ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
Posted on : Fri Jun 22 7:51:05 EEST 2007 "உதயன்', "சுடர் ஒளி' ஆசிரியரைத் தேடிய வெள்ளை வான் அரச உயர்மட்டக் குழுவினர் நேரில் விரைந்து விசாரணை "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது. கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்: அமைச்சர் அதாவுட செனிவிரட்ன கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அதாவுட செனிவிரட்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பு தமிழர் வெளியேற்றம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறாடாவான ஜோசப் மைக்கேல் பெரேராவினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக இந்த விவாதத்தின்போது ஜோசப் மைக்கேல் பேரேரா கூறியதாவது: கொழும்பிலிருந்து தமிழர்களின் ஒப்புதலுடனேயே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நாடாளுமன்றில் பாதுகாப்பு…
-
- 0 replies
- 853 views
-
-
Posted on : Thu Jun 21 6:38:45 EEST 2007 அரசாங்கத்தின் இனப்போர் முன்னெடுப்பே கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனம் நாடாளுமன்றில் சம்பந்தன் சாடல் கிழக்கில் சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய தமிழர் பிரதேசங்களை, உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருக்கும் அரசாங்கத்தின் செயல், இனப்போரை முன்னெடுக்கும் ஏற்பாடாகும். இது ஆட்சியாளரின் இனப்பாகு பாட்டையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறது. இவ்வாறு கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். சம்பூர், மூதூர் கிழக்கு ஆகியன உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக நேற்று சபையில் ஒத்திவைப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசுக…
-
- 0 replies
- 651 views
-
-
Posted on : 2007-06-22 தமிழர்களை அவர்தம் தாயகத்திலிருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கை இது! திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தித் தான் மேற்கொண்ட பெரும் இராணுவ நடவடிக்கை மூலம் புதிதாகக் கைப்பற்றிய சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசத்தை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தி யிருக்கின்றது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட விசேட வர்த்த மானி அறிவித்தல் மூலம் இந்த நில ஆக்கிரமிப்பும், கபளீ கரமும் சட்ட அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அப்பிரதேசத் திலிருந்து கொடூரப் படை நடவடிக்கை மூலம் பலவந்த மாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள், அரச படைகள் ஆக்கிரமித்துள்ள தமது தாயக பூமிக்கு இனித் திரும்ப முடி யாது. மீளக் குடியமர இயலாது. படைகளின் கட்ட…
-
- 0 replies
- 830 views
-
-
"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 22:07 ஈழம்] [செ.விசுவநாதன்] "தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது. "சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது. "தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்…
-
- 43 replies
- 7.5k views
-
-
உலகின் புராதன ஆவணங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின்கலாசாரப் பட்டியலில் இந்துக்களின் `இருக்குவேதம்' [21 - June - 2007] கிறிஸ்துவுக்கு முன்னர் 1800-1500 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்துக்களின் புராதன இருக்கு வேதத்தின் 30 கையெழுத்துப் பிரதிகளை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கலாசாரப் பட்டியலில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு உதவும் முகமாக மரபுரிமைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஐ.நா.வின் இப் பட்டியலில் இவ்வருடம் உலகின் முதலாவது முழு நீளத் திரைப்படம், சுவீடன் தொழிலதிபர் அல்பிரட் நோபலின் சரித்திர ஆவணங்கள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் வழக்கு …
-
- 5 replies
- 2k views
-
-
