Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று(26.01.2023) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாடு திரும்பியிருந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலிலும் பங்கேற்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தது. ஜனநாயக போராளிகள் கட்சி இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி தேர்தலிலும் ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கியுள்ளது. இச் சூழலில் மீண்டும் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், அரசியல் உயர்மட்டங்களையும் சந்தித்து வடக்கு கிழக்கு அரசியல் செய…

  2. இலங்கையின் பொருளாதார நெருக்கடி வேகமாக சுகாதார நெருக்கடியாக மாறுகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம் By RAJEEBAN 25 JAN, 2023 | 12:29 PM இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின் மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவா…

  3. சர்வதேச விமான வழிசெலுத்தல் கட்டணம் பெப்ரவரி 1 முதல் திருத்தப்படுகிறது கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமான வழிசெலுத்தல் கட்டணம் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட்டால் அறவிடப்படுவதாகவும், 1985 ஆம் ஆண்டு முதல் அது திருத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, பெப்ரவரி 1, 2023 முதல் கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தில் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத…

  4. அரச ஊழியர்களின் ஊதியம் தொடர்பான புதிய யோசனை அரச ஊழியர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை திரட்டும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை. மேலும் சம்பளம் வாங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கும் முறைமை உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/235…

  5. உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், சீனி என்பவற்றின் மொத்த விலைகள் குறைந்தன கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத…

  6. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் ! 25 JAN, 2023 | 09:15 PM தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். இன்று (ஜனவரி 25) முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/146699

  7. முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கெதிரான முறைப்பாடு வாபஸ் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி, நீதவான் திலின கமகே நடவடிக்கைகளை முடித்து வைத்தார். https://thinakkural.lk/article/235799

  8. தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு! By T. SARANYA 25 JAN, 2023 | 12:44 PM தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேற்று (ஜன 24) அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக தெர…

  9. (எம்.மனோசித்ரா) கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த கடிதத்தில் இருதரப்பு , வணிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 5 ஆண்டு கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைத் தளர்த்த சீனா தயாராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மறுத்துள்ள சீனத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ், இலங்கை ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு எழுதப்பட்ட சமூக ஊடகங்களில் பரவும் கடிதம் ம…

    • 3 replies
    • 553 views
  10. இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமாவதற்கு சீனாதான் காரணம் என தெரிவிப்பதன் மூலம் சீன எதிர்ப்பு உணர்வை அமெரிக்க தூதுவர் உருவாக்க கூடாது என அவர் கடிதமொன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றார் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பகையை உருவாக்க முயல்கின்றார் என குணதாச அமரசேகர தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். சீனா ஏற்கனவே இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக…

  11. பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் – பஷில் ராஜபக்ஷ January 25, 2023 பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்தவர்கள் தனித்து சென்றுள்ளமை சவால் மிக்கதாகும். சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டும். ஒன்றிணைவதும் விலகிச் செல்வதும் இயல்பானது. தாமரை மொட்டுச் சின்னத்தில் 252 உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவோம். பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவத்தார். தலதா மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இடம்பெறவுள்…

  12. 3 இலட்சம் டொலர் பெறுமதியான 13 நவீன தடுப்பூசி களஞ்சிய அறைகளை நன்கொடையாக வழங்கியது ஜப்பான் By NANTHINI 25 JAN, 2023 | 11:11 AM (எம்.மனோசித்ரா) உரிய வெப்ப நிலையில் நீண்ட காலத்துக்கு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 13 தடுப்பூசி களஞ்சிய அறைகள் ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பான் அரசாங்கத்தின் அவசர உதவியின் கீழ் நாட்டில் உள்ள குழந்தைகளின் நீண்ட கால மற்றும் குறுகிய கால சுகாதார தேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி, இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் …

  13. சுதந்திர தினத்தை புறக்கணித்து வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு நாட்டின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சிப் பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேரணி வரும் பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் ஊடாக 7ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட் டது. மாணவர் ஒன்றியம் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்தி…

  14. சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக இல்லை இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள போதிலும், குறித்த நிதி வசதியை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த உத்தரவாதம் போதுமானதாக இல்லை என கலந்துரையாடல்களில் பங்கேற்கும் நபர்களை மேற்கோள்காட்டி ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அதுபோன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கையின் கடன்…

