Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ? கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம் mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv

  2. மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கு கடும் கண்டனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள அகதி முகாம்களையும் சுற்றிவளைத்து வகைதொகையின்றியும் வயது வித்தியாசமின்றியும் படையினர் மக்களை கைது செய்வதை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் சித்தாண்டி கிராமத்தைச் சுற்றி வளைத்த படையினரும் பொலிஸாரும் 27 பேரைக் கைது செய்திருந்தனர். இக் கைதை அடுத்து ஜெயானந்தமூர்த்தி எம்.பி. எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக அவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், இருவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்று முன்தினம் ஏறாவூர…

  3. பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (Social Indicator) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 17 மாவட்டங்களில் வட கிழக்கு மாவட்டங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. (சேர்த்துக் கொள்ளப்பட்ட மாவட்டங்கள்: கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, பதுளை…

    • 0 replies
    • 913 views
  4. கைப் பொம்மை கமலசபேசன் இளைப்பாறுகிறார். http://www.colombopage.com/archive_07/April7150359CH.html

    • 16 replies
    • 2.8k views
  5. யாழில் கிளைமோர் தாக்குதல் - ஒரு இராணுவம் பலி – 6பேர் காயம் யாழ்நகருக்கு வடமேற்காக 12 கிலோமீற்றர் தொலைவில் பண்டத்தரிப்பு வலிகாமம் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் ஆறு சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயமடைந்த இராணுவத்தினருள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. அச் சம்பவம் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்கு அண்மையில் காலை 11.45மணியளவில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. pathivu.com

  6. மறுபக்கம் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல் அதன் உண்மையான பெறுமதியை விட பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இன்னொரு தாக்குதலைக் குறுகிய காலத்தில் ஒரு முக்கிய இராணுவ இலக்கின் மீது தொடுக்க இயலுமா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. எனினும், அரசாங்கத்தின் தயார் நிலை பற்றிய கேள்விகளை அத் தாக்குதல் எழுப்பியுள்ளது. அரசாங்கத்தால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலவில்லை என்று யூ.என்.பி. தலைமை குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. மறுபுறம், யூ.என்.பி. செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் விளைவாகவே விடுதலைப்புலிகளால் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணிக்கவும் விமானங்களைக் கொள்வனவு செய்யவும் இயலுமாயிருந்தது என்று அரசாங்கத் தரப்பிலிருந்து குற்றஞ்சுமத்த…

    • 1 reply
    • 1k views
  7. ஈரம் கசியும் கண்களுடன் ஈழத்தமிழ் அகதிகள்... விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் சிங்கள ராணுவத்தை சின்னா பின்னமாக்கியிருந்தாலும், எதிர்த் தாக்குதலால் பல தமிழ்க் குடும்பங்கள் பரிதாபகர மாகப் பாதிக்கப்பட்டிருப்பது மறக்கமுடியாத சோகம். ‘ஒண்ணு, சாகணும்; இல்ல, சாவோட பயமில்லாம வாழணும். அதுக்கு ஒரே வழி உயிரைப் பணயம் வைத்தாவது தமிழ் நாட்டுக்குப் போறதுதான்’னு பல இலங்கைத் தமிழ் குடும்பங்கள் கடந்த சில தினங்களாக வந்த வண்ணம் உள்ளனர். சாவின் விளிம்புவரை சென்று; உடன்வந்தவர்கள் ஒரு சிலரை காவு கொடுத்துக் கடைசியாக கரை சேர்ந்த அவர்களின் கதை கேட்கவே நடுக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் இரண்டு அகதிகளை நடுக்கடல் திட்டில் பார்த்த தமிழக மீனவர்கள், பரிதாபப்பட்டு படகில் ஏற்றிக்கொண்டு…

  8. சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும் கடந்த 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான (சார்க்) அமைப்பின் 14 ஆவது உச்சி மகாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, உள்ள ஏழு நாடுகளுடன் இம்முறை எட்டாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எட்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கைகோர்த்து நின்ற போதிலும் இந்நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொருவரிடமும் உறைந்திருப்பதை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு பலாபலனையும் எட்ட முடியவில்லை என்பது யதார்த்தமாகும். இவ்வேளை, சா…

  9. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சிய 17 பேரையும் தக்க வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 50 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்க அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஏப்பிரல் 3 ஆம் நாள் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் தொடரூந்து போக்குவரத்து பிரதி அமைச்சர் எட்வேட் குணசேகர மீண்டும் தனது கட்சிக்கு தாவியதை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களை சந்தித்த பசில் ராஜபக்ச, இந்த உடன்பாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த 50 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசா…

