ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது : ஆணையாளர் பின்டோ ஜெயவர்த்தன By VISHNU 30 SEP, 2022 | 10:20 PM K.B.சதீஸ் தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது என ஆணையாளர் கிசாலி பின்டோ ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றால் சில தகவல்களை வழங்கப்படாமை குறித்து ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் கிடைத்தன.…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
போதையில் ஆலய மின் குமிழ்களை உடைத்தவர்களை எச்சரித்தவர்களின் வீடுகள் மீது தாக்குதல்! By VISHNU 30 SEP, 2022 | 04:19 PM யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள நான்கு வீடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு ஆலய வீதியில் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அவற்றினை 28 ஆம் திகதி புதன்கிழமை வீதியால் சென்ற இருவர் போதையில் மின் குமிழ்களை அடித்து உடைத்துள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 29 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை வேளை மோட்டார் சைக்கிளில் வந்த வன்…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
இலங்கை மலையக தமிழர்கள்: 200 வருடங்களில் "தோட்டக்காட்டான்" பெயரே மிஞ்சியது ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''எங்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லை. என்னதான் இருந்தாலும் தோட்டக்காட்டான் என்ற பெயரைத்தான் வாங்கியுள்ளோம். பிள்ளைகள் போறதுக்கு பாடசாலை இல்லை. எங்களுக்கும் படிக்க வசதி இல்லை. சரி பிள்ளைகளை படிக்க வைக்கலாம்னு பார்த்தால், அதுக்கும் வசதி இல்லை" - கவலைப்படும் இலங்கை மலையக தமிழர்களின் குமுறல்கள் இந்த வரிகள். "முன்னேற்றம் ஒன்று இருந்தால் தானே பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் முடியும். யார் போனாலும் தோட்டக்காட்டன்னுதான் அழைக்கிறாங்க. அந்த ப…
-
- 5 replies
- 595 views
- 1 follower
-
-
சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய By DIGITAL DESK 5 30 SEP, 2022 | 04:31 PM (இராஜதுரை ஹஷான்) மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது என குறிப்பிடப்படுகின்ற நிலையில் நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை. சுகாதாரத்துறை அமைச்சும், அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது மகிழ்வுக்குரியது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற இலங்கை மருத்துவ சாதனங்களின் தொழிங்சங்கத்தின் 7ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவத…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து நகைகள் திருட்டு! By VISHNU 30 SEP, 2022 | 04:43 PM யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து குறித்த வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள …
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி- ஹிருணிகா By RAJEEBAN 30 SEP, 2022 | 04:48 PM ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி அனைத்து ஊழல்அரசியல்வாதிகளையும் அழிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தெரிவிப்பதற்காக என்னை சிஐடியினர் விசாரணைக்கு அழைக்கலாம் ஆனால் ஒக்டோபர் மாத இறுதியில் நிச்சயம் இந்த புரட்சி நிச்சயமாக வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சுனாமி தாக்கும்போது முன்னைய ஜனாதிபதியின் நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ள ஹிருணிகா எந்த புரட்சியும் முன் அறிவிப்புடன் நிகழ்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த அரகலயவில் பெண்களே முக்கிய பங்களிப்பை செய்தன…
-
- 3 replies
- 210 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது வடமலை ராஜ்குமார் நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திரு…
-
- 0 replies
- 365 views
-
-
அரசாங்கத்தினை கவிழ்க்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமையை அடுத்து, பாராளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுப்பதன் மூலம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பொலிஸாரின் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விசாரணைகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலேயே அண்மையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் …
-
- 0 replies
- 117 views
-
-
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்? உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கவனத்திற்கு கொண்டு வந்தார். ஆசிய அபிவ…
-
- 0 replies
- 180 views
-
-
சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி! சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166158
-
- 14 replies
- 1.2k views
-
-
டிக்டொக், இணைய விளையாட்டுக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு By T. SARANYA 30 SEP, 2022 | 01:34 PM “டிக்டொக்" மற்றும் "இணைய விளையாட்டு" ஆகியவற்றுக்கு அடிமையாகி, அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக்டொக் செயலிக்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறான ச…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு தண்டம் By VISHNU 30 SEP, 2022 | 01:36 PM யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, 10 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன. அதேவேளை நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன. …
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக தெரிவிக்க முடியாது என்கின்றது சர்வதேச நாணயநிதியம் By RAJEEBAN 29 SEP, 2022 | 03:08 PM (Nikkei - asia) டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி கிடைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் அதிகளவு நம்பிக்கையுடன் காணப்படுகின்றது எனினும் பல தரப்பு கடனளிப்பவர்கள் டிசம்பர் மாதத்திற்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமற்ற விடயம் என தெரிவித்துள்ளனர். மேலும் அதிகளவு கடன்களை வழங்கிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை பொறுத்தவிடயம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடன் நிவாரணம் குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் நீடிக்க கூடியவை என்பதால் கால எல்லையை எதிர்வு கூறுவது க…
-
- 1 reply
- 345 views
- 1 follower
-
-
யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு By T. SARANYA 30 SEP, 2022 | 02:11 PM (எம்.நியூட்டன்) யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை நீதிமன்ற உத்தரவின் படி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. செப்ரெம்பர் மாதம் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09 திகதி யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது. அதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடாத்துனரிற்கு வழங்கப்பட்டது. மீண்டும் பொது சுகாதார பரிசோதகரால் 28 புதன் கிழமை திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
கோட்டாவின் நிழல் அரசாங்கமே தற்போதும் நாட்டை ஆட்சி செய்கிறது : எதிர்க்கட்சி தலைவர் சஜித் By DIGITAL DESK 5 30 SEP, 2022 | 10:39 AM (எம்.வை.எம்.சியாம்) கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்வதோடு உலகம் முன்னோக்கி நகர்ந்தாலும் எமது நாடு அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதோடு; அவர்களுக்கு நாடு செல்லும் திசை பற்றிய புரிதல் இல்லை. நாடு இவ்வாறானதொரு இக்கட்டான நிலையிலுள்ள போதும் அமைச்சரவை நிதியை சுரண்டுவதோடு குறைந்த பட்சம் அரசாங்கத்திற்கு எதற்கும் எந்த வேலைத்திட்டமும் இல்லை எனவும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த…
-
- 0 replies
- 182 views
-
-
குருந்தூர் மலை விவகாரம்; நீதிமன்றில் சுமந்திரன் சண்முகம் தவசீலன் குருந்தூர் மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிக்கின்றமை மற்றும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடர்ந்து பௌத்த கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து கடந்த 21.09.2022அன்று குமுழமுனை மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக துரைராசா ரவிகரன், இ.மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் தொடர்ந்து கரைதுறைப்பற்று …
-
- 0 replies
- 221 views
-
-
புனர்வாழ்வு பணியக சட்டமூலம், நீதி அமைப்பை இராணுவமயமாக்க முயல்வதாக குற்றச்சாட்டு! September 30, 2022 முன்மொழியப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியக சட்டமூலம், நீதி அமைப்பை இராணுவமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்றும் மக்களின் இறையாண்மையை அது மீறுகிறது என்றும் உயர்நீதிமன்றத்தில் நேற்று (29.09.22) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, ‘அறகலய’ எனும் பொதுப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சட்டத்தரணி அமில சுயம ஏகொடமஹவத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட தீர்மான மனுவில் மேற்குறிப்பிட்ட விடயம் குறிப…
-
- 0 replies
- 268 views
-
-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி! மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எதிர்வரும் ஒக்டொபர் 02ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு, யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக உள்ள காந்தி சிலையில் முன்றலில் இருந்து, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை துவிச்சக்கர வண்டி பேரணி சென்றது. யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு இந்த பேரணி ஆரம்பமானது. https://athavannews.com/2022/1302026
-
- 10 replies
- 663 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர் இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பங்காளித்துவத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் கல்வி, திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய நம்புவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும…
-
- 0 replies
- 165 views
-
-
இலங்கைக்கு உதவத் தயார் – இந்தியா மற்றும் சீனாவுக்கும் ஜப்பான் அழைப்பு! இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ஜப்பானின் நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். சீனா, இந்தியா மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு தனது சொந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்…
-
- 0 replies
- 232 views
-
-
கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க மத்தியநிலையம் 29 SEP, 2022 | 05:36 PM கொழும்பிலுள்ள அமெரிக்க மத்திய நிலையம் (American Center) புதிய அமெரிக்க தூதரக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்காக இன்று மீண்டும் திறந்துவைக்கப்பட்டது. கொழும்பிலுள்ள புதிய சீரமைக்கப்பட்ட அமெரிக்க மத்திய நிலையமானது அதன் நூலகப் புரவலர்கள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் கடந்த கால நிகழ்ச்சிகளில் பங்குபற்றியோர், தற்போதைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளர்கள் ஆகியோரை வரவழைத்து ஒரு வண்ணமயமான திறப்பு விழாவினை நடாத்தியது. கொழும்பிலுள்ள பு…
-
- 2 replies
- 312 views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோ நிதியுதவி By T. SARANYA 29 SEP, 2022 | 04:29 PM (நா.தனுஜா) நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய சமூக - பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென 1.5 மில்லியன் யூரோ நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிதியுதவியானது விசேடமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்புசார் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனூடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றும…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவை தீர்மானம்! தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான இரண்டு உப குழுக்களை அமைக்க தேசிய பேரவை தீர்மானித்துள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட தேசிய பேரவையின் அங்குரார்ப்பண கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய தேசிய பேரவை உர…
-
- 1 reply
- 464 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் By RAJEEBAN 29 SEP, 2022 | 01:06 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கி…
-
- 1 reply
- 289 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் . இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து கலந்துரையாடியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவை அவர் சந்திக்க உள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1301865
-
- 1 reply
- 542 views
-