சுடரொளி, உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் புதன்கிழமை வெள்ளை வான் கும்பலினால் சுடரொளி, உதயன் பத்திரிகை முதன்மை ஆசிரியர் திரு.வித்தியாதரன் அவர்களை அவரது வீடு தொடர்பாக அவர் குடியிருந்த பகுதியில் சென்று அத்தொடர்மாடி பாதுகாவலரை விரட்டி விசாரக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மகிந்த ராஜபக்ஸவால் இலஞ்சம் மற்றும் ஆட்கடத்தல் காணாமல் போதல் தொடர்பில் உருவாக்கப்பட்ட குழு இவரை நேரில் சென்று வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் திரு.வித்தியாதரன் தகவல் தெரிவிக்கையில் இவ் குழுஉறுப்பினர் வீட்டுக்கு வந்து இவ் அச்சுறுத்தல் தொடர்பில் உரியநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது மகிழ்ச்சியை தருகிறது எனத்தெரிவித்துள்ளார். -பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
எம்.கே.நாராயணனை உடனே மாற்ற வேண்டும்: திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானம் [வியாழக்கிழமை, 21 யூன் 2007, 18:12 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை உடனே அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வின் முக்கிய கூட்டுக் கட்சியாகத் திராவிடர் கழகம் இருப்பதால் எம்.கே.நாராயணன் விரைவில் மாற்றப்படக் கூடும் எனவும் கூறப்பபடுகிறது. சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் நிலை நாளும் வேத…
-
- 3 replies
- 1.5k views
-
-
நான் அதிரடிப்படை முகாமில் பாதுகாப்பாக இருந்தபோது, அங்கு வந்த கருணா குழு உறுப்பினர்களில் ஒருவரான அசோக் என்பவர் என்னைப்பார்த்து இவரைக்கொல்ல வேண்டுமென்றும் ஆவேசமாக அதிரடிப்படை அதிகாரி ஒருவரைப்பார்த்து கத்தினார். ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த கருணா குழுவினர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தமிழ் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் முக்கியமாக கலந்து கொள்வதற்காகவும் எ…
-
- 1 reply
- 2.7k views
-
-
தமிழரின் பணத்தைப் பலவந்தமாய்ப் பறிப்பதே ஒரு செழிப்பான தொழில்! - தமிழ் கார்டியன் இணைய தளம் செய்திமடல்! ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கொழும்பு நகரின் இதயம் போன்ற மையப் பகுதியில், ?மைதிலி ஜுவல்லர்ஸ்? என்னும் நகைக் கடையின் உரிமையாளராக ஏகாம்பரம் பழநிராசா என்பவர் அறுபது வயதாகும் முதியவராவார். கடந்த ஆண்டு(2006) செப்டம்பர் 12ஆம் நாள் அவர் காணாமல் போய்விட்டார். அவருடைய 23 வயது மகன் பால சரவணன் மற்றும் வேலையாள் கணேச முகுந்தன் ஆகியோரும் மாயமாய் மறைந்து விட்டனர்.மூ இலங்கை தலைமையமைச்சரின் அலுவலகத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இரவு ஒன்பது மணியளவில் தங்கள் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுதே அந்த மூன்று பேரும் அப்படிக் கடத்தப்பட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வியாழன் 21-06-2007 19:26 மணி தமிழீழம் [கோபி] யாழ் சுண்டிக்குளத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 படையினர் பலி! மேலும் பலர் காயம் யாழ் சுண்டிக்குளப் பகுதியில் சிறீலங்கர் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதில் சிறீலங்காப் படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற வானம் மீதே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாமயடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துவனைமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும் உறுதி செய்துள்ளது pathivu
-
- 0 replies
- 1.2k views
-
-
`அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி முறியடிப்பு 2010 வரை ஆட்சியை அசைக்க முடியாது' [21 - June - 2007] * `உறக்கத்திலும் ராஜபக்ஷ பெயரைக் கேட்டு நடுங்கும் ரணில்' -எம்.ஏ.எம். நிலாம்- அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாகத
-
- 1 reply
- 1.4k views
-
-
வியாழன் 21-06-2007 13:18 மணி தமிழீழம் [சிறீதரன்] ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ள தனது பெரிய வாயை மூடிக்கொண்டிருப்தே நல்லது - ஜே.வி.பி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதம கொரடாவும் அமைச்ருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ள தனது பெரிய வாயை மூடிக்கொண்டிருப்தே நல்லது என ஜே.வி.பி எச்சரித்துள்ளது வரவு செலவுத்திட்டத்தின் மேலதிகள கொடுப்பனவுகள் தொடர்பான வாக்கnடுப்பின் போது ஜே.வி.பி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தது இதனை அடுத்து ஜே.வி.பியின் உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகளின் அதரவாளர்கள் என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கருத்து வெளியிட்டிருந்தார் இதற்கு பதிலளித்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸநாயக்க அரசாங்கத்தின் பிரதம கொரடா தனது வாயினால் தான்…
