ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142748 topics in this forum
-
பயணிகள் பஸ் குண்டுவெடிப்பை தொடர்ந்து இராணுவம், பொலிஸ் தீவிர தேடுதல்; 24 பேர் கைது [07 - January - 2007] [Font Size - A - A - A] நித்தம்புவ, கலல்பிட்டிய 24 ஆம் கட்டையடியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஐவரை பலி கொண்ட தனியார் பஸ் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட்டாக அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் 19 பேரும் முஸ்லிம்கள் நால்வரும் சிங்களவர் ஒருவருமே கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட
-
- 0 replies
- 823 views
-
-
யாழ்ப்பாணத்தில் போல் பொயின்ற் பேனை 250 ரூபா, பென்சில் 100 ரூபா: பெரும் பரிதாப நிலையில் மாணவர்கள். யாழ். குடாநாட்டில் பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் அங்கு ஒரு குமிழ்முனைப் பேனா 250 ரூபாவாகவும் பென்சில் ஒன்று 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர். குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு சுமார் ஐந்து மாதங்களாகும் நிலையில் அங்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புத்தாண்டு பிறந்து முதலாம் தவணைக்கான பாடசாலைகளும் ஆரம்பமாகியுள்ளன. எனினும், மாணவர்களுக்குத் தேவையான எழுது கருவிகளும் கொப்பிகளும் இல்லாது மாணவர்களும் பெற்றோரு…
-
- 0 replies
- 721 views
-
-
ஆழஊடுருவும் அணியை வழிமறித்து விடுதலைப்புலிகள் தாக்குதல் - ஒருவர் கயம். வவுனியா நாவற்குளம் ஊடாக ஊடுருவ முயன்ற சிறிலங்காப்படையினரின் ஆழஊடுருவும் அணியை வழிமறித்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவ உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மதியம் 12.00மணியளவில் நாவற்குளம் உடாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஆழஊடுருவும் அணியினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். -Sankathi-
-
- 0 replies
- 1k views
-
-
[06 - January - 2007] [Font Size - A - A - A] முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன் கடந்த சனிக்கிழமை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து 13 அரசியல் கட்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தன. மருதானை முஸ்லிம் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்குப் பிறகு சதாம் ஹுசெய்னுக்கான ஜனாசா தொழுகை நடத்தப்பட்டதையடுத்து ஆரம்பித்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்கத் தூதரகம் வரை ஆக்ரோஷமாகக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்றனர். இறுதியில் பேரணியை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகளின் சார்பில் அமெரிக்கத் தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அறவிப்பதற்காக கடந்த புதன்கிழமை அச…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும். 1987 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிகக்கைக்கமைய வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் இணைக்கப்பட்டிருப்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இந்தியா கேட்டுக்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார். அண்மையில் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த மாவை சேனாதிராஜா, இதற்கான உறுதிமொழி தமக்கு இந்தியப் பிரதமரால் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…
-
- 0 replies
- 730 views
-
-
அரசு - ஐ.தே.க. உடன்படிக்கை: எந்தவித நன்மையும் இல்லை என்று மக்கள் விசனம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கையினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று மக்கள் விசனமடைந்துள்ளதாக கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கரு ஜயசூர்யவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மகிந்தவிடம் கரு ஜயசூர்ய இதனை தெரிவித்தார். கருவின் கூற்றுக்கு பதிலளித்த மகிந்த, அரசுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி செயற்பட தீர்மானித்தற்காக மக்கள் ஒருபோதும் மனம் வருந்த மாட்டார்கள். ஓன்றிணைவது மட்டுமன்றி ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்தது. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்று அவர் தெரிவித்து…
-
- 0 replies
- 628 views
-
-
