ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
புலம் பெயர் மக்களால் நடாத்தப்பட்ட வெல்க தமிழ் சொல்கின்ற செய்தி என்ன?
-
- 2 replies
- 1.7k views
-
-
Posted on : 2007-06-19 கொழும்பின் தவறான போக்கினால் ஈழத் தமிழர்களுக்குக் கிட்டும் நன்மை தலைநகர் கொழும்பின் தங்குமிட விடுதிகளில் இருந்து அதிகாலை வேளையில் படையினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், அந்தக் கட் டாயத்தின்போது தாங்கமுடியாத பெரும் மன உளைச்சலுக் கும், அசௌகரியத்துக்கும், நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் ஆளானார்கள் என்பது உண்மைதான். ஆனால் அரச அதி காரவர்க்கத்தின் அந்த அறிவிலித்தனமான செயற்பாட்டின் பெறு பேறாக, தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் எழுந்த அதிர்வலைகள், அந்த நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் சாதக மான புதிய நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதா…
-
- 0 replies
- 836 views
-
-
படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம் [18 - June - 2007] * அநுராதபுரத்தில் ரணில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளே படையினரின் மனோதிடத்தை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளதாகவும் வேறு எவரையும் இது தொடர்பில் குற்றம்சாட்ட முடியாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நுவரவெல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்விப் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பிரமுகர்கள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இன்ற…
-
- 5 replies
- 2.3k views
-
-
மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது: வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்க கவலை [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 15:09 ஈழம்] [செ.விசுவநாதன்] ஊழலும் பயங்கரவாதமும் உள்ள சிறிலங்காவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துபோனதால் மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது என்று வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்கவும் அனுராதபுர அதமஸ்தனாதிபதியுமான பல்லேகம சிறினிவாச தேரர் கவலை தெரிவித்துள்ளார். பல்லேகம சிறினிவாச தேரரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார் நிலைமைகள் விவாதிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியினருடனான சந்திப்பு குறித்து …
-
- 6 replies
- 1.5k views
-
-
கொழும்பில் எட்டு பெண்கள் உட்பட 37 பேர் கைது. கொழும்பு மஹரகம பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8 மணிமுதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் எட்டு பெண்கள் உட்பட 37 வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை, காவல்பதிவு. கொழும்பில் தங்குவதற்கான காரணம், அடையாளத்தை உறுதிசெய்யாமையே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என காவல்துறை அத்தியேட்சகர் வழமைபோல தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -Pathivu-
-
- 0 replies
- 857 views
-
-
பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியலோ? [18 - June - 2007] இலங்கையின் தற்போதைய படுமோசமான மனித உரிமை மீறல்கள் நிலைவரம் தொடர்பாக சர்வதேச சமூகம் கடுமையான விசனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தரப்பினர் அவ்வப்போது தெரிவித்து வருகின்ற கருத்துகள் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்களில் சிலர் நாட்டின் இன்றைய விபரீதமான நிகழ்வுப் போக்குகளின் பாரதூரத்தன்மையை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள். உண்மையில் நித்திரை செய்பவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடலாம். ஆனால், நித்திரை செய்வதைப்போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்பமுடியாது. நித்திரை செய்வதாக பாசாங்கு செய்பவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனங்களுக்கிடையிலான அமைதியை கட்டிவளர்க்கும் வானொலி சேவை [18 - June - 2007] [Font Size - A - A - A] கொழும்பிலிருந்து 150 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தேயிலை வளரும் மலைப்பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு சமூக வானொலி நிலையம் கிராமங்களிலிருந்தும், மக்களின் பங்களிப்புகளுடனும் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் அமைதியை வளர்த்தற்கான ஒலிபரப்பைச் செய்துவருகிறது. "நாடு முழுவதிலுமுள்ள