ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பினரின் வாகனம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளனர். கொக்குவில் சந்திக்கும் நாச்சிமார் கோவிலடிக்கும் இடையில் காங்கேசன்துறை வீதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயமடைந்த படையினர் உடனடியாக பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவத்தை அடுத்து நாச்சிமார் கோவிலை அண்டிய பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்த பல நூற்றுக்கணக்கான படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவரவில்லை.
-
- 0 replies
- 918 views
-
-
திருமலையின் வெற்றியிலேயே தமிழீழத்தின் வெற்றி: பொட்டம்மான் [வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 15:14 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] திருகோணமலையை வெற்றி கொள்வதிலேயே தமிழீழத்தின் வெற்றி தங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் குஞ்சனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தின் விடுதலைக்காக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்நிலை வளர்ச்சிக்கும், உலகத் தமிழர்களின் வீரத்தின் வெளிப்பாட்டிற்கும் தம்மை ஆகுதியாக்கியுள்ளனர். மாவீரர்களின் பொதுப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர்களை அல்ல விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியாவிடம் ஆயுதங்களுக்கு விண்ணப்பித்துள்ள சிறிலங்கா [வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 18:28 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு தமக்கு தேவையான ஆயுதங்களை தந்துதவுமாறு இந்தியாவிடம் ஆயுதத் தளவாடப் பட்டியலொன்றை சிறிலங்கா அரசு சமர்ப்பித்துள்ளதாக இந்திய அரசியல் உயர்வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இந்தியா தரும் ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாத்திரமே பயன்படுத்தப்பபடும் என்றும் சிறிலங்கா அரசு இந்தியாவிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஆனால் இந்தியாவிடமிருந்து சிறிலங்காவின் இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அண்மையில் இந்த…
-
- 0 replies
- 1k views
-
-
இன்றைய முடியடிப்புச் சமரில் 5 போராளிகள் வீரச்சாவு 12 போராளிகள் காயம். இன்று மாவிலாற்றைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் 12 போராளிகள் காயமடைதுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
மெளலவி சாகீல் படைப் புலனாய்வாளர்களால் கடத்தல். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காக பாடுபட்ட முஸ்லிம் மெளலவி சாகீல் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணிக்கு புத்தளம் பகுதியில் அமைந்துள்ள மெளலவியின் வீட்டுக்குச் சென்ற படைப்புலனாய்வாளர்கள் மெளலவியை கடுமையாகக் தாக்கிவிட்டு கடத்திச் சென்றுள்ளனர். மெளலவி சாகீல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் யாழ் மாவட்ட உள்ளுராட்சித் தேர்த்தலி்ல் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 835 views
-
-
திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல். ஜ வியாழக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய எறிகனைகள் விழுந்து வெடித்து சேதத்தை ஏற்படும்தும் ஆனால் தற்போது பாவிக்படும் எறிகனைகள் இரசாயன எறிகனைகள் இவை விழுந்து வெடிக்கும் இடத்தில் தீபற்றி எரிகிறது மூதூரிலும் சம்பூரிலும் காடுகள் திபற்றி எரிகிறது. எறிகனை விழும் இடங்களில் எல்லாம் தீ பிடித்து எரிகிறது பச்சை மரங்கள் அனைத்தும் உடனடியாக தீபிடித்து எரிகிறது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாத கெமிக்கல் இராசயணம் இந்த குண்டுகளில் பயன்படுத்தப்படுகிண்றது எண்று …
-
- 21 replies
- 4.3k views
-
-
புதிய களமுனையை புலிகள் திறந்தனர் தோப்பூர் இராணுவ முகாம் மீது தாக்குதல். சிறீலங்கா இராணுவம் இன்று காலை திறந்த களமுனையான மாவிலாற்று பகுதியில் பலத்த எதிர் சமர் புரியும் விடுதலைப்புலிகள் சமகாலத்தில் தோப்பூர் இராணுவ முகாம் மீது புதிய களமுனையை திறந்து தாக்குதலை தொடுத்து வருகின்றனர். இத் தாக்குதலில் படையினரிற்கு பாரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com --------------- எங்களின் மக்களை அழிப்பவர்களை..அழிப்போம்..என்ப