ஒரு உண்மை மனிதன் பற்றிய நினைவுப் பகிர்வு. உலகத் தமிழர்களைச் சோகத்திற்கும் பேரதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய நிகழ்வு டிசம்பர் 14ம் திகதி லண்டனில் நிகழ்ந்தேறியது. கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இயற்கையெய்திய செய்தியே அந்நிகழ்வாகும். இச்செய்தியின்பின் உலகத் தமிழினமே ஒன்றுதிரண்டு அவருக்கு தமது இதய அஞ்சலியை தெரிவித்தது. அவரை வாழ்நாளில் கண்டிருக்காதவர்கள்கூட அவரது இழப்பால் உறைந்து போனர்கள் அந்தளவிற்கு உலகத்தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாலாண்ணா தனது ஆளுமையாலும் முன்னுதாரண வாழ்க்கையாலும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். இந்தப் பெருந்தகையோடு நேரிலே பேசிப் பழகி வாழக்கிடைத்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலே ஆறுதல் அடைய முற்படுகின்றேன். பாலாண்ணா துறவு நில…
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பூரில் அனல் மின் நிலையம்: இந்தியா முற்றாக நிராகரித்தது. இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை சம்பூரில் அனல்மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கத்தை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. திருகோணமலை சீனன்குடாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று இடங்களைத் தவிர்த்து வேறு இடமொன்றில் அனல்மின் நிலையத்தை அமைக்கும் யோசனைக்கு இந்தியா உடன்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும், சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து திருகோணமலையில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பான யோசனை, ரணில் வ…
-
- 1 reply
- 1k views
-
-
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல். சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கணனிப் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பல அதிகாரிகள் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர். கடவுச்சீட்டுப் பெயர்களை பதிவும் செய்யும் மற்றும் வெளிநாடு சென்று திரும்புபவர்களின் விவரங்களை பதியும் அதிகாரிகளுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. -Puthinam-
-
- 0 replies
- 729 views
-
-
நிபுணர் குழுவின் "ஏ" அறிக்கை கைவிடப்பட்டது. இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சமர்ப்பித்த "ஏ" அறிக்கை முழுமையாகக் கைவிடப்பட்டு, நிபுணர் குழுவில் அங்கம் வகிப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு வகையான அறிக்கைகளை உள்ளடக்கி அமைச்சர் திஸ்ஸ விதாரன "தனிப்படத் தயாரித்த" ஆவணமே நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என்.சொக்சி மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் அக்கட்சியின் சார்பில் கலந்துகொண்டு இன நெருக்கடி…
-
- 0 replies
- 798 views
-
-
குண்டுகளால் குதறப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை. - ஜெகன் அன்ரனிஸ்ரெல்லா, படகுத்துறை மன்னார் - பண்டார வன்னியன் Saturday, 06 January 2007 15:53 சங்கதி கிளிநொச்சி பொது மருத்துவமனையின் படுக்கையில் இருந்து அழுதுகொண்டிருக்கின்ற இந்தப் பெண் யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த ஜெகன் அன்ரனிஸ்ரெலா (26) கடந்த இரண்டாம் திகதி மன்னார் இலுப்பைக்கடவை படகுத் துறையில் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் தனது குடும்பமே சிதைந்துபோன நிலையில் பேதலித்துப்போயிருக்கிறார் ஸ்ரெல்லா. இவருக்கு முழங்காலில் காயம் பட்டிருக்கிறது. இவரது கணவன் அந்தோனிப்பிள்ளை ஜெகன் (26) கால் ஒன்றை இழந்து இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரெல்லாவின் அருகிலே படுத்திருப்பது அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அவசரகாலச்சட்ட விதிகளில் முறையான திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே பாராளுமன்றத்தில் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம்[சனிக்கிழமை, 6 சனவரி 2007, 08:30 ஈழம்] . அவசரகாலச்சட்ட விதிகளில் முறையான திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே குறித்த சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்க முடியும் என்று தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள அமுலாக்கும் சரத்துக்களை கொண்டிருப்பதாக …
-
- 2 replies
- 1.6k views
-
-
