Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை ! இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (விஎஸ்வி) விருதை வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தை…

  2. பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி குறித்து கலந்துரையாடலின் போது, பபயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தின. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத் தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்…

  3. அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் எதனையும் ஜனாதிபதி அறியவில்லை - டலஸ் By T. SARANYA 01 FEB, 2023 | 06:44 PM (இராஜதுரை ஹஷான்) அரச நிதி சேமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹசனை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் எதனையும் ஜனாதிபதி அறியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (பெப் 01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையி…

  4. லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 11:13 AM 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது அன்றைய தினம் நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் இடம்பெறும் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க…

  5. வலி. வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் நாளை விடுவிப்பு! யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளன. பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். …

  6. சனிக்கிழமை வரை மழை தொடரும் ! காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாம் ! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 10:49 AM யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதும…

  7. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை செ…

  8. இலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தி மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 50 சதவீதம் பேர் இறப்பு இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“2020 ஆம் ஆண்டில் மொத்தம் 38,229 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 16,691 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதுடன் ஆண்களில் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகின்றது. 20…

  9. சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு By DIGITAL DESK 5 01 FEB, 2023 | 06:45 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும். அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும். ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கு மகாசங்கத்தினர் கட…

  10. (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண ஆணைக்குழுக்கள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நல்லாட்சி அரசாங்கத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதன் போது அரசியலமைப்பு திருத்தங்களுக்காக சுதந்திர கட்சி பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்திருந்தது. இதன் போது 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுற…

  11. (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பின்னணியில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் நேற்று (ஜன. 31) செவ்வாய்கிழமை டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத…

    • 5 replies
    • 910 views
  12. 13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் - ஐநா அமர்வில் இந்தியா By RAJEEBAN 01 FEB, 2023 | 03:19 PM இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாஅமர்வில் இந்தியாஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது 2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொ…

  13. மானிப்பாயில் லொறியை திருடியவர் கைது By NANTHINI 01 FEB, 2023 | 12:31 PM (எம்.வை.எம்.சியாம்) மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இச்சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். லொறி சாரதி லொறியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவ…

  14. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார். பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்…

  15. ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள 42வது அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து பரிசீலனை ! இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக, ஜெனிவாவில் இன்று நடைபெறும் 42வது அமர்வில், உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்யவுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால், ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. 2008 ல் முதல் தடவையாகவும், 2012 ல் இரண்டாவது தடவையாகவும் 2017 ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் நான்காவது சுழற்சிய…

  16. ஜனாதிபதியின் 13 A திட்டத்தை முறியடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சபதம்! 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை 13வது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி …

  17. கிழக்கை பாதுகாப்போம் என வந்தவர்கள் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர் – ஞா.ஸ்ரீநேசன் கிழக்கை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள் மயிலத்தனமடு, மாதவனை, கெவிலியாமடு, நெடியகல் மலை என தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார்கள், இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே அவை பாதுகாக்கப்பட்டன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவி…

    • 1 reply
    • 704 views
  18. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் துரிதப்படுத்தப்படும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் மக்கள் விரும்பத்தகாத சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். இதனால், சர்வதேச கடன் வழங்குநரிடமிருந்து சாதகமான முடிவுகளையும் நிலையான பொருளாதாரத்தை விரைவில் அடைய முடியும் என்றும் அதற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.…

  19. வசந்த முதலிகே நீதிமன்றத்தால் விடுதலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அவரை விளக்க மறியலில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட…

  20. புதிய ஆணைக்குழுவை அமைத்தாலும் தேர்தலை பிற்போட முடியாது - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா 31 JAN, 2023 | 08:49 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பு பேரவையால் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , தேர்தலை பிற்போட முடியாது. அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் அரசியலமைப்பில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் ஸ்திரமாகவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் செவ்வாய்கிழமை (31) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , …

  21. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார். “சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத…

  22. உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வளமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவிக்கின்றார்கள். வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்…

  23. யாழ். மாநகர புதிய முதல்வர் தொடர்பில் மணிவண்ணன் பகிரங்க குற்றச்சாட்டு! யாழ்ப்பாணத்தில் எட்டுக்கோடி ரூபாய் செலவில் எம்மால் புனரமைக்கப்படவிருந்த குளத்தின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதி சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள நகரக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்காக தனியார் நிறுவனமொன்றின் எட்டுக் கோடி பெறுமதியான நிதிப் பங்களிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப் பணிகளுக்காக அடிக்கல் …

    • 2 replies
    • 731 views
  24. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி… ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார் !!! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் வ…

  25. மன்னாரில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்ட சிறு கடற்றொழில் – சாள்ஸ் நிர்மலநாதனின் தலையிட்டால் மீண்டும் அனுமதி! மன்னார்-யாழ் பிரதான வீதி,தள்ளாடி 14 கண் பாலத்தடியில் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலங்களாக சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களை ராணுவம் அப் பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்காததன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை நேரடியாக சென்று மீனவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் வன்னி இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப் பிரச்சனை தொடர்பாக தெரிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.