ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விலகியதாக நாடாளுமன்றம் அறிவித்தது! July 16, 2022 இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 14ஆம் திகதி முதல் விலகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் ஜனாதிபதியை தெரிவு செய…
-
- 0 replies
- 315 views
-
-
”இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக... நீங்கள் ஆற்றிய சேவைகளை, போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்…
-
- 12 replies
- 778 views
-
-
ஜனாதிபதி பதவியை... ஏற்க, தயார் என அறிவித்தார்... சரத் பொன்சேகா ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று(வியாழக்கிழமை) பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு தம்மிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே தாம் தெரிவு செய்யப்பட்டால் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1291194
-
- 6 replies
- 544 views
-
-
மஹிந்த, பசில் நாட்டிலிருந்து வெளியேற இடைக்கால தடை- ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர், வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில், அவ்விருவரும் உயர் நீதிமன்றின் அனுமதியில்லாமல் வெளிநாடு செல்ல முடியாது என இதன்போது உயர் நீதிமன்றம் அறிவித்தது. நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், சட்டத்தரணி உபேந்ர குணசேகர உள்ளிட்ட இருவரின் நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய இன்று ( 15) ஐவர் கொண்ட நீதியரச…
-
- 4 replies
- 370 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு ! பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இன்றைய சபை அமர்வில் சில முக்கிய விடயங்களை அறிவித்தார். அதன்படி, பாராளுமன்றத்திலுள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த சந்தர்ப்பத்தில் சபை அமர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டியது அ…
-
- 0 replies
- 297 views
-
-
அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது – அஸ்கிரி பீடம் அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் அமைதியான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டின் நன்மை கருத்தி பல தடவைகள் விடயங்களை முன்வைத்த போதும் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக நாடு நாளுக்கு நாள் பேரழிவு நிலையை நோக்கி நகர்வதாகவும் பதிவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் அமைதியின்மையை மீண்டும் பாதிக்கும் அனைத்து காரணிகள் குறித்தும் அவதானம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர…
-
- 0 replies
- 174 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, விரைவில் அறிவிப்போம் – விமல் வீரவன்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக அறிவித்துக்கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அவர்களின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருடனும் கலந்துரையாடப்படும் என வீரவன்ச கூறினார். அதன்படி ஒவ்வொரு வேட்பாளர்களின் தனிப்பட்ட திட்டத்தை பரிசீலித்து இறுதியாக ஒருவர் அறிவிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்…
-
- 0 replies
- 281 views
-
-
பாராளுமன்றத்தின்.. விசேட அமர்வு, இன்று பாராளுமன்றம் இன்று ( சனிக்கிழமை ) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். மேலும் ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது இதேவேளை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன . இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் வ…
-
- 0 replies
- 213 views
-
-
கோட்ட அபய ஜனாதிபதியாக பதவி துறந்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாந்ந்ந்யகர். மேலும் நாளை கூடுகிறது பாராளுமன்றம் எனவும் அடுத்த ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு இடம்பெறும் எனவும் அவர் அறிவித்தார். https://www.dailymirror.lk/latest_news/Parliament-to-meet-tomorrow-new-Prez-to-be-elected-within-seven-days-Speaker/342-241134
-
- 51 replies
- 2.3k views
- 2 followers
-
-
புதிய ஜனாதிபதி தெரிவில் பதில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இராஜதுரை ஹஷான்) புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதுடன்; முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டாவது, புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள். பாராளுமன்றில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவிற்கு தானும் போட்டியிட ப…
-
- 2 replies
- 388 views
- 1 follower
-
-
இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நியமனம் குறித்து அவதானம் செலுத்தப்படும். எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை அடிப்படையாகக் கொண்டு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் அவதானம் செலுத்த…
-
- 1 reply
- 403 views
-
-
