Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) கூடுகிறது நாடாளுமன்றம்! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றம் மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில், நாளைய அமர்வு நேரத்தின்போது நாடாளுமன்ற வளாகம் மற்றும் கட்டடத்தொகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் கடந்த 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், நாளைய அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்க…

  2. அரசியல் சலசலப்புகள் இடையே கூடும் நாடாளுமன்றம் நான்கு நாட்கள் தொடரும்! April 20, 2021 இலங்கையின் ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடேயே தொடரும் பனிப் போரிடையே, நாடாளுமன்ற அமர்வுகளை இன்று (20.04.21) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19.04.21) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதியிலிருந்து 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்க…

  3. அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்து TNAக்கும் SLMCக்கும் இடையில் பேச்சுவார்த்தை அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இன்றைய தினம் இரு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டமாக இன்றைய பேச்சுவார்த்தை கருதப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந…

  4. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜெனீவா பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி:- 18 நவம்பர் 2015 நாட்டில் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற சர்வகட்சிப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறிதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நட்டஈடு வழங்குதல் , …

  5. அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே விசாரணைப் பொறிமுறைமை அமையும் - ஜனாதிபதி நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே அனைத்து விசாரணைப் பொறிமுறைமைகளும் அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான அனைத்து நீதிமன்ற விசாரணைகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட வகையிலேயே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்டத்தரணிகள் கடமையாற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்யாது புதிய சர்வதேச நீதிமன்றமொன்றை அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் ரீதியாகவும் இந்த விடயம் மிகவும் சவால் மிக…

  6. அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் செயற்படக் கூடாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான நடவடிக்கைகள் மிக நிதானமாக எடுக்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகவும் பாரதூரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமேன கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். http://www.seithy.com/bre…

  7. அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள …

  8. அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பிலும் இவ்வாறு முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விரிவான அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளித்து முழு அளவில் அரசியல் சாசனம் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி வெற்றியீட்டக்கூடிய இயலுமை அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது…

  9. அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார். http://glob…

  10. அரசியல் சாசனம் பற்றி வன்னி, மலையக பொதுமக்கள் கவலைப்படுவதில்லை – பொதுபல சேனா குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு அரசியல் சாசனம் பற்றி வன்னி அல்லது மலையக பொதுமக்கள் கவலைப்படுவதில்லை என பொதுபல சோன இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 17ம், 18ம் மற்றும் 13ம் திருத்தச் சட்டம் பற்றி பொதுமக்கள் பற்றி பொதுமக்களுக்கு பெரிதாக கவலையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன திருத்தங்களை விடவும் பொதுமக்களுக்கு வேறும் பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் வாழ்வது தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை…

  11. அரசியல் சாணாக்கியத்துடன் சர்வதேசத்தை அணைத்துச் செயற்பட வேண்டும் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்துடன் நம்ப நட நம்பி நடவாதே என்பது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆர்.ஜெயசேகரத்தின் பதவிப் பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …

  12. அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை, எனவே தயவு செய்து அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை (9) தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது சங்கத்தின் பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி திருக்கோவில் விநாயகபுரத்தில…

  13. அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை விளிம்பில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் சுதந்திரம் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கை இருப்பதாக சுதந்திர இல்லம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரம் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அறிக்கைகளில் ‘மிகவும் மோசமான நாடுகள்’ எனும் தலைப்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகவும் மோசமான எட்டு நாடுகளின் பட்டியலில் .................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4526.html

    • 0 replies
    • 1.1k views
  14. அரசியல் சுயநலத்திற்காக மக்களை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயநலத்திற்காக மக்களை பகடைக்காய்களாக்குவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் கையாளப்படுமானால் இனவாத பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளியெறிந்துவிடமுடியும். இனரீதியான, மதரீதியான வன்முறைகளை தூண்டுபவர்கள் சரியான முறையில் இனங்காணப்பட்டு கைதுசெய…