குண்டு வெடிப்புகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்புமில்லை: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன். கொழும்பு புறநகர் பகுதியிலும் காலியிலும் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் எந்த விததொடர்பும் இல்லை என புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களிற்கு புலிகளே காரணம் என்று சிறீலங்கா அரசு குற்றம் சாட்டி வருகின்றது இதில் எந்த உண்மையும் இல்லை புலிகளிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் எந்த விதஆதாரங்களும் அற்ற நிலையில் இவ்வாறன குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசு முன்வைப்பதாகவும் தமிழீழ தாயகப் பகுதியில் தொடர்ச்சியான முறையில் தமிழ் மக்கள் …
-
- 0 replies
- 977 views
-
-
நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் மோதல், கப்பல் பயணம் இடைநிறுத்தம். இன்று சனிக்கிழமை மாலை 3.45 மணியளவில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று 350 பணிகளை ஏற்றிக் கொண்டு திருகோணமலையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு செல்லவிருந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இசசமரில் ஏற்பட்ட சேதமவிபரம் தொடர்பாக மேலதிக விபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -Pathivu-
-
- 0 replies
- 1.7k views
-
-
எமது செயற்பாடுகளை முடக்கும் நோக்கம் கொண்டவை அரசின் நடவடிக்கைகள்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வவுனியா திருகோணமலை அலுவலகங்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டதோடு ஆவணங்களும் கையகப்படுத்தப்பட்டிருந்தன. "2006ம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் கழகத்தின் செயலகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் என்ற வரிசையில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் இது" என நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 816 views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி. வவுனியா பத்தாம்குளப்பகுதியில் சிறீலங்கா படையினர் பயணித்த ஊர்திமீது இன்று காலை 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி வீதிவழியே விடுமுறையில் சென்ற படையினரை ஏற்றிசென்ற வாகனத்தின் மீதே இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Pathivu-
-
- 0 replies
- 933 views
-
-
யாழ் கொக்குவிலில் இராணுவப் புலனாய்வாளர்களால் இளைஞர் சுட்டுக் கொலை. யாழ் கொக்குவில் ஆடியபாதவீதியில் இன்று காலையில் 8.30 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளியில் வந்த இளைஞரை வழிமறித்த ஆயததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கொல்லப்பட்டவர் கோவில் வீதி கொக்குவில் கிழக்கைச் சோந்த நவரத்தினம் மனோராஜ் வயது 26 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை இன்று காலை 8.00 மணிக்கு கோப்பாய் இராஐ வீதியில் இனம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சனி 06-01-2007 13:13 மணி தமிழீழம் [செந்தமிழ்] உடுவிலில் கிளைமோர் தாக்குதல் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் உடுவில் அராணுவ முகாமிற்கு அருகாமையில் வெடிக்கவைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 1 இராணுவத்தினர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் இக்கிளைமோர் குண்டானது சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்படும் கடை உன்றின் முன்பாக பொருத்தப்பட்டிருந்ததாகவும் காயமடைந்த இராணுவத்தினர் பலாலி மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. கச்சேரி நல்லூர் வீதியில் காலை 8.50 மணியளவில் மற்றொரு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தள்ளனர். இவர்கள் 24 அகவையுடைய துலோசினி எனவும் மற்றயவர் ஒர் வயோதிப பெண்மணி எனவும் யாழ்பான ஆசிரியர் வைத்தி…
-
- 0 replies
- 783 views
-
-
செத்துப்போன ஒப்பந்தத்தில் தொங்குவதால் பயன் என்ன? Saturday, 06 January 2007 இலங்கையில் யுத்தநிறுத்தம் இன்னும் நடைமுறை யில் இருக்கின்றதா என்ற கேள்விதான் பலரின் மனதிலும் இப்போது எழுந்திருக்கின்றது. ஒருபுறம் அமைதி முயற்சிகளில் தனக்குத் தீவிர ஈடு பாடும் ஆர்வமும் உள்ளன என்று அரசு அறிவிக்கின்றது. யுத்த ஆபத்துப் பிரதேசங்களிலிருந்து யுத்தநிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் விலகி, தமது பணியைச் சுருக்கிக் கொண்டமையை அது கண்டிக்கின்றது. அதனால், யுத்த நிறுத்தத்துக்கு ஆபத்து எனக் நீலிக் கண்ணீரும் வடிக்கிறது. மறுபுறம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தினசரி விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒருநாள் மன்னாரில். அடுத்தநாள் முல்லைத்தீவில். மூன்றாம் நாள் அலம்பிலி…
