Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் - எச்சரிக்கின்றது யுனிசெவ் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளது. நான் இன்று காலை கண்விழித்தபோது முதலில் ஆராய்ந்த விடயம் இலங்கையில் இன்று மின்சார துண்டிப்பு எந்த நேரத்தில் நிகழ்கின்றது என்பதே. ஏனென்றால் நீண்ட நேர மின்துண்டிப்புநீண்ட தூர எரிபொருள் வரிசைகள் காலியான பல்பொருள் அங்காடிகள்இ அதிகரிக்கும் விலைகள் ஆகியனவே இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் குணாத…

  2. எதிர்வரும் 13ஆம் திகதி, (திங்கள்கிழமை) விசேட விடுமுறை! நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1286520

  3. கொழும்பு துறைமுக, கிழக்கு முனையம்... இந்திய அதானி நிறுவனத்திடம், ஒப்படைக்கப் படாது.. என்கின்றது அரசாங்கம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது. இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தே…

  4. ’உணவு பஞ்சம் ஏற்படாது’ பா.நிரோஸ் அதிகளவான ஹெக்டேயர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார். வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதி…

    • 6 replies
    • 510 views
  5. இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சிடையும் - உலகவங்கி இலங்கை மின்சார உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் இல்லாதாவாறு அந்நியசெலாவணி முற்றாக முடிவடைந்துள்ளதால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 2024ம் ஆண்டு அளவிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையை நோக்கி முன்னேறும் என உலகவங்கி தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையின் பொருளாதாரம் 3.7வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடன்கொடுப்பனவு நிறுத்தப்பட்…

  6. ’நெருக்கடியிலிருந்து விரைவில் மீள முடியாது’ சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வெளியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்…

  7. பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி! மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ…

    • 24 replies
    • 997 views
  8. கண்டி, பேராதனிய பல்கலைக்கழகம்... இன்று முதல் மூடல் ! கண்டி பேராதனிய பல்கலைக்கழகத்தை இன்று (18) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து மாணவர்களும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது குறித்த முடிவு அனைத்து மாணவர்களுக்கும் அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1287519

  9. அனைத்துக் கட்சி அரசாங்கமே... குறுகிய காலத்தில், அனைத்துப் பிரச்சினைகளையும்.. தீர்க்கும் – மைத்திரி தாம் முன்மொழிந்த சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால், நிலவும் நெருக்கடிக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசாங்கம் அமைத்தால் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என அரசாங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும் அதுவே சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டார். ஆகவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவுடன் 15 அமைச்சர்களை உள்ள…

  10. மாளிகைகளில்.. இருப்பவர்களுக்கு, பிரச்சினை இல்லை : சஜித் பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அத்தகைய வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவ்வாறு கடல்கடந்த கணக்குகளில் உள்ள நிதியை கைப்பற்றி இலங்கையின் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு ஏன் பயன்படுத்த முடியாது என்றும் கேள்வியெழுப்பினார். அத்தோடு மாளிகைகளில் இருப்பவர்களுக்கு எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் டொலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டார். நாட்டில் இல்லாத விடயங்களை ஜனாதிபதியும் ப…

  11. எவரும், பட்டினியால் வாடுவதற்கு... இடமளிக்க மாட்டோம் – பிரதமர் ரணில். உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய உணவு நெருக்கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.…

  12. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கான... பாடசாலை நடவடிக்கை குறித்து, இன்று முக்கிய கலந்துரையாடல். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (18) காலை கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெறும் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள், மாகாண மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாடசாலை நடவடிக்கைகளை இணையவழியில் முறைப்படி நடத்துவதா அல்லது மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைப்பதா என்பது குறித்து இக்கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் …

  13. அந்நியச் செலாவணியை... விரைவாக ஈட்ட, கைத்தொழில் துறைக்கு... புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அந்நியச் செலாவணியை ஈ…

    • 1 reply
    • 457 views
  14. Published by T. Saranya on 2022-06-17 17:08:40 யாழ்ப்பாணம், சித்தங்கேணியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆசிரியை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். சித்தங்கேணியைச் சேர்ந்த 7 வயது மாணவியே இவ்வாறு ஆசிரியையால் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். கடுமையான மன அழுத்தத்துக்குள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லு…

    • 1 reply
    • 330 views
  15. (எம்.மனோசித்ரா) சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்கள் விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு , ஒரு கோடியே 86 இலட்சத்திற்கு அதிக பணமும் , 4 இலட்த்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் கோனஹேண முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, கொழும்பு-15, புதுக்கடை மற்றும் கொழும்பு-10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த சந்தே…

  16. கோட்டாவுக்கும், ரணிலுக்கும்... இடையில், பகைமை... அதிகரித்து வருகிறது – மைத்திரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அப்போது ஜனாதிபதியாக இருந்த தமக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் இடையில் இருந்த போட்டியைப் போன்றே இதுவும் உள்ளதாகஅவர் கூறியுள்ளார். கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருவருக்குமிடையில் ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அல்லது ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென்றும் அதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க ஆட்சி முழுத் தோல்வி…

  17. எரிபொருள் இருப்புக்களை... திட்டமிட்ட முறையில், விநியோகிக்கவும் – ஜனாதிபதி உத்தரவு தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை திட்டமிட்ட முறையில் விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நிதி, பொதுநிர்வாக மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்…

  18. எரிபொருளை... பதுக்கி வைப்பவர்களுக்கு, எதிராக... சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் – ஜனாதிபதி நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவ…

  19. பாடசாலைகளை... தொடர்ந்தும் இயக்குவது, கேள்விக்குறியாக உள்ளது – தமிழர் ஆசிரியர் சங்கம் தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,” இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துய…

  20. 4 முதல் 5 மில்லியன்... இலங்கையர்களை, உணவு நெருக்கடி... நேரடியாகப் பாதிக்கும்- ரணில் உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியுடன் இருக்கவிடாதிருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உணவு நெருக்கடி…

  21. மாணவர்களுக்கு... ஓகஸ்ட், டிசம்பர் தவணை விடுமுறைகள் இல்லை. எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1287485

  22. அரச ஊழியர்கள்... திங்கட்கிழமை முதல், வீட்டில் இருந்து... வேலை செய்யும் திட்டம் அறிமுகம். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரிய நடைமுறைகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு வெளியிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாற…

  23. இலங்கை நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருக்க வேண்டும் - மத்திய வங்கி ஆளுநர் பென் சு பொருளாதாரப் பிரிவு ஆசிரியர், நியூஸ்நைட் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார். வெளியிலிருந்து உதவி கேட்க தாமதம் செய்தது தவறு என, பிபிசி நியூஸ்நைட் நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்…

  24. பசில் ராஜபக்ச, வைத்தியசாலையில் அனுமதி! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவர் எதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரையில் வெளியாவில்லை. https://athavannews.com/2022/1287433

    • 1 reply
    • 245 views
  25. பொருளாதார நெருக்கடியினால்... அரசியல் கைதிகளும், பாதிப்பு! பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல்கைதிகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அரசியல்கைதியொருவர் தெரிவித்தார். வழக்கொன்றிற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மூன்று அரசியல் கைதிகள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் சகிதம் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிலையில் வழக்கு நிறைவின் பின்னர் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் பொருட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டும் செல்லும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் அரசியல் கைதிகளும் பல்வேறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் தமிழ் மக்கள் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.