Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 இலங்கையர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 15 அக்டோபர் 2013 அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 இலங்கையர்கள் இன்று (15.10.13) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 40 பேர் நேற்று (14.10.13) திங்கட்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு கடலில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருந்த யாழ்ப்பாணம், …

  2. அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மோசடி அவுஸ்திரேலியாவில் 6 . 7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையருக்குப் பிணை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் மறுத்துள்ளது. இவரின் வீட்டைச் சோதனையிட்டபோது சுமார் 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பண வைப்புப் பத்திரங்கள் , சுமார் 7 லட்சத்து மூவாயிரம் டொலர்கள் பெறுமதியான 54 பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆவணங்கள் அவுஸ்திரேலியக் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இலங்கையர் போலியான கடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என மெல்போர்ன் நீதிமன்றில் நேற்றுச் சட்டத்தரணிகள் சந்தேகம் வெளியிட்டனர். இந்த நிலையில் அவருக்குப் பிணை வழங்கினால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந…

  3. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளார். அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குறித்த அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதாகவும் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டத்திற்கு தடுப்பில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள…

    • 0 replies
    • 379 views
  4. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் அனைத்துலக மன்னிப்புச் சபையினால் புகைப்படக் கண்காட்சி இன்று வியாழக்கிழமையும் நாளையும் நடத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1k views
  5. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 336 views
  6. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 32 வயதான மருத்துவர் நாகரூபன் ஆறுமுகத்திற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 355 views
  7. அவுஸ்திரேலியாவில் சனல் 4 இற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Published on July 30, 2011-12:48 am சனல் 4 காணொளியை அவுஸ்திரேலியாவில் ஒளிபரப்பியமைக்கு எதிராக அங்குள்ள இலங்கையர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவலை, எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அமைப்பின் உறுப்பினரான ஒசன் அபயவர்தன மெல்பன் நகரில் இருந்து இந்த தகவலை தெரிவித்தார். இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=28242

    • 4 replies
    • 815 views
  8. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழர்கள் விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. இந்த இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத விடுதலைக்கு அவுஸ்திரேலிய தமிழர் அமைப்புக்களும், மக்களும், தமிழர்கள் அல்லாதவர்களும் ஒத்துழைப்பு நல்கி உள்ளனர். அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் அறிக்கை: http://www.australiantamilcongress.com/en/ தொடர்பு பட்ட செய்திகள்: http://www.smh.com.au/national/release-plan-for-families-in-detention-20101016-16oae.html http://www.abc.net.au/am/content/2010/s3040153.htm

  9. அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல் வணக்கம், தமிழ் ஊடக நண்பர்களே !!! இத்துடன் இணைத்து அனுப்பப்படும் “அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல் – (அவசரகால உதவி நிவாரணத் திட்டம்) பற்றிய அறிவித்தலையும், நிதிசேகரிப்பு படிவத்தையும் தயவுசெய்து உங்கள் இணையத்தளத்தில் அல்லது ஊடகத்தில் பிரசுரித்து அல்லது இணைப்பை ஏற்படுத்தி பெரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் உங்களிற்கு அறிமுகமான சகோதர இணையத் தளங்களிற்கும் / ஊடகங்களிற்கும் இதை அனுப்பிவைத்து உதவிடுமாறு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம். இந்நிகழ்வில் ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் முன்னர் பெருமளவில் பாதிப்புற்ற…

    • 2 replies
    • 680 views
  10. ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 16வது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசர கால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக 3CR தமிழ்க்குரல் வானொலியிலும், 24 மணிநேர இன்பத்தமிழ்ஒலி வானொலியிலும் நடைபெறும் கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இவ் உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர். அத்துடன் இந் நிதிசேகரிப்பிற்கு அவுஸ்திரேலியா மாநில மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம். 25ம் திகதி கா…

  11. அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை ஜூன் 1, 2014 அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை காலை தன்னைத்தானே தீமூட்டிய நிலையில் சாலையால் சென்றவர்களால் மீட்கப்பட்ட லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர் பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மெல்பேண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டார். 95 சதவீதம் எரிகாயங்களுக்குள்ளான அவர் உயிருக்குப் போராடிய நிலையில் 01-05-14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார். அவுஸ்திரேலிய…

