ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்': முதலமைச்சர் சி.வி. தலைமையில் கொழும்பில் இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாடு : நேரடி ஒளிபரப்பு http://www.virakesari.lk/
-
- 4 replies
- 378 views
-
-
'வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாது' -சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கு, கிழக்கு இணைப்பை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார். வடக்கு - கிழக்க…
-
- 0 replies
- 386 views
-
-
வடபகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றிற்கான ஒத்திகைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான விடுதலைப் புலிகள் வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அங்கு மிகத் தீவிரமான போர்த் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. புதிய படையணிகள் பயிற்றுவிக்ப்பட்டுள்ளனர். மண் மூட்டைகள் கொண்டு மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் படையணிகள் தமது ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவான கைத்துப்பாக்கி வீரர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் முக்கிய ப…
-
- 5 replies
- 2.4k views
-
-
வடபகுதி மீனவர்களை வைத்து மத்திய, மாகாண அரசுகள் அரசியல் பிழைப்பு நடத்துவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனால் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் இந்திய மீனவர்களால் எமது கடல் வளம் அழிக்கப்படவில்லையென்றும் எமது தொப்புள்கொடி உறவுடன் வாழ்பவர்கள் அவ்வாறு நடக்க மாட்டார்களெனவும் மாறாக தென்பகுதி மீனவர்களும் வெளிநாட்டு மீனவர்களுமே எமது வளங்களை அழிக்கின்றனரென்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு ஒரு படி மேலே மத்திய கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.02.2014 அன்று வழங்கிய …
-
- 0 replies
- 546 views
-
-
'வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை சி.வி. 09 அக்டோபர் 2013 2ஆம் இணைப்பு - 'வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை சி.வி. வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் 'வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன'; என யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று (08.10.13) செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். 'வடமாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் இறுதியான முடிவுக்ள எதுவும் எட்டப்படவில்லை. ஓரளவான முடிவுகள் மட்டுமே எட்டப்பட்டுள்ளன. விரைவில், வட மாகாண சபைக…
-
- 0 replies
- 415 views
-
-
'வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளதாக செய்தி: பரபரப்புக்காக வெளியிடப்பட்டது' -எம்.றொசாந்த் வடமாகாண சபை கலைப்படவுள்ளதாக பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தியானது, தனியே பரபரப்புக்காக வெளியிடப்பட்ட செய்தியாகும். இது சபையின் சிறப்புரிமையை மீறும் விடயமாகும். இது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கோரிக்கை விடுத்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை (30) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 'ச…
-
- 0 replies
- 442 views
-
-
வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதல்வரின் நகர்வு சரியானது எனத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், வடமாகாணசபை தொடர்பில் பேச எனக்கு தார்மீக உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் மிகவும் பிரபல மாகாண சபைகளானவை, வட மாகாணசபையும் கிழக்கு மாகாணசபையுமே ஆகும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு கோரி போராடியது, தமிழர்களாகும். அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டையும் முன்னெடுத்துப் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள், தமிழர்கள் ஆகும். ஆகவே, அதிகாரப்பகிர்வின் ஒரு கட்ட…
-
- 0 replies
- 339 views
-
-
வட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார் என ஆரம்பத்திலிருந்தே பொது பல சேனா தெரிவித்து வருகின்றது. இவரைப் போன்ற மேலும் 40பேர் தொடர்பில் நாட்டு மக்கள் விரைவில் அறிந்துகொள்வர் என்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வட்டரக்க விஜித தேரருக்கு பாதுகாப்பு வழங்கி, அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டுள்ளார் என்றும் அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றும் ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/115272--40-.html
-
- 3 replies
- 774 views
-
-
இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன. சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம். இலங்கைத் தீவி்ற்கு வெளியே - நாடு நாடாக - இப்போது 'வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்' மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது - தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து - ஏற்றுக்கொண்டு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம். …
-
- 16 replies
- 1.7k views
-
-
வன்னி மக்களுக்காக 'வணங்கா மண்' கப்பலில் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொருட்கள் இன்று 'கப் கொலராடோ' என்ற கப்பலின் மூலமாக சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்படும் எனத் தெரிகின்றது. இக்கப்பலை சிறிலங்கா கடற்படையினர் நேற்று புதன்கிழமை வழிமறித்த போதிலும், இந்தியத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தையடுத்தே அதனை சிறிலங்கா கடற்பகுதிக்குள் பின்னர் அனுமதித்ததாகவும் தெரிகின்றது. இன்று சிறிலங்கா கொண்டுசெல்லப்படும் இந்த உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 'வணங்கா மண்' கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமது உறவுகளுக்கா…
-
- 0 replies
- 430 views
-
-
லண்டனில் இருந்து வன்னிக்குப் புறப்படவிருக்கும் 'வணங்கா மண்' கப்பலில் ஏற்றப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்காக அல்ல தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவே ஏற்றிச் செல்லப்படுவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இது ஒரு பாரதூரமான கரிசனைக்குரிய விடயம் எனவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளது. முன்னர் நிவாரணத்துக்கான என வந்த கப்பல்களை ஆயுதக்கடத்தல்களுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ள லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதரகம், இந்த விடயம் தொடர்பாக தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். "இந்தக் கப்பலின் பயணம் தொடர்பாக நாம் அறிவோம். இந்த விடயத்தில் நாம் அக்கறை கொண்டிருக்கி…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கேப் கொலராடோ' கப்பலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கப் கொலராடோ' கப்பலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 286 views