  10. பேலியகொடை, கடவத்தை பகுதிகளில் 2 தமிழ் இளைஞர் கடத்தப்பட்டனர் பேலியகொடை மற்றும் கடவத்தை பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வான்களில் வந்தோரால் கடத்தப்பட்டது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்குளியை பிறப்பிடமாகவும் பேலியகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிரதீபன் (23 வயது) என்பவரும், கெலாபோக்கை, கரச்சா மலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான இராமையா ஜெயகாந்தன் (24 வயது) ஆகிய இருவருமே வெள்ளை வான்களில் கடத்தப்பட்டுள்ளனர். பிரதீபன் பேலியகொடை சந்தியில் வைத்து தாக்கப்பட்ட பின் கடத்தப்பட்டதாகவும், ஜெயகாந்தன் கண்டி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த போது கடவத்தை சந்தியில் வைத்து வெள்ளை வானில் வந்தவ…

  11. காணாமல்போனோர் மாநாட்டில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு A] கடத்தப்பட்டு காணாமல்போனோரின் குடும்பத்தவர்களின் மாநாட்டை நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை இலக்கம் 146, கதிரேசன் வீதி வீரமைலன் மண்டபத்தில் நடாத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது என இக்குழுவின் ஏற்பாட்டாளரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; காணாமல்போனோரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களை ஒன்று கூட்டி இந்த பாரிய மனித அவலம் தொடர்பிலான சர்வதேசியத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில…

  12. யுத்த அவலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமாதான சூழலில்தான் விடியல் பிறக்கவேண்டும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை கிறிஸ்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின் உயிர்ப்பு தரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறோம். என திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை விடுத்துள்ள ஈஸ்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில் ஆயர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. மனித வாழ்வில் ஏற்படுகின்ற ஈடுசெய்ய முடியாத சோகம் சாவு; அதுவே வாழ்வில் முடிவு என்ற எண்ணமே இதற்கு காரணம். அந்தச் சாவையே வென்று கிறிஸ்து உயிர்ப்பு அடைந்தார் என்ற செய்தி முழு உலகுக்கும் நம்பிக்கை தரு…

  13. புலிகளின் வான் வழித் தாக்குதலின் எதிரொலி இந்திய கடற்படை துவக்கு சூட்டுப் பயிற்சியில் தீவிரம் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். இராமநாதபுர மாவட்டம் இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கடல்வழிப் பாதை கண்காணிக்கப்பட்டு இது குறித்து இந்திய கடற்படையின் இராமேஸ்வரம் பிரிவு கமாண்டர் முகர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: இராமேஸ்வரத்தில் உள்ள அலுவலகத்திலிருந்து 30 வீரர்கள் தனுஷ்கோடி பகுதி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்படவு…

  14. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த. சாதாரண பரீட்சையில் சாதனை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் வெளியாகிய க.பொ.த. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய 246 மாணவர்களில் 200 பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 10 ஏ சித்திகளை 8 மாணவர்களும் 9 ஏ சித்திகளை 17 மாணவர்களும் 8 ஏ சித்திகளை 11 மாணவர்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். 10 ஏ சித்திபெற்ற மாணவர் விபரம் சிவகுமாரன் ஜனகன், விஸ்வலிங்கம் அருணாத், சண்முகவேல் வித்தியாசங்கர், சிவசேகரம் யதுர்ஷன், நவரத்தினலிங்கம் யதார்த்தனன், தனபாலசிங்கம் ராஜ்குமார், சிறிகாந்தன் ஜினேஷ், ஜெயந்திநாதசர்மா கௌரிநாதன் ஆகிய 8…

  15. யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைளுக்கு பெரும் தட்டுப்பாடு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளினிக்குக்குச் செல்லும் இருதய நோய் மற்றும் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. கிளினிக்குச் செல்லும் மேற்குறித்த நோயாளர்களின் குறிப்பு புத்தகத்தில் வைத்திய நிபுணர்கள் ஆறுவகையான மருந்துவகைகளை எழுதி விட்டாலும் - மருந்தகத்தில் மூன்று வகையான மருந்துகளே வழங்கப்படுகின்றதென்றும் தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்கள் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள் சில 15 நாட்களுக்கு மட…

  16. மீராவோடையில் இளைஞன் சுட்டுக்கொலை வாழைச்சேனை மீராவோடைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இளைஞனொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 7.30 மணியளவில் வீடொன்றுக்குச் சென்ற ஆயுதபாணிகளே அங்கிருந்த இளைஞனை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பி.கோகிலராஜா (21 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் நேற்று வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது thinakkural.com

