ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
கடும் சவால்களின் மத்தியிலும் சீன இலங்கை உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன - கிழக்கில் சீன தூதுவர் By RAJEEBAN 06 SEP, 2022 | 04:37 PM கடந்த மூன்று மாதங்களில் உலகிலும் இலங்கையிலும் பல பெரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் சீனா இலங்கை பாரம்பரிய நட்புறவின் ஒட்டுமொத்த நிலையும் பொதுவான வளர்ச்சியின் வேகமும் மாறவில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹொங் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின்போது ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிக்கலான உள் மற்றும் வெளிச்சவால்களின் மத்தியில் சீனாஇலங்கை உறவுகள் மேலும் வலுவானவையாக மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார…
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
(எம்.நியூட்டன்) இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர், இலங்கையில் தமிழ் சமூகம் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம். சிறில…
-
- 15 replies
- 826 views
-
-
சீன அரசினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்திற்கு 4.3 மில்லியன் ரூபா வழங்கிவைப்பு By VISHNU 06 SEP, 2022 | 04:52 PM (கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதியை சீன தூதுவரினால் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது. சீன மக்கள் குடியரசின் புலமைப்பரிசில் வழங்கும் விழா மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக…
-
- 2 replies
- 359 views
- 1 follower
-
-
பெருந்தோட்ட மக்களுக்கு 3250 ரூபா நாட்சம்பளமாக வழங்க கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டு்ம் - வடிவேல் சுரேஷ் By T YUWARAJ 06 SEP, 2022 | 08:28 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) மந்தபோசனை நிலையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் இலங்கையில் மலையகம் முதலாவது இடத்தில் இருக்கின்றது. அந்தளவுக்கு மலையக மக்கள் சத்துணவு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகெ…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
இலங்கையில் ஊட்டச்சத்து இல்லா நிலைக்கு தள்ளப்படும் சிறார்கள்: தீர்வு என்ன? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 52 நிமிடங்களுக்கு முன்னர் ஹபீலாவின் இரண்டு பிள்கைள் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் படிக்கின்றனர். அவர்களுக்கான காலை உணவைக் கூட தொடர்ச்சியாக வழங்குவதில் ஹபீலா நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறுகிறார். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவு - இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வைக் கொடுத்தாலும், வழங்கப்படும் உணவின் அளவு பிள்ளைகளுக்குப் போதாது என அவர் குறிப்பிடுகின்றார். "நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, சாதாரண நாட்களில் தனது பிள்கைகளுக்கு வீட்ட…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
உரக்கப்பலால் இலங்கை -சீன நல்லுறவில் பாதிப்பு :மஹிந்த அமரவீர -சி.எல்.சிசில்- உரக் கப்பல் காரணமாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவைப் பாதுகாக்க உரிய செயற்பாடுகளைத் தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு மற்றும் சீனத் தூதுவர் மேலும் பேசுவார்கள் என்றும் அவர் கூறினார். உரக்கப்பல் தொடர்பில் தாம் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும், உரக்கப்பல் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு பாரியளவில் பாதிக்கப்…
-
- 0 replies
- 181 views
-
-
சமூக பாதுகாப்பு பங்களிப்பு VAT வரி 20% ஆக அதிகரிக்கும்: அனுரகுமார திஸாநாயக்க உத்தேச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிப்பு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும், இதன் விளைவாக பெறுமதி சேர் வரி (VAT) மேலும் 20% ஆக அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிவிதிப்பு 15% VATக்கு மேலதிகமாக 2.5% வரியை வசூலிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையின் போது மொத்தமாக 20% VAT அதிகரிப்பின் போது விற்…
-
- 0 replies
- 230 views
-
-
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் சவால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரஷ்யாவின் தற்போதைய நிதி நிலைமை, கடன் தரமதிப்பீட்டை விட கடன் தரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, எரிபொருள் வழங்குநர்கள் பணம் செலுத்தத் தவறியமை மற்றும் கடன் பத்திரங்களை திறக்க முடியாத நிலை போன்ற காரணங்களால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில…
-
- 0 replies
- 215 views
-
-
எந்தவொரு... வெளியகப் பொறிமுறையையும், ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அரசாங்கம். இணைய அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு ஒவ்வாத எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…
-
- 3 replies
- 1k views
-
-
இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது - ஐநாவில் இந்தியா By Rajeeban 05 Sep, 2022 | 10:54 AM மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது. சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார். எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற…
