Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார். தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு வி…

  2. கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிஉயர் பட்சமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். எனவே கொழும்பு மாநகரின் பாதுகாப்பு குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறினார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் நோக்கம் எனவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை முன்னிட்டு எந்நேரமும் விழிப்புடன் உள்ளதாகவும் பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவ புலனாய்வுத் துறையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் பலவற்றில் விசேட பிரிவுக…

    • 1 reply
    • 1.6k views
  3. மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்! மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலி…

  4. சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர். பாஸ்கரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் அதியமான், நன்றி புதினம் கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் சீமான், புகழேந்தி தங்கராசு, தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி அ. பத்மநாபன், உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் பத்மநாபன், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை நிர்…

    • 0 replies
    • 1.4k views
  5. இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார். சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி. தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று …

    • 43 replies
    • 8.3k views
  6. 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு முகமாலைஊடாக பாதுகாப்பான இடங்களை டென்றடைந்துள்ளனர். இன்னும் பல குடும்பங்கள் இராணுவ அடக்கு முறைகளிலிருந்து தம்மை பாது காத்துக் கொள்வதற்காய் பாதுகாப்பான இடங்களை சென்றடய உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 110 replies
    • 12.7k views
  7. பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு அரச படையினருக்கு பொங்கி எழும் மக்கள் படை அறிவுரை வழங்கியுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது. "பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை. அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறி…

    • 5 replies
    • 2.2k views
  8. யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; ஒருவர் படுகாயம்!! ஜசெவ்வாய்க்கிழமைஇ 3 சனவரி 2006இ 14:39 ஈழம்ஸ ஜயாழ். நிருபர்ஸ யாழ். நகரில் உள்ள அண்ணா கோப்பிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் வழமை போன்று பொதுமக்களைத் தாக்கியதுடன் யாழ். நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.…

    • 0 replies
    • 1.5k views
  9. இவருக்கு உதவுங்கள் "அப்ளாஸ்ரிக் அனீமியா' என்ற நோயினால் பாதிக்கப் பட்ட சாவகச்சேரி கண்டி வீதியைச் சேர்ந்த 22 வயதான பாலகுமார் றோயல்குமார் என்ற இளைஞன் பரோபகாரிகளிடமிருந்து நிதி உதவி கோருகிறார். இவருக்கு உதவிடும் பொருட்டு சாவக்சேரி லயன்ஸ் கழகத்தினர் றோயல்குமாரின் பெயரில் சாவகச்சேரி மக் கள் வங்கிக் கிளையில் கணக்கினை ஆரம்பித்துள்ளனர். இந்த இளைஞனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 2070245340 என்னும் கணக்கு இலக்கத்திற்கு நிதியினை அனுபிவைக்கலாம். சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எலும்பு மச்சை மாற்றீட்டுச் சத்திரசிகிச்சை மேற் கொள்வதற்கு 22 லட்சம் ரூபாவும் இதற்குத் தேவையான மருந்துகளை கொள் வனவு செய்வதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் தேவையென மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர். கர…

  10. திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி திருகோணமலை பெரியகடை கடற்கரையில் இன்று இரவு 7:55 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் அங்கிருந்த 5 பேர் உயிரிழந்திருப்பதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இக்குண்டை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. தாக்குதலை நடத்தியது யாரென்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர் http://www.newstamilnet.c…

    • 5 replies
    • 2.3k views
  11. சென்னையில் கடந்த வியாழக்கிழமை (29.12.05) ஈழத் தமிழர் உரிமை-சமாதான வழித் தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரசுவதி தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்றோர் ஆற்றிய உரை: பேராசிரியர் சரசுவதி: ஈழத்திலே பதற்றமும் இராணுவ வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கிற நிலையில் நாம் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். ஈழத்தில் தமிழர்களின் மனித உரிமைகள்- வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் மனித உரிமை குறித்து அக்கறை கொள்கிற நாம் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். சமாதான காலத்திலும் கூட ஈழத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுக்…

