ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பை என்றுமில்லாதவாறு அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
டக்ளஸ் மீது தாக்குதல் நடத்தவந்த குண்டுதாரி இனம் காணப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு. சிறீலங்கா துணை இராணுவக்குழு ஒன்றின் தலைவரான ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தச் சென்ற மனித குண்டுதாரி இனம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனித குண்டுதாரி வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த 01-01-1983ம் ஆண்டு பிறந்த 24 அகவையுடைய மேகமன்னன் சுஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர் Pathivu
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் றைட்ஸ் வோட்ச்) வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ். குடாநாட்டில் இரு பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
வட தமிழீழத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சிறீலங்காச் சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தமிழினப் படுகொலையின் ஓரங்கமாக அப்பாவி மாணவச் செல்வங்களினதும் பொதுமக்களினதும் உயிர்கள் பறிக்கப்பட்டது குறித்து வன்னி மக்கள் தங்கள் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் சர்வதேச சமூகத்துக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர். வன்னியில் அரச தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச பயங்கரவாதத்தின் கொடூர செயலால் மரணித்த அப்பாவி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்யும் வகையில் இன்று கறுப்புப்பட்டி அணிந்து பணிகளுக்கும் பாடசாலைகளுக்கும் சென்றனர்..! வன்னி மக்களின் எதிர்ப்பின் ஒரு பகுதி இங்கே.. இவர்கள் சிறீலங்காவின் கொடிய பயங்கரவாதிகளான மகிந்த மற்றும் கோத்…
-
- 0 replies
- 972 views
-
-
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை நீதிமன்றில் பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானை விட இலங்கையிலேயே அதிகளவில் மனித உரிமை மீறல்கள் 30.11.2007 / நிருபர் குளக்கோட்டன் பாகிஸ்தானை விட அதிகளவிலான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுவதனால் இதனை பொதுநலவாய அமைப்பு கவனத்தில் எடுக்க வேண்டுமென கம்பஹா மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரஸ்தாபிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளை பயங்கரவாதியென அரசாங்கம் முத்திரை குத்துவதுடன் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றதெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 983 views
-
-
வவுனியாவிற்கான ரயில் சேவை (யாழ்தேவி) நேற்று வியாழக்கிழமை நனபகல் முதல் இடைநிறுத்தபட்ட மதவாச்சிவரையே சேவைகள் நடைபெறுகின்றது. வவுனியாவுக்கான ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளாக நேற்று காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது. இதன்படி மறு அறிவித்தல் வரை கொழும்புக்கும் மதவாச்சிக்குமிடையிலே ரயில் சேவை நடைபெறும். கொழும்பிலிருந்து மதவாச்சி வரும் ரயில்கள் அங்கிருந்தே கொழுமபுக்குப் புறப்படும். நேற்று நண்பகல் முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதுடன் பயணிகள் எவருக்கும் பயணச்சீட்டு வழங்க வேண்டாமென வவுனியா ரயில நிலைய அதிபருக்கு புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து இ.போ.ச மற்றும தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் தகுந்த காரண…
-
- 0 replies
- 893 views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பகுதியில் படைகள் ஆழ ஊடுருவி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்;கள் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தனர் என்பது முழுக் கட்டுக்கதை எனத் தெரிவித்திருக்கிறா.. ஆனந்த சங்கரி. நுகெகோடை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பத்திரிகைக்களுக்குத் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவ. தெரிவித்திருக்கிறா.. 17 பேர் உயிரிழக்கவும் 35 பேருக்கு அதிகமானோர் காயமடையவும் காரணமாக அமைந்த அப்பாவிகள் மீது நுகேகொடையில் நடத்தப்பட்ட கொடூரக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிருகத்தனம் புலிகளின் நெஞ்சில் இறுகியிருப்பதால் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ளமாட்டார்கள். புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடு…
-
- 14 replies
- 2.7k views
-
-
இலங்கைப் பிரச்னை: ஐரோப்பா தலையிட நெடுமாறன் கோரிக்கை டர்பன்: இலங்கைப் பிரச்னையில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக டர்பன் சென்றுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசின் தவறான கொள்கைகளால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பசி, பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். -குமுதம்
-
- 0 replies
- 1.3k views
-
-
"ஈழத்தமிழருக்கு இந்தியா துரோகம்-தமிழகம் பொறுத்துக்கொள்ளாது" திருப்பூர் மாநாட்டில் வைகோ முழக்கம் உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்று கேட்டால் அது தமிழ்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். என்று பிறந்தது என்று அறிய முடியாத தமிழ் மிகுந்த பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த மொழி சார்ந்த இன மக்களின் நாகரிகம் உலகிலுள்ள அத்தனை நாகரிகங்களையும் விஞ்சியது. காலத்தாலும் விஞ்சியது இதுதான். இதற்கு அடிப்படை. -நாகரிகம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அவன் வாழும் இடம், அவன் வசிக்கும் இடம், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறைந்திடும் உறையுள், அவன் சார்ந்திருக்கக் கூடிய சுற்றுப்புறத்தில்…
-
- 1 reply
- 2.3k views
-
-
http://www.tamilcanadian.com/page.php?cat=365&id=4468 கடந்த வருடம் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் இது பொருந்துகிறது.
