ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் பாரிய தாக்குதல்களை நடத்துவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவிப்பு. சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல் விவரம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்கள் நடத்துவது சாத்தியமற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளே எமது தாக்குதல் நிலைகளாக இருக்கும். அவைகள்தான் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவி செய்கின்றவையாக உள்ளன. உதாரணமாக எண்ணெய்க் களஞ்சியங்கள் மீது நாம் தாக…
-
- 2 replies
- 2.3k views
-
-
சந்திரிகா வழியில் மஹிந்தரும் "வெற்றிப் பட்டயம்' பெறுகிறார் தொப்பிகல காட்டுப்பகுதியை இலங்கை அரசுப் படை கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டன என்ற குதூகல அறிவிப்பு நேற்று தென்னிலங்கையில் மகிழ்வோடு வெளி யிடப்பட்டது. தொப்பிகல மீட்போடு கிழக்கு மாகாணம் முழுமையாக அரசுப் படைகள் வசம் வந்துவிட்டன என்றும் தெற்கில் சந்தோஷம் கொண்டாடப்படுகின்றது. தொப்பிகல ஆக்கிரமிப்புடன் கிழக்கு மாகாணம் முழு வதும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட் டது என்ற கூற்றின் உண்மைத் தன்மையை நிஜ நிலை மையை காலம் தான் உறுதிப்படுத்த வேண்டும். முழு வதுமாக மீட்பு என்ற திருப்திக்குப் பின்னால் ஒளிந்து கிடக் கக்கூடிய பூரணத்துவத்தை அல்லது ஓட்டைகள், ஒழுக்கு களை கால ஓட்டம்தான் நமக்கு வெளிப்படுத்தும். அ…
-
- 5 replies
- 1.4k views
-
-
புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித…
-
- 12 replies
- 3.4k views
-
-
கொட்டாஞ்சேனையில் தமிழ் இளைஞர் கடத்தல் வீரகேசரி நாளேடு கொட்டாஞ்சேனை புதுச்செட்டி தெருவில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் கொட்டாஞ்சேனை பொலிசில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை கின்னியப்புகாமி மாவத்தையிலுள்ள சிகையலங்கரிப்பு நிலையத்திலிருந்து அருகிலுள்ள ஹோட்டலுக்கு தேனீர் பருகிவிட்டு வருவதாக கூறிவிட்டு கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்ற யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த கதிரவேலு சக்தி வேலு (வயது 23) என்ற—இளைஞரே கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வானில் வந்தோரே இவரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவர் கடந்த ஆறு மாதத…
-
- 0 replies
- 1k views
-
-
குண்டுப் புரளி: கொழும்பில் அவசரமாக வானூர்தி தரை இறங்கியது. இந்தோனேசியாவின் ஐகார்த்தா நகரில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் வானூர்தி குண்டுப்புரளியால் அவசர, அவசரமாக சிறிலங்காவின் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை தரையிறக்கப்பட்டது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பயணிகள் வெளியேறிய பின்னர் வானூர்தியை பிரத்தியேக இடத்துக்கு நகர்த்தினர். அதன் பின்னர் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் வானூர்திக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் வானூர்தியில் சந்தேகத்திற்கு இடமான எந்தப் பொருளும் இல்லை என்று குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அறிவித்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
குண்டுகள் பொருத்தப்பட்ட குளிரூட்டி வாகனம் தொடர்பில் தொடரும் சர்சைகள் ஸ்ரீலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வெடிகு குண்டுகள் பொருத்தப்பட்ட குளிரூட்டி வாகம் தொடர்பில் சர்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக கருணா குழுவில் இருந்து வெளியேறி தனியான துணை இராணுவக் குழுவாக செயல்பட்டு வரும் பிள்ளையார் தரப்பினால் தகவல் வழங்கப்பட்டே குறிப்பிட்ட வாகனம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஸ்ரீலங்கா கடற்படையும் இதனை உறுதிப்படுத்தியிருந்ததாகவம
-
- 1 reply
- 1.4k views
-
-
10.07.07 அன்ற தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 3 replies
- 1.8k views
-
-
ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரை: "சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை" [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 12:53 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர போராளிகளின் மனோநிலை என்ன என்பது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்: கழுத்தில் சயனைட் குப்பி சுற்றியிருக்க... கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை உறவினர்களின் கண்ணீருக்கும் போராளிகளின் கீதத்துக்கும் இடையே புதைத்துவிட்டு நிற்கிறார் மருத்துவர் வாமன். மரணங்களே தம்மை பலப்படுத்துவதாக அவர் கூறுகிறார். 1990 களில் நடந்த யுத்தம் ஒன்றில் தன் காலை அவர் இழந்தார். "தனியரசு பெறுவதற்காக சாவடைய தான் தயாராக இர…
-
- 1 reply
- 1.7k views
-
-
மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களிலேயே வாழந்துவருகின்றனர் - மனிதநேய அமைப்பு ஸ்ரீலங்கா அரச படைகள் கிழக்கு மகாணாத்தில் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களிலேயே வாழந்து வருவதாக மனிதநேய அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 11800 குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் மட்டக்களப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கம் கிழக்கு மகாணாத்தை முழுஐமயாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க படைகள் கிழக்கில் தமது பூரண கட…