-
- 2 replies
- 1.5k views
-
-
சர்வாதிகாரி ஹிட்லர் மூச்சுத் திணறவைத்து பொதுமக்களை படுகொலை செய்ததுபோல் வேலுப்பிள்ளை பிரபாகரன் தண்ணீரை கொடுக்காது மக்களை கொலை செய்யப்பார்க்கிறார் என ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார். சபாநாயகரின் அனுமதியுடன் விசேட கூற்று ஒன்றை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், புலிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு அரசாங்கம் பொருளாதார தடை விதித்தமையினாலேயே மாவிலாறு அணையை புலிகள் மூடினார்கள் என்பது பொய்ப் பிரசாரமாகும். புலிகளுக்கு என்று கட்டுப்பாட்டு பிரதேசங்கள் எதுவும் இல்லை. அரசாங…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று காலை கல்லாறு இராணுவமுகாமில் இருந்து பத்தாயிரம் துருப்புக்களை பயன்படுத்தி மாவிலாற்றை கைப்பற்ற பாரிய படைநகர்வை சிறீலங்கா படையினர் மேற் கொண்ட அதேவேளை விடுதலைப் புலிகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்குடன் மகிந்தபுரத்தில் இருந்து படைநகர்வு ஒன்றை படையினர்மேற் கொண்டனர். இந்த படை நகர்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மாவிலாற்றில் இருந்து தொடங்கிய படைஎடுப்பை எதிர்த்து கடுமையான தரை மற்றும் ஆட்லறி தாக்குதல்களை புலிகள் தொடுத்து வருகின்றனர்.
-
- 0 replies
- 888 views
-
-
வாழைச்சேனை மிறாவோடையில் இன்று வியாழக்கிமை அதிகாலை 4.00 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கோல்லப்பட்டவர் சுங்காங்கேணி பிரதான வீதியைச்சேர்ந்த தம்பிராஜா ரஜனிகாந் வயது 26 இரு பிள்ளைகளின் தந்தையாவர். இவர் கடந்த சில தினங்களாக கருணா குழுவில் இருந்து பின்னர் ஈ.பி.டி.பி உறுப்பினராக மாறியுள்ளார்.
-
- 0 replies
- 936 views
-
-
மட்டக்களப்பு - திருமலை மாவட்டங்களில், இன்று சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மிலேச்சத்தமான வான்வழி மற்றும் எறிகணை தாக்குதல்களில் நூறு பொதுமக்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர். இன்று காலை தொடக்கம், மட்டக்களப்பு வாகரை கதிரவெளி, திருமலை வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு ஆகிய பகுதிகளில் அத்துமீறி பறப்புக்களை மேற்கொள்ளும் சிறீலங்கா வான்படை விமானங்கள், பொதுமக்களின் குடிமனைகள் செறிவாகக் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசி வருகின்றன. ஏக காலத்தில், ஆட்லறி பீரங்கிகள் - பல்குழல் செலுத்திகள் மூலம், சிறீலங்கா தரைப்படையினரால் மூர்க்கத்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட கொலை வெறித் தாக்…
-
- 0 replies
- 961 views
-
-
சிறீலங்காப் படையினரின் இன்றை படை நடவடிக்கையும் , தாக்குதல்கள் யுத்தப் பிரகடனத்தையே அர்த்தப்படுத்தகின்றது என விடுதலைப் புலிகளின் இராணுவச் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா படையினரின் இன்றைய தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இன்று காலை மாத்திரம் 6 படையினர் உயிரிழந்துள்ளதாகவும் 30 மேற்பட்ட படையினர் கந்தளாய் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன எனவும் இளந்திரையன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-
- 0 replies
- 825 views
-
-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லாரி மாணவர்களும் இராணுவத்தினரும் இன்று காலை 10.00 மணியளவில் மோதிக் கொண்டுள்ளார்கள். வீதிகளில் மாணவர்கள் திரும்பிச் செல்லும் வேளையில் வீதிக்கடமையில் ஈடுபட்டு வந்த இராணுவத்தினர் மாணவர்களை மறித்து சோதனை என்ற பெயரில் மிரட்டியுள்ளார்கள். இத்துடன் பாடசாலைப் பகிஸ்கரிப்பில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்ததுடன் பயமுறுத்தியும் உள்ளார்கள். இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் வீதிகளில் ரயர்களைப் போட்டு தீயிட்டதுடன இதனால் இராணுவத்தினர் கற்கள் பொல்லுகள் கொண்டு எறிந்து தாக்கியுள்ளார்கள். பதிலுக்கு இராணுவத்தினர் மீது மாணவர்களும் இந்த நடவடிக்கையில் ஈடபட்டுள்ளார்கள். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சில மணிநேரம் பெரும் பதட்டமான நிலமை காணப்பட்டது.
