ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
[31 - Mஅர்ச் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நலன்களுக்கேற்ற வக…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் கடும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 23:58 ஈழம்] [க.திருக்குமார்] யாழ்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக கூறிய படையினர் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து தொடர்ந்து 10 மணிநேரங்கள் அவரை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளுக்கு வாகனம் வாங்குவதற்கு உதவிபுரிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மீது பயங்கரவா…
-
- 1 reply
- 760 views
-
-
13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி. மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தாழங்குடாவுக்கும் களுவாஞ்சிக்குடிக்கும் இடையில் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனம் மீது இன்று சனிக்கிழமை மாலை பிற்பகல் 4.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே வவுனியா தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்னர். இத்தாக்குதல் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்றது. இதில் இராணுவ வாகனம் சேதமடைந்ததுடன் இரு இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 671 views
-
-
பளையில் சிறிலங்கா வான்படை வான்தாக்குதல்: 12 வீடுகள் சேதம். பளை இயக்கச்சிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையினரின் கிபீர் ரக வானூர்திகள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் வெளியேறிய நிலையில் இருந்த வீடுகளின் மீது வானூர்திகள் வீசிய குண்டுத் தாக்குதலில் 12 வீடுகள் சேதமாகியுள்ளன. இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து விட்டனர். -Puthinam-
-
- 0 replies
- 868 views
-
-
வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…
-
- 11 replies
- 3k views
-
-
வவுனியா தவசிபுரத்தில் இன்று மதியம் 1.15 மணியளவில் இராணுவத்தினருக்கு உணவுர் பாசல் எடுத்துக் கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கி இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக இராணுவ பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
-
- 0 replies
- 997 views
-
-
விமானத் தாக்குதலும் கட்சி அரசியலும் [31 - March - 2007] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நல…
-
- 0 replies
- 924 views
-
-
மனித உரிமைகள் தொடர்பான குழப்பங்கள் [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்களா? அல்லது உண்மையான …
-
- 0 replies
- 755 views
-
-
விமானப்படைத் தளத்தில் ராடர் கழற்றியதை புலிகளுக்கு அறிவித்தது யார்? [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப…
-
- 0 replies
- 781 views
-
-
விமான குண்டுவீச்சின் உண்மைகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி கட்டுநாயக்க விமானப் படை தளத்தின் மீது விடுதலைப்புலிகள் அண்மையில் மேற்கொண்ட இலகு ரக விமான குண்டுவீச்சு தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மூடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்றது. அதனால் தான் பாராளுமன்றத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிகையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உண்மைகளை மூடி மறைப்பதற்காகவே சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐவர் கொண்ட குழுவை நிமித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது. இவ்விரண்டின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு ஊடகங்கள் மற்றும…
-
- 1 reply
- 892 views
-
-
சனி 31-03-2007 14:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வியாழக்கிழமை கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் தம்பர அமல தேரர் உரையாற்றும் போது கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்திய புலிகள் நாளை அலரி மாளிகை மீதும் தாக்குதல் நடாத்தக் கூடும் எனவே அதற்கு முன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் தாக்குதல்களை மகிந்த ராஜபக்ஸ ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். புலிகளின் விமானத்தாக்குதல்களை எந்த நாடும் இன்னமும் கண்டிக்கவில்லை ஐநா செயலர் நாயகமும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறே தெரிவித்துள்ளார் என அவர் ஆமலும் கவலை வெளியிட்டுள்ளார். நன்றி : பதிவு
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும் [30 - March - 2007] [Font Size - A - A - A] இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும். முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து ஷ்ரீ லங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன. ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன. 1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம். 2. பிரபாகரன…
-
- 15 replies
- 3.8k views
-
-
மந்துவிலில் கைதான இளைஞர் ஏழு மாதங்களின் பின் விடுதலை உயர் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கைது செய் யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தின் கீழ் காவலில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை அடுத்து நேற்று விடு விக்கப்பட் டார். மந்துவில், தாவளையியற்றாலை பகுதி யைச் சேர்ந்த இராஜதுரை சிறிகாந்தன் என்பவரே விடுவிக்கப்பட்டவராவார். வரணியில் சுற்றிவளைப்புச் சோதனையின் போது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இவர் குண்டு வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். …
-
- 0 replies
- 986 views
-
-
மோதல்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கில் சிறுவர்கள் மிக மோசமாக பாதிப்பு மோதல்கள் தீவிரமடைந்துள்ள கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள சி.சி.எப்.எனப்படும் சிறுவர்களுக்கான கிறிஸ்தவ நிதியம், இடம் பெயர்ந்துள்ள சிறுவர்கள் நிறைகுறைவுக்கும், போசணைக்குறைபாட்டு நோய்க்கும் ஆளாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக சிறுவர்களுக்கான கிறிஸ்தவ நிதியத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இலட்கணக்கான மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன…