-
- 0 replies
- 791 views
-
-
கொழும்பு புறக்கோட்டை பொலிசாரால் இரண்டு தமிழ் யுவதிகள் கைது கொழும்பு புறக்கோட்டை பொலிசாரால் இரண்டு தமிழ் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் இரு யுவதிகளும் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியை சேர்ந்தவர்கள் என்று தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே செட்டியர் வீதியில் வைத்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. - பதிவு
-
- 0 replies
- 976 views
-
-
கண்துடைப்பு நாடகம் [12 - July - 2007] எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு தனது அமைச்சு அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும பணிப்புரைகளை வழங்கியிருப்பதாக நேற்றைய தினம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் செய்தியொன்றைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் போது விமானங்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டும்; கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் போன்ற உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் அவற்றை நடத்த வேண்டும் என்று அமைச்சர் அழகப்பெரும அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக …
-
- 0 replies
- 999 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 0 replies
- 1.1k views
-
-
வீடுகளில் வைத்துக் கடத்தப்பட்ட மாணவர்கள் மூவர் 69 நாள்களின் பின்னர் நேற்று விடுவிக்கப்பட்டனர் குடாநாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி இரவு ஊரடங்கு அமுலில் இருந்த வேளை அவர்களது வீடுகளில் வைத்து ஆயுத தாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் விடப்பட்டனர் என்று அறியவந் தது. யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியின் உயர் தர வகுப்பில் கணிதப் பிரிவில் கல்வி பயி லும் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த குகராஜன் கண்ணன் (வயது 19), யாழ்.இந்துக் கல்லூரி யில் கலைப்பிரிவு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் யாழ்.பிறவுண் வீதியைச் சேர்ந்த நாகராசா வேணுகானன் (வயது 19), யாழ். இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி ப…
-
- 0 replies
- 989 views
-
-
வாக்குறுதி அளித்தவாறு ஆயுதக்குழுக்களை மஹிந்தா நிராயுதபாணிகள் ஆக்கவில்லை அதனாலேயே புலிகளும் அரசும் மோதத் தொடங்கினவாம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தேர் தலுக்கு முன்னர் பலகோடி ரூபாக்கள் அர சினால் புலிகளுக்கு கொடுக்கப்பட் டன. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அரசு புலிகளுக்குக் கூறியது போன்று கருணா குழுவினரையும் ஏனைய ஆயு தம் தாங்கிய குழுக்களையும் நிராயுத பாணிகளாக்கவில்லை. இதனால் ஆத் திரம் கொண்ட புலிகளுக்கும் அரசுக் கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. புலிகளுக்கு அரசு நிதி வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்துவது கூடாது. இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொக்கட்டிச்சோலையில் மீளகுடியமர்ந்தவர்கள் மீண்டும் இடப்பெயர்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 100 குடும்பங்கள் அண்மையில் மீளவும் குடியமர்ந்தப்பட்டிருந்தமை தெரிந்ததே இவர்கள் அங்கு இடம்பெற்று வரும் வன்சம்பவங்கள் கொலைகள் காணாமல்போதல் போன்றவற்றால் மீளவும் பாதுகாப்பான இடம்தேடி இடம்பெயர்ந்துள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. யூன் மாதம் 10 ம் திகதி மகிழடித்தீவில் 27 அகவையுடைய கணவதிப்பிள்ளை ரஜீந்திரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். யூன் மாதம் 4ம் திகதி 27 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணப்பிள்ளை ராஜேந்திரன் காணாமல்போயுள்ளார். யூன…
-
- 0 replies
- 1k views
-
-
-
திருகோணமலைக்கு மகிந்த இரகசிய பயணம் திருகோணமலைக்கு கடந்த திங்கள்கிழமை இரகசியப் பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் இராணுவ முகாம் ஒன்றுக்கும் பயணம் செய்த மகிந்த அங்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களையும் தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்புக்களின் போது மகிந்த கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. கிழக்கில் நிலவும் வறுமை, வேலையின்மை பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவதில் அரசாங்கம் ஆவலுடன் உள்ளது. எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத இந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழில் கிளைத் தூதரகம்: கனடா நாடாளுமன்றமன்ற உறுப்பினர்களின் தொடரும் ஆதரவு [புதன்கிழமை, 11 யூலை 2007, 16:50 ஈழம்] [ப.