(எம்.நியூட்டன்) இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் பத்தாண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 04ஆம் திகதி ஒரு படகில் சட்விரோதமாக அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்துபேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதேபோல 11 ஆம் திகதி ஒரு படகில் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 06 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் கைதானவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அவர்கள் விடுதல…
-
- 0 replies
- 178 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டது. குறித்த வழக்கில் 2 ஆம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனம் சார்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினை முன் வைத்து கடந்த ஜூன் 28 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு அழைத்து, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் வழக்கை இவ்வாறு தள்ளுபடி செய்தது. கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இதற்கான உத்தரவை அறிவித்த நி…
-
- 0 replies
- 182 views
-
-
இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பொதுச் சொத்துக்கள் மற்றும் உயிர்கள் சேதங்களை தடுக்க இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதற்காக வன்முறையை அதிகரிக்கும் அனைவரும் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், தற்போதுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படையினரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.ada…
-
- 3 replies
- 569 views
-
-
நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1291079
-
- 33 replies
- 1.5k views
- 2 followers
-
-
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு கே .குமணன் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் பொலிஸார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இன்றையதினம் முல்லைதீ…
-
- 6 replies
- 646 views
-
-
இலங்கை ஜனாதிபதியை எதிர்பார்த்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவிய லாளர்கள். https://thinakkural.lk/article/192127
-
- 9 replies
- 553 views
- 1 follower
-
-
மஹிந்த மற்றும் பசில் வழங்கியுள்ள வாக்குறுதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோர் நாளை வரை வெளிநாடு செல்லமாட்டார்கள் என அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் போது, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த உறுதிமொழியை வழங்கினர். http://tamil.adaderana.lk/news.php?nid=163423
-
- 2 replies
- 328 views
-
-
பொருளாதார நெருக்கடியால் புரட்சியில் இறங்கிய இலங்கை மக்களை தாக்குபிடிக்க முடியாமல் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
-
- 15 replies
- 856 views
- 1 follower
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி மாலைதீவில் தஞ்சமடைந்தார். அத்துடன், ஜூலை 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். எனினும், அவர் குறிப்பிட்டதை போன்று நேற்றைய தினம் பதவி விலகியிருக்கவ…
-
- 30 replies
- 2k views
- 1 follower
-
-
பதில் ஜனாதிபதியாக ரணில் சத்தியப்பிரமாணம் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பதல-ஜனதபதயக-ரணல-சததயபபரமணம/175-300465
-
- 0 replies
- 286 views
-
-
இலங்கை நெருக்கடி: கோட்டாபயவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்திய சபாநாயகர் அலுவலகம் - நிபுணர்களுடன் ஆலோசனை 14 ஜூலை 2022 படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ள ராஜிநாமா கடிதம் செல்லுபடியாகுமா என்பது குறித்து தற்போது பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசியலமைப்பில் மின்னஞ்சல் மூலம் ஜனாதிபதி ஒருவர் ராஜிநாமா செய்ய முடியுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இது …
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
எரிபொருள் விநியோகத்துக்கு முறையான வேலைத் திட்டம் வகுத்து அறிக்கையிடவும் - உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, அத்தியாவசிய சேவைகள் குறித்து முன்னுரிமை அளித்து விநியோகம் செய்வது தொடர்பிலான முறையான வேலை திட்டமொன்றினை வகுத்து அது குறித்து உயர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டது. நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள், பால் மா, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொது…
-
- 0 replies
- 381 views
-
-
ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் அரசியலமைப்பு எவ்வாறு கூறுகின்றது. இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள், பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்) எச்.ஈ. ஜனகாந்த சில்வா தெளிவுபடுத்துகையில், அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்…
-
- 0 replies
- 140 views
-
-
நாடு முடங்கும் - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை ஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.பிபிசியின் நியுஸ்நைட்டிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசமீட்பு நிதியை பெறுவது என்பது ஸ்திரமான அரசாங்கத்திலேயே தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பெரும் அமைதியின்மையின்பிடியில் உள்ளது .ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இர…
-
- 0 replies
- 304 views
-