Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. By T. SARANYA 12 AUG, 2022 | 05:27 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முகநூல் பதிவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அநாவசியமான கைதுகளும் அச்சுறுத்தல்களும் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. உடனடியாக இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பில் நடை…

  2. சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடா் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா். இருப்பினும் அந்த கப்பலின் பயணம் தொடா்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவி அதன் பயணம் தடைப்படவில்லை. இலங்கை அரசு தன்னுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம் சீனாவோடும் இருப்போம…

  3. தீர்வை வழங்குவதாக... வாக்கெடுப்பிற்கு முன்னர், ரணில் உறுதியளித்தார் என்கின்றார்.. விக்னேஸ்வரன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பிற்கு முன்னர் அவர் இந்த உறுதிமொழியை தனக்கு வழங்கியிருந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் தெ…

  4. அடுக்குமாடி, குடியிருப்பு உரிமையாளர்களுக்கு... நிரந்தர உரிமைப்பத்திரம் – அமைச்சர் நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காத குடும்பங்களுக்கு அவற்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காதவர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரையில் உறுதியளித்தார். இந்நிலையில் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையா…

  5. பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்... அனுரகுமார முன்னிலை.! நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். 23.7% டலஸ் அழகப்ப…

  6. பாடசாலை மாணவர்களும்.... பகுதி நேரமாக, வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டு வருகின்றது அரசாங்கம். பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. …

  7. ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன Digital News Team 2022-07-25T14:43:59 ரொஷான் நாகலிங்கம் தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்ப…

  8. செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அண்மைய நாட்களில் மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதுடன் கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளை கரையில் இருந்து காணக்கூடியதாகவும் உள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடு தொடர்பில் கடற்படையினர் மற்றும் பொலிஸார்,கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் இன்று காலை திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் கட்டளைக்கு அமைவாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இதன்போது இலங்கை கடல் எல்லைக்குள் …

  9. By T. SARANYA 11 AUG, 2022 | 03:46 PM யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் மற்றும் இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகமும் இணைந்து இன்று (11) மருத்துவமுகாம் ஒன்றை நடார்த்தியிருந்தனர். கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் குறித்த மருத்துவ முகாம் காலை ஆரம்பமானது. இதில் இருதய நோய் தொடர்பில் வடமாகாணத்தில் பத்தாயிரம் மக்களை சந்தித்து| அவர்களின் உடல்நலன் தொடர்பாக ஆராய்ந்த பொழுது மருத்துவ சிகிச்சை பெறுவதில் எற்படும் பல சிக்கல் தொடர்பாக அறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அவ்வாறான இடங்களில் மருத்துவமுகாம்களை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மதுத்துவபீடமும், இங்கிலாந்து மருத்துவபீடமும் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடார்த்தியிருந்த…

  10. (நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஆரம்பித்த கவனயீர்ப்புப்போராட்டம் நாளையுடன் 2000 நாட்களை எட்டவுள்ளது. அதனை முன்னிட்டு கிளிநொச்சி…

  11. தமிழ் சமூகம், பொருளாதாரத்தில் மாத்திரமல்ல... அதைவிட பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது – சாணக்கியன் கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த …

  12. குழந்தைகளுக்கு.. அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம், என எச்சரிக்கை. கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவ மனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார். இதே நிலை நீடித்தால், அவர்களின் வயதுக்கு ஏற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வயதுக்கு ஏற்ப குழந்தையின் எடை அதிகரிக்காவிட்டால், அறிவு வளர்ச்சி குன்றிய குழந்தையாக மாறுவது மட்டுமல்லாமல், உள் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாத நோயுற்ற குழந்தையாகவும் மாறும் என்று அவர் வலி…

  13. அனைத்து தரப்பினருக்கும்... நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய, அரசே வேண்டும் – ஜனாதிபதி ரணில். ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித…

  14. பாராளுமன்ற தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி By T. SARANYA 10 AUG, 2022 | 03:23 PM 9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தியுள்ளார். 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார். இந்த தேநீர் விருந்துபசாரத்திற்கு செலவான 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார். ஜனாத…

  15. கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது. குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார். இந்த கோரிக்க…

    • 7 replies
    • 533 views
  16. By T YUWARAJ 10 AUG, 2022 | 06:19 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். அத்துடன் மறைமுகமாக ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவியை கேட்பதை விடுத்து அமைச்சுப் பதவிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும் கேட்டுப்பெற அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …

    • 5 replies
    • 435 views
  17. By VISHNU 10 AUG, 2022 | 03:04 PM (எம்.வை.எம்.சியாம்) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்து ஆலயத்திற்கு செல்லும் வழியின் இருமருங்கிலும் கடைத்தொகுதிகள் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் ஆலய திருப்பணி வேலைகள் முன்னெடுப்பதற்கு திணைக்களம் இடையூறு விளைவித்து வருவதாகவும் இது தொடர்பாக உரிய தீர்வினை பிரதமர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்ந…

    • 5 replies
    • 506 views
  18. சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கடலில் கடந்த இரண்டு நாட்களாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் கடற்தொழில் அமைச்சிற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் அவர்களினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச திணைக்களங்கள் மற்றும் அ…

    • 2 replies
    • 285 views
  19. By VISHNU 10 AUG, 2022 | 09:10 PM (நா.தனுஜா) கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியேறிய போராட்டக்காரர்கள், இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர். காலிமுகத்திடல், கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அகற்றுமாறு கோட்டை பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். பொலிஸாரின் அவ்வறிவிப்பிற்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில்…

  20. மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ) மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர்…

  21. யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்! யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்த…

  22. எண்ணெய், துறைமுகம், மின்சார சபை ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் ; வருடத்துக்கு மூன்று போனஸ் : எஸ்.பி.திஸாநாயக்க -சி.எல்.சிசில்- எண்ணெய் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் வருடத்துக்கு மூன்று போனஸ் வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டி…

    • 0 replies
    • 157 views
  23. நாட்டை மீட்பது பற்றிப் பேசாமல் அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது குறித்து பேரம் பேசுகின்றனர் : உதய கம்மன்பில -சி.எல்.சிசில்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி நிலைமையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக அவர் கூறினார். பதவிகளைப் பகிர்வது பற்றிப் பேசாமல் நாட்டைக் காப்பாற்றுவது பற்றிப் பேசுவதே இன்று செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இன்னு…

    • 0 replies
    • 184 views
  24. அவசரகாலச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுக்கள் நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட…

    • 0 replies
    • 125 views
  25. மஹிந்த மற்றும் பசில் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (10) இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=164348

    • 0 replies
    • 146 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.