    • 6 replies
    • 2.9k views
  12. போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு நிழல் யுத்தத்தின் அடுத்த கட்டம் என்ன? முழு அளவிலான யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினரின் பதில் நடவடிக்கைகள் அப்பாவிப் பொது மக்களையே இலக்கு வைப்பதாயிருப்பதால் அரசுக்கும் படையினருக்குமெதிரான உணர்வு மக்கள் மத்தியில் உச்சமடைந்துள்ளது. போர்நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் மோதல்கள் நடைபெறுகின்றன. நிழல்யுத்தத்தின் தொடர்ச்சியே இந்த மோதல்களாகும். நிழல் யுத்தத்தை அரசு தூண்டியதன் விளைவை முழுநாடும் விரைவில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. கிழக்கில் கடந்த இரு வருடங்களாக நிலவிய நிழல் யுத்தம் வடக்…

    • 0 replies
    • 1.5k views
  13. இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு உத்தரவு சிறீ லங்கா இராணுவத்தினர் மீது பொதுமக்கள் குழுமிவந்து தாக்குதல் நடத்தினால் அவர்களையும் சூடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு தாம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்துவிட முடியாதென தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் கேள்விக்கு இவ்வாறு தமது வலிமைபற்றி வீரம் பேசியுள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்திவருகின்றனர். இம்முறை மட்டுமின்றி கடந்த காலங்களிலும் இதனையே செய்துவருகின்றனர். முன்னர் எண்பதுகளி…

    • 1 reply
    • 1.7k views
  14. தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய கூறவில்லையாம் - மகிந்த தெரிவிப்பு றுசவைவநn டில Pயயனெலையn ஆழனெயலஇ 02 துயரெயசல 2006 தமிழ் மக்கள் எனது நண்பர்கள், அவர்களுக்கு தீங்கேற்படுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை, குற்றவாளிகளையும் போதைப் பொருள் விற்பனையாளர் களையுமே கைது செய்யுமாறு கூறினேனே தவிர தமிழ் மக்களையல்ல என சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணன் நேற்று மகிந்தவுடன் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராதாகிருஷ்ணனிடம் மகிந்த மேலும் கூறுகையில், குற்…

    • 0 replies
    • 1.5k views
  15. 2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை ரத்துசெய்யுமாறு ஐனாதிபதி உத்தரவு. 2005 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் பகுதி ஒன்று பல்தேர்வு வினாத்தாள்களின் முடிவுகளை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கனணி மயப்படுத்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக தமது பரீட்சை முடிவுகள் தொடர்பில் மீள் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்தே இந்த உத்தரவு ஜனாதியினால் பரீட்சை ஆணையாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கண்டி மற்றும் தங்காலை பகுதி மாணவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்தார். இதேவேளை இந்தப்பிரச்சினை தீர்க…

    • 0 replies
    • 1.8k views
  16. போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதா என போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் விடுதலைப்புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் ஆதர் சந்தித்த போதே எழிலன் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து எழிலன் அங்கு கூறுகையில்; அரசும் புலிகளும் இணக்கம் தெரிவித்தே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது இரு தரப்பினதும் கடமை. ஆனால், இன்றோ படைத்தரப்பு அதனை முற்றுமுழுதாக மீறி வருகின்றது. ஒப்பந்தத்திற்கு மாறாகவ…

  17. நேற்று இடம்பெற்ற இளையோர் அறிவியற்கழகம் திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையினை ஆற்றுகையிலேயே தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவரது உரையில் மனித இனத்தினுடைய அசைவியக்கமே அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசமும் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும்; அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு து}ரத்தில் எதிரியை விர…

  18. பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர். பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில் 4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி) கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மாணவி அந்தோனிக்கா ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்ட…

