Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. IMF உதவியைப் பெற... இலங்கை, இவற்றை... செய்ய வேண்டும் – அமெரிக்கா. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது. அதன்படி... முதலில் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், மேலும் தோல்வியடைந்த முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையையும் இலங்கை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என அக்குழு எச்சரித்துள்ளது. https://athavannews.com/2022/1289404

  2. தனுஷ்கோடியில்... மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட, வயோதிபர்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !! தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையர்கள் இருவரில் ஒரு வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் திகதி கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற வயோதிப பெண், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannew…

  3. மதுரை, திருச்சி.... விமான நிலையங்களிலிருந்து கொழும்பிற்கான, சரக்கு விமான சேவை இடைநிறுத்தம். திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான சரக்கு விமான சேவை நேற்று(1) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையினை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய நாளாந்தம் சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு 2 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்…

  4. இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு... எரிபொருள் வழங்கும் செயற்பாடு, இடை நிறுத்தம். எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதால் விநியோகம் நேற்று முன்தினம் (01) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தே…

  5. இராணுவ முகாம்களில் இருந்து... வைத்தியர்களுக்கு, எரிபொருள் விநியோகம். அருகில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ஏற்படும் அமைதியின்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1289375

  6. இலங்கையில்... ஆடைத் தொழிற்சாலைகள், மூடப்படும் அபாயம். இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன், ஆடைத் தொழிற்…

  7. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகா…

  8. உங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் தருகிறோம்! | யானைவெடி போட்டு விரட்டுவோம்- உளப்பனே சுமங்கல தேரர்! இக்காணொளியில் பேசிய தேரர்களுள் ஒருவரான உலப்பனை சுமங்கள தேரரை உலப்பனை சோபித தேரர் என்று தவறுதலாக உச்சரித்துள்ளேன்! தவறுக்கு மன்னிக்கவும்!

    • 2 replies
    • 500 views
  9. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது July 2, 2022 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலைய…

  10. இலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிக்க, தன்பாலின உறவை அனுமதிக்க 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து 29 ஜூன் 2022, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியி…

  11. லொறியில்... பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள், விபத்தில் காயம் – 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி! கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின் பகுதி இடிந்து விழுந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பிரதேசவாசிகள் காயமடைந்த மாணவர்களை கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தின்போது மாணவர் ஒரு…

  12. உலை எண்ணெய் குறைகின்றதாக அறிவிப்பு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது. அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (R) …

    • 0 replies
    • 455 views
  13. ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது - கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் இலங்கையில், புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது. பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் தெரிவித்தார். இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் சமூகங்களாகிய ய…

    • 2 replies
    • 216 views
  14. இன்று நீங்கள் எரிபொருளைப் பெறக்கூடிய எரிவாயு நிரப்பு நிலையங்கள் இன்று (02) எரிபொருள் பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை லங்கா ஐஓசி வெளியிட்டுள்ளது. இதன்படி https://thinakkural.lk/article/188527

    • 0 replies
    • 155 views
  15. எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் மற்றும் 29 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/ne…

    • 0 replies
    • 174 views
  16. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும் என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/ne…

    • 0 replies
    • 237 views
  17. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

  18. இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளை வழங்க தயார் - இலங்கைக்கான ஓமான் தூதுவர் தெரிவிப்பு இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என்று இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சஈத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார். வலுசக்தி, காஸ், எரிபொருள், முதலீடு, தொழில்வாய்ப்பு ஆகிய துறைகளில் இருதரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்சமயம் ஓமானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்புக்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஓமான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். http…

  19. கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில்... கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம். பொலனறுவை – கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். 36 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2022/1288931 #…

  20. நிஷாந்தன் மீது வாள்வெட்டு July 1, 2022 தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்து தெரிவ…

  21. இந்தியாவிடமிருந்து... பெறப்படும் "40 மில்லியன் அமெரிக்க டொலர்" கடனில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல். இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளைச் செய்துள்ளதாகவும், எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆராய இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்க…

  22. எரிபொருள் நெருக்கடி குறித்து... பிரதமர் ரணில் தலைமையில் ஆராய்வு! எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், 90 சதவீதமானவை தற்போது மூடப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள எரிபொருளை, அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிப்பதற்காக, எஞ்சியுள்ள 10 சதவீத நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், நேற்றைய கலந்துரையாடலில…

  23. குறைந்த வருமானம் பெறும்... குடும்பங்களுக்கு, 10,000 ரூபாய் நிவாரணம் : அரசாங்கம். நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 7,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த தீ…

  24. நாட்டின் தேசிய பாதுகாப்பு... தற்போது, பூஜ்ஜியமாகிவிட்டது – மைத்திரி குற்றச்சாட்டு. நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார். மேலும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே ஆளும்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார். அமைதியான முறையில் போராட்டத…

  25. தற்போதைய சூழலில்... இலங்கைக்கு, உதவ முடியாது – ஜப்பான். இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே இந்த விடயம் குறித்து தெரிவித்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1289152

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.