  15. கொழும்பு விமானநிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு ஜப்பானிடம் By RAJEEBAN 25 JAN, 2023 | 10:46 AM கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் இரண்டாவது டேர்மினலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானிடம் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார். இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கியுடனான சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்காக ஜப்பான் அளித்த ஆதரவிற்காக நன்றி உடை…

  16. நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது! நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் . மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. வெற்றிடமாகி இருந்த தவிசாளர் பதவிக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான இக்கூட்ட அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர். இதன்போது கூட்டத்த…

  17. அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தற்காலிகமானது - அரசாங்கம் By DIGITAL DESK 5 24 JAN, 2023 | 05:37 PM (எம்.மனோசித்ரா) அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை வழங்குவதில் ஓரிரு தினங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னரே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் மாதமளவில் இந்த பிரச்சினை நிறைவடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை சில தினங்கள் தாமதமாக செலுத்துவ…

  18. வரி குறைக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது - பந்துல By DIGITAL DESK 5 24 JAN, 2023 | 05:35 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பு முறைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது. துரதிஷ்டவசமாக சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நாட்டுக்கு நாளை என்ற ஒன்று இருக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கருப்பு வாரம் போராட்டம் தொடர்பில் செவ்வாய்…

  19. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ‘ஆவா’ கும்பலுக்கும் ’கேணி’ கும்பலுக்கும் இடையில் சுன்னாகம் பகுதியில் வாகனங்களை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்தியில் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் கார் மற்றும் கெப் வண்டியுடன் செவ்வாய்க்கிழமை (24) நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதலில் கார் மற்றும் கால் டாக்சி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தன. இரு வாகனங்கள் மோதியதில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில், அவ்விரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வீதியில் பயணித்த பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா…

  20. இரண்டு நாட்களுக்குள் பாலத்தினை அமைத்து தர முடியாத இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணமானவர்கள் பலரும் மட்டகளப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்…

    • 6 replies
    • 932 views
  21. இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கதெரிவித்துள்ளார். இலங்கை தனது அனைத்து கடன் மீள்கொடுப்பனவையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளது அடுத்த ஆறுமாதங்களிற்குள் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தமாதம் சிறந்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன இந்தியா ஏற்கனவே நிதி உத்தரவாதத்தை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். சீனா ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து விரைவில் உத்தரவாதம் கிடைக்கும் என அவர் எக்கனமிக் அவுட்லக் 2023 என்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்…

  22. கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நேற்றிரவு (23) முதல் பெய்யும் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக நெற் செய்கை அறுவடைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் உரிய விலையில் சந்தைப்படுத்த முடியாத நிலையில் போதிய நெல் உலர விடும் தளங்கள் இல்லாத நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நெல்லை உலர வைத்து வருகின்றனர். குறிப்பாக வீதிகளில் நெல்லை உலர விட்டிருந்த சமயம் நேற்றிரவு முதல் பெய்யும் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் மழையினால் அற…

    • 2 replies
    • 431 views
  23. மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தயாரிக்க விசேட குழு நியமனம் By T. SARANYA 24 JAN, 2023 | 04:41 PM (எம்.மனோசித்ரா) பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்கக் கோவையினை தயாரிப்பதற்காக அறுவர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் ரதெல்ல விபத்து தொடர்பில் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் , சுற்றுலாவிற்காக மாணவர்களை அழைத்துச் செல்…

  24. எனது கணவரை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை தரவேண்டும் ; பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி வேண்டுதல் By T. SARANYA 24 JAN, 2023 | 04:34 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) எனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலியகொடவை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும், அநீதி இழைக்கப்பட்ட எனக்கும் என்போன்றவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியான சந்தியா எக்னெலியகொட தெரிவித்தார். ஊடகவியலளர் பிரகீத் எக்னெலியகொடவை கடத்தி சென்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரது மனைவி சந்தியா எக்னெலியகொட முகத்துவாரம், காளியம்மன் சந்நிதானத்தின் முன்றலில் விசேட நினைவுப் பூஜையும், ப…

  25. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்…

    • 4 replies
    • 591 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.