Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290529

  2. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முக்கிய அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டள்ளனர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/97978/police.jpg பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளுமே இவ்வாறு உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/131172

  3. எந்தவொரு தீர்மானத்துக்கும்... ஒத்துழைப்பு, வழங்க தயார்: ஜனாதிபதி கோட்டா கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1290462

  4. ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி Published by Rajeeban on 2022-07-09 ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது . https://www.virakesari.lk/article/131138 ஜனாதிபதி மாளிகை மக்கள் வசம் ? நாட்டை விட்டு வெளியேறினாரா ஜனாதிபதி ? கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாராக என்ற சந்தேகம் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவா…

  5. ஜனாதிபதி, உடன் பதவி விலக வேண்டும் – வலியுறுத்தினார்... ஜீவன் தொண்டமான். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1290497

  6. தற்காலிக ஜனாதிபதியாக மஹிந்த? ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த வகையில், அரசியலமைப்பின் படி தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக டுவிட்டர் பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சபாநாயகர் இல்லத்தில் அவசர கட்சித் தலைவர் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. அதில், பிரதமர், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல தலைவர்கள் ஜூம் மூலம் கலந்துகொண்டனர் எனவும் அவர் ட்வீட் செய்துள்ளார். எவ்வாறாயினும், பெரும் கோரிக்கைக்கு அமைய பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத சபாநாயகர் தீர்மானித்துள்ளார். (…

  7. பிரதமர் ரணில்... ராஜினாமா செய்ய தீர்மானம் – பிரதமர் அலுவலகம் நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடக பிரிவால் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக் கொள…

  8. இலங்கையை வந்தடைந்த கப்பல் - நாளை முதல் விநியோகம்! 40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொண்டுவரப்பட்ட உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாளை முதல் நாடளாவிய ரீதியில் இந்த உர விநியோகம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163233

    • 0 replies
    • 368 views
  9. (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில், 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை இழந்துள்ளனர். இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரிகள் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதுடன் அதன் காரணமாக பேக்கரிகள் எதிர்வரும் நாட்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், பேக்கரிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல போதுமான எரிபொருள், மண்ண…

  10. பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள் : சுயாதீன அரசியல் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தல் (இராஜதுரை ஹஷான்) நாடு எதிர்கொண்டுள்ள பாரதூர தன்மையினை உணர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய உடன் அவதானம் செலுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய பாராளுமன்றம் செயற்படாவிடின் மக்கள் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடுவார்கள் என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அமைதி போராட்டம் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றிப் பெற்…

  11. ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு கோரி யாழில் சைக்கிள் பேரணி போராட்டம் ( எம்.நியூட்டன்) ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் துவிச்சக்கர வண்டிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு குறித்த பேரணி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்று , அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். …

    • 1 reply
    • 204 views
  12. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிபந்தனையற்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து உடன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான 'செங்கடகல பிரகடனத்திற்கு' மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமத தலைவர்கள் கைச்சாத்திட்டனர். செங்கடகல பிரகனடத்திற்கு கைச்சாத்திடல் இன்று கண்டி நகரில் உள்ள கெப்பட்டிபொல நினைவு தூபி அருகில் இடம்பெற்றது. பிரகடனத்தில் சிவில் அமைப்பினர், பொது மக்கள் உட்பட பலர் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி பதவி விலகல், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், சர்வக்கட்சி அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக செங்கடகல பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய …

  13. கொழும்பில்... பாரிய ஆர்ப்பாட்டம்: ரயில், லொறிகளில்... வந்து குவியும் மக்கள் !! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கொழும்புக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இன்று காலை இரண்டு புகையிரதங்களின் ஊடாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இளைஞர்கள் கொழும்புக்கு வருகைதந்த காணொளிகள் வெளியாகின. போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையிலும் பேருந்துகள், லொறிகள், நடைபயணம் மற்றும் சைக்கிள்கள் ஊடாக தொடர்ந்தும் போராட்ட இடத்திற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். https://athavannews.com/202…

  14. சமையல் எரிவாயு... அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் ! சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு என்பது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதால் நுகர்வோர் அதிகாரசபையின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி நேற்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1290374

  15. ஊரடங்கு சட்டம்... நீக்கப்பட்டது. மேல் மாகாணத்தின் 7 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்றிரவு 9 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(9|) காலை 8 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நீர் கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸ, கொழும்பு – வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பொலிஸ் அதிகார பிரிவுகளில் நேற்றிரவு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1290358

  16. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்டாபய பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் - வாசு உறுதி | Virakesari.lk

  17. யாழ் கோட்டையை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம் (7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விருந்தினராக பங்கேற்க வந்தபோதே அதன் கட்டுமாண நுட்பங்கள், சிறப்பம்சம் மற்றும் தொல்லியல் விடயங்கள் பற்றி தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/131026

  18. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு... மின்சார வாகன இறக்குமதிக்கான, உரிமம்! புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் பெறுமதிக்கு அமைய மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமங்களை வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. குறித்த பணியாளர்கள் அனுப்பும் டொலரின் பெறுமதிக்கு அமைய அவர்களுக்கு எவ்வாறான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ரீதியாக பணம் அனுப்பும் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி…

  19. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயங்கள் தொடர்பாக இன்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி, எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "நீ…

  20. பொலிஸார் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சுமந்திரன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளும் மக்களை தடுக்க முயலும் சட்டவிரோத அறிவிப்பு இது என தெரிவித்துள்ளார். பொலிஸ் சட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ பொலிஸ் ஊரடங்கு என்ற ஒன்றை அங்கீகரிக்கவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை,ஆகவே நான் அனைத்து பிரஜைகளிற்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார் பொலி…

  21. தனியார் நிறுவனங்கள்... டொலர் செலுத்தி, எரிபொருளை பெற்றுக் கொள்ள.. முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்! அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/ https://athavannews.com/2022/1290175

    • 1 reply
    • 182 views
  22. யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்! யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல் விநியோகித்துக்கொண்டிருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். யாழ் நகரில் நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்! | உதயன் | UTHAYAN (newuthayan.com)

  23. போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்மணியந்தோட்டம் ஒன்றிணைந்த சமூக மேம்பாட்டு அமைப்பினால் போதைத் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியும் (08) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது சமூகமட்ட அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு போரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் - யாழில் பேரணி | Virakesari.lk

  24. ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக நாளை ( 9) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு, இன்று ( 😎 கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட பொலிஸாரின் மூன்று கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க, மேலதிக நீதிவான்களான பண்டார இளங்கசிங்க மற்றும் ரி.என்.எல். மஹவத்த ஆகிய நீதிவான்களே பொலிஸாரின் குறித்த கோரிக்கைகளை நிராகரித்தனர். அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியம், இன்று (8), நாளை ( 9) ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் நிலையில், அவர்களுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பிரதான வீதிகளில…

  25. 12 இந்திய மீனவர்கள் விடுதலை கடந்த வாரம் பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், மீனவர்கள் சென்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை அரசுடமையாக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/12-இநதய-மனவரகள-வடதல/175-299965

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.