ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக அக்கட்சி கூறுகிறது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணா அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பின் தலைவர் கருணா அவர்களுக்கும், அந்தக் கட்சியில் உள்ள பிள்ளையான் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதனால் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பிள்ளையான் அணியின் ஆதரவாளர் எனக் கூறப்படும் சிந்துஜன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. தமது அமைப்பில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது உண்மை எனவும், அவை இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தீர்க்கப்பட்டன எனவும் அந்தக் கட்சியின் சார…
-
- 13 replies
- 3.6k views
-
-
வே.பிரபாகரனின் சர்வதேச பிரசாரத் தலைவர் டி.பிரபாகரன் [17 - May - 2007] அமெரிக்காவில் முன்னைய செய்மதித் தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக இயங்கிவருவதும் வாஷிங்டன் பிரதேசத்தில் அமைந்துள்ளதுமான `இன்ரெல்சற்' (INTELSAT) செய்மதி சேவையின் தலைமை நிருவாக அதிகாரியாகிய பிலிப் ஸ்பெக்ரர் அண்மையில் வாஷிங்டனிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று தூதரக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கம் இன்ரெல்சற் சேவையைப் பயன்படுத்துவதை கடந்த ஏப்ரல் 21, 22 ஆம் திகதி வார இறுதியில் நிறுத்திவிடப் போவதாகக் கூறியிருந்தார். ஆயினும் ஏப்ரல் 22 ஆம் திகதி கடந்து மே 5 ஆம் திகதி வரையில் சுமார் இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் அவ்வாறு `இன்ரெல…
-
- 2 replies
- 3.5k views
-
-
விடைபெற்றார் அன்பரசன் அன்பரசன் தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலத்துக்கும் மேலாக நம்மோடு பணியாற்றி உங்களுக்கு நல்ல தரமான செய்திகளை தருவதில் ஊக்கமுடன் பணியாற்றிய நமது அன்பரசன் இன்றுடன் தமிழோசையிலிருந்து விலகுகிறார். அன்பரசன் பிபிசியிலிருந்து விலகவில்லை, பிபிசியின் ஆங்கிலப்பிரிவுக்கு மாற்றலாகியே செல்கிறார். நம்மோடு பணியாற்றிய கடந்த ஆறு ஆண்டுகளில், அன்பரசன், அன்றாட தயாரிப்புப் பணிகளை திறம்பட செய்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்துதந்துள்ளார் என்பதை நேயர்களாகிய நீங்கள் அறிவீர்கள். 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டகம் , 2004 சுனாமியில் அந்த…
-
- 0 replies
- 944 views
-
-
கொழும்புத்துறை, பாசையூர், அரியாலை கிழக்கு கடற்கரையோரங்களில் உள்ள படைநிலைகளில் இருந்து நேற்று மாலை 7.00 மணியில் இருந்து அதிகாலை வரை கடலை நோக்கி படையினர் பீரங்கித் தாக்குதலையும், சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டதாக இப்பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதை கரையில் படைஅரண்களில் இருந்த படையினர் கண்டதாகவும் இதனால் அச்சமடைந்த படையினர் துப்பாக்கி வேட்டுக்களை கடலை நோக்கி தீர்த்ததுடன் பீரங்கித் தாக்குதலையும் மேற்கொண்டதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றனர். கொழும்புத்துறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபபட்டிருந்த கடற்படையின் இரண்டு படகுகள் நோக்கி கரையில் பாதுகாப்பு அரணில் இருந்த படை…
-
- 2 replies
- 2.2k views
-
-
பதில் காணமுடியாத பல கேள்விகளை கிளப்பியிருக்கும் புலிகளின் விமானத் தாக்குதல்கள் [17 - May - 2007] -காலிங்க செனிவிரத்ன- கொழும்பு, தலைநகருக்குள்ளேயும் சுற்றுவட்டாரங்களிலும் இராணுவ, பொருளாதார இலக்குகளில் விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய பிரிவினைவாத போராளிகளான விடுதலைப்புலிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான தங்கள் போராட்டத்தில் முழுமையான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குப் போதிய ஆற்றல் தங்களிடம் இருப்பதை நடைமுறையில் காண்பித்துள்ளார்கள். ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு நாட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் புதிதாக ஆரம்பிக்கப்ப…
-
- 4 replies
- 2.6k views
-
-
