ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
அரசியல், படைத்துறை இராஜதந்திர பலத்தை வெளிப்படுத்திய புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 07:34 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பானது அரசியல், படைத்துறை இராஜதந்திர பலத்தை வெளிப்படுத்துகின்றது என்று விடுதலைப் புலிகளின் தூயவன் அரச அறிவியல் கல்லூரியின் முதல்வர் அரசண்ணா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விசுவமடுவில் இன்று மாலை இடம்பெற்றது. அதற்கு அடுத்ததாக இக்கலையரங்கு நிகழ்வு நடைபெறுகின்றது …
-
- 0 replies
- 652 views
-
-
மட்டக்களப்பு கெம்பஸ் சட்டவிரோதாக உருவாக்கப்பட்ட ஒன்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, இதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சுமத்தினார். மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்-பண-பலத்தை-ஹிஸ்புல்லாஹ்-பயன்படுத்தினார்-நலிந்த-ஜயதிஸ்ஸ/175-236428 பட்டிகளோ கம்பஸ் விவகாரம் ; ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறிக்கவும் முடியும் - ஜே.வி.பி. சட்டத்துக்கும் அரசியல் அமைப்பிற்கும் முரணாக அங்கீகாரம் இல்லாத வகையில் உர…
-
- 1 reply
- 775 views
-
-
அரசியல்கைதி ஆனந்தராஜா தப்பியோட்டம்! யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜா, வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சியை சேர்ந்த 37 வயதுடைய இராசையா ஆனந்தராஜா என்ற அரசியல் கைதியே நேற்றிரவு பத்து மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்று ள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜா, 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதன்பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2…
-
- 0 replies
- 368 views
-
-
அரசியல்கைதிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்கினால், படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டியிருக்கும்: 25 அக்டோபர் 2015 தமிழ் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அரசாங்கம் அரசியல் கைதிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்காது என சட்டஓழுங்கு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் திலக்மாரப்பன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்காது ஆனால் அவர்களுடைய பிரச்சினைகளிற்கு நவம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னர் தீர்வை காணும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு என எதுவும் இல்லை, நாங்கள் ஓவ்வொரு வழக்காக ஆராய்வோம், யாராவது உரிய ஆதாரங்களோ அல்லது குற்றச்சாட்டோ இல்லாமல் நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுதலைசெய்வோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 623 views
-
-
அரசியல்கைதிகளை ஆயுள்வரை சிறைவைத்திருக்கும் உத்தேசமா? அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் ஆரம்பித்திருக்கும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் பதினாறாவது நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அம்மூவரும் அனுஷ்டித்து வந்த உண்ணாவிரதம் நேற்றுமுன்தினம் காலையுடன் பதினைந்தாவது நாளை எட்டியதையடுத்து, தாங்கள் அருந்தி வந்த குடிநீரையும் அவர்கள் நிறுத்திக் கொண்டனர். இதன் காரணமாக அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து அம்மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்…
-
- 0 replies
- 260 views
-
-
[size=4]சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இன்னமும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனமான, சின்ஹுவாவுக்கு நேற்று அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரஇறுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் கலந்துரையாடியிருந்தார். ஆனால் எந்த முடிவோ முன்னேற…
-
- 0 replies
- 491 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம்உண்மையான அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான தமது கவலைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் நடத்தவுள்ள சந்திப்பின் போதே, அரசியல்தீர்வு பற்றிய தமது கவலைகளை அவரிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தம்முடன் சிறிலங்கா அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பேச்சுக்களை தொடங்கிய போதும், எந்த முன்னேற…
-
- 0 replies
- 630 views
-
-
சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் அரசியல் தீர்வு பற்றிய எந்த சமிக்ஞையையும் காண முடியவில்லை என்று பிரித்தானிய நாளேடான ‘இன்டிபென்டன்ட்‘டில் இன்று வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில், 1995 தொடக்கம் போரின் இறுதிக்கட்டம் வரை- போர் சாராத பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியதாக ‘இன்டிபென்டன்ட்‘ நாளேடு கூறியுள்ளது. தனது பெயரையோ, செவ்வி வழங்கிய இடத்தையோ குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் வகித்த பங்கு காரணமாக அடுத்த ஆண்டில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார். “அரசியல் தீர்…