-
- 0 replies
- 981 views
-
-
மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு - பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 11:59 மாவிலாறு அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவோடும் வான்படை வானூர்திகளின் குண்டு வீச்சுக்களோடும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய நகர்வை ஆரம்பித்தனர். இவர்களின் நகர்வு முயற்சிக்கு எதிராக போராளிகள் தீவிர தாக்குதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே உக்கிர மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ர…
-
- 7 replies
- 2.2k views
-
-
பத்து நாட்கள் கடந்து விட்ட நிலையிலும், ஜே.வி.பி. வழங்கிய 20 அம்சக் கோரிக்கை குறித்து, மகிந்த அரசிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததால், ஜே.வி.பி.யினர் அதிருப்தியடைந்துள்ளனர். சிறிலங்காவைக் கட்டியெழுப்ப, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்து செயற்பட முடிவெடுத்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி., அதற்கான முன்நிபந்தனையாக தங்களது 20 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மகிந்த அரசுக்கு நிபந்தனை விதித்தனர். தற்போதைய நிலையில், தங்களது கோரிக்கையை இலகுவாக மகிந்த ஏற்றுக்கொள்வார் என்றும், ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் எந்தப் பக்கமும் அசைய முடியாமல் திக்குமுக்காடும் மகிந்த, தங்களது வலையில் சிக்கிக் கொள்வார் என்றும் இறுமாப்படைந்திருந்த ஜே.வி.பி.யினர், இரண்டாவது வாரமும்…
-
- 0 replies
- 795 views
-
-
படையினரின் வலிந்த தாக்குதல்: திருமலையில் பெரும் சமர் மூண்டது திருமலை நிருபர் Thursday, 10 August 2006 இன்று அதிகாலை 4.00 மணியளவில் சிறிலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்குதல் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கியதாக முன்னெடுக்கப்படு வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வலிந்த தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகளிடமிருந்து மிகக் கடுமையான எதிர்பை இராணுவம் சந்தித்து வருவதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த படையினர் கந்தளாய் வைத்தியசாலைக்கு வர ஆரம்பித்து இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. http://www.…
-
- 2 replies
- 1.5k views
-
-
வாகரைக்குச் சென்ற அகதிகள் படகு மீது தாக்குதல் 5 பொதுமக்கள் பலி! பலர் படுகாயம்;! - சோழன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 08:58 திருகோணமலை ஈச்சிலம்பற்று மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ;வெருகல் ஆற்றைக் கடந்து வாகரை செல்வதற்கு படகில் சென்ற அகதிகள் மீது, நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீசியு ள்ளதுடன் இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பல பொதுமக்கள் படுகாயமடைமந்துள்ளனர். http://sankathi.…
-
- 0 replies
- 771 views
-
-
50 பொதுமக்கள் படுகொலை 200 பேர் காயம். திருமலை நிருபர் Thursday, 10 August 2006 சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலிலும், விமானக் குண்டுத் தாக்குதலிலும் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 க்கு மேற்பட்டோர் காயம். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி விமானப் படைகளின் போர் விமானங்கள், ஆட்லறிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200க்கு மேற்பட்டடோர் காயம டைந்துள்ளார்கள். மேலதிக விபரம் கிடைக்கவில்லை http://www.battieelanatham.com/newsite/ind...=1129&Itemid=37 45 civilians killed in bombardment, SLA re-launches troop movement …
-
- 26 replies
- 5.1k views
-
-
சிறிலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் 5 மூதூர் பொதுமக்கள் பலி திருகோணமலை ஈச்சிலம்பற்று மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெருகல் ஆற்றைக் கடந்து வாகரை செல்வதற்கு படகில் சென்ற அகதிகள் மீது, நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீசியுள்ளதுடன் இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த குண்டுவீச்சில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். -புதினம்