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு - நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு By T. SARANYA 06 SEP, 2022 | 11:41 AM (க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பக…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தக்கூடாது - பேராசிரியர் ரொகான் சமரஜீவ 06 Sep, 2022 | 10:44 AM சர்வதேச நாணயநிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்ககூடாது என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரொகான் சமரஜீவ உடன்படிக்கை குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தினால் அது அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு பாதிப்பை பாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கான பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை தனக்கு கடன்வழங்கியவர்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதால் இலங்கைக்…
-
- 0 replies
- 509 views
-
-
இலங்கையில்... ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு! இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் எதிர்வு கூ…
-
- 1 reply
- 218 views
-
-
22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது. -உயர் நீதிமன்றம்.- அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1297841
-
- 0 replies
- 200 views
-
-
இந்த ஆண்டு... ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டும்? எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக குறைக்க முன்மொழிந்தார். இந்த முன்மொழிவின்படி, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும். இதற்கமைய எதிர்வரும் டிசம்பர்…
-
- 0 replies
- 211 views
-
-
‘எந்தவொரு சுதந்திரமும்... பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம். பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’ -பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் .- அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. 1991 பிரகடனத்திற்கு அமைவாக செயற்படும…
-
- 0 replies
- 156 views
-
-
இந்தியாவில் இருந்து... இலங்கை அகதிகளை அழைத்து வர, புதிய குழு. இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1297691
-
- 0 replies
- 315 views
-
-
குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம் R.Maheshwary / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:36 - 0 - 59 FacebookTwitterWhatsApp இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (06) முதல் வெள்ளிக்கிழமை (09) வரை 1 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A முதல் W வரையான 20 வலயங்களில் நாளை (06) தொடக்கம் 9ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின் வெட்டு அமுலாகவுள்ளது. https://www.tamilmirror.lk/…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
பதவியை இராஜினாமா செய்ய தனிப்பட்ட தேவை எதுவும் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினரும் தம்மைக் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தனக்கு தனிப்பட்ட தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீதா அரம்பேபொல தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளியான செய்திகள் குறித்து “அத தெரண” எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அந்தப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்குள் நுழைய வாய்ப்பளிக்கவ…
-
- 2 replies
- 352 views
-
-
ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 02:08 - 0 - 240 FacebookTwitterWhatsApp ஜனாதிபதி ரணிலின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமுர்த்தி, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் உதவி, போன்ற நலன்புரி திட்டங்களின் கீழ் தற்போது நன்மைகளைப் பெறும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பவுள்ளது. மேலும், மானியத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வெளி பொறிமுறையில் உடன்பாடு இல்லை: -அலி சப்ரி மனித உரிமைகளுக்கான முழுமையான மற்றும் நீண்டகால தீர்வை இலங்கை எதிர்நோக்கி வருவதாகவும், இலங்கையின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் அதற்கு இடமளிக்காத நிலையில், வெளிப் பொறிமுறையில் உடன்பாடு இல்லை என்பதே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டுப் பொறிமு…
-
- 1 reply
- 290 views
-
-
இந்தியாவின் எழுச்சி இலங்கைக்கு பலம் – வாசுதேவ நாணயக்கார உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வருவதென்றால், உலகில் பொருளாதார சக்தி பரிமாற்றத்தின் தனித்துவமான தருணத்திற்கு ஆசியா வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தியா அண்டை நாடாக உயர்ந்துள்ளமை இலங்கைக்கு பலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்வு காண பிரச்சினைகளை பேசுவதில் பயனில்லை என்றும் தீர்வுகளை பற்றி மாத்திரம் பேசுவதே பலனளிக்கும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1297710
-
- 1 reply
- 255 views
-
-
சுதந்திரக் கட்சியில் கொள்கையோ, ஆட்களோ இல்லை: பெயர் பலகை மட்டுமே உள்ளது – சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குமார வெல்கம தலைமையிலான புதிய கட்சி அலுவலகத்தை கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார…
-
- 0 replies
- 164 views
-
-
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பேசிய அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது மீண்டும் திரும்பும் என்று கூறினார். முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19 வது திருத்தத்தை முழுமையாக …
-
- 0 replies
- 157 views
-