இலங்கையில் இடம்பெற்றிருக்கும் பெருமளவு மனித உரிமை மீறல் சம்பவங்களையும் விசாரிப்பதற்கு தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முடியாது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலாத்காரமாகவோ, விருப்பத்துக்கு மாறாகவோ காணாமல்போகச் செய்யப்பட்ட 5,749 சம்பவங்கள் இதுவரையில் விசாரிக்கப்படாமல் இருப்பதை ஐக்கிய நாடுகள் செயற்குழு கண்டறிந்துள்ளது என்று குறிப்பிடும் அந்த அமைப்பு, இவற்றுள் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்றவை என்றும் தெரிவித்துள்ளது. இவ்வளவு தொகையான மனித உரிமை மீறல் சம்பவங்களையும் விசாரிப்பதற்கு தற்போது இருக்கும் நடைமுறைகளால் முடியாது என்றும் அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச கண்காணிப்பாளர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்களத்தில் இருக்குது ஆனால் சிரந்த தோலுரிப்பு
-
- 4 replies
- 3.2k views
-
-
செவ்வாய் 15-05-2007 04:16 மணி தமிழீழம் மயூரன்ஸ விடுதலைப்புலிகளுடன் அமெரிக்கா நேரடியாக தொடர்பு ஏற்படுத்தியிருப்பின் அது பயனுடையதாக அமைந்திருக்கும் - முன்னாள் அமெரிக்க தூதுவர் 2003 ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கா விடுதலைப்புலிகளுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை பயன்படுத்தியிருப்பின் அது அநுகூலமாக அமைந்திருக்கும் என முன்னாள் அமெரிக்க தூதுவர் திரு.லங்செட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நேரடித்தொடர்பு விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாத’ போக்கில் இருந்து விடுவித்திருக்கக்கூடிய அதேசமயம் அவர்களை வெளிநாட்டு பயங்கரவாத பட்டியலில் இருந்தும் விடுவித்திருக்கும் என்று கூறியுள்ளார். சிறீலங்காவிற்கு பாரிய இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்யாதிருப்பதை சுட்டிக்க…
-
- 4 replies
- 962 views
-
-
புலிகள் இயக்கத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து தமிழர்களின் அமைப்பு என்று இன்று கூறிவிட முடியாது. அதில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். நாட்டில் இன்று கடத்தல் சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளன. இதில் பல்வேறு குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்களை இனங்கண்டு கைது செய்வோம் என்றும் அவர் சொன்னார். அலரிமாளிகையில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து நாட்டின் நிலைவரம் குறித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளுக்குப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
பள்ளியாவத்தை தீவு கடலில் மூழ்கியது 60 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டன [17 - May - 2007] - கே.பி.மோகன் - புத்தளம், கற்பிட்டி பள்ளியாவத்தை தீவு நேற்று புதன்கிழமை மாலை கடலினுள் மூழ்கியுள்ளது. இப் பகுதியில் ஏற்பட்ட திடீர் கடற்கொந்தளிப்பையடுத்தே இந்தச் சிறிய தீவு கடலினுள் மூழ்கியது. இந்த திடீர் அனர்த்தம் காரணமாக பள்ளியாவத்தை தீவில் வாழ்ந்து வந்த 60 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். வாயு மண்டலத்தில் ஏற்பட்டிருந்த அதிக உஷ்ணமும் கடும் காற்றும் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியதாகவும் இது சுனாமி நிலைமை அல்ல. சாதாரண வளி மண்டல அமுக்கம் உருவாகும் போது கடல…
-
- 0 replies
- 2k views
-
-
நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கார் கிளிநொச்சி செல்லும் சாத்தியம் [Wednesday May 16 2007 08:43:48 PM GMT] [virakesari.lk] கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கார் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகின்றது. தூதுவரின் இந்த விஜயம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும் புதிய திருப்பங்கள் எதனையும் இந்த விஜயத்தின் மூலம் எதிர்பார்க்கமுடியாது எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் க…
-
- 0 replies
- 1k views
-
-
அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி] அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த கூறியுள்ளதாவது: தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படும் நிதி உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அதனை நாம் மறந்துவிட்டு நமது வேலையைச் செய்ய வேண்டும். நாம் உதவ…
