ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
உணவுப் பாதுகாப்பிற்கு... முதலிடம் கொடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க நாட்டில் உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிலே அல்லது உலகிலோ அனைத்து அம்சங்களும் உணவுப் பாதுகாப்பில் தங்கியுள்ளன சுட்டிக்காட்டினார். 90 களில் தொழில்மயமாக்கலை நோக்கி நகர்த்த முயற்சிகள் மூலம் உருவாக்கப்பட்ட திறந்த சந்தைக் கொள்கை காரணமாக உள்ளூர் விவசாயம் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார். பஞ்சம் வரவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது என்றும் இது முழு உலகத்தையும் பாதிக்கும் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார். விவசாயத்தி…
-
- 3 replies
- 208 views
-
-
ஜனாதிபதி பதவி விலகினால் ஓராண்டு கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் - மரிக்கார் (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டாக்கு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். அத்தோடு நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் காரணமாகக் காண்பித்து தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதானி நிறுவனத்திற்கு வேலைத்திட்டங்களை வழங்கி , இந்தியாவிடம் கையேந்துவது தவறான விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழ…
-
- 0 replies
- 159 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கையிருப்பை அனைவரும் அறிய இணைத்தளம்! அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக விசேட இணையத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேசத்தை தெரிவு செய்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருக்கும் எரிபொருள் வகைகளின் இருப்பை அறிந்துகொள்ள முடியும். https://fuel.gov.lk/ இணையத்தளத்தில் அந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். http://www.samakalam.com/எரிபொருள்-நிரப்பு-நிலையத/
-
- 0 replies
- 292 views
-
-
யாழில்... மாற்றுப்பாலின, சமூகத்தினருக்கு எதிரான... ஒடுக்குமுறைகளை, கண்டித்து விழிப்புணர்வு பேரணி. மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது. யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1286583
-
- 0 replies
- 209 views
-
-
மனிதாபிமான... நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை. இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் டொலர் நிதி உதவியை கோரியுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செலுத்த வேண்டிய நிதி நிலுவை 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செயற்பாடுகளை மேற்கொள்…
-
- 1 reply
- 97 views
-
-
இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMM இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது. இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. …
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-
-
இலங்கை வருகின்றார்... உலக உணவுத் திட்டத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் ! ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீஸ்லி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். உலக உணவுத் திட்டத்தின் தலைவரை நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து ஆதரவையும் பாராட்டுவதாகவும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1286557
-
- 0 replies
- 89 views
-
-
இலாபத்தில் ஒரு பங்கு வடக்கு அபிவிருத்திக்கு வழங்க வேண்டும்! June 10, 2022 வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (9.06.22) இடம்பெற்ற மின்சார திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான பிரதேசங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட…
-
- 3 replies
- 384 views
-
-
இலங்கைக்கு வந்தபோது... நான் எதிர்பார்த்த, 2 விடயங்களும் நிறைவேறின – பதவி விலகிய பின்னர்... பசில். இலங்கைக்கு வந்தபோது தான் எதிர்பார்த்த இரண்டு விடயங்களும் நிறைவேறியதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் தகுதியான எவரேனும் தனது இடத்திற்கு வரத் தயார் எனில் கட்சி அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “என்னால் முடிந்தவரை நான் செய்ய வேண்டியதை செய்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்கள் எதிர்பார்த்ததை…
-
- 9 replies
- 716 views
-
-
முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, சுதந்திரபுரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக இவ் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை, குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையாரான புஸ்பநாதன்…
-
- 0 replies
- 346 views
-
-
இலங்கைக்கான இந்தியாவின் உதவியை பாராட்டியது சீனா - இணைந்து செயற்பட தயார் எனவும் தெரிவிப்பு இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படதயார்என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் பெரும் முயற்சிகளை பாராட்டியுள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இந்தியா சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இந்தியாவின் பெரும் முயற்சிகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,நாங்கள் அதனை அங்கீகரித்துள்ளோம்,நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை உட்பட ஏனைய நாடுகள் அந்த நெருக்கடிய…
-
- 6 replies
- 406 views
-
-
கல்வி அமைச்சுக்கு... முன்பாக பதற்றம் – போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் தாரைப் பிரயோகம்! பத்தரமுல்லை – இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பாளர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்தவேளை, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1286450
-
- 0 replies
- 153 views
-
-
புதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம் ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் துறைமுக நக…
-
- 0 replies
- 142 views
-
-
அறுவடைக்கு... எரிபொருளை, பெற்றுத் தருமாறு... விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்! கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டும் எரிபொருள் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இன்னும் சிலநாட்களுக்குள் எரிபொருள் கிடைக்கப்பெறா…
-
- 0 replies
- 246 views
-
-
மஹிந்தவுக்கு... எதிரான மனு குறித்து, ஜுலை 4ஆம் திகதி விசாரணை! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் பிரதமர், முன்னாள் நிதி அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. கலாநிதி மஹீம் மெண்டிஸ் உட்பட திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித்…
-
- 0 replies
- 125 views
-
-
‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை, முற்றுகையிட்டு... போராட்டம்! பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 9 கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கோ கோட்டா ஜெய்ல்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை களைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1286308
-
- 5 replies
- 432 views
-
-
பிள்ளைகளுக்கு... 3 நாட்களாக, உணவு இல்லை – தாய்... தற்கொலை முயற்சி! உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை. சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிள்ளைகள் பட்டினியில் தவ…
-
- 1 reply
- 234 views
-
-
ரஷ்யாவிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை! நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். எனவே தங்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி செயற்படுவதாகவும் 09 கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். h…
-
- 1 reply
- 156 views
-
-
‘இது, சிரிக்கும்... விடயம் அல்ல: நாட்டின், எதிர்காலம் பாழாகிவிட்டது’- பசில் குறித்து, சனத் ஜயசூர்ய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விசேட செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். மேலும் இதன்போது, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து ருவிட்டரி…
-
- 0 replies
- 277 views
-
-
இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – நாட்டிற்கு விஜயம் செய்யும், சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நிதியம் தெரிவித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 148 views
-
-
புதிய, இரண்டு அமைச்சுக்களுக்கான... அதிவிசேட வர்த்தமானி வெளியீடு புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு என்பன உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன குறித்து அந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 27 ஆம் த…
-
- 0 replies
- 139 views
-
-
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ... பிணையில், விடுதலை கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டார். இந்…
-
- 0 replies
- 229 views
-
-
கோட்டை நீதிமன்றில்... சரணடைந்தார், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ம…
-
- 0 replies
- 226 views
-
-
மின்சாரத் திருத்தச் சட்டமூலம்... பெரும்பான்மை வாக்குகளால், நிறைவேற்றம்! மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, மின்சாரத் திருத்தச் சட்டமூலம் 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286329
-
- 0 replies
- 235 views
-
-
முகக்கவசம் அணிவது... கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார். சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1286321
-
- 0 replies
- 186 views
-