  12. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள் வாக்களிப்பு தொடர்பான விபரம் (02.03.2010) http://www.yarl.com/articles/files/100302_vadukoddai_aus.mp3

  13. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில், அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள் வாக்களிப்பு தொடர்பான விபரம் http://www.yarl.com//articles/files/100303_vaddu_koddai.mp3

  14. அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக பேராசிரியர் திரு.தீரன் அவர்கள் செய்தி அலைகள் நிகழ்ச்சியில் http://www.yarl.com/articles/files/100323_Prof_Theeran_part_1.mp3

  15. அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக பேராசிரியர் திரு.தீரன் அவர்கள் செய்தி அலைகள் நிகழ்ச்சியில் பாகம் 2 http://www.yarl.com/articles/files/100330_Prof_Theeran_part_2.mp3

  16. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு: வாக்களித்தோர் எண்ணிக்கை 8274, தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156, தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67. இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்…

    • 15 replies
    • 1.2k views
  17. அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 29 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் இன்றைய தினம்(14) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அவுஸ்திரேலியாவில்-நாடு-கடத்தப்பட்ட-இலங்கையர்கள்/175-208860

  18. விக்ரோரியா மாநிலத்தில் 3 வெற்றிடங்களுக்கும் மூன்று நியமனப்பத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால் போட்டியின்றி ஏகமனதாக ஜனனி பாலசந்திரன்,துரைசிங்கம் சண்முகானந்தகுமார், டொமினிக் சவியோ சாந்தியபிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். குயின்ஸ்சிலாந்து மாநிலத்தில் தேவையான ஒரு இடத்திற்கு ஒரு நியமனப்பத்திரம் கிடைத்ததால் இளயதம்பி செல்வநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம்(இங்கு தான் அவுஸ்திரெலியா தலைநகரம் கன்பரா இருக்கிறது),தஸ்மேனியா ஆகிய இடங்களுக்கு தேவையான ஒரு இடத்திற்கு ஒரு நியமனப்பத்திரம் கிடைத்ததால் அபிராமி விஸ்வநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். மேற்கு ஒஸ்ரேலியா, கிழக்கு ஒஸ்ரேலியா, வட மண்டலம் ஆகிய இடங்களுக்கு தேவையான ஒருவர் இன்னும் தெர…

  19. 22 april 2012 அவுஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை Geelong தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப் பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார். நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்க…

  20. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழிப் பயணம் மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயம் 12 ஜூலை 2014 அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழியாக பயணங்களை மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயமாகியுள்ளனர். இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறு வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் கடல் வழியாக புகலிடம் கோர முயற்சித்து காணாமல் போன இலங்கையர்களின் எண்ணிக்கை 800க்கும் மேல் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் உண்மை …

  21. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்‐ 15 November 09 02:34 pm (BST) அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் கிறிஸ்மஸ் தீவுகளில் போராட்டத்தை நடத்திய நபர் ஒருவரையும் அவுஸ்திரேலியா, நாடு கடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முனைந்த ஐம்பது இலங்கையர்களில் சிலரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். புகலிடம் கோரியவர்களில் 12 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமைவான முறையில் புகலிடம் கோருவோருக்கு தஞ்சமளிக்கப்படும் என அவுஸ்திரேலிய க…

  22. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை வறிய நாடான கம்போடியாவில் குடியேற்றுவதற்கு ஒப்பந்தம் 2014-09-27 20:26:33 அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களை கம்போடியாவில் குடியேற்றுவதற்கான ஒப்பந்தமொன்றில் அவுஸ்திரேலியவும் கம்போடியாவும் நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளன. ஆசியாவின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றாக கம்போடியா இருப்பது குறிப்பிடத்தக்கது. கம்போடிய தலைநகர் பினோம்பென்னில் வைத்து அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் கம்போடிய உள்துறை அமைச்சர் சார் கேங்கும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியநிலையில் தற்போது நவுறு நாட்டின் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் உண்மையான அகதிகள் மாத்திரம் கம்போடியாவுக்கு அனுப்பப்படுவர் என அறிவிக்க…

  23. புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் என்றும் புலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசு கேட்டுள்ளது SL wants Australia to ban LTTE

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.