ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடலுக்குள் அனுமதியா? போராடத் தயாராகும் யாழ் மீனவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் சிறு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கின்றமை தொடர்பில் வெளியான செய்தி குறித்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது – செல்வம் யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எவ்விதத்திலும் உடன்பட முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தெல்லிப்பழையில் எரிக்க முடியாது எனவும் வரும் காலங்களில் வவுனியாவில் எரிப்பதற்கான முடிவை வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்…
-
- 5 replies
- 740 views
- 1 follower
-
-
வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை: விசாரணைகளை மேற்கொண்டு உடனடி அறிக்கைகோரும் நீதிமன்றம்! Published By: DIGITAL DESK 5 21 FEB, 2023 | 11:54 AM ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, உடனடியாக நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது. …
-
- 3 replies
- 662 views
- 1 follower
-
-
யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு நாட்டின் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்று யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வரும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யானைக் கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் மருத்துவர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளுடன் வீடுகளுக்கு வருகை தருவார்கள் என்றும் பணிப் பாளர் குறிப்பிட்டார். கொ…
-
- 0 replies
- 667 views
- 1 follower
-
-
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர்? தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கோரியுள்ளதாகவும் சன்ன ஜயசுமண ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். “பிரதமர் பதவியை மாற்றுவதற்கான நகர்வுகள் இருப்பதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். தினேஸ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க உத்தேசித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்” என்றார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக நேர…
-
- 2 replies
- 450 views
- 1 follower
-
-
”மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது”; சிறீதரன் ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் முதன்மை காரணராக இருக்கின்றார். குறிப்பாக 94 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை யாழ். மாவட்டத்திற்கானதை தீவகத்திற்குள் முடக்கி, அத்தேர்தலில் மற்றவர்களை வாக்களிக்…
-
- 0 replies
- 323 views
-
-
இராணுவ பிரசன்னம் ; இரவு வேளைகளில் இடம்பெறும் கட்டுமான பணிகள் ; குருந்தூர் மலைக்கு இரவு வேளையில் திடீர் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் Published By: DIGITAL DESK 5 27 FEB, 2023 | 09:48 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய ந…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கத்திடம் கொடுக்கத் தயார் – நாமல் தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகாண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும்…
-
- 0 replies
- 404 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. இதற்கமைய, மார்ச் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் ம…
-
- 0 replies
- 178 views
-
-
நீதிமன்ற உத்தரவினையும் மீறி மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்பு! நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பகுதியாக காணப்படும் மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் நிலைமைகளை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிக்கு கள விஜயத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளா…
-
- 0 replies
- 176 views
-
-
20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டுக்கு ! இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடையுள்ளது. முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்படவுள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2023/1325437
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
புத்தூர் நிலாவரையில் திடீரென தோன்றிய புத்தர் சிலை; எதிர்ப்பினால் அகற்றம் புத்தூர், நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. நேற்று இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே இதை அமைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அகற்றப்பட்டது. இந்தப் பிரதேசம் அதிகளவில் தென் பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/241981
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ள கட்டணத்தைச் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிக மின் கட்டணம் காரணமாக, நுகர்வோர் ஏற்கனவே மின் சாதனங்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
விலையும் இன்றி விளைச்சலுமின்றி திண்டாடும் மன்னார் விவசாயிகள் மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூடை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூடை விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பை கடவை, விடத்தல் தீவு, ஆட்காட்டிவெளி, கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் மஞ்சள் நோய் தாக்கம், போதியளவு நீர் உரிய நேரத…
-
- 0 replies
- 268 views
-
-
எல்லை நிர்ணய சபையின் அறிக்கை செவ்வாயன்று பிரதமரிடம் கையளிப்பு! தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி இடம்பெற்றுள்ளது. இதற்காக மாவட்ட ரீதியாக சென்று தகவல் பெறப்பட்டுள்ளதாக தேசிய எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். https://athavannews.co…
-
- 0 replies
- 624 views
-
-
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானமில்லை – தினேஷ் விளக்கம் ! தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தக் கட்சியும் கோரவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜ்பஸ்கஹ்விற்கு பதவியை வழங்க வழிவகை செய்யும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஆதரவளிக்…
-
- 0 replies
- 344 views
-
-
பாண்டிச்சேரிக்கான படகு சேவை : KKS அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் திட்டம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுங்கம் மற்றும் குடிவரவுத் துறையினருக்கான வசதிகளும் மார்ச் மாத இறுதிக்குள் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பயணிகளை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும், புறப்படுவதற்குமான சேவையை வழங்குவதற்கு படகுகள் உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் சர்வதேச தரத்தை…
-
- 0 replies
- 397 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை இழுத்து மூடுவோம் – வியாழேந்திரன் எச்சரிக்கை! மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீங்களாக இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மகிழடித்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எனது பிரத்தியோக செயலாளர் இந்த மாவட்ட மக்களது ஒரு வாழ்வாதார உதவி திட்டத்தை எனது அமைச்சின் ஊடாக செய்வதற்கான ஒரு அனுமதி கடிதத்தை வாங்க சென்ற போது மாவட்ட அரசாங்க அதிபர் 2015 தொ…
-
- 0 replies
- 270 views
-
-
சவேந்திர சில்வா சரியாக கடமையை செய்யவில்லை- கர்ணகொட அறிக்கை! கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டத் தளத்திற்குள் நுழைந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க முப்படைகளின் பாதுகாப்புப் பிரதானி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல்வேறு நபர்களினால் பிரதிவாதிகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன, கோகில குணவர்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட 39 பேர் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும…
-
- 0 replies
- 241 views
-
-
இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க இந்தியா - இலங்கை இடையே இணக்கம் Published By: DIGITAL DESK 5 25 FEB, 2023 | 04:41 PM (நமது நிருபர்) இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புதுடில்லியில்இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன. இதன்போதே, இருதரப்பு பயிற்சி…
-
- 1 reply
- 570 views
- 1 follower
-
-
கீழ்த்தர அரசியல் வேண்டாம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீதி அமைச்சர் எச்சரிக்கை தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் எவரும் அரசியல் நடத்தக்கூடாது என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம், தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் இன்னும் 29 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தண்டனை விதிக்கப்பட்டவர…
-
- 0 replies
- 277 views
-
-
ஜெனிவா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்: இலங்கை தொடர்பிலும் அவதானம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவ…
-
- 0 replies
- 141 views
-
-
ஜனவரி - ஜூன் மாதம் வரை மனிதாபிமான உதவிகளை வழங்க 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியம் - உலக உணவுத்திட்டம் Published By: T. SARANYA 26 FEB, 2023 | 11:01 AM (நா.தனுஜா) உலக உணவுத்திட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 636,125 பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருப்பதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் வரையான 6 மாதகாலத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியமென மதிப்பிட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அ…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
இராணுவ மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 5 25 FEB, 2023 | 05:02 PM உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அதிகளவான மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுகாதாரத் துறைக்கு அதிக…
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
யாழ்.ஊர்காவற்றுறையில் வயோதிப அக்கா, தங்கை உட்பட மூவர் சடலங்களாக மீட்பு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இன்று இருவேறு இடங்களிலிருந்து மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வயோதிபச் சகோதரிகள் இருவர் எரிந்த நிலையில் இன்று முற்பகல் அவர்களது வீட்டுக்காணி ஒன்றிலிருந்து சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தை அண்மித்த பகுதியான சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய இருவரும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை,ஊர்காவற்றுறை அக்கா தங்கை குளத்தில் ஆணொருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளளது. ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே சடலம…
-
- 0 replies
- 733 views
- 1 follower
-