ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
குருந்தூர் மலை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்க முடியாது - மெதகொட தம்மானந்த தேரர் By T. SARANYA 27 OCT, 2022 | 12:13 PM (இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.குருந்தூர் மலை பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார். பெபிலியான சுனேத்ரா தேவி மஹா பிரிவெனா விகாரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 483 views
- 1 follower
-
-
இனங்களுக்கிடையிலான சமாதானம், சகவாழ்விற்கான தேவை மீக தீவிரமாக உணரப்பட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன By T. SARANYA 27 OCT, 2022 | 01:47 PM (எம்.மனோசித்ரா) இனங்களுக்கிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தேவை வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் மிக தீவிரமாக உணரப்படுகிறது. அதற்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். நேற்று புதன்கிழமை ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 105 ஆவது ஹெர்மன்லூஸ், டி சொய்சா சவால் கிண்ணம் - 2022 த…
-
- 1 reply
- 259 views
- 1 follower
-
-
பெண்களை அச்சுறுத்தி கொள்ளையிடும் வத்தளை சூட்டி கைது ! 27 OCT, 2022 | 05:10 PM முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசம் அணிந்து வீடுகளுக்குள் நுழைந்து பெண்களை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் வத்தளை சூட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (26) களுத்துறை குற்றப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, மஹேன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வாலான பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் நுழைந்து பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தப்பி…
-
- 1 reply
- 683 views
- 1 follower
-
-
1.8 பில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கும் சீனா By T. SARANYA 27 OCT, 2022 | 04:42 PM (எம்.மனோசித்ரா) சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் இரு விமானங்கள் ஊடாக இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தன. சீனா நன்கொடையாக வழங்கியுள்ள இந்த மருந்துகளின் பெருமதி 1.8 பில்லியன் ரூபாய் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சீனா 1.2 பில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தவற்றில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பலவும் உள்ளடங்குவதாகத்…
-
- 3 replies
- 753 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு! இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதன்படி, இந்த சந்திப்பில் மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, GSP+ வரிச்சலுகை , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 2 replies
- 391 views
-
-
கட்டுமானப் பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய தீர்மானம் By NANTHINI 27 OCT, 2022 | 04:26 PM (எம்.எம். சில்வெஸ்டர்) இரும்பு, டைல்ஸ், அலுமினியம் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கட்டுமானப் பொருட்கள் சம்பந்தமான வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்கள் கட்டுப்பாடின்றி, விலை அதிகரிப்பதில் தலையிடுமாறு கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்துக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், இந்த கடன் உதவித்திட்டத்தின்…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு மருந்து கலவையாளரை நியமிக்குமாறு கோரிக்கை 27 OCT, 2022 | 04:30 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சுமார் ஒரு மாத காலமாக மருந்து கலவையாளர் இல்லாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்றனர். முத்துஐயன்கட்டு உள்ளிட்ட தூர இடங்களில் இருந்தும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக பணம் செலுத்தி மக்கள் வைத்தியசாலைக்கு வந்தும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படும் By T. SARANYA 27 OCT, 2022 | 04:55 PM (இராஜதுரை ஹஷான்) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 14ஆம் திகதி சபையில் ஆற்றவுள்ளார்.வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. வரவு செலவு திட்டத்தின்ன் மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான க…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
18 வயதிற்கு குறைந்தோருக்கு மரண தண்டனை கூடாது : இளைஞனின் தண்டனையை மாற்றிய மேன் முறையீட்டு நீதிமன்றம் By T. SARANYA 27 OCT, 2022 | 04:47 PM (எம்.எப்.எம்.பஸீர்) இளைஞர் ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையாக மாற்றி மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை மையப்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. 'குற்றஞ்சாட்…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வகிக்கும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டை…
-
- 0 replies
- 196 views
-
-
பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை பயன்படுத்தினால் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வை காணலாம் - சஜித் By RAJEEBAN 27 OCT, 2022 | 02:56 PM பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை பயன்படுத்தினால் நாட்டின் மருந்து பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். பன்டோரா பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதே நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான வழி என அவர் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை மீட்பது மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உதவும் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் டொலர் பற்றாக்குறையே மருந்து தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணம் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
தமிழர்களின் தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம்! தவறவிட வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து "தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது" என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 'தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்' என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு "…
-
- 1 reply
- 264 views
-
-