-
- 0 replies
- 852 views
-
-
சனி 06-01-2007 13:02 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் ஜீப்வண்டி மீது எறிகுண்டு தாக்குதல் இன்று காலை மட்டக்களப்பு சவுக்கஙகாட்டு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் ஜீப்வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகுண்டு தாக்குதலில் 5 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 841 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?: இந்தியத் தூதுவர் விளக்கம். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாதென சென்னையில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் தெரிவித்த கருத்தே புதுடில்லியின் நிலைப்பாடென இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் தெரிவித்திருக்கின்றார். சிங்களக் கடும்போக்குக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு ஒன்று இந்திய தூதுவரை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுக்களை நடத்திய போது இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு இலங்க…
-
- 0 replies
- 717 views
-
-
நிட்டம்புவையில் பேருந்தில் இன்று மாலை குண்டு ஒன்று வெடித்துள்ளது. நிட்டம்புவை கிரியுள்ள மார்க்த்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் ஒன்றினுள்ளே இக் குண்டு வெடித்துள்ளது. பேருந்து முற்றாக எரிந்தாக செய்தி. ஜந்து பேர் ஸ்தலத்திலே மரணமானார்கள். படுகாயங்களுடன் சிலர் வைத்திய சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் கொழும்பு கண்டி மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலதிக விபரங்கள் தொடரும் ஜானா
-
- 6 replies
- 2.2k views
-
-
எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம் ‘‘திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’ ‘‘ரவுணில் இருக்கிற எல்லாக் கடையளுக்கும் போய்ரன், ஒரு ‘ஹோர்லிக்ஸ்’ வாங்கலாமெண்டு! ஓர் இடமும் கிடைக்கயில்ல. அப்பாவுக்கு உடல் நலமில்லாம வைத்திய சாலையில சேர்த்திருக்கிறம். ஓப்ரேஷனுக்கு நாள் குறிச்சாச்சு. உடம்பில சக்தி இல்ல. எதாவது சத்து மா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் சொல்லுகினம். அதுக்காக ரெண்டு நாளா அலையுறன். எவ்வளவு காசு வேணுமெண்டாலும் கொடுக்கலாம். ஆனா, எல்லாக் கடையிலயும் சாமான் இல்லயெண்டு சொல்லுகினம்...’’ - ஏக்கமும் களைப்புமாகச் சொல்கிறார் சிந்துஜா. இலங்கையின் மற்ற பகுதிகளைத் தரை வழியாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கியச் சாலையான ஏ-9 பாதை கடந்த நான்கு மா…
-
- 1 reply
- 1.6k views
-
-
வவுனியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் சிறீலங்கா இராணுவம் அட்டுழியம். தமிழர் புனர்வாழ்வுக்கழக வவுனியா அலுவலகத்தை சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து அங்கு பணிபுரிந்த அனைவரையும் கைதுசெய்துள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா குருமன்காடு தமிழர்புனர்வாழ்வுக்கழக அலுவலகமே இவ்அடாவடித்தனத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அதில் பணிபுரிந்த நிர்வாக உத்தியோகஸ்தர் சத்தியமூர்த்தி, பி. தேவராஐ, கணக்காளர் நிரோசா, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோரை கைதுசெய்துள்ளதாகவும் அவர்களது அலுவலக உடமைகள் யாவும் இராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Pathivu-
-
- 1 reply
- 944 views
-
-
தென் தமிழீழத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்காக பொதுமக்களைப் போல் சிறிலங்கா இராணுவமும் எச்சரிக்கைக் கருவி கேட்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறியுள்ளார். கிராம மக்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான எச்சரிக்கைக் கருவிகளை வழங்கும் சிறப்புத் திட்டத்தை ஜயலத் ஜயவர்த்தன தொடங்கி வைத்து பேசியதாவது: பொதுமக்கள் தங்கள் மீதான தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக எச்சரிக்கைக் கருவிகளை நாம் வழங்குகிறோம். ஆனால் வவுணதீவு, மத்திய முகாம், கல்லடி உள்ளிட்ட 5 இராணுவ முகாம்களுக்கும் ஆபத்து இருப்பதால் தங்களுக்கும் எச்சரிக்கைக் கருவிகளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வழங்க வேண்டும் என்று இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்…
-
- 0 replies
- 1k views
-