ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143564 topics in this forum
-
யாழில் சூடு பிடிக்கும் தைப்பொங்கல் வியாபாரம் 14 Jan, 2023 | 11:45 AM தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/145774
-
- 0 replies
- 705 views
-
-
தியாகத்தில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீரழிக்கும் சக்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் - சபா குகதாஸ் By Nanthini 14 Jan, 2023 | 11:41 AM தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான தமிழ் தேசிய கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக…
-
- 0 replies
- 585 views
-
-
தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி தமிழர் தாயகத்தில் ஜனாதிபதி காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது - அருட்தந்தை மா. சத்திவேல் By Nanthini 14 Jan, 2023 | 12:33 PM தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (ஜன. 14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தைப்பொங்கல் என்பது பானையும் அரிசியும் அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல, உழைப்பாளர்களின…
-
- 0 replies
- 571 views
-
-
கசினோவிற்கு சென்றனர் - போலி மதபோதகரின் பிடியில் சிக்குப்பட்டனர் - உலக கிண்ண இலங்கை அணி குறித்து அதிர்ச்சி தகவல்கள் By RAJEEBAN 13 JAN, 2023 | 11:05 AM அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடிய இலங்கை அணிவீரர்கள் கசினோவிற்கு சென்றனர் ஊழலில் ஈடுபட்டனர் போலி போதகர் ஒருவரின் பிடியில் சிக்குப்பட்டனர் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏஎவ்பி இதனை தெரிவித்துள்ளது. இலங்கை அணிவீரர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன என ஏஎவ்பி தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் உலககிண்ணப்போட்டி தொட…
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தோடு குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி விழிப்புணர்வு நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட வளாகத்துக்கு முன்பாக இன்று (13) நடத்தியுள்ளனர். இதன்போது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் கூறுகையில், இம்முறை தைப்பொங்கலுக்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பியபோதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இதனை உணர்த்தும் வகையில் சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு, சிறையில் உள்ள கைதிகளை போல உருவகித்து இந்த நாடகத்தினை நடத்தியிருக்கிறோம். பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ளபோதும், எம…
-
- 1 reply
- 601 views
-
-
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதல் 2023 இன் இரண்டாம் காலாண்டு பகுதியிலேயே சாத்தியமாகும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையின் இருதரப்பு கடன்வழங்குநர்களிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இவ்வாறான எதிர்வுகூறலிற்கு வருவதற்கு காரணம் என தெரிவித்துள்ள ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் இதனால் வர்த்தக கடன்வழங்குநர்களுடான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவித்துள்ளது. இவற்றின் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே கிடைக்கலாம் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது. இதன…
-
- 1 reply
- 578 views
- 1 follower
-
-
யாழில் புதிய திட்டங்களுடன் கால் பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்..!! குவியும் வாழ்த்துக்கள்.! புதிய திட்டங்களுடன் தாயகத்தில் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்.யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர். கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெய ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார். …
-
- 2 replies
- 810 views
- 1 follower
-
-
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கஞ்சா விவகாரம் : அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது By T. SARANYA 13 JAN, 2023 | 04:22 PM (எம்.எப்.எம்.பஸீர்) மொனராகலைக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அத்திமலை, பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.சஞ்சய் தர்மதாசவையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த கஞ்சா செடிகள், கடந்த 6 ஆம் திகதி சுற்றிவளைப்பொன்றின் போது கைப்பற்றப்பட்டவை எனவும், அதனை அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரியே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் பணிப்பில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்த…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
தமிழர்களின் அரசியல் போராட்டம் வெற்றியடைய பேராதரவு தாருங்கள் – சென்னையில் சுமந்திரன் கோரிக்கை 75வருடகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இந்த ஆண்டு ஏற்படுத்துவதற்காக முயன்று வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களது அரசியல் போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில் வியாழக்கிழமை (12) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், அயலக தமிழர் தின நிகழ்வானது உலகெங்கும் வாழும் தமிழர்களுக…
-
- 7 replies
- 995 views
-
-
5 தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பில் புதிய கூட்டணி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையை கோரவும் முஸ்தீபு 10 JAN, 2023 | 09:13 PM (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன. அத்துடன், இத்தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உரிமையை தம்வசம் கோர…
-
- 27 replies
