Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை: “பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு” - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சஜித் பிரேமதாச இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (01/07/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். "திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் எனக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறியுள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, "தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்…

  2. இலங்கைக்கு, உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு! சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தது. இவர்கள், நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் அவசியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், இந்த விஜயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் இந்த ஆண்ட…

  3. கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு அமைச்சர் தம்மிக்க விசேட அறிவிப்பு! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ”வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வோரின் நலன் கருதி, ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் நிலையங்களை பல இடங்களில் தற்போது நாம் திறந்துள்ளோம். எதிர்வரும் திங்கட்கிழமை முதல், மாத்தறை, வவுனியா, கண்டி போன்ற பகுதிகளில் இந்த நிலையங்களை திறக்கவுள்ளோம். எனவே, தூர பிரதேசங்களில் இருந்து பத்தரமுல்லைக்கு எவரும் வரவேண்டி…

    • 2 replies
    • 279 views
  4. இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா! இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து உயர்ஸ்…

  5. உலகில் வேகம் குறைந்த வீதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வீதிப்போக்குவரத்து வேகம் பொலிவியாவை போன்று மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் என்ற அளவிலேயே உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வேகம் குறைந்த வீதிகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. எனினும் பங்களாதேஷ் மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நாடுகளில் முறையே மணித்தியாலத்துக்கு 41 கிலோ மீற்றர் மற்றும் 46 கிலோமீற்றர் என்ற வேகமுறையே நடைமுறையில் உள்ளது. வேகம் குறைந்த வீதிகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது, இதன் சராசரி வீதி வேகம…

  6. யாழ் மாநகர சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. இதனால் யாழ் மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம…

  7. இலங்கைக்கு தேவையான... உணவு வகைகள் தொடர்பான, பட்டியலொன்றை வழங்குமாறு... இந்தியா கோரிக்கை. இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்கள் தொடர்பில் அறியத்தருமிடத்து தமது பொருளாதாரக் கொள்கைகளின் போது அதற்கு முன்னுரிமை வழங்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1289028

  8. கல்முனையில் தமிழ் பிரதேச அரச காணியை அத்துமீறி அபகரிக்கும் முயற்சி ! பொது மக்கள் ஆர்ப்பாட்டம்! Sayanolipavan ( காரைதீவு சகா) கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் அத்துமீறி நுழைந்து கட்டுமான வேலைகளை செய்து அபகரிக்கும் முயற்சியை கண்டித்து நேற்று (29) புதன்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். குறித்த அரச காணியில் தனியார் ஒருவர் தனக்கு உரிமை கோரி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆர்ப்பாட்டத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தற்காலிகமாக கட்டிடம் அமைக்கும் பணியை நிறுத்தியதுடன் நீதிமன்றத்துக்கு குறித்த விடயத்தினை எடுத்து செல்வதாகக் கூறியதை தொடர்ந்து …

  9. அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் யாழ் - கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர். துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் …

  10. காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்துநிறுத்தியது ஏன் - இராணுவம் விளக்கம் துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிசாந்த பிரேமரட்ண தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றவில்லை அவர்களது ஆர்ப்பாட்டத்தை தடுத்துநிறுத்தினோம் என குறிப்பிட்டுள்ள அவர் துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படும் என்பதாலேயே ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை கையில்; வைத்திருந்தனர் அதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் நிலை காணப்பட்டது இதன் காரணமாக அவர்களை அகற்றுவதற்கான …

  11. இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்த சைக்கிள் விலை! July 1, 2022 எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிக அளவில் நாடுகின்றனர். மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள், ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பன…

  12. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக... தபால் திணைக்களத்திற்கு, 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு! தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 400 வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கியுள்ளன. இதனால் தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் சேவை தற்போது செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரமே இயங்கும…

  13. 32 இலட்சம் குடும்பங்களுக்கு 7500 ரூபா கொடுப்பனவு! பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்தி திட்டம் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும். இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 7,500 ரூபா வழங்கப்படமு; என்று அவர் கூறியுள்ளார். http://www.samakalam.com/32-இலட்சம்-க…

  14. இலங்கை வரலாற்றில், பணவீக்கம் 50 வீதத்தை கடந்து சாதனை படைத்தது! July 1, 2022 இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் ( (Inflation) எனப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் 50 வீதத்தை கடந்து இந்த மாதம் பணவீக்கம் 54.6% ஆக பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 42.4 வீதத்தால் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறையினால் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அரிசி, தானிய வகைகள் உள்ளிட்ட ஏனைய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தமையும் இந்த மாதத்…

  15. கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைக்கப்படாமையால் மக்கள் சிரமம் முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள எல்லைக்கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரித்து நிற்கும் கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக பாலம் நிர்மாணிக்கும் செயல் திட்டம் பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதுவுமே மேலாக முன்னெடுக்கப்படாத நிலைமை காணப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியையும், திருகோணமல…

    • 3 replies
    • 312 views
  16. புலம்பெயர் தமிழர்களாலேயே... இலங்கையர்களுக்கு, விடிவு கிடைக்கும் – நோர்வேயில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்! ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வெட்கமில்லை, இன்றும் பதவியில் உள்ளார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமை வேதனைக்குரியதாகவுள்ளது. இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மேம்படுத்த முடியும். ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்த…

  17. வர்த்தமானியில் வெளியானது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே தற்போது அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட https://cdn.virakesari.lk/uploads/medium/file/182225/217-2022_T.pdf https://w…

  18. அரசாங்கத்திற்கு எதிராக... இன்று, ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு! அரசாங்கத்திற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அனைத்து அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/…

  19. விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை, எடை, அளவு, உற்பத்தி திகதி, காலவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உட்பட சகல விபரங்களும் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை…

  20. அதிகரித்தது பஸ் கட்டணம் : குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபா ! பஸ் கட்டணம் 21.85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.. இன்று நள்ளிரவு முதல் பஸ்கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை அதிகரிக்கப்படுகின்றது. பஸ் கட்டண தேசிய கொள்கைக்கு அமைய, ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரையான 7 மாத காலப் பகுதியில் 5 தடவைகள் பஸ் கட்டணங்கள் அதிகரிக்…

  21. ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால்... முழு நாடும், தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்! ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நிலைமை மோசமாகும் என எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளத…

  22. கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை (சகா) சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளைநடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும். இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்வைத்தார். கிழக்கு மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உடனான Zoom தொழில்நுட்ப கூட்டத்தில் ஆளுநர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இத்தகவலை அந்தந்த வலய கல்வி பணிப்பாளர்கள் அவரவர் வலய புலனக் குழுவில் வாட்ஸ்அப் குழுவில் அதிபர் ஆசிரியர்கள…

  23. “இனியும் பொறுமை காக்க மாட்டேன்” வடக்கு ஆளுநர் எச்சரிக்கை பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில், இதுவரை தீர்வுகளை முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இனியும் பொறுமை காக்க மாட்டேன் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரித்துள்ளார். ஆளுநர் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் சேவையை அமைச்சர்கள் மாற்றும் திணைக்களங்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களில் பொதுமக்கள் தமது தேவையை திருப்திக…

  24. கொழும்பு தேசிய வைத்தியசாலையில்... 150 மருந்துகளுக்கு, தட்டுப்பாடு. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களே மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1288985

  25. வெளிநாட்டவர் இலங்கையரை... திருமணம் செய்யும் போது, வழங்கப்படும் விசா கால எல்லையை... நீடிப்பதற்கு நடவடிக்கை இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, குறித்த விசா கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை எதிர்வருத் 4ஆம் திகதி அமுலுக்கு வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288981

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.