-
- 0 replies
- 453 views
-
-
சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் அரசியல் தீர்வு பற்றிய எந்த சமிக்ஞையையும் காண முடியவில்லை என்று பிரித்தானிய நாளேடான ‘இன்டிபென்டன்ட்‘டில் இன்று வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில், 1995 தொடக்கம் போரின் இறுதிக்கட்டம் வரை- போர் சாராத பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியதாக ‘இன்டிபென்டன்ட்‘ நாளேடு கூறியுள்ளது. தனது பெயரையோ, செவ்வி வழங்கிய இடத்தையோ குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் வகித்த பங்கு காரணமாக அடுத்த ஆண்டில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார். “அரசியல் தீர்…
-
- 4 replies
- 597 views
-
-
[size=3][size=4]இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசை நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியா கரிசனை கொண்டுள்ள சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு விரைவாக அரசியல்தீர்வு காணும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. அதேவேளை, போரினால், இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்…
-
- 0 replies
- 690 views
-
-
அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக் [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 06:50.03 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது; விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்க…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிசன் கிளிநொச்சியில் இன்று(01.06.2006) சந்தித்து கலந்துரையாடினார். தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் முற்பகல் 10.30 தொடக்கம் 11.30 வரை இச் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணால் பின்வருமாறு, கேள்வி:- இந்த சந்திப்பு தொடர்பாக? பதில்:- கண்காணிப்புக்குழு தலைவர் கடந்த மூன்று தினங்களாக இங்கு தங்கியிருந்து நிலைமைகளை பார்வையிட்டார். எமது தளபதிகள், மக்களை சந்தித்து பேசியிருக்கின்றார். இன்று அவர் எம்மை சந்தித்தார். யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் கண்காணிப்புக…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசியல்துறைப் பொறுப்பாளர், சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் தலைவர் சந்திப்பு [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 16:42 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை யுனிசெஃப் அமைப்பின் தலைவர் ஜோ அன்ன வன்கெர்பன் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதுக்கு குறைந்தோரை தமது அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ப்பதனை முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். வடபகுதியில் வயது குறைந்த 135 சிறார்களை விடுதலைப் புலிகள் சேர்த்துள்ளனர் என்ற யுனிசெஃப்பின் புள்ளிவிவரம் குறித்து…
-
- 1 reply
- 883 views
-
-
அரசியல்த்துறைப் பொறுப்பாளர் - மன்னார் ஆயர் சந்திப்பு (படங்கள் இணைப்பு) மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், தமிழீழ அரசியல்த்துறைப் பொறுபபாளர் நடேசனை இன்று சந்தித்து மன்னார் மக்களின் நிலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். மதியம் ஒரு மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள்வரை நீடித்திருந்ததாக தமிழீழ சமாதான செயலகம் அறிவித்துள்ளது. மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.net/
-
- 0 replies
- 946 views
-
-
Published By: VISHNU 27 FEB, 2025 | 03:52 AM (நா.தனுஜா) அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜய…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
அரசியல்வாதி ஒருவரும் எஸ்.ஐயும் கைதாகலாம்! புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் அரசியல்வாதி ஒருவரும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைதாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய லலித் ஏ.ஜெயசிங்க நேற்றுக் கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவர் குற்றப் புலனாய்வுத் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அவரிடம் மேலதிக விசாரணை நடைபெறுகின்றது. கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்றே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்…
-
- 0 replies
- 359 views
-
-
அரசியல்வாதிகளதும், அரச அதிகாரிகளதும் அடாவடித்தனங்களின் இருப்பிடமாக மாறுகிறதா வடக்கு? சிரேஷ்ட உத்தியோகத்தரின் துன்புறுத்தலால் பணியை துறக்கும் பட்டதாரிப் பயிலுனர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் பணி புரியும்ப சிரேஷ்ட பெண் முகாமைத்துவ உத்தியோகத்தர் ஒருவரின் துன்புறுத்தல் காரணமாக பட்டதாரிப் பயிலுனர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜினாமா கடிதத்தை மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் கையளித்துள்ளார். குறித்த பெண் பட்டதாரிப் பயிலுனர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் பட்டதாரிப் பயிலுனராக நியமனம் செய்யப்பட்டு முல்லைத்தீவு விவசாயத் திணைக்கத்திற்குப்…
