ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை இல்லாதொழித்துள்ளார். 2009 இன் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்காக 13ஆவது …
-
- 3 replies
- 722 views
-
-
இலங்கைக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி? வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 5 replies
- 531 views
-
-
Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்! புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323770
-
- 22 replies
- 1.8k views
-
-
ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது - சிறிதரன் By Vishnu 09 Feb, 2023 | 12:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினால் பிரசவிக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் உயிருடன் உள்ளதா? அல்லது கொல்லப்பட்டு அஸ்தி கரைக்கப்பட்டு விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு வழங்குவதாக ஒருபுறம் குறிப்பிட்டு விட்டு மறுபுறம் சிங்கள பேரின வாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறார். ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த …
-
- 0 replies
- 409 views
-
-
இலங்கைக்கு கடன்! IMF இன் புதிய அறிவிப்பு! இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன், உள்நாட்டுச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன், இலங்கைக்கான கடன் ஏற்பாட்டை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதலுக்காக முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட…
-
- 2 replies
- 421 views
-
-
ஜனாதிபதி ரணில் இன்று யாழ்.விஜயம் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஷேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் விஜயம் செய்வார் எனக் கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விஷேட கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/238881
-
- 1 reply
- 494 views
-
-
யாழ். வந்தடைந்த இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு! இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இந்திய அரசின் நிதி பங்களிப்பில்…
-
- 12 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். தனது இயலாத மகனை திட்டமிட்டு கைது செய்து தன்னை பழிவாங்க முற்படுவதோடு தன்னை போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முனைவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில், இலங்கையினுடைய 75 வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற போராட்டத்தில்…
-
- 3 replies
- 745 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை பௌத்த நாடு, பௌத்தர்கள்,பௌத்த பிக்குகளை எதிர்த்து எதனையும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட கருத்து வருத்தத்திற்குரியது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையை அவர் மறந்து விட்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குகள் எரிக்கிறார்கள், அவர்கள் எரிப்பது 13 ஆவது திருத்த நகல்களை அல்ல இந்த நாட்டின் எதிர்காலத்தை என்பதை அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை …
-
- 3 replies
- 733 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இடைக்கால ஜனாதிபதிக்கு இருக்கும் அவசரம் என்ன? அதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்? புதிய அரசியல் அமைப்புப்பொன்றை கொண்டுவரவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்து அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்…
-
- 1 reply
- 587 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது,சமஷ்டி முறைமையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகைய…
-
- 5 replies
- 727 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார். ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்க மாட்டோம் என சுயாதீன உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கதைக்கின்றார். நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்று பாருங்…
-
- 1 reply
- 373 views
-
-
தமிழர்களை சிங்களவர்களின் காலடியில் வைத்திருக்கவேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள் - இதனையா பௌத்தம் உங்களுக்குப் போதித்தது ? மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் By T. SARANYA 09 FEB, 2023 | 05:05 PM (நா.தனுஜா) தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்தா? வடக்கு - கிழக்குவாழ் தமிழர்கள் தனியாகப் பிரிந்து, தமது சொந்த 'தமிழீழத்தைக்' கட்டியெழுப்பிவிடுவார்கள் என்று அஞ்சுகின்றீர்கள். தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்…
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
துறைமுக நகரத்தை சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த முடியாது - சரித ஹேரத் கேள்வி By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 04:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. அதற்கான வழியை ஜனாதிபதியே காண்பித்துள்ளார். தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின் 13 ஆவது திருத்தத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை தவறாக பார்ப்பது நிர…
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு சமஷ்டியை ஏற்படுத்துங்கள் - செல்வராசா கஜேந்திரன் By VISHNU 09 FEB, 2023 | 05:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி சமஷ்டியை ஏற்படுத்துங்கள். அதனை விடுத்து கவர்ச்சிகரமான வசனங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியதாது. ஜனாதிபதி பதவி வகிப்பவர் எந்நிலையிலும் உண்மையை குறிப்பிட வேண்டும் அதனை விடுத்து அப்பட்டமாக பொய்யுரைக்க கூடாது. ஜனாதிபதியின் கருத்துக்கள் …
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தைரியம் கிடையாது - ஹிருணிகா By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 05:36 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது இவ்விடயம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
யாழ். பண்ணை கடலில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் By NANTHINI 09 FEB, 2023 | 05:23 PM யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது. இன்று பிற்பகல் கரையொதுங்கிய குறித்த சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/147831
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு தமிழ் பிரதிநிதிகள் அனைத்தையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.. ” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனவே, கடும்போக்…
-
- 13 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி யாழ். விஜயம் - டக்ளஸ் தலைமையில் முன்னேற்பாட்டுக் கூட்டம் By VISHNU 09 FEB, 2023 | 02:52 PM ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் (09) வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (09) வியாழக்கிழமை கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர்…
-
- 0 replies
- 546 views
- 1 follower
-
-
சுதந்திர தினத்தன்று கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு? சுதந்திர கொண்டாட்டத்தின் இரண்டு மணிநேரம் கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கஹடகஸ்திகிலிய – மஹாவெவ பிரிவு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் – ராஜபக்சவின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நாட்டில் பணம் இல்லை என சொன்ன ரணில் தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக செலவு செய்தார். ரணிலின் மனசாட்சி நன்கு தெரிய…
-
- 0 replies
- 310 views
-
-
பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் – உதய கம்மன்பில 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடகிழக்கு மாகாணம் மீண்டும் இணையும் என்பதோடு, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய அவர், “13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வக்கட்சி மாநாட்டின்போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் எனக்கூறுகிறார்கள். ஆ…
-
- 0 replies
- 750 views
-
-
இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு விஜயம்! இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், நான்கு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களை பார்வையிடவுள்ளார். அத்துடன், இந்த விஜயத்தின் போது, 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியினால் அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்தையும் முருகன் இலங்கை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். https://athavannews.com/2023/1323632
-
- 0 replies
- 260 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் இல்லை? உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாயினை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாவை விடுவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இதுவரையில் இதற்கான பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 365 views
-
-
தமிழர்களுக்கான உடனடி அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு கூட்டமைப்பு எடுத்துரைப்பு By Nanthini 09 Feb, 2023 | 11:32 AM இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (8) புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந…
-
- 0 replies
- 524 views
-
-
எதிர்வரும் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை! அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று(புதன்கிழமை) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் தொடர்ச…
-
- 0 replies
- 159 views
-