Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரத்மலானை... விமான நிலைய சேவைகள், இடை நிறுத்தம். சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையம் 220 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இதற்கமைய வாரத்திற்கு மூன்று மாலைதீவு விமானங்கள் அங்கு தரையிறங்கியதோடு தற்போது அந்த விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1299707

  2. பௌர்ணமி தினத்தன்று... விகாரைகளில், மின் விளக்குகளை அணைக்க... நடவடிக்கை. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று மின்விளக்குகளை அணைத்து மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மத்திய மாகாண மகா சங்க கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்துக்குரிய கலஹா சிறிசாந்த தேரர், ”விகாரைகளில் மின் கட்டணம் ஐந்தாறு மடங்கு அதிகரித்துள்ளது. எங்களது விகாரையின் மின் கட்டணம் இதுவரை 60,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வெசாக் போன்ற காலங்களில் ஆலயங்களை இருளில் மூழ்கடிக்கும் சதியா இத…

  3. உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் - 20 பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம் By T YUWARAJ 18 SEP, 2022 | 04:19 PM யாழ்ப்பாணம் உடுவில் தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினுள் நின்ற பனை மரங்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் 20 பனைகள் முற்றாக எரிந்து கருகியுள்ளன. யாழ்ப்பாணம் தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினை சூழ பனை மரங்கள் காணப்பட்டன. அவற்றுக்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர். பனை மரங்கள் திடீரென தீ பற்றி எரிவதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையை அடுத்து , அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். …

  4. திலீபன் வழியில் வருகிறோம் : ஊர்தி பவனி முல்லைத்தீவு நகரை சென்றடைந்தது By VISHNU 18 SEP, 2022 | 02:23 PM சண்முகம் தவசீலன் திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது. 15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது. முல்லைத்தீவு நகர் பகுதிக்கு வருகை தந்த ஊர்திக்கு முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். …

  5. நான் கூறுவதை திரிபுபடுத்துகிறார்கள் – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கஞ்சா என்பது ஒரு மருந்தாகும். அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர். கஞ்சா செய்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களில் நாங்கள் கூறுவதனை செய்தியாக போடுவதில்லை, ஏதாவது ஓர் சிறு பகுதியை மட்டும் போடுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். காவியன் https://thinakkural.lk/article/208904

    • 2 replies
    • 478 views
  6. கடன் பெறுவதற்கான கலந்துரையாடல் ரஷ்யாவின் எரிபொருள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=165758

  7. யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு ; 2 மாதங்களில் 134 பேருக்கு சிகிச்சை ! 18 Sep, 2022 | 01:38 PM யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவன…

    • 5 replies
    • 419 views
  8. ஒற்றுமைக்கட்டமைப்பான கூட்டமைப்பு கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் 17 Sep, 2022 | 10:54 AM “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன் முப்பத்தி நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1987இல் உருவாக்கப்பட்ட இந்திய, இலங்கை ஒப்பந்தம் மற்றும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஆகியவை, பிரதான போராட்ட அமைப்புகளின் பங்களிப்போ, ஆதரவோ இல்லாமலே தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் செல்திசையை முழுமைய…

  9. திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிப்பை... தடுத்து நிறுத்தக் கோரி, அடியவர்களின் யாத்திரை ஆரம்பம். திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று ( சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1299650

  10. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில்... இலங்கை தொடர்பாக, வாக்கெடுப்பை முன்னெடுக்க தீர்மானம். இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா தலைமையிலான 7 நாடுகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார். மேலும் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் ஏற்கனவே கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு ஐக்கிய நாடுகளின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/12…

  11. பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான ஐ.நா.வின் கரிசனையை நிராகரிக்க முடியாது - தயாசிறி By VISHNU 18 SEP, 2022 | 11:04 AM (எம்.மனோசித்ரா) பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள விடயங்களை நிராகரிக்க முடியாது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தவர்கே தற்போதைய அரசாங்கத்திலும் இருக்கின்றனர். எனவே தான் அரசாங்கம் இதனை மறுத்துள்ளது. ஆனால் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். …

  12. ஒவ்வொரு விவசாயிக்கும்... ஒரு மூட்டை, "யூரியா உரம்" இலவசம்! எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அகுனுகொலபொலஸவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிக்லாவில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உரம் ஒரு மூட்டை வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். https://athavannews.com/2022/1299627

  13. வடக்கு ஆளுநரின். உறுதிமொழியை அடுத்து... கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் நேற்று போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். சிறைச்சாலைக்கு சென்று, கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 11 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி எழுதிய கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார். அதனை சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடு…