- 1.5k views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்தனர் அனைத்து இனத்தையும் சேர்ந்த பொதுமக்களை அதிகாரிகளை கொலை செய்தனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை மூன்று தசாப்தகாலமாக அவர்களின் அநீதியை எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவிற்கு தீர்மானம் எடுப்பதற்கான இறைமையுடன் கூடிய உரிமையுள்ள அதேவேளை தகவல்களை ஆராயும் போது இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இருவகையான தராதரங்கள் காணப்படுவது குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கனடாவின் தீர்மானம் - கவலையில் நாமல் | Virakesa…
-
- 0 replies
- 691 views
-
-
இலங்கை அரசியல்வாதிகளின் தவறால் மலையக மக்கள் புறக்கணிக்கப்பா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்ஜன் அருண் பிரசாத் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழர் பிரச்னைக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு முன்னதாக தீர்வை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சர்வகட்சி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் கட்சிகளை அழைத்து அண்மையிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். தமிழர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைகளில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர…
-
- 1 reply
- 659 views
- 1 follower
-
-
200 மில்லியன் ரூபா செலவில் 75 ஆவது சுதந்திரதின ஏற்பாடுகள் : பிரதான நிகழ்வில் ஜனாதிபதியின் உரை இல்லை By T. SARANYA 12 JAN, 2023 | 05:13 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , 200 மில்லியன் ரூபா செலவில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளது. மேலும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய் சங்கர் உள்ளிட்ட 400 இராஜதந்திரிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளை , வைபவத்தின் போது ஜனாதிபதியின் விசேட உரை இடம…
-
- 7 replies
- 798 views
- 1 follower
-
-
தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்! இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து பேரணியாகச் சென்று மகஜர்களை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையளித்தனர். https://athavannews.com/2023/1319977
-
- 0 replies
- 295 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில்…
-
- 0 replies
- 568 views
-
-
மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்! யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவைத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் …
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மன்னாரில் ஆதரவாளர்களுடன் சந்திப்பு By Nanthini 13 Jan, 2023 | 11:31 AM இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு நேற்று வியாழக்கிழமை (12) மாலை விஜயம் செய்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான இக்கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எங…
-
- 0 replies
- 760 views
-
-
முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்! முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். நேற்று (12) இரவு அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 74 ஆவது வயதில் காலமானார். பாராளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், நீதி பிரதி அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவர் மற்றும் அரசால் நடத்தப்படும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் என பல பதவிகளை அவர் வகித்துள்ளார். …
-
- 0 replies
- 558 views
-
-
தமிழ்க்கட்சிகள் சேர்ந்திருந்து மக்களுக்கு என்ன செய்தார்கள்? - அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வி By T. Saranya 12 Jan, 2023 | 10:49 AM தமிழ்க்கட்சிகள் கடந்த 20 வருடமாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள், தற்போது இவர்கள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள் ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும், சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத்தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைமை ஒருகிணைப்பாளருமான ஜெயா சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்…
-
- 3 replies
- 795 views
-
-
நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை - இலங்கை மின்சார சபை By DIGITAL DESK 5 12 JAN, 2023 | 05:24 PM (இராஜதுரை ஹஷான்) 24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும். நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்கட்டமைப்பு…
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி 4 ஆவது நாளாக தொடரும்உண்ணாவிரதப் போராட்டம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் ஆரம்பித்த தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. நீராகாரம் உணவு ஏதுமின்றி ஒன்பதாம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகின்ற நிலைமையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய தினம் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி புதுக்…
-
- 1 reply
- 261 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட யாழ். கலாசார நிலையம் பெப்ரவரி 11ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 75ஆவது சுதந்திர தின வைபவத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் வினவியபோது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. எமது வலியுறுத்தலின் பேரில், இரண்டு வர…
-
- 0 replies
- 316 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார். மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேட…
-
- 2 replies
- 841 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல் By DIGITAL DESK 5 12 JAN, 2023 | 01:12 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (12) நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது. மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் குறித்த நினைவேந்தலில் நினைவுகூரப்பட்டதோடு 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவும் இந்தியாவும் இணங்கவேண்டும் கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்…
-
- 1 reply
- 301 views
- 1 follower
-