ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி,…
-
-
- 11 replies
- 831 views
-
-
Oct 29, 2025 - 05:20 PM - எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், விசா தொடர்பான விடயங்களை தற்போது கையாளும் சேவை வழங்குநர் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த திங்கட்கிழமை முதல் அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும…
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
29 Oct, 2025 | 05:25 PM (நா.தனுஜா) இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். இலங்கை - சுவிற்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொ…
-
-
- 6 replies
- 298 views
- 1 follower
-
-
காணாவில் 2 மில்லியன் டொலர் முதலிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது. கிழக்கில் தங்க மலையேதும் உருவாகியுள்ளதா என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாத்தில் ஹாக்கிமியத் மற்றும் கிலாபத் என்ற மதவாதங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவர்களின் நோக்கங்களை செய்து கொள்வதற்காக இலங்கைக்கு மிகப் பாரிய தொகை பணங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை பிரிப்பதற்கு அவர்களின் ஊடக செயற்பாடுகளை நாமறிவோம். தனிப்பட்ட குரோதங்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பாரியது. ஹிஸ்புல்லாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கான சஹ்ரான் எல்லாம் உருவாகியது கிழக்கில் தான்.…
-
- 0 replies
- 167 views
-
-
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது! குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்ல…
-
-
- 2 replies
- 282 views
-
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் 28 வயதான சவுதி நாட்டவர், அவர் மலேசியாவிற்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இருப்…
-
-
- 2 replies
- 252 views
-
-
தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார். பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,…
-
- 0 replies
- 137 views
-
-
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று! 29 Oct, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த முன்னாள் ஜனாதிப…
-
- 0 replies
- 98 views
-
-
டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி! பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451457
-
- 0 replies
- 113 views
-
-
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி! கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்டத்தரணி நேற்று இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்…
-
- 0 replies
- 89 views
-
-
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை! நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட…
-
- 0 replies
- 112 views
-
-
Published By: Digital Desk 3 26 Oct, 2025 | 05:16 PM புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில், இன்று யாழ்ப்பாணம் செல்கிறேன் என் நண்பர் பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைக்கிறேன் நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான் பூத்துவர முடியும் மனதின் வலியும் மார்பின் தழும்பும் கலையின் கச்சாப் பொருள்களாகும் ஈழத்தில் நல்ல கலைவடிவங்கள் மலர்வதற்கான காலச்சூடு உண்டு ஈழத் தமிழர் வெல்லட்டும்; தொட்டது துலங்கட்டும் என் நண்பரின் வளர்ச்சிக்கு வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்; நாள…
-
-
- 21 replies
- 2.7k views
- 3 followers
-
-
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்! adminOctober 29, 2025 வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை …
-
- 0 replies
- 158 views
-
-
Published By: Vishnu 29 Oct, 2025 | 12:43 AM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் 22 துறைகளில் சுமார் 8000 ஆட்சேர்ப்புக்களும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர3 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும். இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது. யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரட…
-
-
- 5 replies
- 412 views
- 1 follower
-
-
யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம் 28 Oct, 2025 | 01:02 PM செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/228885
-
- 2 replies
- 187 views
- 1 follower
-
-
Oct 28, 2025 - 04:46 PM தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். https://adaderanatamil.lk/news/cmhah1vfo0198o29nqvhg69fd
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
Oct 28, 2025 - 01:51 PM கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். தென் மாகாணத்தைப் பற்றிப் பேசினால், இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் சிறைகளி…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
நாட்டில் நிலவும் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய இலங்கை திருச்சபையின் யாழ். குரு முதல்வர் செல்வன், செம்மணி படுகொலைக்கான நீதி கிடைக்க மக்களாகிய நாமே முழுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (28) மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்த குரு முதல்வர் செல்வன் மேலும் கூறுகையில், செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும். இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை…
-
- 0 replies
- 125 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம் யாழ்ப்பாணத்தில் இணையவழி செயலி மூலம்(GovPay) போக்குவரத்து அபராதம் செலுத்தும்முறை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து அபராதங்களை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வழியில் செலுத்த அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக வசதியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பண, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்,…
-
- 1 reply
- 182 views
-
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு! வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார். வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்…
-
-
- 16 replies
- 688 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம் 28 Oct, 2025 | 01:23 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று, அப்பகுதியை பார்வையிட்டார். நேரடி கள விஜயம் செய்த ரவிகரன், ஆழிவனம் சுற்றுலாத்தளத்தின் மேம்பாடு தொடர்பிலும் அவ்வேளை அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த கள விஜயத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமாரும் இணைந்துகொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/228887
-
- 0 replies
- 140 views
-
-
வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து! வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும், நேர முகாமைத்துவம் பின்பற்றப்படவேண்டும். திணைக்களத்தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான கெளரவிப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்தவாரம் இடம்பெற்றது .அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில்…
-
- 0 replies
- 167 views
-
-
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி! adminOctober 28, 2025 தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்.”ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி – 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது, செயற்கை …
-
- 0 replies
- 95 views
-
-
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்! adminOctober 28, 2025 வடமாகாண ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ரயில் தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும், வடக்கின் ரயில் மார்க்கத்தைத் தரமுயர்த்தும் செயற்பாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன . இதையடுத்தே ரயில் சேவைகள் பகுதியளவில் இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222041/
-
- 0 replies
- 68 views
-