் கடலோரக் காவல் படை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் ஆதாம்பாலத்தைக் கடந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருந்தது. எனவே, மன்னார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
முப்படைத் தளபதிகள் சகிதம் மொனறாகலவில் மகிந்த சிறிலங்காவின் முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் சகிதம் திடீர்ப் பயணத்தினை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஞாயிற்றுக்கிழமை மொனறாகல, தனமல்விலப் பகுதிக்குச் சென்றார். அத்துடன் கடந்த புதன்கிழமை இரவு அங்கு நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட சிலரது வீடுகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். இந்தப் பகுதிகளுக்கு நேற்று முன்நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச சென்றிருந்தார். இந்நிலையில் நேற்றுக் காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் தனமல்வில, ஹம்பேகமுவப் பகுதிகளுக்குச் சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த புதன்கிழமை கொல்லப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் ஊவா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் வன்னி மீதான படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக மகிந்த ராஜபக்சவின் சொந்த மாகாணத்திற்கு போரை விரிவுபடுத்தும் உத்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 923 views
-
-
ஒரு சுண்டைக்காயிடம் சரணடையலாமா? -சோலை அடுத்த மாதம் இலங்கை சுதந்திர தின பவள விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் பங்குகொள்வார் என்று கொழும்புச் செய்திகள் கூறின. இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பிரதமர் செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி மன்மோகன் சிங் கலந்துகொள்வாரானால், இலங்கை அரசின் தமிழ் இன ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம் அளிக்கிறது என்று பொருள். இதனை நாம் கூறவில்லை. ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் உலகமே இப்படிக் கண்டனம் தெரிவித்தன. மனித உரிமைகளை ராஜபட்சே அரசு இரும்புக் கால்களில் நசுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நிரந்தர மனித உரிமை ஆணையம் செயல்பட வேண்டும் என்று ஐ…
-
- 2 replies
- 1.7k views
-
-
வரணி படைத்தளத்திலும், வன்னி கட்டளைப் பீடத்திலும் படையினருக்கான உயர் மாநாடு வரணிப் படைத்தளதில் இன்று சிறீலங்காப் படையினருக்கான உயர் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை யாழ் மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தலைமையிலான உயர் படை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்ட நிலையில் 5 உலங்கு வானூர்திகளில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். இதேநேரம் காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வரணிக்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டைப் பீடத்தில் சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் உயர் மாநாடுகள் இடம்பெற்றுள்ளகைய…
-
- 7 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று முன்நாள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 726 views
-
-
ஞாயிறு 20-01-2008 22:31 மணி தமிழீழம் [மகான்] யாழில் படையினரின் வணிக நிலையங்களுக்கு செல்லவேண்டாம் - எல்லாளன் படை எச்சரிக்கை சிறீலங்காப் படையினரால் நடாத்தப்படும் வணிக நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ் வலிகாமப் பகுதியில் காணப்படும் அப்பக்கடைகள், வணிக நிலையங்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களின் தகவல் மையமாகவும், திட்டங்கள் தீட்டப்படும் இடமாகவும் திகழ்வதால் அப்பகுதிகளுக்குச் சென்று தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் துணை போக வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஐந்து நாடுகள் பயண ஆலோசனை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 1/20/2008 7:36:50 PM வீரகேசரி நாளேடு - பாதுகாப்பற்ற சூழல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை காரணங்காட்டி, 5 முன்னணி நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பயண ஆலோசனை வழங்கியுள்ளன. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளே தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த நாடுகள் புத்தளத்துக்கு அப்பால் வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு பல ஆண்டுகளாக நிரந்தர பயண எச்சரிக்கை…
-
- 0 replies
- 907 views
-
-
கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம் - திருமாவளவன் வீரகேசரி நாளேடு - அரியலூர், கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகளை இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்ற கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக்கூடாது. போர் உபகரணங்களை வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அரியலூர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்களித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக தமிழகத்தில் சில கட்சிகள் எங்களை விமர்சனம் செய்கின்றன…
-
- 0 replies
- 1.7k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தல்களும், படுகொலைகளும், துன்புறுத்தல்களும் தொடர்வதாக உள்ளகச் செயற்பாட்டு அமைப்பும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 662 views
-
-
முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில் கடல் தொழிலுக்குச் சென்ற மீன் பிடித்தொழிலாளர்கள் மீது இன்று சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
Posted on : Thu Jan 17 9:50:00 2008 பிரிட்டிஷ் நாடாளுமன்றில் இன்று இலங்கை விடயம் எதிரொலிக்கும் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான பிரிட்டனின் உதவிகள் குறித்து இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. பிரிட்டனின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் கீயுஸ் இது குறித்து சபை ஒத்திவைப்பு வேளையின்போது கேள்வி எழுப்பவுள்ளார். கடந்த வாரம் இலங்கை நிலைவரம் குறித்து இவர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதன்போது பதிலளித்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாதமை குறித்துத் தமது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். (சி) http://www.ut…
-
- 17 replies
- 5.5k views
-