மக்கள் சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இந்த சமூக வானொலி ஆரம்பத்திலிருந்து அதைச் செய்துவருகிறது" எனப் பவிதரன் என்னும் இவ்வானொலியின் ஒலிபரப்பாளர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியுள்ளார். `நாங்கள் எத்தகைய இனப்பாகுபாட்டையும் இங்கு வைத்திருக்கவில்லை" என்கிறார் அந்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 19-06-2007 02:35 மணி தமிழீழம் [சிறீதரன்] தனது அரசியல் எண்ணங்களுக்கு எதிரானவர்களை தண்டிப்பதில் மகிந்த சிறீலங்காவின் உயர்நீதி மன்றம் சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது அரசியல் எதிராளிகளை துன்புறுத்துவதில் ஈடுபடுவதாக குற்றம்சுமத்தியுள்ளது. ரிறான் அலெஸ் அவர்களது கைது நடவடிக்கைக்கு பின்னாலும் அரசியல் காரணங்கள் காணப்படுவதாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை ரிறான் அலெஸ் ஐ திங்கட்கிழமை பிணையில் செல்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளவும் சிறீலங்கா உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளமை தெரிந்ததே. ஸ்ரான்டட் பத்திரிகை குழுவின் உரிமையாளர் ராஜபக்ஸ முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய நண்பன் என…
-
- 1 reply
- 1k views
-
-
நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக முட்டாள்த்தனமான வழிகளில் நகரும் சிறிலங்கா அரசாங்கம்: சண்டே லீடர் சாடல் ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் சிறிலங்கா நகர்கிறது என்று மகிந்த அரசாங்கத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார இதழ் சாடியுள்ளது. "சண்டே லீடர்" வார இதழின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்படும் நிலையை அடைந்துள்ளது. அதன் பிரதான காரணம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரம் தான். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வீதிகளில் இறங்கி போராட உள்ளது. மகிந்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரித்துப் பார்ப்பது தவறு! கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றியமை பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளான விடயமாகியுள்ளது. ஒருபுறத்தில் வெளியேற்றுதலுக்கான கண்டனமும் மறுபுறத்தில் வெளியேற்றுதலுக்கான மன்னிப்புக் கோருதலும் நிகழ்ந்தன. தமிழரை வெளியேற்றியமை குறித்து எழுந்த பலமான கண்டனங்களைத் தொடர்ந்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மன்னிப்புக் கோரிய அதேவேளை கடும் நிபந்தனைகளுடன் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்குள் கொண்டு சென்றமையும் ஏற்கனவே அதிகம் பேசப்பட்ட விடயங்கள்தான். ஆயினும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முற்றுப்பெற்றுவிட்டதாக இல்லை. ஒருபுறத்தில் ஆளும் கட்சியில் ஒருதரப்பினர் அத்தகையதொரு மன்னிப்புக் கோரவேண்டியதில்லை. அமெரிக்காவோ அன்றி மேற்கு நாட…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம். ஒஸ்லோவில் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு மனித உரிமை விடயங்கள் குறித்த நிபந்தனைகளை விதித்து நிதியுதவிகளை ஒத்திவைக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேநேரம் சமாதானப்பாதைக்கு விடுதலைப்புலிகள் திரும்பவேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆராய்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் சார்பில் அந்நாட்டின் விசேட தூதுவரான யசூசி அகாஷியும் அமெரிக்காவின் சார்பில் தெற்காசிய விவகாரங…
-
- 2 replies
- 1.4k views
-
-
தீவிரமாக்கப்படும் படைபல அதிகரிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கை ஒரு முழு அளவிலான போருக்குள் மூழ்கிப்போயுள்ள அதேசமயம் மக்களும் என்றும் இல்லாதவாறான துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் நேரடியான போருக்குள் சிக்கிக்தவித்த மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு என தலைநகருக்கு வந்தபோதும் அவர்களை கூட்டமாக அள்ளிச் சென்று பலவந்தமாக வெளியேற்றியமை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுன்னர் மற்றுமொரு ஆச்சரியமான செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த வருடத்தில் படையினருக்கு மேலும் 50,000 இராணுவ வீரர்களை சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த வாரம் இட…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடத்திய ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது [18 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து எஞ்சியோரை வடக்கே விரட்டியடித்த ஐ.தே.க.வினர் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரென வர்த்தக நுகர்வோர் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தெரிவித்தார். தெரணியகலை தெமத தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்துப் பேசிவருவதை எண்ண சிரிப்பு வருகிறது. இந்த நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்து தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நா வில் தனக்குத் தானே கரி பூசிக் கொண்ட சிறிலங்கா. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது. மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளு…