-
- 2 replies
- 1.5k views
-
-
Posted on : Thu Jun 21 6:38:24 EEST 2007 சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்! தலைநகர மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை "வெள்ளைவானில் சிவில் உடையில் யார் வந்து அழைத்தாலும் கதவுகளைத் திறக்காதீர். பொலிஸ் நிலையங்களுக்கோ, அவசரப் பொலிஸ் பிரிவுக்கோ உடனே அறிவியுங்கள்.' இவ்வாறு கொழும்புவாழ் மக்களை அறிவுறுத்தியிருக்கிறார் வாழ்க்கைத்தொழில், தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பெ. இராதா கிருஷ்ணன். தலைநகரில் தமிழ் வர்த்தகர்கள் கப் பம் கேட்டுக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைச் சுட்டிக்காட் டியே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத் திருக்கிறார். இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய் திக்குறிப்பு வருமாறு: தலைநகரில் மறுபடியும் தமிழ் வர்த்த கர்களை தொ…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிடினும் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் [21 - June - 2007] * பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கா -டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்- அரசாங்கத்தின் காட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படப் போவதில்லையென தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., சர்வதேச சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிதி, காப்புறுதி, நம்பிக்கை, காப்புறுதி தொழில் ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான பிரேரணையில் ஐ.தே.க. சார்பில் உரையாற்றுகையிலேயே அதன் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிங்கள மக்களுக்கு ஏகபோக உரிமையும் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு எம்.பி. த.கனகசபை துறைநீலாவணை, பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு மட்டும் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் அளித்து விட்டு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களின் நிலங்களை சிங்களப் பேரினவாத சக்திகள் சூறையாடியும் வருகின்றனர். இதனால் இன்று இந் நாட்டில் வாழக்கூடிய சகல தமிழ் பேசும் மக்களும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் அரசாங்கம் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து கௌரவமான சமாதான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாரா…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Thu Jun 21 6:40:29 EEST 2007 கல்குடாவில் தொழிலுக்குச் சென்ற 3 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை வாழைச்சேனை கல்குடா பிரதேசத் தில் மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொலை செய் யப்பட்டுள்ளனர். இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என வாழைச் சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான தியாகராஜா அசோக்குமார்(வயது 25), பாலன் கலைச்செல்வன் (வயது 25) மற்றும் எஸ். சண்முகநாதன் (வயது 17) ஆகியோரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்களின் சடலங்கள் நேற்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட் டுள்ளன. மரண விசாரணைகளின் பின்னர் சடலங்கள…
-
- 0 replies
- 739 views
-
-
20.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....fe977004015c619