-
- 0 replies
- 870 views
-
-
இராணுவத்தினர் ஷெல்வீச்சு தாக்குதல்களை நடத்திவிட்டு எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியில் துறைப்பொறுப்பாளர் சீராழன் கருத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளின் மீது இலங்கை இராணுவத்தினர் ஷெல்வீச்சு தாக்குதல்களை நடத்தி விட்டு எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியில் துறைப்பொறுப்பாளர் சீராழன் கருத்து மேலும் கூறியதாவது: இராணுவத்தினர் மக்களின் குடியிருப்பு பகுதிகளின் மீது கடந்த சில தினங்களாகவே தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஒரு கட்டமாகவே நேற்றைய தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறா…
-
- 0 replies
- 923 views
-
-
வாக்குறுதிகளை வாரி வழங்கி ஏமாற்றும் வேலை தொடர்கிறது ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப் படுகின்றமை குறித்து, சர்வதேச அமைப்புகள் மற் றும் உலக நாடுகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரு கின்றன. ஆனால் அவை எல்லாம் "புறக்குடத்து நீராக', "செவிடன் காதில் ஊதிய சங்காக' வீணானமைதான் மிச்சம். களத்தில் எந்த முன்னேற்றமுமே இல்லை. அவலங்கள், அபத்தங்கள் கட்டுமட்டின்றித் தொடர் கின்றன. அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களினால் சிறு வர்கள் பலவந்தமாக மடக்கிப்பிடிக்கப்பட்டு அக் குழுக்களின் படைகளில் இணைக்கப்படுகின்றமை குறித்தும், அந்த நடவடிக்கைகளில் அரசுத்தரப்பின் பங்களிப்புக் குறித்தும் மீண்டும் வெளிச்சம் போட் டுக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயோர்க் கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ம…
-
- 0 replies
- 961 views
-
-
யாழில் தாக்குதலுக்கு அஞ்சி நடந்தே படைமுகாம்களுக்கு படைமாற்றம் செய்யும் படையினர் யாழில் படையினரின் தொடரணி வாகனங்கள் கிளேமோர்த் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக தொகுதி தொகுதியாக படையினர் நடந்தே படைமுகாம்களுக்கான மாற்றத்தை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். தென்மராட்சி கிழக்குப் பிரதேசங்களில் உள்ள படைமுகாம்களுக்கான விநியோகமார்க்கங்கள் படையினர் செல்லும் பாதைகள் அனைத்தும் பூரண படைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் எந்தவேளையிலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக தற்பொழுது படையினர் இரவு வேளைகளில் பிரதானசாலைகளை தவிர்த்து உட்பாதைகள் ஊடாக பயணம் மேற்கொள்கின்றனர். வரணியில் இருந்தும் எழுதுமட்டுவாள், உசன் பிரதேசங்களில் இருந்தும் கச்சாய், கோய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் படையினர் அட்டூழியம் - கூட்டமைப்புஎம்பிக்கள் படையினருடன் வாக்குவாதம கொழும்பில் இருந்து வன்னிநோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பயணம் செய்த வாகனம் சிறிலங்காப் படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் தமது சொந்தத் தேவைகளுக்கா கொண்டுவரப்பட்ட 30 லீற்றர் டீசல் படையினர் மேற்கொண்ட அட்டகாசத்தில் வீணாக தரையில் தட்டிக்கொட்டப்பட்டது. இதையடுத்து படையினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.. பின்னர் படையினர் மன்னிப்புக்கோரியதாகவும் தமது மேலிடத்து உத்தரவின்றி எரிபொருளை எவரும் கொண்டுசெல்ல முடியாது எ…
-
- 0 replies
- 991 views
-
-
விமானத்தாக்குதலை அடுத்து இப்பார்வையை காண்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
Sri Lanka shells kill civilians - BBC Eight civilians have been killed by mortar fire on villages in Batticaloa, eastern Sri Lanka. The Sri Lankan military blamed Tamil Tiger rebels for the attacks, saying two children were among the dead and 18 other people were wounded. The Tigers said the army fired the shells from a military camp. Despite a ceasefire in place on paper, Sri Lanka has been sliding back towards civil war, with more than 4,000 people killed in the past 15 months. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6509261.stm
-
- 9 replies
- 1.9k views
-
-
எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒரு போதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப. தமிழ்ச்செல்வன் [வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 09:42 ஈழம்] [புதினம் நிருபர்] எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் …
-
- 6 replies
- 1.7k views
-
-
வெள்ளி 30-03-2007 23:01 மணி தமிழீழம் [மயூரன்] வான்தாக்குதல் சிறீலங்கா வான்படைக்கு ஒரு எச்சரிக்கையே - தமிழ்ச்செல்வன் வான்தாக்குதல் சிறீலங்கா வான்படைக்கு ஒரு எச்சரிக்கையே - தமிழ்ச்செல்வன் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் நேற்று ஊடகங்களுக்கு விடுதலைப்புலிகளின் வான்வழித்தாக்குதல் தொடர்பில் தெரிவிக்கையில் கருத்துத் தெரிவிக்கையில் ‘இத் தாக்குதலானது 100 வீதமும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இது சிறீலங்கா அரசுக்கு தமிழர் தாயகம் மீதான குண்டுதாக்குதல்களை நிறுத்துவதற்கான தெளிவான செய்தியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்’. தமிழர் தாயகங்களில் கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது இருதடவையாவது வான்வழித் தாக்குதல்களை 90 நாட்களுக்கு…
-
- 2 replies
- 881 views
-
-
[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 19:41 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னியில் இரண்டு வீரவணக்க நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. லெப். கேணல் கனிவாளனின் வீரவணக்க நிகழ்வு லெப். கேணல் கனிவாளனின் வித்துடல் புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 23 டோறாக்களைக்கொண்ட அணிக்கு எதிராக சமரிட்டு, அவற்றில் இரண்டை சேதமாக்கி அந்த அணியை திருகோணமலை துறைமுகம் வரை விரட்டியடித்த தாக்குதலில் வீரச்சாவைத் தழுவியவர் லெப். கேணல் கனிவாளன். இந்நிகழ்வில் பொதுச்சுடரை விநாயகம் ஏற்றினார். வித்துடலுக்கு லெப். கேணல் கனிவாளனின தாயார் ஈகச்சுடரேற்றி மாலை அணிவித்தார். …
-
- 1 reply
- 795 views
-
-
மன்னிக்கவும் இந்த இணைப்பு முதலே பதியப்பட்டுவிட்டது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=21334
-
- 0 replies
- 837 views
-