-
- 4 replies
- 2.1k views
-
-
வவுனியாவில் கவசவாகன அணி தாக்கப்பட்டுள்ளது வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா பவள்கவச அணிமீது பூவரசங்குளத்திற்கும் செட்டிக்குளம் பகுதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பவள்கவசவாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பவள்கவச வாகனம் பாரம்தூக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. pathivu
-
- 2 replies
- 2.3k views
-
-
ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
தாவடி, கொக்குவில் கிழக்கு மற்றும் குளப்பிட்டிப் பகுதிகள் சுற்றி வளைப்பு. இன்று அதிகாலை முதல் தாவடி மற்றும் கொக்குவில் கிழக்கில் ஒரு பகுதி இராணுவ சுற்றி வளைப்புத் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணியளவில் குளப்பிட்டி வீதி, ஆனைக்கோட்டை வீதி, காங்கேசன்துறை வீதி, காளிகோவிலடி, பிடாரி அம்மன் கோவில் உட்பட பல பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுல் நடத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பல நூற்றக்கணகான இராணுவத்தினர் இந்தப் பகுதியில் நிலைப்படுத்தப்பட்டு இந்த தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்மைமயால் பதட்டமான நிலமை காணப்பட்டது. இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
தம்பிமாரே சுவிலும் மற்றைய நாடுகளிலும் "சிவாஜி செமஓட்டம் சீட்டில்லாமல் சனம் ஓடித்திரியுதாம்...... 96வது அனைத்துலக தொழிலாளர் தினத்தில் பங்குபற்ற வந்திருந்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ முடிவில் சுவிசில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது புளொட்இ ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இலங்கையில் தமிழ்மக்கள் எதிர் நோக்குகின்ற இன்னல்கள் அதற்கான தீர்வுகள் குறித்த அபிப்பிராயங்கள் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் புலிகளால் மேற்கொள்ளப்படும் அராஐக நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்திருந்தனர். இச்சந்திப்பின் முடிவில் புளொட்டின் சுவிஸ் பொறுப்பாளர் ரஞ்சன் தலைமையில் சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபச்சவை பிரத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு வழங்கப்பட்ட 150 கோடி ரூபா குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் [18 - June - 2007] * ஜே.வி.பி. வலியுறுத்துகிறது -டிட்டோ குகன்- அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளுக்கு 150 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இவ் விவகாரம் குறித்து விசாரிக்கவென பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென ஜே.வி.பி.யும் வலியுறுத்தியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரிக்க வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையிலேயே ஜே.வி.பி.யும் இவ்வாறு தெரிவித்திருக்கின்றது. அரசாங்கத்தினால் இரகசியமான முறையில் விடுதலைப் ப…
-
- 1 reply
- 2k views
-
-
Posted on : Mon Jun 18 8:04:25 EEST 2007 கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு வாய்ப்பு தலைநகர் கொழும்பிலிருந்து பொலி ஸாராலும், படையினராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஈழத்தமிழர்கள், அந் தக் கொடூரத்தின்போது பெரும் மன உளைச் சலையும் அசௌகரியங்களையும் அனு பவித்தார்களாயினும், "இழப்பிலும் நன்மை' என்பது போல இச்சம்பவம் அவர்களுக்கு நல்லதோர் பிரகாசமான எதிர்காலத்துக்கும் வழிகோலியிருப்பதாகச் சுட்டிக்காட்டப் படுகின்றது. இவ்வாறு தலைநகர் விடுதிகளிலி ருந்து விடியற்காலை வேளை, அச்சுறுத்த லுக்கு மத்தியில் பலவந்தமாக வெளியேற் றப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், மேற்கு நாடு ஒன்றுக்குச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து க…
-
- 2 replies
- 1.9k views
-
-
