ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு! அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மோட்டார் வாகனத்தின் சாரதி மற்றும் எந்த இருக்கையிலும் அமர்ந்து வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தனிநபரும், சீட் பெல்ட் அணிய வேண்டும். https://athavannews.com/2025/1449273
-
- 0 replies
- 134 views
-
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது! 01 Oct, 2025 | 12:46 PM இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்…
-
-
- 5 replies
- 417 views
-
-
Published By: Priyatharshan 01 Oct, 2025 | 08:23 PM இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் நிறைவு விழா மற்றும் உலக சிறுவர்கள் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இதன்போது, உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் போட்டிகளின் தொகுப்பாகிய "க்ஷேம பூமி" (Ksh…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
Simrith / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 06:23 - 0 - 22 வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார். விசாரணைகளின்படி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். தாஜுதீன் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "இந்த குற்றங்களை கிராம…
-
- 0 replies
- 203 views
-
-
கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச் சின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டுக்கு கூடுதலான வருவாய் ஈட்டித்தருபவர்களாக பெண்கள் காணப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வன்னி மாவட்டத்…
-
- 0 replies
- 124 views
-
-
கொழும்பு நீச்சல் கழகத்திற்கு (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, எனது மகன் கொழும்பு நீச்சல் கழகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது எனது மகன் நீச்சல் தடாகத்தில் விளையாடியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து எனது மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில் மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. மகனுக்கு எவ்வளவு நேரம் ஒட்சிசன் வழங்கப்பட்டது, அம்புலன்ஸ் எப்போது வந்தது என வைத்தியர்கள்…
-
- 0 replies
- 95 views
-
-
01 Oct, 2025 | 02:41 PM அனைத்து சிறுவர்களுக்கும் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த, வளமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக தொடர்ந்து பாடுபடுவது எமது கடமையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து சிறுவர்களுக்கும் உலக சிறுவர் தின வாழ்த்துக்களை முன்வைத்து பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் நமது எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பும் நலனும் நமது முக்கிய பொறுப்பாகும். சிறந்த கல்வி, பாதுகாப்பான சூழல், நற்பண்பு வளர்ச்சிக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதே இலங்கை பொலிஸின் நோக்கம். எல்லா சிறுவர்களும் நலமுடன், பாதுகாப்புடன் வளர வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கமாகும். சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் கனவுகள், ஆசைகள் நிறைவேற உதவுவதே எமது கடமை. இன்று ச…
-
- 1 reply
- 96 views
- 1 follower
-
-
25 Sep, 2025 | 06:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட…
-
- 2 replies
- 252 views
- 1 follower
-
-
எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு! இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன் மாதத்துக்கான இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது, $255.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வ…
-
- 0 replies
- 145 views
-
-
யாழில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு! செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான இன்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்திய…
-
- 0 replies
- 84 views
-
-
தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு! adminOctober 1, 2025 தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30.09.25) பிறப்பித்தார். மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார். 2009 ஆகஸ்ட் 12 ஆ…
-
- 0 replies
- 115 views
-
-
ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி! ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449151
-
- 0 replies
- 95 views
-
-
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்! adminSeptember 30, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பாய் நன்னீர் திட்டம் , விவசாய நிலங்களுக்கு அருகாமையில் , உள்ள வெற்றுக்காணிக்குக்குள் வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனத்தில் , வைத்தியசாலையின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அதனை அவதானித்த ஊரவர்கள் , கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் போது தாம் நீதிமன்ற அனுமதி பெற்றே நாம் இவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதி மக்கள் அது…
-
- 1 reply
- 117 views
-
-
உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் பலருடனும் மிகவும் பண்பாக பழகும் ஒரு மாணவனான இவனது இழப்பு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்திய…
-
-
- 7 replies
- 400 views
- 1 follower
-
-
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg6kzasy00rao29nd1r2xywx
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
Published By: Vishnu 27 Sep, 2025 | 01:59 AM இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் இன்று, 2025 செப்டம்பர் 26, அன்று அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகியது. இந்த மத நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ருவன்வெலி மகா சேய முன்பிருந்து ஆரம்பமாகிய இராணுவக் கொடிகளை ஏந்திய ஊர்வலம், ஜய ஸ்ரீ மஹா போதிக்குச் சென்று அங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றது. இந்த மதச் சடங்குகள் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் தலைமையில் நடைபெற்றன. மேலும் இராணுவக் கொடிகள…
-
- 2 replies
- 182 views
- 1 follower
-
-
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது! யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1448885
-
- 3 replies
- 361 views
-
-
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும். இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா ச…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
30 Sep, 2025 | 03:44 PM முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் – ஸ்ரீ லங்கா Women's Corps - Sri Lanka) அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள நன்றிசொல்லும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேற்குறித்த இத்தீர்மானம் எடுக்கப்பட்டதானது இன ரீதியாக சிந்திப்பவர்களுக்கு பலத்த அடியாகும் என்பதோடு முஸ்லிம் மாணவிகள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் இந்த அரசின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்பத்தியுள்…
-
- 0 replies
- 145 views
-
-
30 Sep, 2025 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பரஸ்பர மரியாதையை தொடர்ந்து பேணிச்செல்ல முடியுமான அரசில் கலசாரத்தில் நாங்கள் இருவரும் சமகாலத்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அவரது கால்டன் இல்லத்திற்கு வந்து சந்தித்து சென்றமை தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்குமிடையில் சந்திப்பொன்று தங்கல்லை கால்டன் இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு நாங்கள் இருவரும் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டருந்தோம். அரசியல் ரீதியில் நாங்கள் இருவரும…
-
- 0 replies
- 94 views
-
-
30 Sep, 2025 | 07:36 PM பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கக்கூடும் என்று அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, மேலும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க முடியும் பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை | Virakesari.lk
-
- 0 replies
- 177 views
-
-
இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவட…
-
- 0 replies
- 142 views
-
-
ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்! 30 Sep, 2025 | 12:04 PM ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை , பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://ww…
-
- 0 replies
- 141 views
-
-
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக இலங்கை மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத…
-
- 0 replies
- 63 views
-
-
தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும், கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களின் வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 116 views
-