ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
15 Sep, 2025 | 11:03 AM கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டன…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜிதஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித …
-
- 0 replies
- 128 views
-
-
யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது! ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1447160
-
- 0 replies
- 118 views
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 12:38 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மேலும் அவர் குறிப்பிடுகையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான…
-
-
- 9 replies
- 653 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 05:11 PM மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ப…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
Published By: Vishnu 14 Sep, 2025 | 07:12 PM இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்து…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போ…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
10 AUG, 2025 | 09:19 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்…
-
- 7 replies
- 315 views
- 1 follower
-
-
13 Sep, 2025 | 01:55 PM (எம்.மனோசித்ரா) கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள பாடசாலைகள் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு! 10 Sep, 2025 | 09:58 AM யாழ்ப்பாணம், நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது. நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கர…
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By: Priyatharshan 08 Sep, 2025 | 05:17 PM அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இந்த பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் நிமித்தம் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இலங்கை விமானப்படையின் அதிகரிகளுடன் இணைந்துக் கொண்டார். பேரனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் நிமித்தம் செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடக்கும் இந்த 5-நாள் பல்தரப்பு நிகழ்வானது, சுமார் 90 அமெரிக்க மற்றும் 120 இலங்கை விமானப்படை வீரர்களை ஒன்றிணைப்பதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப…
-
- 1 reply
- 128 views
- 1 follower
-
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்! கல்முனை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் . திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்டார். மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்…
-
-
- 14 replies
- 903 views
- 2 followers
-
-
14 Sep, 2025 | 12:24 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. மேலும் சில கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டு விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225045
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி! மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது. அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உ…
-
- 0 replies
- 165 views
-
-
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை…
-
- 0 replies
- 123 views
-
-
தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். சாணக்கியன், ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் இது உத்தியோகபூர்வ சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல…
-
- 1 reply
- 182 views
-
-
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல் 14 September 2025 நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்களிக்கும் உரிமை அரசியலமை…
-
- 0 replies
- 104 views
-
-
இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில் 14 September 2025 இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ…
-
- 0 replies
- 156 views
-
-
பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருந்த சுமந்திரன் ஒரு அப்பட்டமான பொய்யை கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்ற கருத்தை சுமந்திரன் கூறியதாக சுகாஷ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். Tamilwinஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதே...இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணைய…
-
-
- 9 replies
- 587 views
- 1 follower
-
-
13 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின…
-
- 3 replies
- 358 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 10:35 AM இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் கா…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல் சர்வதேச விசாரணை ஒன்று முடிவடைந்ததா? என்பது சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் பொய்யான அவதூறுகள் கொட்ட வேண்டிய தேவையில்லை, அது ஒரு சட்டத்தரணிக்கு அழகுமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘மக்களை நான் தவறாக வழி நடத்துவதாக நீங்கள் (சுமந்திரன்) குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது.மக்களைத் தவறாக வழிநடத்துவது நானா?நீங்களா?’ என சுமந்திரனிடம் சுகாஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு பதில் வழங்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவி…
-
- 1 reply
- 220 views
-
-
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார…
-
-
- 11 replies
- 483 views
- 2 followers
-