Posted on : 2007-06-18 சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பை தேடிச் சம்பாதிக்கும் அரசுத் தரப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய விட யங்களில் சர்வதேச சமூகத்தைக் கையாளும் இராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ளாமல் கற்றுக்குட்டித்தனத்துடன் நடந்து கொண்டதன் விளைவாக, விபரீதத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் இக்கட்டுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இந்நாட்டின் அரசாங்கம். தான் இறைமையுள்ள தனி அரசு என்ற தான்தோன்றித்தனத்துடன் கொழும்பு செயற்பட்டதன் பெறுபேறு, பெரும் சர்வதேச அழுத்தமாக அதற்கு எதிராகத் திரும்பியிருக்கின் றது. ஒரே சமயத்தில் மேற்குலகின் பல மட்ட எதிர்ப்பையும், கடும் அழுத்தத்தையும், நெருக்குவாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தள் ளப்பட்டிருக்கின்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : Mon Jun 18 8:15:25 EEST 2007 வெள்ளவத்தை பகுதியில் மாணவனைக் காணோம் இரத்மலானை இந்துக் கல்லூரி மாண வனான சிவகுருநாதன் பிரசாந் (வயது18) என்பவர் கொழும்பில் காணாமற்போ யுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டி ருக்கின்றது. கல்கிஸை ரெம்பிளர்ஸ் வீதியைச் சேர்ந்த இவர் கடந்த சனிக்கிழமை காலை வெள்ள வத்தைப் பகுதிக்கு "ரியூசனுக்'குச் சென்றார் என்றும் அதன் பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை என்றும் அவரது தாயாரான சிவ குருநாதன் மலர்விழி கல்கிஸை பொலிஸ் நிலையத்திலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார். இவரை நாங்கள் கைது செய்யவில்லை என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரி வித்தனர். கல்கிஸைப் பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். (சி) உதயன்
-
- 0 replies
- 1.2k views
-
-
அரச படையினருக்கு கடத்தலில் தொடர்பு - யாழ் இராணுவத் தளபதி ஒப்புக்கொண்டார் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களில், சிறீலங்காப் படையினர் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என, யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் ஜி..ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். “நியூயோர்க் ரைம்ஸ்” இதழின் செய்தியாளர் சோமினி செங்குப்தாவிற்கு வழங்கிய செவ்வியில் யாழ் இராணுவத் தளபதி இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். “நியூயோர்க் ரைம்ஸ்” பத்திரிகையின் முன்பக்க செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவங்களை அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக் குழுக்களே மேற்கொள்வதாக முதலில் கூறிய யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் சந்திரசிறி, பின்னர் தமது படையினருக்கும் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என ஒப்புக்கொண்டு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடன்களை மீளச் செலுத்த முடியவில்லை - சிறீலங்காவில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு சிறீலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனம் கடனடிப்படையில் பெற்றுள்ள நிதிகளை மீளச் செலுத்த முடியாத சூழல் தோன்றியுள்ளதால், எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் பெறப்படாது இருப்பதால், எரிபொருள் கூட்டுத்தாபனம் பெற்ற கடன் தொகைகளை மீளச் செலுத்த முடியாது இருப்பதால், மேலதிக கடன் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன. இதனால் பெற்றோலியத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. முப்படைகள், தொடரூந்துத் திணைக்களம், மின்சார சபை, மற்றும் சில அரச அமைப்புக்கள் 28,000 மில்லியன் ரூபாவினை எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
நீதித்துறையில் அரசு தலையீடு - பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு நிர்ப்பந்தம் சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை பதவி விலகுமாறு அரச தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக, உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றியது, ரிறான் அலஸை பிணையில் விடுதலை செய்யதமை போன்ற அரசுக்கு எதிரான தீhப்புகள் சில அண்மையில் வழங்கப்பட்டதால், பிரதம நீதியரசரை பதவி விலக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் பதவிக் காலம் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் முடிவடைய இருக்கும் நிலையில், நீதித்துறையில் அரசின் தலையீடுகள் காரணமாக உரிய காலத்திற்கு முன்னர் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறீலங்காவின…
-
- 1 reply
- 1.2k views
-