ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் கைதிகளில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடம் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. தங்களை விசாரணை செய்ய வேண்டும் அல்லது விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை முதல் 20 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் உண்ணாவிரதிகளில் ஐவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை…
-
- 0 replies
- 670 views
-
-
கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தினரின் இரண்டாம் கட்ட இராணுவ நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்க இருபதாக சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்துள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கிய இராணுவ நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா திருமலை படுவான்கரை மற்றும் தொப்பிக்கல பகுதிகள் நோக்கியே இவ் ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் இப்பொழுது அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விடுலைப் புலிகளினால் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள சிங்கள புலிகளுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவர்களே தென…
-
- 3 replies
- 1.3k views
-
-
வவுனியா போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டது. வவுனியாவில் உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தை திடீரென மூடிவிடும்படி அறிவுறுத்தல் விடுத்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமைச் செயலகம், அங்கு கடமையிலிருந்த ஊழியர்கள் அனைவரையும், வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளது. இத்திடீர் அறிவிப்பு குறித்து வவுனியா சிறிலங்கா காவல்துறையினரிடம் வினவியபோது, தமக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இது தொடர்பாகக் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு திடீரென அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்ற கண்காணிப்புக் குழுவினர், பின்னர் தாங்களாகவே வந்து பொறுப்பேற்றுக் கொண்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் இன்று காலை முதல் கோண்டாவில், தாவடி, இணுவில், தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் பகுதிகள் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தேடதலுக்கு உட்படுத்தப்பட்டது. ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் காலையில் 6.00 மணியளவில் வீடு வீடாகச் சென்று இராணுவத்தினர் சோதனையிட்டதுடன் இளைஞர் யுவதிகளின் அடையாள அட்டைகளையும் வாங்கிச் சோதனையிட்டார்கள். காலையில் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழில் நிலையங்களுக்குச் சென்றவர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாத நிலமை காணப்பட்டது. வீதிகளினால் சென்ற இளைஞர் யுவதிகளும் கூட இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் உடற் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
-
- 2 replies
- 1.1k views
-
-
-க.வே.பாலகுமாரன்- தமிழர் தாயகத்தின் தென்பகுதி சிறிலங்காவுடன் நீண்ட தரை எல்லையைக் கொண்டிருப்பினும், இலங்கைத் தீவைச் சூழவுள்ள கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இலங்கைத் தீவில் 1770 கிலோ மீற்றர் நீளமான (தீவுகள் நீங்கலாக) கரையோரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர் தாயகப் பகுதிக்குள் உட்பட்ட தாகவுள்ளது. அத்தோடு, தமிழர் தாயகத்தின் பெரும்வளம், கடற்பிராந்தியத்திலேயே உள்ளது. இன்றைய நிலையில் பெட்ரோலியப் படிமங்களில் இருந்து பெரும் மீன் வளம் வரையில் - அதாவது கனி வளத்திலிருந்து உயிரியல் வளம் வரையிலான பெரும்வளம் கடற்பரப்பிலேயே கொட்டிக்கிடக்கின்றது. இவற்றை நீண்ட காலமாக அனுபவித்து வரும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இன்று அவற்றைத் தம…
-
- 0 replies
- 908 views
-
-
http://www.maalaisudar.com/index.shtml
-
- 1 reply
- 1.4k views
-
-
கற்பிட்டி கடலில் இரு மீன்பிடி படகுகள் அழிப்பு, 9 பேர் பலி சனி 24-02-2007 09:43 மணி தமிழீழம் [சிறீதரன்] நேற்று முன்தினம் கற்பிட்டி பத்தனைக்குண்டு வடகடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட இருமீனவப்படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறீலங்கா கடற்படையின் பேச்சாளரின் கருத்துப்படி சந்தேகத்திற்கிடமான இவ் இருபடகுகளில் ஒருபடகில் மூன்று பேரும் மற்றய படகில் ஆறுபேரும் இருந்ததாக தெரியவருகிறது. சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட இத்தாக்குதலில் ஒருபடகு தீப்பற்றி எரிந்ததாகவும் மற்றயது நீரில் மூள்கியுள்ளதாகவும் அவர்களது செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது. இதேவேளை இவர்கள் நேற்றும் கற்பிட்டி கடற்பரப்பில் தேடுதல்…
-
- 4 replies
- 1.8k views
-
-
இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் தொப்பிகல பகுதியின் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் இராணுவ பேச்சாளர் தொப்பிகல பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக பொதுமக்கள் எவரும் வருகை தரவில்லை. எனினும் புலிகள் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் தொப்பிகல மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் எஸ்.ஏ.பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தொப்பிக…
-
- 3 replies
- 2.2k views
-
-
தீர்வுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம -க.வே.பாலகுமாரன்- பெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்;பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும். இம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் (டீழசளை வுயனiஉ) கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் (குயவஅசை ளநதனரை) கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். (ஆயசவவi யாவளையயசi) தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா இராணுவம் முன்னரங்க நிலைகளில் இருந்து எறிகணைத்தாக்குதல் சனி 24-02-2007 09:20 மணி தமிழீழம் [சிறீதரன்] தென்மராச்சி முன்னரங்க நிலைகள் மற்றும் முகமாலையை அண்டிய பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி சிறீலங்கா இராணுவத்தினர்பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை கடந்த வியாழக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார்கள். தென்மராச்சியில் குடிசார்தகவலின்படி இத்தாக்குதலானது வெள்ளிக்கிழமை இரவு வரை நீடித்துள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி மற்றும் எறிகணைத்தாக்குதல்கள் பூநகரி மற்றும் விடுதலைக்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையேபரப்பகுதிகளிலும் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. முன்னரங்க நிலைகளில் எறிகணை வீச்சு பரிமாற்ற மோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு என அறிவிப்பு. கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியர் தங்கியிருக்கும் கட்டட அறையின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது என பலாலி நடவடிக்கைத் தலைமையகம் நேற்றிரவு விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் ஒன்றின் பேரில் ஊரெழு படை முகாமினர் மேற்கொண்ட தேடுதலில் இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டது என்று படைத் தரப்பினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கல்வியைச் சீர்குலைப்பதற்காக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இச் சம்பவமும் ஒன்று என படைத்தரப்பின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. -Uthayan-
