Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று ம…

  2. மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பினருக்கு டக்ளஸ் விடுக்கும் அழைப்பு! மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் அரசியல் சூழலை த…

  3. முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு By T. SARANYA 29 OCT, 2022 | 11:08 AM (எம்.மனோசித்ரா) சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய நவம்பர் 15 ஆம் திகதி முதல் , டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தையே பொது மன்னிப்பு காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக் கொள்ள முடியும் என்றும் மேலும் ஏதேனும் செலுத்…

  4. பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு 1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரபிரகாஷ் அப்போது முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதால் அவர் மரணித்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை…

  5. அச்சுவேலியில் சித்த விஷேட சிகிச்சை கட்டண பிரிவு- மருந்து விற்பனை நிலையம் திறந்து வைப்பு! அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில், சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட இவை, இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந…

  6. யாழ். மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல்- போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம்! பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடை விலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டு முகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயற்றிட்டமானது வடக்கு கிழக்கு மல…

  7. போதைப்பொருள் கடத்தல் : 12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை! வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார். https://athavannews.com/2022/1307…

  8. இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானமாக இருக்கக்கூடாது – அரசாங்கம் இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதேவேளை இலங்கை எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தி…

  9. பொலிஸ் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் 15 சிறுவன் காயம் By RAJEEBAN 28 OCT, 2022 | 08:56 PM மாத்தறை, திஹகொட பகுதியில் நபர் ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கியதில் அப்பகுதியில் நின்ற 15 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கி சன்னம் பட்டு காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போது மூன்று பேர் தப்பியோடிய நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போதே நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிச…

  10. இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை By T. SARANYA 28 OCT, 2022 | 04:25 PM (நா.தனுஜா) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் அது மனித உரிமை ஆணைக்குழுவின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி உள்ளடங்கலாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் குழு நேற்று முன்தின…

  11. சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் குறித்து எச்சரிக்கை ! By T. SARANYA 28 OCT, 2022 | 02:55 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறுவர்கள் மத்தியில் இன்புலுவன்சா நோய் அதிகளவில் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் நோய் அறிகுறி உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமல் இன்புளுவன்சா நாேயின் பிரதான அறிகுறிகளாகும். மழையுடனான காலநிலை மற்றும் குளிர் காரணமாக இந்த நோய் பரவுவதற்கு பிரதான காரணமாகும். அதனால் இவ்வாறான நோய் அறிகுறிகள் உள்ள சிறுவர்களை பாடச…

  12. ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி அறிவுறுத்து பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு அந்தநாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது. இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும் வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிய க…

  13. கோட்டாவுக்காக ஆஜராவதில்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்ட மா அதிபர் By T. SARANYA 28 OCT, 2022 | 10:15 AM (எம்.எப்.எம்.பஸீர்) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை இழிவளவாக்கி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை ஊடாக அரசு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் ஆஜராக போவதில்லை என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று (27) அறிவித்தார். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமாதிபர் சார்பில்…

  14. பாடசாலை மாணவர்கள் உட்பட 342 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 27 OCT, 2022 | 05:38 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வருடத்த…

  15. யாழ். செம்மணி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க உதவி கோரல்! யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின்னுலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பைக் கோர மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக செம்மணி மயான பரிபாலனசபையின் தலைவர் லயன் சி. இலட்சுமிகாந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக் குறிப்பில், 2010ஆம் ஆண்டில் செம்மணி மயான பரிபாலனசபையின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பொது மக்கள்,தொழில்முனைவோர்,மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 60 இலட்சம் ரூபா செலவில் மயானம் புனரமைக்கப்பட்டது. இதுவரை விறகையே எரிபொருளாகக் கொண்டு இம்மயானம் இயங்கி வருகின்றது.தற்போது சூ…

  16. இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் அரச நியமனங்களில் உள்வாங்க தீர்மானம்! அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது குறித்து இன்று (வியாழக்கிழமை) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். …

  17. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக உயரடுக்கு பிரிவில் 226 பேர் உள்ளனர் -தலதா அத்துகோரள முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 226 பேர் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எலைட் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6,000 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் இந்த 6000 பேரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் பல விடயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதிக…

  18. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நமது அமைப்பு நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பு அல்ல. தீ மூட்டுவது எளிது, ஆனால் அதை அணைப்பது கடினம். தேர்தலுக்கு கூட எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1307452

  19. நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் – நாமல் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் புத்தளம் – ஆனமடுவ தொகுதிக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டுமொரு தடவை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் வியாபாரிகளிடம் அதிக வரியை அறிவிட்டால், அந்த வியாபாரம் வீழ்ச்சியடைவதைத் தவிர்க…

  20. காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் தீக்கிரை! அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரையாக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக இன்று (வியாழக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறகளுக்கு அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மேலதிக விபரங்கள் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அல…

  21. காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பில் போராட்டம் 27 OCT, 2022 | 09:41 PM காணாமல்போனோரை நினைவுகூருவதற்கான தேசிய தினத்தின் 32 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (27) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. (படங்கள் ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/138551

  22. குருந்தூர் மலை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்க முடியாது - மெதகொட தம்மானந்த தேரர் By T. SARANYA 27 OCT, 2022 | 12:13 PM (இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.குருந்தூர் மலை பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார். பெபிலியான சுனேத்ரா தேவி மஹா பிரிவெனா விகாரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  23. இனங்களுக்கிடையிலான சமாதானம், சகவாழ்விற்கான தேவை மீக தீவிரமாக உணரப்பட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன By T. SARANYA 27 OCT, 2022 | 01:47 PM (எம்.மனோசித்ரா) இனங்களுக்கிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தேவை வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் மிக தீவிரமாக உணரப்படுகிறது. அதற்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். நேற்று புதன்கிழமை ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 105 ஆவது ஹெர்மன்லூஸ், டி சொய்சா சவால் கிண்ணம் - 2022 த…

  24. பெண்களை அச்சுறுத்தி கொள்ளையிடும் வத்தளை சூட்டி கைது ! 27 OCT, 2022 | 05:10 PM முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசம் அணிந்து வீடுகளுக்குள் நுழைந்து பெண்களை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் வத்தளை சூட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (26) களுத்துறை குற்றப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, மஹேன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வாலான பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் நுழைந்து பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தப்பி…

  25. 1.8 பில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கும் சீனா By T. SARANYA 27 OCT, 2022 | 04:42 PM (எம்.மனோசித்ரா) சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் இரு விமானங்கள் ஊடாக இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தன. சீனா நன்கொடையாக வழங்கியுள்ள இந்த மருந்துகளின் பெருமதி 1.8 பில்லியன் ரூபாய் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சீனா 1.2 பில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தவற்றில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பலவும் உள்ளடங்குவதாகத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.