-
- 0 replies
- 303 views
-
-
அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது – வடமாகாண ஆளுநர் அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார் 17-01-2017 செவ்வாய்க்கிழமை சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணம் செலவழிக்கப்படாமல் திரும்பி…
-
- 1 reply
- 454 views
-
-
-சுமித்தி தங்கராசா அரசியல் வாதிகளின் கருத்துக்களை கேட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்பு படைப்பிரிவினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளிக்கும் நிகழ்வு யாழ். உரும்பிராய் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், அரசியல் வாதிகள் தங்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் நன்மைகளை கருதுவதில்லை. மக்களாகிய நீங்கள் அரசியல் வாதிகளிடம் ஏமாறாமல் அவர்களின் செயற்பாட்டினை உணர்ந்து நடந்து கொள்ள வேணடும். அது உங்களின் பொறுப்பாகும் என்றார். அதேவேளை, எமது…
-
- 1 reply
- 672 views
-
-
அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். தெரிவிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத் திரிபால சிறிசேன வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சில…
-
- 0 replies
- 331 views
-
-
நேற்றைய தினம் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுதங்களுடன் வந்து குழப்பங்களை விளைவித்த காடையர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக பொலிசாரை கொழும்பு நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருக்கிறது. தமது கடமையைச் செய்யாமல் அரசியல் வாதிகளின் தாளத்திற்கு ஆடியதாக குற்றம் சாட்டிய கொழும்பு மஜிஸ்திரேற் நீதிபதி சம்பா ஜானகி றாஜரத்ன உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் நீதிமன்றத்தை தவறான வழியில் வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார். நேற்றைய தினம் நீதிமன்ற வளாகத்திற்கு சேதம் விளைவித்ததாகக் கூறி சரத் பொன்சேக்காவின் ஆதரவாளர்கள் 8 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதிவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 9 replies
- 719 views
-
-
அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் ‘சமாதானத்துக்கு எதிரானவை’ சண்முகம் தவசீலன் “அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே உள்ளது” என, மனித உரிமை செயற்பாட்டாளரும் இனவெறி மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான சர்வதேசத்தின் தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு - மாங்குளத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் சகவாழ்வு சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே காணப்படுகின்றது. மக்…
-
- 0 replies
- 163 views
-
-
அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க முடியாது! தகுதியானோருக்கு மட்டுமே வீட்டுத்திட்டம்! வீட்டுத் திட்டங்கள் எந்த அரசியல்வாதியினதும் பரிந்துரையின் பேரிலன்றி, அமைச்சின் சட்டத்துக்கு உட்பட்ட தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் குடாநாட்டின் அரசியல்வாதிகள் சிலர், தமது அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுவது குறித்துக் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறான முறைப்பாடுகள் எமது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் எந்த அரசி…
-
- 1 reply
- 196 views
-
-
அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் பொதுமக்களின் தொல்லைகளும் [30 - November - 2007] [Font Size - A - A - A] பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பொலிசாரும் முப்படையினரும் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளின் விளைவான கெடுபிடிகள் இன்று மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. சாதாரணமக்கள் எங்குசென்று முறையிட்டாலும் தீர்வுகாண முடியாததாக இருப்பதே இந்தப் பிரச்சினையின் பிரத்தியேகமான அம்சமாகும். தற்போதைய சூழ்நிலையில் இக்கெடுபிடிகள் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, தணிவதற்கான சாத்தியப்பாடு எதுவுமே கிடையாது. வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகளில் பொலிஸாரும் படையினரும் மேற்கொள்கின்ற சோதனைகளுக்குப் புறம்பாக, அதிமுக்கிய பிரமுகர்களின், அரசியல்வாதிகளின் வாகனத்தொடர…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாட்டின் முக்கிய நபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தற்போது வழங்கப்பட்டுவரும் பெரும் எடுப்பிலான பாதுகாப்பை குறைக்கும்படியும் அதற்கு செலவிடப்படும் பணத்தை வேறு தேவைகளுக்கு செலவிடலாம் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-