  17. அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை அரசாங்கம் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் -வன்னி மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கோரிக்கை அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அநியாயமான உயிரிழப்புகளை தடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் - வவுனியா பிதான வீதியில் பிரமனாளங்குளத்திற்கு அருகாமையில் நேற்றுக் காலை பொதுமக்கள் பயணம் செய்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலைக் கண்டித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்ட…

  18. தலைமன்னார் கடலில் படகில் சென்ற மீனவர் மீது துவக்கு சூடு; ஒருவர் பலி தலைமன்னார் கடற்பரப்பில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 32 வயதுடைய மீனவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கண்ணாடியிழைப் படகில்சென்ற மூன்று மீனவர்கள் மீது படகொன்றில்சென்ற இனந்தெரியாத நபர்கள் கடும் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எஸ். நெல்சன் படுகாயமடைந்து கடலில் வீழ்ந்துள்ளார். இதையடுத்து, குறித்த படகில் பயணம் செய்த ஏனைய இரண்டு மீனவர்களும் படகுடன் கரையை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு காயத…

  19. அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்ட…

  20. இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு தீர்வு காண முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் சார்பில் "ஈழத் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும்-தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மனித உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது: இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே அங்கு இனப்பிரச்சினை நீடிக்கிறது. ஈழத்தமிழர்களை சிறிலங்கா அரசு இரண்டாம்தர குடிமக்களாக நட…

  21. நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் தொடர்ந்தும் விசாரணை சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்டபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் தொடர்ச்சியாக 10 மணிநேரம் இவரிடம் விசாரணைகளை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், மீண்டும் நாளை திங்கட்கிழமை (09.04.07) அவரை விசாரணைகளுக்கு அழைத்துள்ளனர். தென்னிலங்கையில் இருந்து வாகனம் ஒன்றை கொண்டு சென்று விடுதலைப் புலிகளிடம் கையளித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்த சிவாஜிலிங்கம், அவர்கள் குற்றம் சுமத்துவது போல எந்த ஒரு வாகனத்தையும…

    • 0 replies
    • 579 views
  22. [06 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * சபையில் சம்பந்தன் வலியுறுத்தல் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கட்டுப்படுத்த இலங்கையரசு தவறிவிட்டதால், உடனடியாக ஐ.நா.கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென வலியுறுத்திய தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான கிழக்கு மாகாணம் முழு வீச்சில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவம் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா. சம்ப…

    • 0 replies
    • 621 views
  23. யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்? யாழ். குடாநாட்டில் படையினரால் நேற்று முதல் பல இடங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்வைபாலம், குடத்தனை, தென்மராட்சி, கெற்பொலி, வரணி, தனங்கிளப்பு, எழுதுமட்டுவாள், மருதங்குளம் பகுதியிலும், நாவற்குளம் அரசடி உணவுக்களஞ்சியம் முன்னும், உள்ள படைமுகாமிலும் படையினரால் இவ்வாயுதங்கள் முதன்முறையாக தற்பொழுது அவசர அவசரமாக நிறுவப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஏ-9 சாலை வழியாக பலாலியில் இருந்து கொடிகாமம் ஊடாக மிருசுவில் கொண்டுவரப்பட்ட அதியுயர் கொண்டைனர்கள் மூன்று குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள் இவ்வாயுதங்கள் விமான எதிர்ப்பு ஆயுதங்களா…

  24. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 85 வீதமானவர்கள் க.பொ.த உயர்வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளிலேயே அதிக மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மேற்படி பாடசாலையின் விடுதி மாணவர்கள் அனைவருமே உயர்வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்பாடசாலை 1983ம் ஆண்டுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தடைக்கற்களை தாண்டி இன்று ஒரு சிறந்த பாடசாலையாக திகழ்வதற்கு பாடசாலை அதிபர் மதனராஜாவின் அயராத முயற்சியே காரணமாகும். வசதி குறைந்த மாணவர்களை அதிகமாக கொண்ட இப்பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுத்து இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிபர் ஆற்றிய சே…

  25. சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் கடற்பரப்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் கப்டன் றெஜி என்றழைக்கப்படும் காலியை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம் என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். திருமலை உப்பாறில் கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற மோதலில் கப்டன் ஈழவேந்தன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகவும் மல்லாவி யோகபுரம் வளநகரை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த மரியதாஸ் அந்தோனி என்ற போராளி வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு ஜீன் மாதம் 20 ம் திகதி வன்னி மாங்குளத்தில் இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரில் வீரவேங்கை வெற்றிவேந்தன் என்றழைக்கப்படும் மலையகம் கண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.