ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சென்னை (ஏஜென்சி, ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2007 (16:15) 'இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் குற்றமா?' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 'விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் திருமாவளவன் உள்பட யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கக் கூடாது' என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் காட்டமாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து திருமாவளவன் கூறியதாவது: இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. அதை மறுபடியும் நீட்டிக்கத்தான் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த இரு போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 917 views
-
-
வடக்கு-கிழக்கில் உள்ள நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்பதற்கு ஊர்காவல் படையினரை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 821 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் 13 ஆவது படையணியாக 59 ஆவது படையணி விரைவில் களமிறக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் பிரகடனப்படுத்தப்படாத நான்காம் கட்ட ஈழப்போரில் இது பிந்திய இணைப்பாகும். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் என்னை கொல்ல முயற்சித்தது பிராந்திய உளவு நிறுவனம்தான்- விடுதலைப் புலிகள் அல்ல: முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் சிறிலங்காவில் தன்னைக் கொல்ல முயற்சித்தது பிராந்திய நாடு ஒன்றின் முக்கிய உளவு நிறுவனம்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்று சிறிலங்காவிற்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசீர் வலி மொகமட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள சிறிலங்கா ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையின் வடக்குப் பகுதிக்குக் கூட நான் சென்று உள்ளேன். விடுதலைப் புலிகள் என்னைக் கொல்ல நினைத்திருந்தால் எந்த நேரத்திலும் என்னைக் கொன்றிருக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கிளைமோர் மூலம் கொல்ல முயற்சித்ததாகக் கூறப்பட்ட போதும் அண்டை நாடு ஒன்றின் முக்கிய உள…
-
- 0 replies
- 744 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க முடியாது என்று அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 769 views
-
-
அரசை ஜே.வி.பி. காப்பாற்றியது ஏன்? [16 - December - 2007] -எம்.ஏ.எம். நிலாம்- வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஒருவாறு அரசு தப்பிப்பிழைத்துவிட்டது. 47 பெரும்பான்மை வாக்குகளால் அரசு வெற்றிகண்டதாக பெருமை கொண்ட போதிலும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது ஜே.வி.பி.யின் ஒத்துழைப்பு இன்றி 118 வாக்குகளை பெற்றுக்கொண்டுவிட்டு மூன்றாவது வாசிப்பில் ஜே.வி.பி. ஒதுங்கி நின்று ஆதரவளித்த நிலையிலும் 114 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது அரசுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. ஜே.வி.பி. முன்னைய நிலைப்பாட்டையே மூன்றாவது வாசிப்பிலும் எடுத்திருந்தால் அ…
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிறு 16-12-2007 04:52 மணி தமிழீழம் [சிறீதரன்] வடமராட்சி கடற்பிரதேசத்தில் போர் ஒத்திகைகள் வடமராட்சி கடற்கரையோரங்களில் சிறீலங்காக் கடற்படையினர் போர் ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களாக வடமராட்சி கற்கோவளம் தொடக்கம் மணற்காடு வரையில் உள்ள கடற்பகுதிகளில் ஆங்காங்கே கடற்படையினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போர் ஒத்திகையில் 1500 கடற்படையினர் வரையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அப்பகுதி குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 694 views
-
-
தமிழ்நாட்டில் திடீரென விடுதலைப் புலிகள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையோர் எனக்கூறி மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின் பின்னணியை தமிழ்நாட்டின் பிரபல வாரமிருமுறை இதழான ஜூனியர் விகடனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளை புலிகள் தொடாபாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகாளல் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இந்திய இராணுவ, கடற்படைத் தளபதிகளின் கருத்துக்கள் கடற்புலி முக்கியஸ்தர்களின் கைதுகள், அவர்கள் வெளியிட்டு வரும் பரபரப்புத் தகவல்கள் அது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் சூடான சுவாரஸ்யமான அறிக்கைகள் ஊடகங்களின் ஊகங்களேன கடந்தவாரம் தமிழகமே பரபரப்பாக காணப்பட்டது. கடற்புலி முக்கியஸ்தர்களின் கைது காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க போன்…
-
- 1 reply
- 915 views
-
-
தமிழீழத் தாயகப் பகுதியில் வசித்து வரும் தமிழர்கள் மீது சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்து வரும் போருக்கு 87.3 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரித்துள்ளனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
ஹெல உறுமயவின் இனவாத கருத்துக்களை கண்டித்து நீர்கொழும்பில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி [saturday December 15 2007 02:06:42 PM GMT] [யாழ் வாணன்] ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவெல தேரர், முஸ்லிம்கள் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை கண்டித்து நீர்கொழும்பு பெரிய முல்லையில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று, வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையினையடுத்து, இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேல் மாகாணசபை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சாபி றஹீம் தலைமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், இனவாதத்தைக் கக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலை கண்டிப…
-
- 1 reply