-
- 11 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்திற்கும் அதிரடிப்பைடயினருக்கும் ஆட்சேர்ப்பு [வியாழக்கிழமை, 17 மே 2007, 05:25 ஈழம்] [க.திருக்குமார்] கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் பெரும் ஆட்சேர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த மாதத்தின் முற்பகுதியிலும் இராணுவத்தின் வான்நகர்வுப் பிரிக்கேட், மற்றும் கவச வாகனப் பிரிக்கேட் ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதிலும் உள்ள நிலையங்களில் ஆட்சேர்ப்பு…
-
- 0 replies
- 867 views
-
-
புலி ஆதரவாளர்கள் மீது தமிழ் நாட்டில் கண்காணிப்பு தமிழ் நாட்டில் இருந்து செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களது நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்களத்தினால் இந்தப் பணி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தமிழ்நாடு பொலிஸ் பணிப்பாளர் நாய கம் டி.முகர்ஜி தெரிவித்தார். ""கியூ பிரிவினர் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 1967ஆம் ஆண்டின், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப் புச் சட்டத்தின் கீழ் சிலரைக் கைது செய்வதற்கான ஆரம்ப வேலைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.'' என்றார் அவர். ஆனால் எந்த அமைப்புக்கள் பொலி ஸாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன என்பதை முகர்ஜி தெரிவிக்கவில்லை. இதேவேளை, விடுதலைப் புலிகள் வசம் உள்ளார்கள் என்று தமிழ்நாட்டுப…
-
- 0 replies
- 789 views
-
-
-
- 7 replies
- 2.7k views
-
-
பாக்கிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்கா படைகளின் தளங்களை நேற்று காலை பாக்கிஸ்தான் புலனாய்வுதுறை, வான்படை ஆகியவற்றை சேர்ந்த மூன்று அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்தாலோசனை நடாத்தியுள்ளார்கள். இவர்கள் உலங்கு வானூர்தியில் தென்மராட்சி வரணி, சாவகச்சேரி வடமராச்சி பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள படைத்தளங்களுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்கள். பதிவு
-
- 2 replies
- 1.6k views
-
-
வான்புலிகள் தாக்குதல் எதிரொலி: சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக அதிகளவான பேனா மைகள் எழுதித் தீர்ந்து விட்டன. ஆனால் இன்று வரை அதற்கான ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வான்படை மற்றும் அதன் ஓடுதளம் தொடர்பாக அரசு தனக்கு தெரியும் என கூறியிருந்தது. அப்படியானால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருந்தது? முதலாவதாக செயற்திறன் …
-
- 1 reply
- 1k views
-
-
வியாழன் 17-05-2007 02:31 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கையில் அமைதிப்போராட்டம் சிறிலங்கா படைகளின் பின்புலத்தில் தென்னிலங்கையில் ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி நேற்று கொழும்பில் தமிழ் - முஸ்லீம் - சிங்கள சமூகங்களை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்ட பொதுமக்களின் உறவினர்களும் அமைதிப்போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். இவ் அமைதிப்போராட்டத்தில் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறீதுங்க விஜயசூரிய, கடந்த ஆண்டு மட்டும் கொழும்பிலும் புறநகர் பகுதியிலும் 140 பொதுமக்கள் கடத்தப்பட்டதாகவும் 18 பேர் சடலமாக மீட்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பதிவு
-
- 0 replies
- 945 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் விமானம் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல். திருகோணமலை கடற்படைத்தளத்தை அண்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானம் ஒன்றை அவதானித்துள்ள சிறிலங்கா கடற்படையினர் உடனடியாக விமானப்படை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இந்த விமானம் பற்றி அறிவித்துள்ளனர். உடனடியாக இந்த விமானம் சிறிலங்கா வான்படையினரது அல்ல என சிறிலங்கா விமானப்படையினர் தெரிவித்தபோது கடற்படையினர் விமானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல்களால் சட்டென உயர பறந்த விமானம் பின்னர் அவசர அவசரமாக விமானப்படை கட்டுப்பாட்டு தலை…