-
-
தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ள 'வணங்கா மண்' கப்பலில் எடுத்துச் செல்வதற்கான பொருட்களை பிரித்தானியா வாழ் தமிழ்ச் சமூகம் பெரும் உற்சாகத்துடன் பொருட்களை வாரி வழங்கி வருவதாக பயண ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ள 'வணங்கா மண்' கப்பலில் எடுத்துச் செல்வதற்கான பொருட்களை பிரித்தானியா வாழ் தமிழ்ச் சமூகம் பெரும் உற்சாகத்துடன் வாரி வழங்கி வருவதாக பயண ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 284 views
-
-
தாயக மக்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'வணங்கா மண்' என்ற கப்பலை சிறிலங்கா அரசாங்கம் பொருட்களுடன் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: தாயக மக்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கப்டன் அலி' எனும் பெயர் கொண்ட 'வணங்கா மண்' கப்பலை சிறிலங்கா அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை திருப்பி அனுப்பியுள்ளது. சிரியா நாட்டில் பதிவுசெய்யப்பட்ட இந்தக் கப்பலில் இருந்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் இறக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புதினம்
-
- 3 replies
- 797 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் வணங்கா மண் சேகரிப்பு பணிகள் யாவும் நிறைவுக்கு வருகின்றது. இது தொடர்பாக வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வணங்கா மண் கப்பலுக்கான சேகரிப்பு பணிகள் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது. வன்னியிலே மனிதப் பேரவலம் ஒன்றை சந்திக்கின்ற எம் உறவுகளுக்கு புலத்தில் எம்மக்கள் காட்டிய ஆதரவும் அக்கறையும் ஈடுபாடும் வியக்கத்தக்கது. பொருட்கள் சேகரிக்கும் பணிகள் யாவும் ஏற்கனவே நிறைவுக்கு வந்து விட்டது. வணங்கா மண் சம்பந்தமாக பல தரப்பட்ட வதந்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை. உலகமே கைவிட்ட எங்களது உறவுகளை காக்க எம…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களால் சேகரிக்கப்பட்டு 'வணங்கா மண்' என்ற கப்பல் மூலம் வன்னியில் உள்ள உறவுகளுக்காக என அனுப்பிவைக்கப்பட்ட 840 தொன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள் சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளின் திட்டமிட்ட அலட்சியப் போக்கினால் கொழும்பு துறைமுகத்திலேயே கிடந்து பழுதடைவதாகத் தெரியவந்திருக்கின்றது. கொழும்பு துறைமுகத்துக்கு 27 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சுங்கப் பிரிவில் இருந்து வெளியே கொண்டுவரப்படாமல் கடந்த ஒரு மாத காலமாகத் தேங்கிக் கிடக்கின்றது. இந்த பொருட்களை வெளியே கொண்டுவந்து வவுனியா முகாம்களில் உள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காகு இந்தியத் தூதரகத்தின் தலையீட்டை, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் கோரிய…
-
- 0 replies
- 336 views
-
-
அய்ரோப்பிய தமிழர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 840 டன் உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற நிவாரணக் கப்பலின் சரக்கு குறித்த ஆவணங்களை இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன்னரே அனுப்பி வைத்து விட்டதாக அக்கப்பலுக்கான சென்னை முகவர் தெரிவித்துள்ளார். அய்ரோப்பிய தமிழர்களால் 840 டன் உணவுப் பொருள்கள் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வணங்கா மண் என்று பெயர் சூட்டப்பட்ட அக்கப்பல் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் சென்னை துறைமுகம் அருகே பல நாள்களாக நிறுத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், மத்திய அரசை அணுகி அக்கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். வணங்கா மண் கப்பலில் வைக்கப்பட…
-
- 0 replies
- 510 views
-
-
வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர்ந்த மக்களால் திரட்டி 'வணங்காமண்' கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் இந்த வார இறுதியில் உரியவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 480 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கட்டாரிலிருந்து 'வன் உம்மா ' ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தள குழு ஒன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் மேலும் இருவரை ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காத்தாண்குடிக்கு சென்ற சிறப்பு ரி.ஐ.டி. குழுவினர் அவர்களைக் கைது செய்தனர். 28,29 வயதுகளை உடைய குறித்த இரு சந்தேக நபர்களும் தற்போது கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் கட்டாரிலிருந்து…
-
- 0 replies
- 364 views
-
-
'வன்னி மக்களுக்கு ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை': கருத்திட்டப் பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா இராஜினாமா கடந்த இரண்டு வருடகாலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்வரும் அமைச்சின் ஊடான அபிவிருத்தி கருத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபாகணேசன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரபா கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நான் கடந்த இரண்டுவருடகாலமாக ஜனாதிபதியின் வன்னி மாவட்ட கருத்திட்ட பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே இது ஒரு அரசியல் நியமனமேயாகும். இந்த பதவ…
-
- 0 replies
- 339 views
-
-
'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 16:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன" இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மகிந்த ராஐபக்ச…
-
- 8 replies
- 2.6k views
-
-
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமா…
-
- 44 replies
- 5.2k views
-
-
வன்னியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்கான பாதையொன்று உள்ளது எனத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எனினும், அந்தப் பாதை பற்றி இப்பொழுது மக்களுக்கு அறிவிக்கப்போவதில்லையெனக் கூறினார். மக்கள் வெளியேறுவதற்கான பாதையைக் கூறினால் விடுதலைப் புலிகள் அவற்றை அறிந்துகொண்டு மக்களை வெளியேறவிடாது தடுத்து விடுவார்கள் எனவும் அதன் பின்னர் மக்கள் விடுதலைப் புலிகளால் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை வவுனியாவுக்கு வருமாறு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவி…
-
- 2 replies
- 2k views
-