-
- 0 replies
- 878 views
-
-
சென்னை, பிப். 23: விடுதலைப் புலிகளுடன் ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவை கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தைத் தரும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக்…
-
- 2 replies
- 2.1k views
-
-
வெள்ளி 23-02-2007 22:19 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ்ச்செல்வன் ஜோவான வான் ஜேர்ப்பன் சந்திப்பு இலங்கைக்கான யுனிசெவ் அமைப்பின் தலைவர் ஜோவான வான் ஜேர்ப்பன் (Joanna Van Gerpen) அவர்கள் கிளிநொச்சி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது விடுதலைப் புலிகளின் அரசியற்துறை நடுவப் பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றை சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலன் பேண் பிரிவின் விடேச பிரதிநிதி அலன் ரொக்கின் அறிக்கை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக விடுலைப் புலிகளின் சமாதானச் செயலகம் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை படையில் சேர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சனி 24-02-2007 02:27 மணி தமிழீழம் [மயூரன்] மன்னார் அரச அதிபர் விவசாயிகளின் போக்குவரத்து பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள விவசாயிகள் தமது அறுவடைத் தானியங்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியல் கொண்டு சென்று நல்ல விலையில் விற்பனை செய்வதில் பலசிரமங்களை எதிர்கொள்கின்றனர். உயிலங்குளம் சோதனைச் சாவடி கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் சிறீலங்கா இராணுவத்தால் மூடியதையடுத்து விவசாயிகள் அறுவடைக்கு தேவையான பொருட்கள் மற்றும் அறுவடை செய்த பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதுதொடர்பில் சந்திப்பினை மேற்கொண்ட மன்னார் மாவட்ட அரச அதிபர் இவ்…
-
- 0 replies
- 667 views
-
-
சனி 24-02-2007 01:59 மணி தமிழீழம் [மயூரன்] யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர் கத்திக்குத்தில் பலி மன்னார் பரப்புக்கண்டல் பகுதியில் யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வரும் தமிழ் இளைஞரின் உடலமானது நேற்று வெள்ளிக்கிழமை காலை பாலைக்காட்டு சந்தி நானாட்டான் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் 26 அகவையுடைய மரியதாஸ் கிரிதாஸ் என இனம்காணப்பட்டுள்ளார். இனம் தெரியாத நபர்கள் இவரை கடத்தியுள்ளதாகவும் பின் கூரான ஆயுதங்களால் கழுத்திலும் மார்பிலும் குத்தி பாலைக்காடு சந்தியில் போட்டுச் சென்றுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் காவல்துறையினர் இவரது உடலத்தை மன்னார் பொதுவைத்தியசாலையில் கையளித்துள்ளனர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 2.1k views
-
-
'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்] "பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." இவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம்: றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவ…
-
- 7 replies
- 1.8k views
-
-
களுவாஞ்சிக்குடியில் கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று வெள்ளிக்கிழமை சந்தைக்கு சென்று கொண்டிருந்த பளுகாமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அசோக் (வயது 27) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார் -Puthinam-
-
- 1 reply
- 953 views
-
-
www.maalaimalar.com
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை முன்வைத்தால் அரசுக்கு ஆதரவு வழங்கத்தயார்: த.தே.கூ. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்குமானால் அமைச்சுப் பொறுப்புக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறினார். அமைச்சுப் பதவியென்ற எலும்புத்துண்டுகளுக்கு ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசைப்படவில்லையென, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமரர் நடராஜா ரவிராஜின் அனுதாபப் பிரரேணையில் உரையாற்றும் போது கிஷோர் குறிப்பிட்டார். எம்முடன் பல முறை பேச்சுக்களை நடத்தி…
-
- 0 replies
- 793 views
-
-
நாய்களை கட்டி வைக்கலாம், மனிதரை முடியுமா?' [23 - February - 2007] [Font Size - A - A - A] * மேலும் 6 ஐ.தே.க.எம்.பி.க்கள் அரசில் இணைவது உண்மையா என்ற கேள்விக்கு ஜோன்ஸ்டனின் பதில் -ப.பன்னீர்செல்வம்- நாய்கள் என்றால் கட்டி வைத்து பாதுகாக்கலாம். ஆனால், மனிதர்களை கட்டி வைத்து பாதுகாக்க முடியுமா? என கேள்வி எழுப்புகின்றார் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் 6 பேர் அரசாங்கத்துடன் இணையப் போவது உண்மையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விளக்கத்தை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி. வழங்கினார். நாம் மனிதர்களுடனேயே அரச…
-
- 7 replies
- 1.8k views
-
-
`தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை' [23 - February - 2007] [Font Size - A - A - A] * ஐ. தே.க.வுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர் முறித்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் ரணில் -ஏ.ரஜீவன்- அரசாங்கத்திடம் இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகள் எதுவுமில்லை என குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார். கொழும்பில் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான விருப்பம் இல்லாததாலேயே ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை முறித்ததாக குற்…
-
- 1 reply
- 948 views
-
-
மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் -கே.பி.மோகன்- கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பு: கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது. இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப…
-
- 3 replies
- 2.1k views
-
-
மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது -பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர். எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்ப…
-
- 4 replies
- 1.3k views
-