Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த காணொளியில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக கொண்டுள்ளது. வடக்கில் சிங்களவர்கள் இருக்க கூடாது, அவர்களுக்கு உரிமையில்லை என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் துரதிஷ்டவசமாக அனைவரும் நாடாளுமன்றில் அழகாக உரையாற்றுகிறார்கள். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். போராட்டகாரர்களுடன் சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பேச்…

  2. ஜனாதிபதி போட்டியில் இருந்து... பின்வாங்கினார், சஜித்!! புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கள் செய்ய போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அதன்படி வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். https://athavannews.com/2022/1291589

    • 1 reply
    • 300 views
  3. ரணிலின், பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் : முன்னாள் பிரதி அமைச்சரின் மகன்... நாட்டை விட்டு தப்பி ஓட்டம். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனே இவ்வாறு தேடப்பட்டுவந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் டுபாய் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291660

  4. டலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என மத்தும பண்டார தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு போதுமான ஆதரவு உள்ளது. அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும் என்றும் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

  5. முன்னைய அரசாங்கம் மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தினார் ரணில் – சிஎன்என்னிற்கு ரணில் பேட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை நாடாளுமன்றம் வாக்களிப்பதை தடுப்பதற்கோ அல்லது பொதுகட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப்போவதில்லை - கோத்தபாய ராஜபக்ச மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச்சென்றவேளை நான் அவருடன் பேசியுள்ளேன்ஆனால் அவர் தற்போதும் சிங்கப்பூரில் இருக்கின்றாரா என்பது தெரியாது - பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த நூல்கள் உட்பட 4000 நூல்களை அவர் இழந்தார். 125 வருடகால பியானோவும் அழிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இலங்கையின் முன்னைய நிர்வாகம் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்த உண்மைகளை மூடிமறைத்தது என பதில் பிரதமர் ரணில் விக்கிரம…

  6. அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும்... காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ! காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்தனர். கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடல் போராட்டக்கார்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாகவும் போராட்டக்கார்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் ‘செயற்திட்டத்தை’ எதிர்காலத்தில…

  7. ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்தில் எடுத்து முடிவெடுங்கள் July 19, 2022 ஜனாதிபதி தெரிவின் போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டு தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வட கிழக்கு தமிழ் தரப்புகளுக்கு இது ஒரு முக்கியமான தருணம். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை உ…

  8. தேசியப்பட்டியல் விவகாரம் :உயர் நீதிமன்ற தீர்ப்பு இன்று. ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த மனு நேற்று காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பொதுத் தேர்தலில் போதிய வாக்குகளைப் பெறத் தவறிய ஒருவர், அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியாது என மனுதாரரான சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு சுட்டிக்காட்டியுள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் முடிந…

  9. ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமரின் செயலகத்தினை... சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்! ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் இதுவரையில் சுமார் 70 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீவைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேரடி காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்கள் வழியாக காண்பித்து மக்களை தூண்டிய நபர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள…

  10. எரிபொருள் பிரச்சினை காரணமாக... பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன! எரிபொருள் பிரச்சினை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சுகாதார சேவையாளர்கள் பணிக்கு செல்ல மற்றும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எரிபொருள் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுவரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியர்கள் மற்றும் சேவையாளர்கள் எரிபொருள் பிரச்சினையினால் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகிவருவதாகவும் அவர் கூறியுள்ளார். பொ…

  11. 21ஆம் திகதி முதல்... தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு, மாத்திரமே... எரிபொருள் விநியோகிக்கப்படும்! தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதுவரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய இளைஞர் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர…

  12. ஜனாதிபதி தேர்தல்: போட்டியிடுபவர்கள்... திட்டங்களை முன்வையுங்கள் – சம்பிக்க கோரிக்கை. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மக்களின் குறைகளை புரிந்து கொண்டால் வேட்புமனுக்கள் மற்றும் தேர்தல்கள் தேவைப்படாது என சுட்டிக்காட்டினார். அரசியல் நோக்கங்களை ஒதுக்கித் தள்ளக்கூடிய, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். …

  13. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு! ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பிற்கு வெளியேயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு வரவழைத்து அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பத்தரமுல்ல பொல்துவ மன்சந்தி மற்றும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஏனைய வீதிகளில் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட முயன்றால், அவர்களுக்கு எதிராக அதிகபட்ச பலத்தை பயன்பட…

  14. புதிய ஜனாதிபதிக்கான தெரிவு : நாடாளுமன்றில் இன்று வேட்புமனுக்கள் தாக்கல் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் இன்று (19) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு நடைமுறைச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் வேட்புமனுக்களுக்கான அழைப்பை விடுப்பார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி சார்பாக அனுர குமார திஸாநாயக்க, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதிக்கான தெரிவில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புதிய ஜனாதிபதியை தெரிவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்…

  15. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (18) கையளித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்று ஆவணங்களை ஒப்படைத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதேவேளை, போராட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய சில குழுவினர் முயற்சிப்பதாகவும், மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் மக்கள் போராட்ட பிரஜைகள் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சானக பண்டார தெரிவித்துள்ளார். எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய …

    • 4 replies
    • 934 views
  16. இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் ஆதரவை நாடும் வேட்பாளர்கள்.. இந்த நிலையில், நாளையதினம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேர்தல் களத்தில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்…

  17. அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்ற நிலையில் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் டியூப் கணவாய் மீன்கள் சிக்கியது. சைக்கிள் டியூப் போன்று இருப்பதால் இதை டியூப் கணவாய் என்று மீனவர்கள் அழைக்கின்றனர். இது கனவாய் வகையில் ஒரு வகைப்படும். ஒரு அடி நீளம் வரையில் இருக்கும். இதற்கு ஊசி கணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்…

  18. (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் நிறைவடையாமலுள்ளமையும் தற்போது நாட்டிலுள்ள பெரும் பிரச்சினையாகும். இந்த விசாரணைகளை தாமதமின்றி நிறைவடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால் , அதற்கு பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே இன்று நாட்டில் காணப்படும் பிரதான அரசியல் பிரச்சினையாகும். அதனை நீக்குவதற்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீள நடைமுறைப்படுத்துதற்கான சட்ட மூலத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். …

  19. K.B.சதீஸ் வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதட்ட நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனிய…

  20. இலங்கையில்... அவசரகாலச் சட்டம் அமுல்! பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1291408

  21. சட்டவிரோதமாக... அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி: இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது. 2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பவர்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 200,000 முதல் 1,000,000 வரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த கடத்தல்காரர்கள் பழுதடைந்த மற்றும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்த…

  22. இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் - கோட்டாபய இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அசைக்க முடியாத ஆட்சி' என்று ஒரு காலகட்டத்தில் - பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 'கோட்டா வீட்டுக்கு போ' போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ரண…

  23. புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் : சம்பந்தன் -ஆர்.ராம் புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய இடைக்கால ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், தற்போதைய நிலையில், யார் குறித்த வெற்றிடத்திற்கு போட்டியிடுகின்றார்கள் அவர்களின் செயற்றிட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தெளிவான வெளிப்படுத்தல்கள் காணப்படவில்லை. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பில் ஆழமாக கரிசனைகளைக் கொண்டிருக்கும் நாம் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்த பின்னரே இற…

    • 3 replies
    • 390 views
  24. இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி! நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை திரும்பவுள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.samakalam.com/இலங்கை-திரும்புகிறார்…

  25. காலி முகத்திடலில், போராட்டம் தொடங்கி... இன்றோடு 100 நாட்கள் நிறைவு. கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. இதேவேளை, போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வும் நேற்று இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது. இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. https://athavannews.com/2022/1291362

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.