  15. அரசியல் சூதாட்டத்திற்கு அரச ஊழியர்களின் உரிமைகளா? ஏனக்கேள்வியெழுப்பியபடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களில் மூவர் உள்ளுராட்சி மன்றங்களில் இருந்து சுகாதார திணைகளத்திற்கு இடம் மாற்றப்பட்டதை கண்டித்து கடந்த 70 நாட்களுக்கு மேலாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்ஜி.ஏ.சந்திரசிறி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி. சத்தியலிங்கம்,பேரவையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றோர் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் த…

  16. அரசியல் சூழ்ச்சியை அங்கீகரித்தால் ரத்தக்களரி ஏற்படும்: ஜே.வி.பி. எச்சரிக்கை நாட்டில் ஒரு அரசியல் சூழ்ச்சியே ஏற்பட்டுள்ளதென்றும், மீண்டும் ஒரு தடவை அதனை அங்கீகரித்தால் நாட்டில் ரத்தக்களரி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்றும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”ந…

  17. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவி…

  18. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது – படையினருக்கு எச்சரிக்கை Oct 31, 2019by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் எவரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “இராணுவ மற்றும் காவல்துறையினர், தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர, வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை. சேவையில் உள்ள, ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், சீருடையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிரு…

    • 0 replies
    • 203 views
  19. அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றார் சஜித்! முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளார். இதற்கயை கொழும்பு 2 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சஜித்திற்கு நெருக்கமானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது எதிர்கட்சி தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இன்று முதல், நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், மக்களை சந்தித்து பேச சஜித் திட்டமிட்டுள்ளதாகவ…

  20. அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது, துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்-சிவாஜிலிங்கம் குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறுகையில், “மாவீரர் நாளை அனுஷ…

  21. அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல்போனமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றார் By RAJEEBAN 04 SEP, 2022 | 10:13 AM ஏபி பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழுவாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பாட்டாளர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதிக்கு இலங்கையின் அரசமைப்பு வழங்கியுள்ள விடுபாட்டுரிமை தற்போது அவருக்கு இல்லாததன் காரணமாக அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். த…

  22. அரசியல் செல்வாக்கில் தூதுவர்களானவர்களுக்கு ஆப்பு வைக்கிறார் மங்கள சமரவீர JAN 16, 2015 | 3:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாகத் தமது பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரவுள்ளார். அரசியல் செல்வாக்கில் இராஜதந்திரப் பதவிகளைப் பெற்றவர்கள் தாமாகப் பதவி விலகுவதற்கு ஒருவார காலஅவகாசத்தை மங்கள சமரவீர வழங்கவிருக்கிறார். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலர் சித்ராங்கனி வாகீஸ்வரா பொறுப்பேற்றதும், அரசியல் செல்வாக்கில் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும், கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்படவுள்ளனர். எனி…

  23. அரசியல் தஞ்ச கோரிக்கையை சர்வதேசம் நிராகரிக்க கூடாது | அனந்தி சசிதரன்

  24. அரசியல் தஞ்சம் கோரிய சீனப் பிரஜை இலங்கையில் தங்கியிருக்க அனுமதி! Published on October 18, 2011-3:31 am இலங்கையில் அரசியல் புகலிடம் கோரிய சீனப் பிரஜையொருவர் இலங்கையில் தங்கியிருக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். செல்லுபடியான விஸா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்தது. பான் ஜுன் எனும் இந்நபர் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸாருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுப்பிய கடிதமொன்றை கருத்திற்கொண்ட நீதவான் லங்கா ஜயரட்ன இந்நபரை விடுதலை செய்வதாக அறிவித்தார். அரசியல் புகலிடம் கோருவோருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாட்டு…

  25. அரசியல் தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் மோர்லாண்ட சிட்டி கவுன்சில் அவுஸ்திரேலியா வரும் அகதிகளுக்கும், அரசியல் தஞ்சம்கோருபவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்படும் என்று அந்நாட்டின் மோர்லாண்ட் நகர கவுன்சில் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான மெல்பேர்ணில் இந்த மோர்லாண்ட் நகர கவுன்சில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்தும் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகளை வரவேற்பதாக மோர்லாண்ட் நகர கவுன்சில் அறிவித்துள்ளது.இது தொடர்பான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள மோர்லாண்ட் நகர கவுன்சில், அகதிகள் மற்றும் அரசியல் தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் பதாகை ஒன்றையும் கவுன்சில் அலுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.