என்னைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியானது - சந்திரிகா By Vishnu 26 Oct, 2022 | 09:26 PM (எம்.மனோசித்ரா) என்னைக் கொலை செய்ய முற்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை சிறையிலடைத்து வைத்திருப்பதால் எனது கண் மீளக் கிடைக்கப் போவதில்லை. அவர்களுக்கு தண்டனை வழங்கி 8 ஆண்டுகள் கடந்த போதே , அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பமாகக் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் …
-
- 1 reply
- 499 views
-
-
டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு களுத்துறை சிறைச்சாலையில் வைத்து 1998 ஆம் ஆண்டு தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கூரிய ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இருவருக்கு தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 22 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு பிரதிவாதி…
-
- 2 replies
- 198 views
-
-
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்காக வடமாகாணத்தில் நடமாடும் சேவை! இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நவம்பர் முதலாம் திகதி கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில…
-
- 0 replies
- 141 views
-
-
ரூ. 75 மில்லியன் சொத்துக் குவிப்பு : விமலுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்ல முடியாதென அறிவிப்பு By VISHNU 26 OCT, 2022 | 08:56 PM (எம்.எப்.எம்.பஸீர்) சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சொத்து சேர்த்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கினை முன்னெடுத்து செல்ல முடியாது என புதன்கிழமை ( 26) அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் அடிப்படை ஆட்சேபனங்களை முன் வைத்தனர். கொழும்பு மேல் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த விவகாரத்தின் குற்றப் பத்திரிகையை மையப்படுத்திய வழக்கை, ' முன் விளக்க மாநாட்டுக்கு ' திகதி குறித்து கொழும்பு ம…
-
- 2 replies
- 396 views
- 1 follower
-
-
ஆஜரானார் கப்ரால் : பிணையில் விடுவித்த நீதிமன்றம் By DIGITAL DESK 5 26 OCT, 2022 | 05:04 PM ( எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதன்கிழமை ( 26) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது. தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் , குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட , கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவெல, இந்த உத்தரவை பிறப்பித்தார். …
-
- 0 replies
- 584 views
- 1 follower
-
-
9 மாதங்களில் 435 மனித படுகொலைகள் பதிவு By DIGITAL DESK 5 26 OCT, 2022 | 04:29 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போது பதிவாகும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனவே இதனைக் கருத்திற் கொண்டு குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையில் திருத்தத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு : உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்துதல் தொடர்பாக தற்போ…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
கொள்ளையிடச் சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த கொள்ளையர்கள் : ஒருவர் வசமாக சிக்கினார் By NANTHINI 26 OCT, 2022 | 02:56 PM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிடுவதற்காக சென்ற கொள்ளையர்கள், அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவமொன்று இன்று புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிடச் சென்ற இருவர், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்துச் சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டின் …
-
- 3 replies
- 435 views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுடன் தொடர்புடையவரே தமிழகத்தில் தாக்குதல் நடத்தியர் – விசாரணையில் தகவல்! இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சந்தேகத்திற்குரிய சம்பவம் என்பதை அவதானித்த தமிழக பொலிஸார், குறித்த வெடிப்பு பயங்கரவாதச் செயலா என கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போதே, 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்…
-
- 3 replies
- 374 views
- 1 follower
-
-
யாழ். நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளி கைப்பற்றப்பட்டது யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார்செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்சீவனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6000 கிலோகிராம் வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் ஜும்மா ப…
-
- 4 replies
- 349 views
-
-
போதைப்பொருள் பாவனையை ஒழித்து வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்குமாறு கோரி யாழில் பேரணி By NANTHINI 26 OCT, 2022 | 01:37 PM (எம்.நியூட்டன்) தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் புதன்கிழமை (ஒக் 26) விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேச சபை, தெல்லிப்பளை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பளை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்த இப்பேரணி தெல்லிப்பளை சந்தியில் நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், ப்ளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பாலின சமத்துவத்தை பேணல், இயற்கை விவ…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு By NANTHINI 26 OCT, 2022 | 03:12 PM (இராஜதுரை ஹஷான்) கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது, வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
”ரணிலின் அரசாங்கத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டதுடன், ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்போதே அவர் மேற்படி அறிவிப்பையும் விடுத்தார். ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு, …
-
- 1 reply
- 195 views
-
-
இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையும் – உலக உணவுத் திட்டம் இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான காலத்தில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் மூன்று மாத காலத்திற்கு ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு பாடசாலை உணவை வழங…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-