தயாளினி] யாழ்ப்பாணத்தில் கனடா நாட்டின் கிளைத் தூதரகத்தை அமைக்க அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஸ்டீபன் கார்பருக்கு அஜக்ஸ் பிகெரிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஹொலண்ட் கடந்த 9 ஆம் நாள் எழுதிய கடிதம்: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் சீர்குலைந்திருப்பது குறித்து என்னுடைய ஆழ்ந்த கவலையை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். கொழும்பில் உள்ள கனடிய தூதரகத்தினரால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள வடக்கு - கிழக்குப் பகுதியில் சேவையாற்ற கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பிற்கு மாறியவர்களே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் பலாங்கொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்க தரப்பில் இணைந்து கொண்டுள்ள அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல,மகிந்த சமரசிங்க ஆகியோரே மகிந்த ராஜபக்சவை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் சார்பில் குரல் தரவல்ல அமைச்சர்களாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பில் இணைந்து கொண்டவர்களே இருப்பதாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம். இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றத்துடன் தனது தூதுவர் நிலையில் இருந்து பணி மாற்றம் பெறவுள்ள ஹன்ஸ் பிரஸ்கரின் கிளிநொச்சி விஜயமானது பிரியாவிடை பெறும் நோக்கிலானது என்று இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன நேற்று நோர்வே தூதுவர் தனது கிளிநொச்சி விஜயம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதனை அடுத்து வெளிவிவாகர அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன அவருடைய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்க சமாதான செயலகம் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார் -Pathivu-
-
- 3 replies
- 1.7k views
-
-
பாணந்துறைக் கிராமத்தில் கலவரம்: மூவர் வெட்டிப் படுகொலை 30 வீடுகள் சேதம். பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள அம்பிலாவத்த முஸ்லிம் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் மூவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதுடன் 30 வீடுகளும் சேதமடைந்துள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது. இக் கிராமத்தில் கொள்ளையடிப்பதற்கென வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கோஷ்டி ஒன்றைக் கிராமமக்கள் பிடிக்க முனைந்தபோது கிராம மக்களுக்கும் கொள்ளைக்கோஷ்டியினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் கொள்ளையரின் வாள் வெட்டுக்கு இலக்காகி கிராம மக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இச்சம்பவத்தின்போது அங்குள்ள வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ச…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஈ.பி.டி.பி.- கருணா குழு மோதல் கிழக்கில் தீவிரமடையும் அறிகுறி இணையத்தளங்கள் ஊடாக இருதரப்பும் "சர்' ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கருணா பிரிவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலி களும் தத்தம் இணையத்தளங்கள் வாயிலாக, ஒன்றை ஒன்று மும்முரமாகச் சாடத் தொடங்கி யுள்ளன என்று ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. இந்தச் சாடல் சமர் குறித்து, அது மேலும் பின்வருமாறு விவரித்துள்ளது: இவ்விரு அமைப்புகளும் கிழக்கு மாகா ணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட் சித் தேர்தல்களில் ஈடுபடுவதற்காக தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. அதேவேளை, எதிரும் புதிருமான சாடல் சமர்களையும் பிரகடனப்படுத்தியுள்ளன. இவற்றுக்காக, இரு தரப்புகளும் தம் இணை யங்களை தக்கவகையில் பெரிய அளவில் பய…
-
- 6 replies
- 2.8k views
-
-
கிழக்கை மீட்பது குறித்து விமர்சிப்பது தேசத்துரோகம்: கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:14 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ கிழக்கு மாகாணத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுவது தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பது தேசத்துரோகம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்றுவதில் அர்த்தமில்லை. அது முக்கியத்துவமில்லாத ஒரு நடவடிக்கை என சிலர் தவறாக கதை பரப்பி வருகின்றனர். கிழக்கை உள்ளடக்காத ஈழத்தைப் பிரபாகரன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அங்குள்ள பொருளாதார நலன்களுக்காகவே பிரபாகரன் இதனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாங்குளத்தில் இராணுவ ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 5 பேர் பலி- 2 பேர் படுகாயம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்- இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" செய்தியாளரிடம் இராசையா இளந்திரையன் கூறியதாவது: மாங்குளம் அருகாமையில் உள்ள கிராமத்துக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவின் பணியாளர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போத…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆசியாவில் ஆட்கடத்தலில் சிறீலங்கா முதலிடம் - சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் நேற்று கொழும்பு ரேணுகா ஹொட்டலில் சட்டவிரோத ஆட்கடத்தல், மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் அதில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் சிறீலங்கா குடிவரவு, குடியகல்வு சட்டங்களை முறையாக அமுல்படுத்தாமை, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றால் சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் சிறீலங்கா ஆசியாவில் முதலிடம் வகிப்பதாக சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தும் சில ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பெரந்தொகையானோர் ஐரோப்பாவிற்கு குடியமர்வதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். -ப…
-
- 0 replies
- 1.1k views
-