ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு... 5 வருடங்களுக்கு, ஒத்திவைக்கப்பட்ட... 2 வருட சிறைத்தண்டனை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. https://athavannews.com/2022/1285790
-
- 0 replies
- 130 views
-
-
புலம்பெயர் தமிழர்கள்... இலங்கையில் முதலிட்டால், அவற்றை இந்த அரசு... முடக்கும். – செல்வம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 21 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தின்பால் செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களை கூட்டி இரண்டு மூன்று தினங்களாக விவாதித்து வருகின்றோம். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றார்…
-
- 0 replies
- 119 views
-
-
"695 பில்லியன்" ரூபாய்க்கான.... குறைநிரப்பு பிரேரணையை, சமர்ப்பித்தார் பிரதமர் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்றும் நாளையும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1285787
-
- 1 reply
- 209 views
-
-
ஒரு வருடகாலம்... சம்பளமின்றி பணியாற்ற, அமைச்சர்கள் தீர்மானம்! நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டிற்கு தினசரி வருமானம் 4 பில்லியன், தினசரி செலவு 9.6 பில்லியன் ஆகும். எனவே, தினமும் 2.4 பில்லியனுக்கும் அதிகமான வர…
-
- 3 replies
- 398 views
- 1 follower
-
-
இந்தியாவிடம் இருந்து... 55 மில்லியன் டொலர்களை, கடனாகப் பெற அமைச்சரவை அங்கீகாரம்! உரத்தை கொள்வனவு செய்வதற்காக இந்திய வங்கியிடமிருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1285743
-
- 0 replies
- 83 views
-
-
யாழ். விவசாயிகளுக்கு... இன்று முதல், எரிபொருள் அட்டைக்கு... மண்ணெண்ணெய்! கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது. அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நாளை முதல…
-
- 0 replies
- 94 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழட கூடவுள்ளது. கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5.30 க்கு கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள சு.க. தலைமையகத்தில் மத்திய குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன் போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்படவுள்ளது. 21 ஆவது திருத்த்திற்கு சு.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப…
-
- 0 replies
- 88 views
-
-
பாராளுமன்றத்தில் 21 ஆவது திருத்தம் தொடர்பிலான பிரதமரின் சிறப்பு இன்று (எம்.மனோசித்ரா) நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் என்பன தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். அத்தோடு பிரதமரின் உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மறுசீரமைக்கப்பட்ட நிவாரண வரவு - செலவு திட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார். …
-
- 2 replies
- 171 views
-
-
செப்டெம்பர் மாதம் வரை... அரிசி, கையிருப்பில் உள்ளது – விவசாய அமைச்சர் நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை அரிசி கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அது ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே தெரிவித்துள்ளார். அறுவடை போதுமானதாக இல்லாவிட்டால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளும் கட்சி பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் பிரதமர் ர…
-
- 0 replies
- 210 views
-
-
இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் பஷில் ரணிலுடன் பேச்சு - திஸ்ஸ அத்தனாயக்க (எம்.மனோசித்ரா) உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , …
-
- 0 replies
- 85 views
-
-
இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் - 4 தினங்களில் ஐவர் உயிரிழப்பு 25 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிக அளவிலான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதன்படி, கடந்த 4 நாட்களில் மாத்திரம் ஐந்து துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையா…
-
- 5 replies
- 355 views
- 1 follower
-
-
’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 19ஆவது திருத்தத்தின் உண்மையான உள்ளடக்கங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இன்னும் ஆட்சியில் நீடித்து கொள்வதற்கான கபடத்தனமான இந்த ஆட்சிக்குப் புதிய பிரதமரும் இணங்கிப் போவாராக இருந்தால் அவரது நிலைமையும் விபரீதமானதாக ஆகிவிடும் என்றும் எச்சரித்தார். நாகவில்லு (எருக்கலம்பிட்டி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவும்,இளைஞர் காங்கிரஸும் இணைந்த…
-
- 3 replies
- 444 views
-
-
பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பதவி-விலக-முடியாது-ஜனாதிபதி-கோட்டா/150-297943
-
- 9 replies
- 658 views
- 2 followers
-
-
மே 9 வன்முறைகள் - முன்னாள் பிரதமர் மஹிந்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது மே 9 காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/133202/thumb_large_arrest2.jpg கடந்த மே 9 ஆம் திகதி கோத்தா கோ கம மற்றும் மைனா கோ கம ஆகிய பகுதிகளில் அமையான முறையில் போராட்டக்காரர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 164 views
-
-
இந்திய முதலீடுகளால்... வட மாகாண மக்கள், பலனை அனுபவிப்பார்கள் – இந்திய துணை தூதர் இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்நதிய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் இந்திய மக்களின் நிவாரண பொருட்களை வழங்கி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”வட மாகாணத்தில் இரண்டு இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் கையளிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமான உதவியே. தமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இன்னும் நிவாரணப்பொதிகள் வந்துகொண்டிருக்கின்றது. …
