Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனுசரணைப் பணியை பிரித்தானியா யேர்மனி கூட்டாகத் தலைமை வகிக்கத் திட்டம் இலங்கையின் அமைதி முயற்ச்சிகளின் அனுசரணைப் பணியை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கூட்டாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நோர்வே அனுசரணையாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயல்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கமும் தென்னிலங்கையின் கடும் போக்காளர்களும் கருதவதால் நோர்வேயின் ஒத்துழைப்புடன் இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை நோர்வே அனுசரணையாளர்கள் இலங்கை அமைதி முயற்ச்சிகளில் மென்போக்கை கடைப்பிடித்து வந்துள்ளமையே முறுகல் நீலை நீடிப்பிற்கு காரணம் எ…

    • 2 replies
    • 1.3k views
  2. திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் பாரிய டோரா அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மூன்று டோராக்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்பரப்பில் கொக்குத்தொடுவாய் தொடக்கம் கொக்கிளாய் புல்மோட்டை வரையான பகுதியில் சிறிலங்கா கடற்படையின் 21 டோரா பீரங்கிப் படகுகளைக் கொண்ட அணிமீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மணிநேரம் நடந்த தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் மூன்று டோராப் பீரங்கிப் படகுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது…

  3. அனைத்துக் கட்சி குழுவில் மூன்று விடயங்களில் முரண்பாடு [சனிக்கிழமை, 7 யூலை 2007, 23:12 ஈழம்] [கொழும்பு நிருபர்] இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் அனைத்துக் கட்சி குழுவினரிடையே ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வு, அரச தலைமைத்துவம் ஆகிய மூன்று விடயங்கள் குறித்து கடும் முரண்பாடு தோன்றியிருப்பதாக தெரிகிறது. கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி குழுவின் மாநாட்டில் இந்த முரண்பாடு வெளிப்பட்டிருக்கிறது. ஆட்சிமுறையானது ஒற்றை ஆட்சியா அல்லது இணைப்பாட்சியா? அதிகாரப் பகிர்வை பிரதேச சபை, வலய சபை, மாவட்ட சபை, மாகாண சபை ஆகியனவற்றில் எதனூடாக மேற்கொள்வது ? அரச தலைமைத்துவத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரா? அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராகவா நியம…

    • 1 reply
    • 1.1k views
  4. கிழக்கை முழுமையாக கைப்பற்றிய பின்னர் பிரபாவை கைது செய்வதா? அல்லது பேச்சை ஆரம்பிப்பதா ? ஜ சனிக்கிழமைஇ 7 யூலை 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றியதன் பின்னர் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கின்றோம். தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா ? அல்லது சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமா? என்று அரசாங்கம் மக்களுக்கு கூறவேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை கூறுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று முன்…

  5. நியாயமான அரசியல் தீர்வைப் பேசிப்பெற முடியும் என்று நினைப்பது சாத்தியமற்றதேயாகும்: "விடுதலைப் புலிகள்" ஏடு [சனிக்கிழமை, 7 யூலை 2007, 20:43 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] இனவாதச் சித்தாந்த அரசியலை அடித்தளமாகக் கொண்ட சிங்கள அரசிடமிருந்து தமிழ்மக்கள் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பேசிப்பெற முடியும் என்று நினைப்பது சாத்தியமற்றதேயாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள் ஏடு" தெரிவித்துள்ளது. "விடுதலைப் புலிகள்" ஏட்டின் (குரல் எண்: 136) தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிங்கள அரசிடம் நிரந்தரமான ஒரு அரசியல் சித்தாந்தம் உண்டு. இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான நிலம் என்பது அந்தச் சித்தாந்தமாகும். …

  6. இலங்கை இனப்பிரச்சினையினை தீர்பதற்கு கடந்த கால இனவாத சிங்கள அரசுகள் முன்வரவில்லை என்பது வெளிப்படை அதேவேளை தமிழ் மக்களை பலவீனப்படுத்தி ஒரு அரைகுறை தீர்வை முன்வைபதே இலங்கை அரசியல்தலைவர்களின் முக்கிய நோக்கம்.இது ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் இதுவே கடந்தகால வரலாறு.ஆட்சியில் இல்லாத போது தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது ஆட்சிக்கு வந்தபின் முன்னர் அட்சியில் இருந்த கட்சி என்ன செய்ததோ அதையே மீண்டும் செய்வதையே வரலாறு சுட்டிகாட்டுகின்றது. பேச்சுவார்த்தை என தமிழ் மக்களை சர்வதேசத்தின் வலையில் சிக்கவைத்தவர் ரணில்.தமிழ் மக்களின் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்து இன்று துரோகத்துக்கு தூபமிட்டவர் ரணில் புலிகள் படை நடவடிக்கையை மேற்கொள்ளும் போது அடிக்க…