- 844 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உட்பட மூன்று நாடுகள் குரல் கொடுத்த நிலையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படாமலே மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளது. ஜெனிவாவில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் 14ம் திகதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் இலங்கையில் இடம் பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதே நேரம், சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் அமைப்பும் கூட்டாகக் கடிதம் மூலம் இலங்கையில் இடம் பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
வரவு-செலவுத்திட்ட 3 ஆம் கட்ட வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியையடுத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் முக்கிய அரசியல் முடிவுகள் சிலவற்றை எடுக்க உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 729 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பலவீனமான அரசாங்கமாக மாற்றி தமது பிடிக்குள் கொண்டுவர ஜே.வி.பி. முயற்சித்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 699 views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து விலகியதையடுத்து இதுவரை அமைதி காத்து வந்த சிறிலங்கா அமைச்சர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக கூறத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
யாழ் மக்களுக்கு உணவு-மருந்து : வாக்குறுதி தவறிய முதலமைச்சர் கலைஞர் 90 நாட்களாக பதில்கூட எழுதாத பண்பாடு அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு நெடுமாறன் வேண்டுகோள் கடிதம் பட்டினி கிடக்கும் யாழ் மக்களுக்கு உதவுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைச் சேகரிக்கும் இயக்கத்தினை கடந்த ஆண்டு திசம்பரில் நாங்கள் தொடங்கி ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் பெறுமான பொருட்களை திரட்டியதையும், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதை அனுப்புவதற்கு நாங்கள் செய்த முயற்சிகளையும் தாங்கள் அறிவீர்கள். கடந்த 14-02-2007 அன்று இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனால் இதுவரை இப்பொருட்களை அனுப்புவதற் கான அனுமதி…
-
- 0 replies
- 916 views
-
-
"புலிகள் ஊடுருவல் அறவே இல்லை" - தென் படைத்தளபதி "புலிகள் பொருட்களைக் கடத்துகிறார்கள்" -கியூ பிரிவு காவல்துறை எது உண்மை? எது பொய்? முதலமைச்சர் கலைஞரின் பதில் என்ன? - பழ. நெடுமாறன் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இங்கிருந்து பல்வேறு பொருட் களை இலங்கைக்குக் கடத்தி வருகின்றனர் என்று அண்மையில் தமிழக கியூ பிரிவு காவல்துறை பலர்மீது வழக்குத் தொடுத் துள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளை இங்கிருந்து கடத்தியதாக பலர் மீது வழக்குப் போடப்பட்டது. ஆனால் இந்திய இராணுவத்தின் தென்மண்டலத் தளபதியாக உள்ள லெப். - ஜெனரல் நோபுல் தம்புராசு முதலமைச்சர் கலைஞரை 12-12-07 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய பிறகு பின்வருமாறு அறிவி…
-
- 0 replies
- 755 views
-
-
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தேசத்தின் குரலின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 766 views
-
-
யாழ்ப்பாணத்தில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் நினைவாக பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 821 views
-
-
சனி 15-12-2007 14:51 மணி தமிழீழம் [நிலாமகன்] முறவேவாவில் ரக் வாகன விபத்து: 2 வான்படையினர் பலி! மேலும் 14 பேர் காயம் மொறவேவா - அநுராதபுர வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறீலங்கா வான் படையினர் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பதின்நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் நாமல்கம பகுதியில் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு வான்படையினரின் முறவேவாமுகாம் நோக்கி செல்லும் போதே ரக் வானமே விபத்துக்கு உள்ளாகியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 781 views
-
-
சனி 15-12-2007 19:09 மணி தமிழீழம் [மயூரன்] மன்னாரில் எறிகணை வீச்சு: படைச்சிப்பாய் பலி! மேலும் 11பேர் காயம் மன்னார் நொச்சிக்குளத்தில் உள்ள சிறீலங்காப் படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பதினொரு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் நடத்திய எறிகணை வீச்சிலேயே படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 812 views
-
-
நல்ல தாயின் மார்பில் பால் குடித்த தமிழன் அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க மாட்டான் சபையில் மகேஸ்வரன் எம்.பி. ஆவேசம் ""ஒரு நல்ல தாயின் மார்பில் பால் குடித்த எந்த ஒரு தமிழனும் இந்த அராஜக அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டான். பதவிக்காகவும், பணத்திற்காகவும் அரசின் அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களை மானமுள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.'' இவ்வாறு ஐ.தே.க. கொழும்பு மாவட்ட எம்.பி. மகேஸ்வரன் ஆவேசத்துடன் கூறினார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது: வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு எனப் பல இடங்க…
-
- 2 replies
- 4.1k views
-
-
சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா. நடேசன் வலியுறுத்தல் சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் வலியுறுத்தியுள்ளார். தாயகத்திலிருந்து ஈழநாதம் நாளிதழின் வெள்ளிநாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14.12.07) இடம்பெற்றிருந்த பா. நடேசனின் நேர்காணல்: கேள்வி: அரசியல்துறைப் பொறுப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளீர்கள் மக்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்...? பதில்: எமது மக்களின் சமூக, பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களையும் நாம் போராடும் இக்காலத்தில் மேற்கொள்கின…
-
- 1 reply
- 766 views
-