-
- 3 replies
- 551 views
- 1 follower
-
-
அறிவார்ந்த இளைஞர்கள்... நாட்டை விட்டு வெளியேறி, வருகின்றனர் – சஜித் நாட்டை விட்டு அறிவார்ந்த இளைஞர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பாதை வரைப்படம் என்பன உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படாவிடில், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அதற்கு புதிய ஆணையுடன் நிலையான அரசாங்கம் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannew…
-
- 1 reply
- 484 views
-
-
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு... 2 வருட, கடூழிய சிறைத்தண்டனை... விதிப்பு. மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( திங்கட்கிழமை ) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது . இதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்க…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கும்.. இலங்கைக்கும் இடையிலான, நட்புறவு சீர்குலைந்து வருவது... அதிர்ச்சியளிக்கிறது – மைத்திரி ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வரும் அபாயகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் இட்டுள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “எனது ஆட்சிக் காலத்தில் உங்களுடனான அந்த வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நமது ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவை அச்சுறுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இன்று நான் மிகவும் வருத்தமட…
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான உறவை.. பாதுகாக்குமாறு வலியுறுத்தி, பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்! இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான உறவை பாதுகாக்குமாறும் அதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கல்வி கற்ற இலங்கையர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சிலர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 128 views
-
-
பொலிஸ் வாகனங்களுக்கான... எரிபொருள் அளவை, 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை! இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவை 20 வீதத்தால் குறைக்குமாறு பொலிஸ்; மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தேவையற்ற மின்விளக்குகள், குளிரூட்டி இயந்திர பயன்பாட்டை நிறுத்துவதற…
-
- 4 replies
- 231 views
- 1 follower
-
-
ஜூன் மாத நடுப்பகுதியில்... மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு? உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என ஐக்கிய தொழிற்சங்க அமைப்பின் ஊடகப் பேச்சாளர் (Samagi United Trade Union Force) ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். மே 24ஆம் திகதி மின்சக்தி அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலையேற்றம் இருக்கும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எனவே மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்தின் பிரகாரம், எரிபொருள் விலை…
-
- 0 replies
- 136 views
-
-
ஜோன்ஸ்டனை... கைது செய்வதற்காக, பல பொலிஸ் குழுக்கள் விசாரணை! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார். பல குழுக்கள் அனுப்பப்பட்ட போதிலும் மே 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்னும் கைது செய்யவில்லை. இந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இவ்வாறு தெரிவித்தார். இந்த சம்பவங்கள…
-
- 2 replies
- 169 views
- 1 follower
-
-
இன்றைய நாணய மாற்று விகிதம் (06.06.2022) ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 355.29 ரூபாயாகவும் விற்பனை விலை 365.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 442.16 ரூபாயாகவும் விற்பனை விலை 457.62 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும் யூரோ ஒன்றின் கொள்விலை 381.85 ஆகவும் விற்பனை விலை 392.68 ஆகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1285676
-
- 0 replies
- 242 views
-
-
மக்கள் கஷ்டப்படும் போது... அரசாங்கம், வரப்பிரசாதங்களை பயன்படுத்துகின்றது – ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது ஏனைய அதிகாரிகளினதோ சிறப்புரிமையை அரசாங்கம் குறைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் வேளையில் கூட இவற்றை செய்யவில்லை என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள், சம்பளம் அல்லது ஏனைய சலுகைகளை குறைக்கடவில்லை என சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கம் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில், தேர்தலின் மூலம் மட்டுமே அதனை சரிசெய்ய ம…
-
- 0 replies
- 88 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... 101 புதிய வீடுகள்: அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தார் பிரசன்ன ! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 101 புதிய வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். பன்னிப்பிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளஅதேவேளை அதன் மதிப்பு தோராயமாக 1795 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி பாழடைந்து வரும் நிலையில், அந்த வீடுகளுக்கு போதிய இடவசதி இல்லையெனவும் அதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தொகுதிகளை வழங்க அமைச்சரவைப் பத…
-
- 1 reply
- 139 views
-