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-06-21 இலங்கைக்குப் பெரும் கீர்த்திகளை தேடித்தரும் மஹிந்த அரசு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இலங் கைக்கு சர்வதேச ரீதியில் பல்வேறு "கீர்த்திகளை' பெற்றுத் தந்து, இலங்கை மக்களை அதுவும் குறிப்பாகத் தென்னி லங்கை மக்களை தலை நிமிர்ந்து நின்று "பெருமிதம்' கொள்ள வைத்திருக்கின்றது. உலகில் அமைதியும், சமாதானமும் நிலவும் நாடு களின் பட்டியலில் ஆகப் பிந்தியதாக 111ஆவது இடமே இலங்கைத் தீவுக்கு என்பதை ஏற்கனவே நாம் அறிந்துள் ளோம். இப்போது உலகில் தோல்வியடைந்த நாடுகளில் முதல் இருபத்தியைந்துக்குள் இலங்கையும் அடக்கம் என்ற பெருமை கௌரவம் நமது இலங்கை தேசத் துக்குக் கிட்டியிருக்கின்றது. உலகின் நூற்றிஎழுபத்தியேழு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரக்கணக்கீட்டின் ப…
-
- 0 replies
- 890 views
-
-
கொழும்பில் பிரதான மின்வழங்கும் கேபிள் பாதிப்பு : கொழும்பு நெருக்கடியில் கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் நீண்டகாலத்துக்கு முன்பு புதையுண்ட பொருட்களையோ அல்லது கட்டடத்தையோ தேடி இனம்தெரியாத நபர்கள் தோண்டியதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை திருத்துவதற்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரியவருகிறது. இதனால் சாதாரணமாக மின்வழங்கும் கொலன்னாவ பிரதான மின்வழங்கும் பாதையூடாக மின்சாரம் வழங்க முடியாது மாற்று வழியான பன்னிப்பிட்டிய வழியாக மின்வழங்கப்படுவதாகவும் மேலும் அறியமுடிகிறது. சிலோன் மின்சார சபையின் பிரதான பொறியியலாளர் மேலும் தெரிவிக்கையில் இதனை திருத்துவதற்கு இருமாதங்கள் ஏற்படும் எனவும் திருத்த வேலைகள் இடம்பெறும்போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த இளம் முஸ்லீம் பெண் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர் 25 அகவையுடைய ஆப்தீன் ஹில்மியா எனத் தெரியவருகிறது. இவரது கணவர் மீன்வியாபார நிமித்தம் கொழும்பு சென்றபோதே இனம்தெரியாதவர்கள் இப்படுகொலையை மேற்கொண்டதாக தெரியவருகிறது. -Pathivu.
-
- 0 replies
- 1.2k views
-
-
போவோர் போனால் போகட்டும் இருப்போரை பாதுகாப்போம் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டமை அரசாங்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமன்று. அவர்கள் எதிர்த்தரப்பிற்குச் சென்றாலும், அரசு பலமுடனேயே இருக்கின்றது. போவோர் போனால் போகட்டும். இருப்பவர்களை நாம் பாதுகாப்போம் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். தொப்பிகல காட்டுப்பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறைப்பட்டுள்ளனர் என்ற விடயம் உலகமறிந்தது. ஆனால், அங்கு படையினரே விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ளதாக பொறுப்புள்ள எதிர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
‘எமது உரிமைகளுக்காக நாம் போராடுவோம்’ – சம்பூர், மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் புதன்கிழமை சர்வதேச சமூகத்திடம் தம்மை தமது பரம்பரையான இடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யக்கோரி அமைதியான போராட்டம் ஒன்றை சம்பூர், மூதூர்கிழக்கு ஆகியபிரதேசங்களில் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தையொட்டி இவ் அமைதிப்போராட்டத்தை Interfaith Organisation for Peace (இன்ரபெய்த் போ பீஸ்) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இதில் 25 கிராமசேகவர் பிரிவிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மதத்தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். சிறீலங்கா ஜனாதிபதியால் மே …
-
- 0 replies
- 952 views
-
-
உலகில் 25 ஆவது மோசமான நாடு சிறிலங்கா [புதன்கிழமை, 20 யூன் 2007, 16:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] 2007 ஆம் ஆண்டு உலகில் தோல்வியடைந்த நாடுகளில் சிறிலங்கா 25 ஆவது இடத்தில் உள்ளது. "வெளிவிவகாரக் கொள்கை" இதழ் நிறுவனமும் அமைதிக்கான நிதி அமைப்பும் இணைந்து அனைத்துலக நாடுகள் தொடர்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. அகதிகள், இடம்பெயர்ந்தோர், பொருளாதாரம், மனித உரிமைகள், பாதுகாப்பு நிலைமைகள், நகர்ப்புற அபிவிருத்தி, பொதுசேவைகள் உள்ளிட்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டன. மொத்தம் 117 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முதலிடத்தில் சூடான் நாடு (113.7புள்ளிகள்) உள்ளது. இரண்டாம் இடத்தில் ஈராக் (111.4) உள்ளது. உலகிலேயே மிக மோசமான- தோல்விய…
-
- 7 replies
- 2.4k views
-