-
- 2 replies
- 1.8k views
-
-
பூசா தடுப்பு முகாமில் "சிங்களப் புலிகளுடன்" சட்டத்தரணிகள் சந்திப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 19:33 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் காலியில் பூசா தடுப்பு முகாமில் உள்ள 13 அரசியல் கைதிகளை 5 சட்டத்தரணிகள் குழு சந்தித்துப் பேசியது. புதிய ஜனநாயக் கட்சி உறுப்பினர் - 5 சிங்களப் புலிகள் என இராணுவத்தினரால் குற்றம் சுமத்தப்பட்ட சிங்களவர்கள்- 7 மற்றும் கிழக்கு மகாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆகியோரை சட்டத்தரணிகள் குழு சந்தித்தது. சட்டத்தரணிகள் இ.தம்பையா, எஸ்.தேவராஜா, மகிந்த ஜயவர்த்தன, திலக் விஜயசிங்க, சிறிநாத் பெரேரா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். புதினம்
-
- 0 replies
- 1.4k views
-
-
பூநகரியில் எறிகணை வீச்சு: பாடசாலை மாணவன் பலி [புதன்கிழமை, 16 மே 2007, 18:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பூநகரி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிளாலி சிறிலங்காப் படை முகாம் பின்தளத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் எறிகணைகள் ஏவப்பட்டன. இந்த எறிகணைகள் பூநகரி - மன்னார் வீதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் குடியிருப்பு மீது வீழ்ந்து வெடித்தன. இதில் பூநகரி கவாக்குளத்தைச் சேர்ந்த சிறீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் கனகரத்தினம் மோகன்ராஜ் என்ற பாடசாலை மாணவனே கொல்லப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 942 views
-
-
புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பைத் தடை செய்ய சிறிலங்கா தீவிர முயற்சி [புதன்கிழமை, 16 மே 2007, 19:22 ஈழம்] [சி.கனகரத்தினம்] அமெரிக்கா வாசிங்ரனில் இயங்கும் இன்ரல்சட் செய்மதி ஊடாக புலிகளின் குரல் வானொலிச் சேவை தொடர்ந்து நடைபெற்று வருவதனை எதிர்த்து சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. இம்முறைப்பாடு தெரிவிக்கப்படு முன்னர் சிறிலங்கா தூதரகத்தின் மூலம் இன்ரல்சட் நிறுவனத்திற்கு புலிகளின் வானொலிச் சேவையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் இவ்வோண்டுகோளை அலட்சியப்படுத்தி விட்டு அது தனது சேவையைத் தொடர்ந்தும் நடத்தி வந்தது. இன்ரல்சட் நிறுவனத்திற்குச் சொந்தமான செய்மதி மூலம் புலிகள் சட்டவிரோதமாக ஒலிபரப்புச் சேவை நடத்தி வருகின்றனர் எனவும் அதற்கு இட…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது. நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துணைபுரிந்த குற்றத்திற்காக கலைப்பீடத்தில் 86 பேருக்கும், முகாமைத்துவப் பீடத்தில் 67 பேருக்கும், மருத்துவ பீடத்தில் 38 பேருக்கும், விஞ்ஞான பீடத்தில் 27 பேருக்கும், சித்த பீடத்தில் 7 பேருக்கும்,…
-
- 13 replies
- 3.7k views
-
-
ஜே.வி.பி.க்கு பிரித்தானிய தூதுவர் அழைப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:46 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையான விமர்சித்து வருவது தொடர்பாக ஜே.வி.பி.யினருடன் விவாதிக்க பிரித்தானிய தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணி நேர விவாதம் நடத்தப்பட்டது. இலங்கைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற குழு பயணம் மேற்கொள்ளும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் அமைதிக் குழுப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானியா நாடாளுமன்றத்துக்கு அழைத்து புலிகளின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுடனான அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவல் உள்ளது: ஐ.தே.க. [புதன்கிழமை, 16 மே 2007, 17:50 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது குறித்து முக்கிய தகவல் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ரூ. 200 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியராச்சி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 1.2k views
-