  7. Posted on : Sat Jul 7 5:07:55 EEST 2007 தொப்பிகலவை கைப்பற்றுவதற்கு அது முக்கியத்துவமான பிரதேசம் அல்ல! முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி 1987 ஆம் ஆண்டு ஜூலை முதல் 1990ஆம் ஆண்டு மார்ச் வரை, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படை போரிட்டு வந்துள்ளது. இப் படைகள் தொப்பிகலக் காடுகளி லும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும், அங்கு நிலைகொள்ள முயலவில்லை. அப்படி நிலைகொள் வதற்கான தந்திரோபாய முக்கியத்துவம் இருக்க வில்லை. இவ்வாறு இந்திய இராணுவ முன்னாள் பிராந்திய தள பதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகைக்கு வியாழக்கிழமை அளித்துள்ள பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர…

    • 1 reply
    • 1.2k views
  8. சிக்கலான நிலைமையில் துப்பாக்கியால் அச்சுறுத்தி அரசாங்கம் நடத்த முடியாது ஜ வீரகேசரி ஸ - ஜ துரட 07இ 2007 04:00 புஆவு ஸ புலிகளை தோற்கடிப்பதாயின் கிளிநொச்சிஇ முல்லைத்தீவில் யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டும் என்கிறார் சிக்கலான நிலைமை ஒன்றில் துப்பாக்கியால் அச்சுறுத்திக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது என எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபையில் தெரிவித்தார். யுத்தத்தில் புலிகளை வெற்றி கொள்ளவேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும். அதற்காக யுத்த முகாமைத்துவம் அமைக்கப்படவேண்டும் எனவும் கூறினார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: நீண்டகால யுத்தத்தினால் செலவுகள் அதிகரிக்க…

    • 0 replies
    • 854 views
  9. கிழக்கில் தேர்தல்களை நடத்தினால் வன்முறை வெடிக்கும்: மட்டக்களப்பு ஆயர். கிழக்கில் தேர்தல்களை சிறிலங்கா அரசாங்கம் நடத்தினால் வன்முறை வெடிக்கும் நிலைமை ஏற்படும் என்று மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்ட ஆயர் கிங்க்ஸ்லி சுவாமிபிள்ளை எச்சரித்துள்ளார். இது தொடர்பில் பி.பி.சி.யின் சிங்கள சேவையான "சந்தேசிய"வுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: கிழக்கில் நிலைமை சற்றுப் பரவாயில்லை. ஆனால் பிரச்சினைகள் இன்னமும் உள்ளன. கிழக்கின் பெரும்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் மட்டக்களப்பின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளால் நியாயமான நீதியான தேர்தல் நடைபெறாது…

  10. ஒரு காலத்தில் தமிழீழம் தனிநாடு கிடைத்துவிடும் என்று தமிழ் இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி, நாட்டுப் பிரிவினை நெருப்பை எரியவிட்டார் ஒருவர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் புறந்தள்ளப்பட்ட மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவரோ - விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு ஊடகங்கள் சில வற்றில் மறுபடியும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறார். இவர் வேறு யாரும் இல்லை. தற்பொழுது செயலிழந்த நிலைக்குப் போய்விட்ட ஓர் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று தொடர்ந்து உரிமை கொண்டாகின்றவரும் கிளிநொச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களே! இலங்கை நீதி மன்றம் ஒன்றின் தீர்ப்பின் வாய்ப்பை ஒட்டித் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்…

  11. சிறிலங்கா அரசை விமர்சித்தால் துரோகி முத்திரை: சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சிறிலங்காவில் நீங்கள் அரசாங்கத்தை விமர்சித்தால் உடனடியாக உங்களுக்கு துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு விடும். இது ரூவாண்டாவில் நடைபெற்றது. ஆனால் சிறிலங்காவில் நடப்பது இதுவே முதற்தடவை. எனவே தான் பிரதான ஊடக இல்லங்கள் கூட தமது பணிகளைச் செய்வதில்லை என்று சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்: கடந்த வருடத்தில் இருந்து நாம் அரசின் போக்கை அவதானித்தால் அது ஊடகவியலாளர்கள் மீதான எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பொது மற்றும்…

