Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்த…

  2. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை இடம்பெற்ற போதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்கும…

  3. இனியும் பொறுமை காக்க முடியாது; ரணிலை சுற்றிவளைப்போம் – மரிக்கார் எம்.பி. எச்சரிக்கை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் நிலவும் பட்டினி நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி விக்ரமசிங்கவை அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். . “நாங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருப்போம், அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வளைப்போம், அவரை நகர அனுமதிக்காமல் ஒரு இடத்தில் அடைத்து வைப்போம்” என்று மரிக்கார் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். குட…

  4. ஜனாதிபதி ரணில் ஜப்பானில் பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசி…

  5. இலங்கை மின் தடை: தரமற்ற கச்சா எண்ணெயால் தத்தளிக்கும் நாடு - மின்சார உற்பத்தி பாதிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PUBLIC UTILITIES COMMISSION படக்குறிப்பு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றதினால், மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின் தடை நீடிக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ''கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, பெற்றுக்கொள்ளப்படும் ஃபேர்னஸ் எண்ணெய்யை, வெஸ்கொஸ்ட் மின் உற்பத்தி நிலையத்திற…

  6. ரணிலுக்கு எதிராக... ஜப்பானில், போராட்டம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தங்கியிருக்கும் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1301544

  7. வடக்கில்... சிறுவர் இல்லங்களுக்கு, தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு ! பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார். அரசாங்கம் எதிர்க…

  8. இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள் By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 10:26 AM இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடிய…

  9. பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் ! By T. SARANYA 27 SEP, 2022 | 10:02 AM நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் 3வது அனல் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலையின் 900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி ஆலையின் அலகு ஒன்று இவ்வாறு பழுதடைந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததுடன் மற…

  10. "தேசிய பேரவை" நாளை மறுதினம், முதல் தடவையாக.. கூடவுள்ளது – சபாநாயகர். தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் என்றும் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர்,அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன்படி, டக்ளஸ் …

  11. நாடு முழுவதும்... சுமார் 2,000 பேக்கரிகள் மூடல் ! மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கூறினார். இதன் காரணமாக இத் தொழிலை நம்பியுள்ள சுமார் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1301436

  12. ஈஸ்டர் தாக்குதலின், சூத்திரதாரி... சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட, நால்வர் பிணையில் விடுதலை. ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர்களை தலா 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்தோடு, அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு – வவுனாதீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்த…

  13. கோட்டாவினால் அறிமுகப் படுத்தப்பட்ட... ‘போராட்டத் தளம்’ தவறான இடத்தில் உள்ளது – பாதுகாப்புச் செயலாளர். இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘போராட்டத் தளம்’ தவறான இடத்தில் உள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘போராட்ட தளம் தவறான இடத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதை தாங்…

  14. கோட்டாவின் மனைவியிடம் தொலைபேசியில் மிரட்டி கப்பம் கோரியவர் கைது By T YUWARAJ 26 SEP, 2022 | 09:25 PM (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைத்து,மிரட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபரை சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. கொலன்னாவை பகுதியில் அழகு கலை நிலையம் ஒன்றில் சேவையாற்றும் இளைஞர் ஒருவரையே சி.ஐ.டி.யினர் இவ்வாறு கைது செய்துள்ளனர். சந்தேக நபரை கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்ததையடுத்து அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலர் சு…

  15. பிறந்து 7 நாட்களேயான கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த இருவர் கைது By T YUWARAJ 26 SEP, 2022 | 09:54 PM பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை 50,000 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை குழந்தையின் தந்தையால், விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குழந்தையின் தாய் மேற்கொண்ட முறைப்பாட்டுகமைய, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குழந்தையை விற்பனை உதவியதாக கூறப்படும் தாதி ஒருவரின் கணவரும், அதனை விலைக்கு வாங்கிய பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக…

  16. குருந்தூர்மலை பிரதேசம், தமிழர்களுடையதல்ல. – கொழும்பில் ஆர்ப்பாட்டம். முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301320

    • 6 replies
    • 795 views
  17. தனியார் வங்கியில்... கொள்ளை : இரு சந்தேக நபர்கள், ஆயுதங்களுடன் கைது. தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301382

  18. இரு பேருந்துகள் மோதி, விபத்து – 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி! ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஹொரண குருகொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பேருந்து, இலிபா பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிற்சாலையின் பேருந்து, பாடசாலையருகே நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்தின் பி…

  19. திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு By VISHNU 26 SEP, 2022 | 01:28 PM K.B.சதீஸ் தியாகி திலீபனின் 35 வது நினைவு தினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (26) அனுஸ்டிக்கபட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர் கலந்து கொண்டனர். திலீபனின் நினைவு த…

    • 0 replies
    • 187 views
  20. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் திலீபனின் 35 ஆவது நினேவந்தல் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு By VISHNU 26 SEP, 2022 | 01:55 PM தியாகதீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று திங்கட்கிழமை (26) எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணவதிப்பிள்ளை குககுமரராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனின் உயிர்நீத்த காலை 10.48 மணிக்கு அவரின் திரு உருவ படத்திற்கு மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்…

    • 0 replies
    • 165 views
  21. தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:06 PM ( எம்.நியூட்டன்) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணி எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகர…

  22. இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எப்போது கிடைக்கும் - கடன் வழங்கிய நாடுகளுடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன? By RAJEEBAN 26 SEP, 2022 | 12:14 PM இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நிதி வழங்கிய நாடுகளுடனான சந்திப்பின்போது இலங்கை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய நாடுகளிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்கள் இன்னமும் கிடைக்காததால் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் உள்ளது இதன்…

  23. இலங்கையை விட்டு ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்வதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இது நாடு துரிதமாக வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் பல்கலைக்கழக கல்விக்கான அவசியமான வளங்கள் இலங்கையில் இல்லாததன் காரணமாக மக்கள் தமது சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/article/sri-lankans-going-abroad-paper-news-1664164441

  24. மாகாணசபை இயங்காத சூழலில், வடக்கிலுள்ள படையினருக்கு அரசகாணிகள் தாரைவார்ப்பு! *22 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க காணியில்லை *40 ஏக்கர் பாதுகாப்புத் தரப்பிடம் கையளிப்பு வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் முடி­வ­டைந்த பின்­னர் பாது­காப் ­புத் தரப்­பி­ன­ருக்கு 40 ஏக்­கர் அரச காணி­கள் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தி னூடாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, வடக்கு மாகாண காணித் திணைக்­க­ளம் வழங் ­கிய பதிலிருந்தே இந்த விட­யங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. வடக்கு மாகா­ணத்­தில் 22 ஆயி­ரம் குடும்­பங்­கள…

  25. ”இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக, பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும்” உள்நாட்டிலும் வெளியிலும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார் அமைச்சரின் முழுமையான உரை வருமாறு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தலைவர்களை ஒன்று கூடுகின்ற ஒரு அவையான ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். தற்போதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.