Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். தனது இயலாத மகனை திட்டமிட்டு கைது செய்து தன்னை பழிவாங்க முற்படுவதோடு தன்னை போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முனைவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில், இலங்கையினுடைய 75 வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற போராட்டத்தில்…

  2. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு சமஷ்டியை ஏற்படுத்துங்கள் - செல்வராசா கஜேந்திரன் By VISHNU 09 FEB, 2023 | 05:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி சமஷ்டியை ஏற்படுத்துங்கள். அதனை விடுத்து கவர்ச்சிகரமான வசனங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியதாது. ஜனாதிபதி பதவி வகிப்பவர் எந்நிலையிலும் உண்மையை குறிப்பிட வேண்டும் அதனை விடுத்து அப்பட்டமாக பொய்யுரைக்க கூடாது. ஜனாதிபதியின் கருத்துக்கள் …

  3. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தைரியம் கிடையாது - ஹிருணிகா By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 05:36 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது இவ்விடயம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்…

  4. யாழ். பண்ணை கடலில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் By NANTHINI 09 FEB, 2023 | 05:23 PM யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது. இன்று பிற்பகல் கரையொதுங்கிய குறித்த சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/147831

  5. ஜனாதிபதி யாழ். விஜயம் - டக்ளஸ் தலைமையில் முன்னேற்பாட்டுக் கூட்டம் By VISHNU 09 FEB, 2023 | 02:52 PM ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் (09) வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (09) வியாழக்கிழமை கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர்…

  6. யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323042

  7. சுதந்திர தினத்தன்று கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு? சுதந்திர கொண்டாட்டத்தின் இரண்டு மணிநேரம் கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கஹடகஸ்திகிலிய – மஹாவெவ பிரிவு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் – ராஜபக்சவின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நாட்டில் பணம் இல்லை என சொன்ன ரணில் தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக செலவு செய்தார். ரணிலின் மனசாட்சி நன்கு தெரிய…

  8. பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் – உதய கம்மன்பில 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடகிழக்கு மாகாணம் மீண்டும் இணையும் என்பதோடு, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய அவர், “13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வக்கட்சி மாநாட்டின்போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் எனக்கூறுகிறார்கள். ஆ…

  9. இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு விஜயம்! இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், நான்கு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களை பார்வையிடவுள்ளார். அத்துடன், இந்த விஜயத்தின் போது, 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியினால் அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்தையும் முருகன் இலங்கை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். https://athavannews.com/2023/1323632

  10. தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் இல்லை? உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாயினை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாவை விடுவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இதுவரையில் இதற்கான பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …

  11. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன்! ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும் எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். …

  12. தமிழர்களுக்கான உடனடி அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு கூட்டமைப்பு எடுத்துரைப்பு By Nanthini 09 Feb, 2023 | 11:32 AM இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (8) புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந…

  13. எதிர்வரும் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை! அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று(புதன்கிழமை) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் தொடர்ச…

  14. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் ! 25 JAN, 2023 | 09:15 PM தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். இன்று (ஜனவரி 25) முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/146699

  15. தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது : இதுவே அரசியல் தீர்வுக்கான இழுபறிக்கு பிரதான காரணம் - வாசு By VISHNU 07 FEB, 2023 | 03:10 PM (இராஜதுரை ஹஷான்) அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது, இதுவே அரசியல் தீர்வு இழுபறிக்கு பிரதான காரணியாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனப்பிரச்சின…

  16. அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி ஆலோசனை By VISHNU 08 FEB, 2023 | 04:26 PM (எம்.மனோசித்ரா) அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக…

  17. ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரை விட தற்போதைய பொருளாதார போர் ஆபத்தானது - ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் முழு வடிவம் 08 Feb, 2023 | 11:05 AM ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதிய…

  18. பான் கீ மூன் இலங்கை வருகிறார் By T. SARANYA 28 JAN, 2023 | 01:37 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார். தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவ…

  19. அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் By NANTHINI 07 FEB, 2023 | 05:24 PM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட படங்கள் https://www.virakesari.lk/article/147652

  20. (எம்.நியூட்டன்) வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை சர்வமத தலைவர்களிடம் பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளார்கள். ஸம் ஸம் பவுண்டேஷன் மற்றும் தர்ம சக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வமத தலைவர்களின் வடக்கு மற்றும் தெற்கு மத நல்லிணக்க உரையாடல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக சர்வமதத் தலைவர்களது வடக்கிற்கான விஜயம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. இச் சந்திப்பில் அமரபுர,ராமாஞ்சியம் பெளத்த பீடங்களைச் சேர்ந்த பெளத்த மதகுருக்கள், இந்து மத குருக்கள், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மெளலவிகள், கிறிஸ்தவ அருட்தந்தைகள் என சுமார் 40 பேர் கொண்ட தூதுக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம்…

  21. யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 03:57 PM நாடளாவியரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் அங்கு இடம்பெறவில்லை. அதனால் தூரப்பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நோயாளர்களும் சிகிச்சை பெற முடியாத நிலையில் திரும்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesa…

  22. தனி தமிழ் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவேன் – எஸ்.வியாழேந்திரன் கிழக்கு தமிழர்களின் இருப்பை முஸ்லீம் சிங்கள இனவாதிகளிடம் இருத்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றினைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தனி தமிழ் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவேன் என குறிப்பிட்ட அவர் அப்போது எமது இருப்புக்காக நாங்கள் குரல் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் கொக்கட்டிச்சோலை,முனைக்காட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெர…

    • 1 reply
    • 699 views
  23. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று By VISHNU 07 FEB, 2023 | 11:29 AM தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து நகர ஆரம்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/147589

  24. வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம் – ஜனாதிபதி வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன.வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பா…

  25. பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்த பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் இதனை அறிவித்தனர். பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தி…

    • 1 reply
    • 433 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.