    • 0 replies
    • 826 views
  12. எம்மைப் பற்றி | தொடர்புகொள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து..... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது பதிவு இணையத்தளத்தில் காணொளியில் அலசல்.பதிவு.com  சனி 07-07-2007 04:35 மணி தமிழீழம் [மயூரன்] ஆவரங்கால் பகுதியில் தந்தை சுட்டுப் படுகொலை: மகன் கடத்தல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆவரங்கால் பகுதியில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதி ஊடாக உந்துருளியில் தனது மகனுடன் சென்றுகொண்டிருந்த பொதுமகனை இனம் தெரியாத ஆயுதாரிகள் சுட்டுப் படுகொலை செய்து பின் அவரது மகனை கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது கொல்லப்பட்டவர் வடமராட்சி வதிரி நாவ…

  13. பிரிட்டனுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம் வீரகேசரி நாளேடு பிரிட்டனுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் இலங்கையிலிருந்து திட்டமிடவோ மேற்கொள்ளவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சமாதானம், ஜனநாயகம் மீதான எமது ஈடுபாடும் உறுதியும் பயங்கரவாதத்துக்கு முன்னால் மண்டியிடாது என தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் புதிய பிரதமர் கோர்டன் பிரௌணுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்குவதற்கு தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டமை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதி இக்கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ம…

    • 3 replies
    • 1.6k views
  14. சந்திரிகா மகளுக்கு லண்டனில் திருமணம் [சனிக்கிழமை, 16 யூன் 2007, 12:52 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் மகள் யசோதராவின் திருமணம் நேற்று லண்டனில் நடைபெற்றது. இத்திருமணத்தில் சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்க, சகோதரி சுனித்ரா, வர்த்தகர்கள் ஹாரி ஜெயவர்த்தன, ரஞ்சன் இமோ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் மட்டும் சிறிலங்காவிலிருந்து கலந்து கொண்டனர். சந்திரிகா ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது பொறுப்புகளில் இருந்த பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் யசோதராவின் கணவர் ரோகர் வால்கரின் உறவினர்களும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். புதினம்

    • 11 replies
    • 3.8k views
  15. அரசாங்கத்தில் நாங்கள் இணைவதா? தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது: ஜெயராஜூக்கு த.தே.கூ. கடும் கண்டனம் [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இணையவே மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் பேசியதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக அமைச்சர் ஜ…

    • 1 reply
    • 1.4k views
  16. தொப்பிகல மற்றும் மன்னாரில் விமானத் தாக்குதல் [Friday July 06 2007 01:31:21 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் மற்றும் தொப்பிகலயில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொப்பிகலயில் விடுதலைப்புலிகளின் முகாமொன்றின் மீதும் , மன்னார் பாலம்பிட்டியலும் புலிகளின் முகாமொன்றின் மீதும் , மன்னார் ,பாலம்பிட்டியிலும் புலிகளின் முகாமொன்றின் மீதும் இன்று காலை முறையே 6.15 மற்றும் 6.20 மணியளவில் விமானப்படை கிபிர் ஜெட் விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் . இதில் புலிகளின் இலக்குகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது…

    • 1 reply
    • 1.1k views
  17. சரத் பொன்சேகாவுக்கு எதிராக 42 இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி: ஐ.தே.க தகவல். சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக 42 இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவர் பேசியதாவது: சிங்களப் புலிகள் என்ற அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும் சிறிலங்கா அரசாங்கமே. அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவரே ஆட்கடத்தலுக்கும் கப்பம் பெறுவதற்கும் காரணம். உண்மைகளைக் கூறினால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் அச்சுறுத்துகிறது. கப்பத்திற்கும் ஆட்கடத்தலுக்கும் அஞ்சி தமி…

    • 1 reply
    • 1.7k views
  18. தமிழர்கள் கடத்தப்படுவது குறித்து தமிழ் மற்றும் முஸ்லீம் அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதில்லை - ஐதேக தமிழர்களும் முஸ்லீம்களும் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா அமைச்சரவையில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அமைச்ர்கள் அக்கறை செலுத்துவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்களுடன் அரசாங்கத்தின் மிக முக்கிய பிரமுகருக்க நேரடித் தொடர்புகள் இருப்பதாகவும் இது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்ம…

    • 1 reply
    • 1.7k views
  19. பௌத்த தொலைக்காட்சிக்கு தமிழர் ஒருவர் நிதி முதலீடு [06 - July - 2007] இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பௌத்த தொலைக்காட்சியில் தமிழர் ஒருவர் நிதி முதலீடு செய்துள்ளார். இலங்கையில், முதன் முறையாக பௌத்த தொலைக்காட்சியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடக்கி வைத்தார். கௌதம புத்தர், நேபாளத்தில் பிறந்திருந்தாலும், புத்த மதம் பரவிய ஒரே தெற்காசிய நாடு இலங்கை தான். இலங்கைக்கு விஜயம் செய்த 2315 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த வெள்ளிக்கிழமை பௌத்த தொலைக்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே புத்தமதத்துக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரே 24 மணி நேர அலைவரிசை இதுதான். மேலும், இலங்கை - இந்தியாவுக்கு இடையே அரசியல், சமூக விடயங்களில், வேறுபாடு இருந்தாலும், இரு நாடுகளுக்குமிடையே பல ஆண்ட…

