Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட முடிவு! தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் பேச்சுக்களை நடத்தித் தீர்வுக்கானத் தீர்மானங்களை எட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) மாலை 6:15 முதல் 7 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, வெளிவ…

  2. கிழக்கில் நெல் பயிர்ச்செய்கை மூலமாக அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் கிழக்கு ஆளுநர் பேச்சு By Nanthini 22 Dec, 2022 | 12:09 PM கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும், கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை வாரியத்தின் மூலம் கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்குமாறு திருகோணமலையில் சீன தூதுக் குழுவுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றபோது தெரிவித்திருந்தார். இதன்போது இந்த நிதியுதவி மூலம் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான நியாயமான விலை கிடைப்பதுடன், நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும…

  3. எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன் எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனவே எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். …

  4. இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் வேலைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தகுதியானவர்களை பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை, பாடசாலை வெளியேறும் சான்றிதழ், G.C.E உயர்தர சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு…

    • 2 replies
    • 288 views
  5. எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகள் நடாத்தப்படாது என தகவல்! ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வியடத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும்…

    • 3 replies
    • 689 views
  6. நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர் காலத்து கோட்டை, போர்த்துக்கேயர் காலத்து வைத்தியசாலை மற்றும் மேலும் பல தொல்பொருள் சான்றுகள், வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் நெடுந்தீவிற்கு வருகை தருகிறார்கள். https://…

  7. 16 பில்லியன் ரூபாய் சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க தீர்மானம்? னி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு வேறு திகதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பந்துல குணவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் குறித்த தகவல்களை தயார் செய…

  8. சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் – சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய சிக்கல் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லை குறிக்கும் வகையில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து போராடிவரும் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. முல்லைத்தீவு இராணுவ முகாமில் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரையாவது இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமையை சட்டத்தரணிகளினால் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு கிடைத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் முல்லைத்தீவுக்குச் சென்ற காணா…

  9. மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!! kugenDecember 21, 2022 (கல்லடி நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி , லெப்டனன் கேணல் , ஜே.ஏ.பீ.குணரெட்ணவினால் விவசாய அறுவடைகள் வவுணதீவு பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராசா ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டது. வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் சிப்பிமடு பகுதியில் தரிசி நிலமாக காணப்பட்ட 20 ஏக்கர் நிலத்தினை இரா…

  10. லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கத்திற்கும் தமிழ் கட்சிகளிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படப்போவதில்லை என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் எரிக்சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் எதிர்கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் இந்த பேச்சுவார்த்தைகள் சூழல் சார்ந்த விடயங்கள் பற்றியே அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எரிக்சொல்ஹெய்ம் மீண்டும் மத்தியஸ்தராக செயற்படவேண்டும் அரசியல் தீர்வை காண்பதற்கு உதவவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களிற்…

  11. கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான காணிகள் எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் இன்று (21) பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும் தமது காணிகளையும் சேர்த்து இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிட்டதுடன் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி …

  12. (எம்.நியூட்டன்) இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் இன்று புதன்கிழமை (டிச. 21) பகல் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் அதிலிருந்த 11 மீனவர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk

  13. கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் (21-12-2022) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. பளை முள்ளியடிபகுதியில் ஏ - …

  14. நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நிதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது – உறவுகள் எச்சரிக்கை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நிதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம்.காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும்,பிள்ளைகளுமே …

  15. 8 பில்லியன் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி By Digital Desk 2 21 Dec, 2022 | 12:04 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் உள்ள 12 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும்…

  16. கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மனோ ஆதரவு அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும், ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்இபி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார். ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்.பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய …

  17. சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல என்கிறார் சரத் வீரசேகர! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத…

  18. மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது! பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாட்டை பாடசாலை குழுவொன்றுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடங்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங…

    • 2 replies
    • 379 views
  19. டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்! யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமையினால் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்ற நிலையில் ஈழ மக்கள்…

  20. தமிழர் விரும்பும் தீர்வையே ஏற்போம்! – சொல்ஹெய்மிடம் சம்பந்தன் இடித்துரைப்பு.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இ…

  21. பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுவிப்பு By VISHNU 20 DEC, 2022 | 07:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் இன்று (20) பூர்த்தி செய்த பின்னர் வெளியேறிச் சென்றுள்ளார். அதன்படி கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில்…

  22. இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் - என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். என்ன நடந்தது? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் றிப்தி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்து…

  23. (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பிரபலங்கள் வெளியில் சுதந்திரமாக உள்ள போது 31 விடுதலை புலிகள் போராளிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது பயனற்றது. ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுத்தியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். யதார்த்த நிலைக்கு அமைய தீர்மானம் எடுக்கும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டி நகரில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற 43ஆவது படையணியின் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில…

  24. இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி பிரதமருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கின்றார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பல தடவைகள் மோடி இலங்கை தலைவர்களுடன் பேசியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால் அதற்கு சென்னையிலிருந்து யாரோ கடிதம் எழுவது காரணமில்லை புதுடில்லியில் யாரோ இதனை கையாள்வதே காரணம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 2014 முதல் 2835 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோடி இலங்கை தலைவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருக்கின்றார்- ஜெய்சங்கர் | Virakesari.lk

  25. ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது. வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது. இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.