-
- 5 replies
- 1.3k views
-
-
வெள்ளவத்தை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின்போது பெண்கள் இருவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப்பின் ஆரம்பமாகி நேற்று அதிகாலை 4 மணிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தவறியவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து தங்கியிருந்தோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
- 2 replies
- 1k views
-
-
லெப். ஜெனரல் பாரமி குலதுங்க மற்றும் மேலும் மூவரின் படுகொலைகள் பற்றி ஆராயவும் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி ஜி.டபிள்யு.எதிரிசூரிய, குலசேன ரணசிங்க, ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கூடவுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய இவ்வாறான செயல்களை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை இந்த குழு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.3k views
-
-
கடந்த சனிக்கிழமை லண்டன் சர்வதேச மன்னிப்புசபை மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தேன். இந்நிகழ்வு சில ஒட்டுக்குழுக்களின் ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பினும், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் சிலர் அங்கு சென்றிருந்தோம். அங்கு பல ஒட்டுக்குழுக்களில் இருந்து கடந்த காலங்களில் கொலைகள், கற்பளிப்புகள், கொள்ளைகள் செய்த பலரைக் காணக்கூடியதாக இருந்தது. ஒட்டுகுழுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர் அங்கு பி.பி.சி செய்தியாளரர் நிமலராஜனை படுகொலை செய்து, கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை பெற்றபோது தப்பியோடி லண்டன் வந்ததாக கூறப்படும் , இன்ரப்போலினால் தேடப்படும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு உறுப்பினரான "நெப்போலியனும்"அங்கு வந்திருப…
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ACF தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தொடர்பில் அமெரிக்கா தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை முடிவுக்கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவி புரியும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இயலுமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான பாதையைத் திறந்துவிட…
-
- 6 replies
- 1.3k views
-
-
வவுனியா வடக்கு நைனாமடுப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட மற்றுமொரு கிளைமோர் தாக்குதலில் கண்காணிப்புக் குழுவினரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இன்று மதியம் சம்பங்குளப் பதியிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வாகனத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் படையினரால் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இக்கிளைமோர் கண்ணிவெடியில் தமிழீழ சுகாதார சேவையின் நடமாடும் மருத்துவ பிரிவினரின் மருத்துவர் ஒருவர் வாகனம் சிக்கி சேதமடைந்துள்ள போதும் வாகனத்திலிருந்த பெண் மருத்துவர் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
-
- 0 replies
- 841 views
-
-
சிறிலங்கா அரசு தனது இராணுவ பலப் புள்ளி விவரங்களைக் காட்டி தமிழ் மக்களை உளரீதியாக அச்சமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இந்த புள்ளி விவரங்கள் மூலம் வரவேற்பை பெறலாம் என்று சிறிலங்கா அரசு கருதுகின்றது. இதே படை பலத்துடன் தான் சிறிலங்கா படைதரப்பு கடந்த காலங்களில் தோல்விகளைச் சந்தித்தது. தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும் அந்த இராணுவத்தில் 24 காலாட்படை பிரிக்கேட்கள் 15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை 22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது. தமது இராணுவத்திடம் ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம் சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள்…
-
- 24 replies
- 2.9k views
-