    • 4 replies
    • 2.5k views
  20. வடக்கு நிர்வாகத்தை இரண்டு வருடங்கள் புலிகளின் தலைவர் பிரபாவிடம் வழங்க வேண்டும் நிஷாந்தி இனப்பிரச்சினை தீர்வுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் அமைச்சர் மஹிந்த விஜயசேகர வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும். வடக்கு மாகாணத்தை இலங்கையின் வலயமாக பிரகடனப்படுத்தி, அதன் நிர்வாகத்தை இரண்டு வருடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வழங்க வேண்டும். இதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விசேட செயற்றிட்ட அமைச்சர் மஹிந்த விஜயசேகர தெரிவித்தார். வடக்கு நிர்வாகத்தினை இரு வருடங்களுக்கு பிரபாகரனிடம் வழங்குவதன்மூலம் இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர…

  21. கரும்புலிகள் நாள்: நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் அகவணக்கம் செலுத்தினார் தமிழீழத் தேசியத் தலைவர் [வியாழக்கிழமை, 5 யூலை 2007, 22:22 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் நினைவுச்சுடரேற்றி கரும்புலி மாவீரர்களை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நினைவு கூர்ந்தார். தமிழீழத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட கரும்புலிகள் நினைவாலயத்தில் பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நேரமான இரவு 7.05 மணிக்கு நினைவுச்சுடரினை தமிழீழத் தேசியத் தலைவர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நிறைவடைந்ததும் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்பட…

  22. பொத்துவிலில் சூட்டுக்காயங்களுடன் இரு இளைஞர்களது சடலங்கள் மீட்பு [Friday July 06 2007 01:43:10 PM GMT] [யாழ் வாணன்] அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் முகாளிக்கடை எனும் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்களை பொலிஸார் நேற்றுக்காலை மீட்டெடுத்துள்ளனர். நேற்று அதிகாலை, 1.30 மணியளவில் பதுங்கி நின்ற விசேட அதிரடிப்படையினர், அம்பாறை காஞ்சிரங்குடா பகுதிக்குள் ஊடுருவிச் சென்ற விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்தனர். இதன்போது இவ்விரு இளைஞர்களும் பலியானதாக தெரிவித்த பொலிஸார் இவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனவும் தெரிவித்தனர். இவர்களின் சடலங்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டு அம்பாறை வைத்தி…

  23. கிளின்டனின் தொண்டு நிறுவன ஆலோசனை குழுவில் சந்திரிகா நிஷாந்தி கிளின்டன் குளோபல் இனிரேற்றர் (வறுமை நிவாரண குழு) ஆலோசகர் குழுவில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அவரது காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த நிவாரண குழுவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிளின்ட

  24. மனித உரிமை கண்காணிப்பாளர்கள் நியமனத்தை தடுத்த நோர்வே சிறிலங்காவிற்கு மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முயற்சிக்கு நோர்வே, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவளிக்காது விட்டதன் மூலம் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவிற்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த மாதம் 25 ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் செயற்குழு கூட்டத்தின் போது அதற்கான திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியான ஜேர்மன் தூதுவர் தயாரித்திருந்தார். அனைத்துலகத்தின் தலையீடுகள் இன்றி சிறிலங்கா அரசு தனது பிரச்சனைகளை தானே தீர்க்க…

  25. வியாழன் 05-07-2007 00:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கொம்பாந்துறை சிறீலங்கா இராணுவ முகாமருகே துணை ஆயுதக்குழுக்களிடையே மோதல் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் கொம்மாந்துறை இராணுவ முகாமருகே கருணா கூலிக்குழுக்களுக்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுக்களுக்கும் இடையே புதன்கிழமை மாலை 5 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கருணா கூலிக்குழுவினர் ஈ.பி.டி.பி குழுவினரை துன்புறுத்தியதாகவும் ஐந்து கருணா கூலிக்குழு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழுவின் கட்டடத்தொகுதிக்குள் பிரவேசித்து கைக்குண்டுத் தாக்குதலையும் துப்பாக்கிபிரயோகத்தையும் மேற்கொண்டதாகவும். இதன்போது ஈ.பி.டி.பி குழு உறுப்பினர்களான 23 அகவையுடைய சிவஞானம் சுதர்சன், 21 அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.