ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் ஆதரவை நாடும் வேட்பாளர்கள்.. இந்த நிலையில், நாளையதினம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேர்தல் களத்தில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்…
-
- 1 reply
- 406 views
- 1 follower
-
-
அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்ற நிலையில் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் டியூப் கணவாய் மீன்கள் சிக்கியது. சைக்கிள் டியூப் போன்று இருப்பதால் இதை டியூப் கணவாய் என்று மீனவர்கள் அழைக்கின்றனர். இது கனவாய் வகையில் ஒரு வகைப்படும். ஒரு அடி நீளம் வரையில் இருக்கும். இதற்கு ஊசி கணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்…
-
- 0 replies
- 458 views
-
-
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் நிறைவடையாமலுள்ளமையும் தற்போது நாட்டிலுள்ள பெரும் பிரச்சினையாகும். இந்த விசாரணைகளை தாமதமின்றி நிறைவடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால் , அதற்கு பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே இன்று நாட்டில் காணப்படும் பிரதான அரசியல் பிரச்சினையாகும். அதனை நீக்குவதற்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீள நடைமுறைப்படுத்துதற்கான சட்ட மூலத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 246 views
-
-
K.B.சதீஸ் வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதட்ட நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனிய…
-
- 0 replies
- 180 views
-
-
இலங்கையில்... அவசரகாலச் சட்டம் அமுல்! பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1291408
-
- 8 replies
- 491 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக... அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி: இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது. 2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பவர்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 200,000 முதல் 1,000,000 வரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த கடத்தல்காரர்கள் பழுதடைந்த மற்றும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்த…
-
- 13 replies
- 791 views
-
-
இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் - கோட்டாபய இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அசைக்க முடியாத ஆட்சி' என்று ஒரு காலகட்டத்தில் - பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 'கோட்டா வீட்டுக்கு போ' போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ரண…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் : சம்பந்தன் -ஆர்.ராம் புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய இடைக்கால ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், தற்போதைய நிலையில், யார் குறித்த வெற்றிடத்திற்கு போட்டியிடுகின்றார்கள் அவர்களின் செயற்றிட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தெளிவான வெளிப்படுத்தல்கள் காணப்படவில்லை. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பில் ஆழமாக கரிசனைகளைக் கொண்டிருக்கும் நாம் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்த பின்னரே இற…
-
- 3 replies
- 393 views
-
-
இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி! நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.samakalam.com/இலங்கை-திரும்புகிறார்…
-
- 32 replies
- 1.9k views
- 1 follower
-
-
காலி முகத்திடலில், போராட்டம் தொடங்கி... இன்றோடு 100 நாட்கள் நிறைவு. கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. இதேவேளை, போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வும் நேற்று இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது. இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. https://athavannews.com/2022/1291362
-
- 10 replies
- 791 views
- 1 follower
-
-
ரணிலை, பதவி விலகுமாறு வலியுறுத்தி... நாளை எதிர்ப்பு நாளாக பிரகடனம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் தமக்கு அருகில் உள்ள நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியது போல பதில் ஜனாதிபதி ர…
-
- 0 replies
- 253 views
-
-
50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன்... சந்தேகநபர் ஒருவர் கைது. நாடாளுமன்றம் செல்லும் வழியில் பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது கடத்தப்பட்ட 50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒபேசேகரபுர – நாணயக்கார மாவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேக நபர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பொரளை கோதமி வீதியில் அவர் தற்கா…
-
- 0 replies
- 253 views
-
-
ஜனாதிபதி பதவிக்காக ரணில் அரசியலமைப்புச் சதி : தடுத்து நிறுத்த தயான் 5 யோசனைகள் முன்வைப்பு (ஆர்.ராம்) ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி தயான் ஜயத்திலக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சதியை வெற்றி கொள்ளாதபட்சத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றும் போராட்டம் தோல்லியடைந்து விட்டதாகவே கொள்ள வேண்டுடியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ரணிலின் ஜனாதிபதி பதவிக்கான அரசியலமைப்புச் சதியை எவ்வாறு முறியடிக்கலாம் என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளும் ராஜபக்ஷவுக்கு எதிரானசக்திகளும் தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிரணிகள் தமக்குள் பிளவ…
-
- 0 replies
- 202 views
-
-
தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம் (ஆர்.ராம்) தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, இந்த செயற்பாட்டில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்களான, நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிர…
-
- 0 replies
- 146 views
-
-
கோட்டாபயவுக்கு... எந்த நாடும், அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம். போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , இலங்கையில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எந்த நாடும் அகதி அந்தஸ்து கொடுத்து எந்த நாடும் வாழ்வதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.மக்கள் போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 170 views
-
-
சீனாவை விட... அதிகமாக, இலங்கைக்கு கடன் வழங்கும் நாடாக... இந்தியா! இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அத்துடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட அகில இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1291448
-
- 0 replies
- 277 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக உறுப்பினர்களை நேரடியாக அச்சுறுத்தியுள்ளனர். எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் இடுகைகளை செய்வது, அதனை பரப்புவது மற்றும் வெளியிடுபவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பத…
-
- 0 replies
- 212 views
-
-
ஜனாதிபதி வேட்புமனுவை... மீளப் பெறத் தயார் – நிபந்தனைகளுடன் அனுர அறிவிப்பு! எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்புமனுவை மீளப் பெறத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்…
-
- 0 replies
- 200 views
-
-
வேட்புமனுக்களை... ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை முன்னெடுப்பு புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 143 views
-
-
பொதுமக்களை... ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே, அரசாங்கம் நம்பியுள்ளது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு பொதுமக்களை ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே அரசாங்கம் நம்பியுள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. போராட்டக்கார்களுடன் கலந்துரையாடிய இராணுவ அதிகாரி பணி இடை நீக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மக்களை அடக்கும் அதிகாரிகளே அரசாங்கத்திற்கு தேவை என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தின் முன்பாக க…
-
- 1 reply
- 557 views
-
-
ஜனாதிபதித் தெரிவு ; டலஸ் - சஜித் முன்வைக்கும் விடயங்கள் (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து உருவாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடத்திற்காக 4 பிரதான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவ்வாறு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தமது தீர்மானம் குறித்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இணைந்து வரலாற்றில் முதன் முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்ப…
-
- 0 replies
- 236 views
-
-
ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும், நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் அவர் களமிறங்குவார் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ள…
-
- 10 replies
- 618 views
-
-
பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில். ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்…
-
- 6 replies
- 477 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நி…
-
- 5 replies
- 498 views
- 1 follower
-
-
’அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர்’ - சித்தார்த்தன் தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியில் இருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33ஆவது வீரமக்கள் தினத்தில் கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களை பொறுத்த மட்டில் இந்த பொருளாதார கஷ்டம் என்பது புது விடயமல்ல. இது ஏற்கனவே எமது மக்கள் அனுபவித்த விடயம். எங்களுடைய மக்கள் நீண்ட க…
-
- 5 replies
- 458 views
-