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 29-11-2007 20:12 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு , கிளிநொச்சி தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் கொழும்பு மற்றும் கிளிநொச்சி மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இன்று வியாழக்கிழமை வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பிலேயே இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடையொன்றினுளும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூர்தி மீது மேற்கொள்ளகப்பட்ட தாக்குதல்களுக்கும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இன முரண்பாடுகளுக்கு சமாதான வழியிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் எனவும் இராணுவ வழியில் அல்ல எனவும் அதில் மேலும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php…
-
- 7 replies
- 2k views
-
-
நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.
-
- 26 replies
- 6.8k views
-
-
இரு நாட்டுப்பற்றாளர்களின் இறுதி வணக்க நிகழ்வு [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாட்டுப்பற்றாளர் இசைவிழிசெம்பியன் மற்றும் ம.சுரேஸ்லின்பியோ ஆகியோரது இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைலைமயில் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:25 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளா பா.நடேசன் ஏற்ற, நாட்டுப்பற்றாளர் இசைவிழி செம்பியனின் புகழுடலுக்கு கணவர் செம்பியன் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். நாட்டுப்பற்றாளர் சுரேஸ்லிம்பியோவின் புகழுடலுக்கு துணைவியார் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். புலிகளின்குரல்…
-
- 0 replies
- 891 views
-
-
புலம்பெயர் தமிழர்களால் மாவீரர் நாள் உரை தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் சொல்கிறது: பசில் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:54 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் நாள் உரையானது புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் தன்னிடம் கூறியதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பசில் ராஜபக்ச இன்று வியாழக்கிழமை கூறியதாவது: மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும், பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கும் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம். பி…
-
- 3 replies
- 1.8k views
-
-
கொழும்பு தாக்குதலுக்கு கண்டனம்- வன்னி மோதலில் பொதுமக்கள் சிக்குவது குறித்து கவலை: ஐரோப்பிய ஒன்றியம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 09:03 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்னி, கொழும்பு ஆகிய மோதல் நிகழுமிடங்களில் பொதுமக்களும் சிக்கிக் கொள்வது குறித்து கவலைப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட வகையிலான பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களால் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுத்த சிறிலங்கா நாடாளுமன்றம் கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு இன்று இரங்கல் தெரிவித்து தனது பேரினவாத வெறியை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
வியாழன் 29-11-2007 16:16 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் இரு சிங்களவர் சுட்டுக்கொலை இன்று மதியம் 12 மணியளவில் மட்டக்களப்பு ஜயங்கேணிப்பகுதியில் இருசிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர்கள் 42 அகவையுடைய டொடான் ரட்ணசிறி குணதிலக 22 அகவையுடைய கேவா பொன்சேகா டில்றுக் பொன்சேகா எனவும் தெரியவருகிறது. இதனையடுத்து மட்டக்களப்பு சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.4k views
-
-
அம்பாறை பக்கி மிட்டியாவில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 4 அதிரடி படையினர் காயம் வீரகேசரி இணையம் அம்பாறை பக்கியாமிட்டியவில் இன்று புதன்கிழமை முற்பகல் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நிலக் கண்ணி வெடித் தாக்குதல் இடம் பெற்றுள்ளது . இதில் 4 விசேட அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . காயமடைந்த அதிரடிப்படை வீரர்கள் அம்பாறை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை பக்கிமிட்டியா , கோவில் சந்தியில் இராணுவத்தினர் பயணித்த பவள் வாகனத்தை இலக்கு வைத்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்லது . இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட…
-
- 3 replies
- 2.5k views
-
-
பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது 12 வான்குண்டுகளை வீசியது சிறிலங்கா வான்படை [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 01:58 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] கிளிநொச்சி புறநகர்ப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் 3 கிபீர் வானூர்திகள் 12 வான்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. கிளிநொச்சி புறநகர்ப் பகுதியான ஜெயந்திநகரில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 12:25 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி இத்தாக்குதலை சிறிலங்கா வான்படை வானூர்திகள் மேற்கொண்டன. இதில் 3 வீடுகள் அழிவடைந்தன. சிறிலங்கா வான் படை நடத்திய பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் சிறிலங்கா இராணுவத்தால் ஆதரவற்றோராக்கப்பட்ட சிறார்களைப் பராமரிக்கின்ற காந்தி சிறார் இல்லம், கிறிஸ்தவவ அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பயங்கரவாதம் களைத்தெறியப்பட்ட வேண்டும் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் பயங்கரவாதம் உலகத்திலிருந்து களைத்தெறியப்பட வேண்டும்மென ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது ஆயுதங்களை ஏந்தி போராடும் குழுவினரா ஆயுதங்களை களைத்து அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு கோடுகின்றோன் அத்துடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தயராக உள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானின் அசாசி சிம்புனிற்கு தெரிவித்த்தாக ஏ,எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது அசாகி சிம்புனி கடந்த 15ம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேர்காணல் கண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை டிசெம்பார் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானிற்கு விஜ…
-
- 4 replies
- 2.2k views
-
-
கொழும்பு 2 தாக்குதல்களுக்கும் வன்னி 3 தாக்குதல்களுக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 12:56 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட 2 தாக்குதல் களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் நடத்தப்பட்ட 3 தாக்குதல்களுக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை நவம்பர் நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என நம்பப்படும் இரு தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தமிழீழ விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.5k views
-