  19. உருவாகிவரும் மூன்றாவது சதி வலை கிரிஜா "தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம்" என பல பத்தாண்டுகளுக்கு முன்பே இவ்விடுதலையுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்த மார்க்சிய தேசியவாதிகள் சிலர் `எதிர்வு' கூறினர். அன்று இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வழி நடத்துதலின் கீழ் தமிழ் தேசம் இதன் அர்த்தத்தை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. தேச விடுதலைப் போராட்டம் கருநிலையிலிருந்த போது மக்கள் உட்பட போராட்ட அமைப்புகள் இந்தியாவை முழுமையாக நம்பினர். தமிழீழத்தை மீட்கவும் தேசத்தை மீள் நிர்மாணம் செய்யவும் இந்தியா பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கை ஆழமாகக் காணப்பட்டது. இதை நம்பி `பெரிய' இயக்கங்கள் அனைத்துமே இந்தியாவ…

  20. வீட்டுக்குள் புகுந்து அறைகளை கொத்திக் கிளறிய படையினர்! ஊரெழுவில் இப்படிச் சோதனை ஊரெழுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மண்வெட்டி கள், பிக்கான்கள், அலவாங்குகளுடன் சென்ற படையினர் அறைகளுக்குள் புகுந்து கொத்திக்கிளறிச் சோதனையிட்டிருக்கின்றனர். கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வீட்டினுள் தேடுதல் நடத்தப்போவதாக வீட்டு உரிமை யாளரிடம் கூறிய படையினர், அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் கண்முன்னாலேயே சகல அறைகளையும் கொத்திக் கிளறி நாசப்படுத்தினர். வீட்டு முற்றத்தையும் பிக்கான்களால் உழுது பிரட்டி அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதற்குப் பிறகு கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் மீண்டும் வந்த படையினர் அங்கிருந்…

  21. புத்தாண்டுக் கலண்டர்களில் ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! தாயகப் பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் தயா ரிக்கப்படும் நாள்காட்டிகளில் ஆபாச உணர்வைத் தூண்டும் படங்களையும் சினிமா நட்சத்திரங்களைச் சித்திரிக்கும் காட்சிகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் கேட்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இதுதொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை விடுத் திருக்கிறது. புத்தாண்டை ஒட்டி வெளியிடப்படும் கலண்டர்களில் சினிமா நட்சத்திரங்களின் படங் கள் மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் படங்கள் இடம்பெறுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது. இவற்றுக்குப் பதிலாக தமிழர் தாயகப் பிரதேசத்தின் இயற்கை எழில் காட்சிகள் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட…

    • 0 replies
    • 1.9k views
  22. ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச: அம்பலப்படுத்துகிறது பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு முன்பாக எச்சரித்திருந்தார் என்ற உண்மையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பற்றி வழங்கிய செவ்வியில் "ராஜபக்ச போர்ப் பறை சாற்றுகிறார்" என்று கூறியிருந்தார…

  23. ராஜீவ் நினைவு சொற்பொழிவு: சோனியாவுக்கு இலங்கை அழைப்பு இலங்கையில் நடைபெற உள்ள முதலாவது ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய. நான்கு நாள் பயணமாக புதுடில்லி வந்திருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னைச் சந்தித்த சோனியா காந்திக்கு இந்த அழைப்பை விடுத்தார் இலங்கை அதிபர். இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவு நிலவும் சூழ்நிலையில், சோனியா காந்திக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினருக்காக …

  24. read virakesari e-paper for free this is what u have 2 do 1 :arrow: .register onetime as a free 30day trail member then they will send you 2 a link like this http://222.54.255.53/virakesari/svww_activateuser.php? Email=your@email.com 2 :arrow: .you keep this important email in your inbox for entire one month & enjoy your free access for one month,then 3 :arrow: .second month just go to their e-paper login site eg :-http://222.54.255.53/virakesari/login.php 4 :arrow: . enter any e-mail address & password eg:-whattheh@ck.com pass:-hacker 5 :arrow: . now go to your veryfirst e mail activation link (step1-LINK)& c…

    • 0 replies
    • 3.4k views
  25. இறந்தோரின் எண்ணிக்கை 225.000 www.tsunamiineelam.com மேலதிக விபரங்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.