  14. பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக... திலும் அமுனுகம, ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் இருந்த மூன்று நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நேற்று (சனிக்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இந்…

  15. விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா ? 18 SEP, 2022 | 07:32 AM விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வு முடிவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார். 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை மையப்படுத்தி, குறித்த செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. எனினும், இந்தச் செய்திகளின் உள்ளடக்கங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் ரத்னவீர கூறுகிறார். …

  16. பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை - பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன By T. SARANYA 17 SEP, 2022 | 04:26 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் , ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதன் படி புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதியும் , கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரையும் இடம்பெறும். பரீட்சை நடைபெறும் இத்தினங்களில்…

  17. இலங்கை - இந்திய இராஜதந்திரத்தொடர்புகள் ; 100 ஆவது வருடப்பூர்த்தியில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுடையும் - கோபால் பாக்லே By T. SARANYA 17 SEP, 2022 | 03:11 PM (நா.தனுஜா) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதாகவும், இருநாடுகளும் சுதந்திரமடைந்து 100 ஆவது வருடம் பூர்த்தியடையும் வேளையிலும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மிகவும் வலுவானதாகக் காணப்படும் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை நினைவுகூரும் விதமாக இலங்கை - இந்திய அமைப்பினால் கட…

  18. ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இலங்கை உள்ளது - ஜனாதிபதி By T. SARANYA 17 SEP, 2022 | 04:41 PM (எம்.மனோசித்ரா) இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர். கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், க…

  19. இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மைத்ரிபால 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட வகையில் எதிராளியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. …

  20. உக்ரேனில் ரஷ்யப் படையினரிடம் சிக்கியிருந்த இலங்கையர்கள் விடுவிப்பு! உக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ரஷ்யப் படைகள் அப்பகுதியை ஆக்கிரமித்ததில் இருந்து குறித்த இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் உக்ரேனில் கல்வி கற்கும் மாணவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்…

  21. சிறைச்சாலைகளில் நெரிசல்: 30 சிறைகளில் 24,000 கைதிகள் சிறைச்சாலைகள் நெரிசல் காரணமாக சிறைச்சாலைகளை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து 30 சிறைகளிலும் ஒரே நேரத்தில் 13,200 கைதிகளை அடைக்கக்கூடியவை, ஆனால் தற்போது 24,000 கைதிகள் இந்த வளாகங்களில் இருப்பதாகவும், இது கிட்டத்தட்ட 180% அதிகமாகும். அதன்படி, 2022 – 2023 ஆம் ஆண்டு உணவு வழங்குவதற்கு அரசாங்கம் ரூ.4.7 பில்லியன் செலவழிக்க வேண்டும். 24,000 கைதிகளில் 15,000 பேர் சந்தேகத்திற்குரியவர்கள் மற்றும் அவர்களில் 50% பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ச…

  22. நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – ஜனாதிபதி ரணில் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் ABC ஊடக வலையமைப்பின் ‘வெளிநாட்டு நிருபர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதியின் நேர்காணல் வருமாறு : கேள்வி – அண்மைக்காலமாக பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அது நெருக்கடியைத் தீர்க்குமா? ஜனாதிபதி – அரச சொத்துக்களை எரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து…

    • 3 replies
    • 252 views
  23. அதிகாரம் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம் 74 வருடங்களாக எல்லா அரசியல்வாதிகளும் நாட்டை அழித்ததாகவும், 225 பேரும் ஒரே மாதிரியானவர்கள் எனவும் பலர் குற்றம் சுமத்திய போதிலும், நாட்டின் ஜனநாயக வரலாற்றில் பாரம்பரிய எதிர்க்கட்சியிற்கு அப்பால் சென்று, அரச அதிகாரம் இருந்தோ அல்லது இல்லாமலோ மக்கள் சமூகத்தை பலப்படுத்த தற்போதைய எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார். இதற்காக தமக்கு அமைச்சுப் பதவிகளோ, சலுகைகளோ தேவையில்லை எனவும், எதிர்க்கட்சியில் இருந்தாலும், சலுகைகளை பொருட்படுத்தாமல் மக்களுக்காக முன் நிற்பதாகவும், மொனராகலை ரோயல் கல்லூரியின் பிள்ளைகளின் போக்குவரத்த…

  24. இருபாலை அகழ்வுப் பணிகள் நிறுத்தம் யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது. இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்தனர். குறித்த வீட்டில் புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரி இருந்தனர். நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற …

  25. தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு By RAJEEBAN 17 SEP, 2022 | 09:57 AM ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும், சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.